Q-8
ரோமர் 5:3 – “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து..”
R2737 (col.1 P6,7)
முன்னேற்றமடைந்த ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்க்கையில் வீசின புயல்களை, சூரிய பிரகாசத்தையும், துக்கங்களையும், மகிழ்ச்சிகளையும், கண்ணீர்களையும், சிரிப்பையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறான். ஞானமான சிந்தனையினால் அவைகளின் தாக்கம் குறைந்து, சோதனைகளையும், உபத்திரவங்களையும், வாழ்க்கையின் போராட்டங்களையும், நமக்காக ஏற்படுத்தப்பட்ட பாடங்கள் என்றும் அவைகள் மாறுவேடத்தில் வந்த ஆசீர்வாதங்கள் என்றும் உறுதியளிக்கும் தேவனுடைய வார்த்தைகளைக் கட்டளையாகப் பெற்றதினால், தன்னுடைய உபத்திரவத்தின் வீரியம் குறைந்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான். “காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான் உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” – 2 கொரி 4:16,17
மேலும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பக்கப்படும் முன் கிடைக்காத, இப்படிப்பட்ட திடமான பரிசுத்தமுள்ள மகிழ்ச்சியை முழுமையாக உணர்ந்து கொள்வார். பகை, கோபம், பொறாமை போன்ற குணங்களின் கலப்படமில்லாத தனிமைப்படுத்தப்பட்ட சந்தோஷமாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் அநியாயத்தில் பிரியப்படாமல், சத்தியத்தில் மகிழ்ந்தவர்கள். மேலும், முந்தைய காலத்தைக் காட்டிலும் தேவனுக்கான சந்தோஷமும், அவருடைய வார்த்தைகளினால் கிடைக்கும் சந்தோஷமும், பரிசுத்த ஆவியினால் கிடைக்கும் சந்தோஷமும், விலையேறப்பெற்ற விசுவாசத்தில் இருக்கும் சகோதர ஐக்கியத்தினால் வரும் சந்தோஷமும் நம்முடைய உபத்திரவத்தின் காலத்தில் தேவனுடைய கிருபையின் மூலமாக நமக்கு கூடுதலான சந்தோஷங்களைத் தருகிறது. தேவன் உபத்திரவங்களை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல, அவர் பொறுமையை அதிகமாக விரும்புகிறார். இந்த ஒரு நற்குணம் நமக்குள் வளர்ச்சியடைவதற்காக தேவன் நமக்கு இந்த உபத்திரவங்களை அனுமதிக்கிறார். அவருக்குள் நாம் சரியாக வழி நடத்தப்பட்டால், நிச்சயமாக நாம் தேவனுடைய விருப்பத்தின்படி நாம் அதிகமாக கனிக்கொடுப்போம்.
R3123 (col.1 P3)
தேவனுடைய சந்தோஷங்களை ருசிபாராதவர்கள், உபத்திரவத்தில் சந்தோஷப்படுவதைக் குறித்து இந்த உலகத்தின் கண்ணோட்டத்தில் எவ்வாறாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். “கிறிஸ்துவுக்காக அனுபவிக்கும் பாடுகளினால் வரும் மகிமையை அதற்கு ஒப்பிட முடியாது” என்பதற்காக நாம் மகிழ்ந்து களிக்கூறலாம். எல்லா புத்திக்கும் மேலான தேவனுடைய சமாதானத்தை அவருடைய ஜனங்களின் இருதயத்தையும், நிரப்பியதைப் பற்றி இந்த உலகத்திற்கு என்ன தெரியும்? என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு விட்டு செல்கிறேன், உலகம் தரக்கூடாத சமாதானத்தை நான் கொடுக்கிறேன். ஆகவே உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.” என்று இயேசு சொன்ன ஆறுதலை இந்த உலகம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். மேலும், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” (யோவ 14:27, ரோமர் 5:3-5) இப்படியாக தேவன் அனுமதிக்கக்கூடிய எந்த வேலைகளிலும், வரும் அனுபவங்களையும் விசுவாசமுள்ள ஊழியக்காரர்கள் மகிழ்ந்து களிகூருவார்கள். நாமும் அவர்களின் தேவனையே தேவனாகப் பெற்றிருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்து அவர் வழிநடத்தும் பாதையில் சந்தோஷமாக நடப்போம். கிறிஸ்துவின் ஊழியக்கார்கள் இந்த ஒரு கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நிச்சயமாக பயமும், திகிலும் அவர்களைப் பற்றிக்கொள்ளும்.
R3281 (col.2 P1,2)
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால், நீதிமானாக்கப்பட்டு தத்தம் செய்தவர்களின் சோதனைகள், தேவனை இக்காலத்தில் சேவிக்க வாய்ப்பளிக்கிறது. பாவம் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில், நீதியாக வாழ்ந்து சத்தியத்தை வெளிச்சமாக ஏந்தி நிற்பவர்கள் கட்டாயமாக துன்பப்படுவார்கள். ஒருவரின் அர்ப்பணிப்பு முழுமையடைந்தப்பின் அவர்கள் தேவனை சேவிக்கும் வாய்ப்புக்காக நிச்சயம் மகிழ்வார்கள். இப்படியாக அவர்களுடைய உண்மையான அன்பும், அர்ப்பணிப்பும் தேவனுடய அங்கீகாரத்தைப் பெறும். தங்களை இவ்வண்ணமாக தத்தம் செய்து, இருதயத்தில் தூய்மையாக இருப்பவர்கள், இன்றைக்கு அனுமதிக்கப்படும் சோதனைகளின் காரணத்தை நன்கு உணர்ந்தவர்கள், தங்களுடைய உபத்திரவங்களில் மேன்மை பாராட்டுவார்கள். கிறிஸ்துவின் வார்த்தைகளினால் அவர்களை விசுவாசத்திற்கு வளர செய்து, தங்களுடைய ஆண்டவர் பட்ட அதே பாடுகளை தாங்களும் படவேண்டும் என்பதை உணர்ந்து, அவருடைய பாதையில் நடந்துக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “உலகம் உங்களை பகைத்தால் ஆச்சரியப்படாதீர்கள், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும். நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” “முடிவு பரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருங்கள், நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தை தருவேன்.” என்ற வாக்குத்தத்தங்களை நினைவுக்கூறுவார்கள்.
மேலும், விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள், தாங்க முடியாத சோதனைகளைத் தேவன் அனுமதிக்க மாட்டார் என்பதையும், அதிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்புகளை அவர் ஏற்படுத்த வல்லவர் என்பதையும் அறிந்து, சோதனையின் நாட்களில் அவர் நம் அருகில் இருப்பார் என்பதை உணர்ந்து அவர்களுடைய உபத்திரவத்தில் இன்னும் அதிகமாக மேன்மை பாராட்டுவார்கள். அவர்கள் வளரவேண்டிய குணங்களைப் பற்றியும், உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையியும், உண்டாக்குகிறதென்பதையும் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறார்கள். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடையை இருதயங்களில் ஊற்றபட்டிருக்கிறபடியால், அந்த அன்பு நம்மை வெட்கப்படுத்தாது. இவையனைத்துமே உபத்திரவங்களின் வழியாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். உத்தமமாக நாம் நம்மை அர்ப்பணித்ததினால், இந்த உலகத்தின் ஆவிக்கும் சுய நலத்திற்கும் பதிலாக, தேவனுடைய முழு அன்பும் நம்முடைய இருதயத்தில் பொழியப்படுகிறது – 1 கொரி 10:13, ரோமர் 5:3,5