CD-LOVE-Q-15
R2753 [col.1 P5] through R2754 [col.1 P3]:
“ஜெயங்கொண்டவர்கள்” என்ற தெய்வீக அங்கீகாரத்தை பெற்றுகொள்ளும் அனைவரும், குறிப்பான குணலட்சணங்களை அவசியமாக பெற்றிருக்க வேண்டும் என்ற சிந்தை மற்றும் “நல்லது உத்தமும் உண்மையுமான ஊழியக்காரனே” என்று கூறும் நம்முடைய ஆண்டவரின் குரலை கேட்பதற்கு அனைவருக்கும் திகைப்பூட்டக்கூடியதாக இருக்கும். கிறிஸ்துவ இனம் என்றால், வெளிப்படையான பாவத்தை தவிர்ப்பது என்று பலர் எண்ணி கொள்கிறார்கள், மற்றவர்கள் இரகசியமான பாவங்களையும் தவிர்த்து விடுவதாக எண்ணுகிறார்கள். இதற்கும் மேலாக பலர் இக்காலத்து வாழ்க்கையின் பல விருப்பங்களை பலிசெலுத்தக்கூடிய பொதுவான மனநிலை பெறுவதை எண்ணுகிறார்கள். இன்னும் பலர், சீஷத்துவத்தின் சோதனையானது, கர்த்தருக்கு, சுயத்தை அர்பணித்து இந்த பூமிக்குரிய வாழ்க்கையையும் அதன் விருப்பங்களையும் நம்முடைய தலையாகிய, ஆண்டவருடைய சித்தத்திற்காக முழுமையாக பலிசெலுத்த வேண்டும் என்பதை புரிந்திருக்கிறார்கள். ஆனால், நம்முடைய அனைத்து பலிகளும், அனுபவங்களும், சுயத்தை வெறுத்தலும், “தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக” தேவன் வைத்திருக்கும் குறிப்பிட்ட குணலட்சணங்களுக்கு நம்மை வளர்ச்சி அடைய செய்யும் என்ற சிந்தனையை பெரும்பாலும் ஒருவரும் பெறுவதில்லை. இந்த குறிப்பிட்ட குணலட்சனங்களை பெறாவிட்டால், ஆயிரவருட ஆட்சியில், கிறிஸ்துவோடு அவருடைய பங்காளியாக பரிசை பெறமுடியாது. கல்வாரியில் மரிக்கும் திருடனுடனான நமது ஆண்டவரின் உரையாடலுக்கு கொடுக்கப்பட்ட தவறான விளக்கத்தைப்போல, அநேகமாக, எதுவும், இந்த குறி (அ) நிரந்தர நிலையான குணத்தைப்பற்றிய கருதாப்பிழைக்கு பெரும் பங்களிக்கவில்லை.
தேவனுடைய ஆயிர வருட ஆட்சியில் பங்கு பெறவும், கிறிஸ்துவின் சரீர அங்கமாக இருப்பதற்கு தகுதிபெறவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மிகுந்த ஆசீர்வாதங்களுக்கும் கனத்திற்கும் தகுதியுள்ள நிலையை தீர்மானிப்பதற்கு தேவன் சில சோதனைகள் அல்லது அளவை வைத்திருப்பது. எதிர் வாதமிடமுடியாத அல்லது தவிர்க்க முடியாத நியாயமாகும். “மகிமையையும், கனத்தையும் மற்றும் அழியாமையையும் தேடுபவர்களின்” விசுவாசத்திற்குள் உள்ளடக்கப்பட்டவைகள் என்ன மற்றும் அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், மற்றும் மற்றும் விசுவாசமுள்ளவர்கள் (உண்மையுள்ளவர்கள்) யார்? ஒரு இலக்கு உண்டு, விரும்பிய பரிசை பெறுவதற்கு, நம்பிக்கையோடு ஓடும் யாவரும் இந்த உலகத்தை நோக்கி ஓடி அதை அடைய வேண்டும் அல்லது இழக்கவேண்டும், என்ற மறுக்க முடியாத அறிக்கையை அப்போஸ்தலர் கூறுகிறார். அப்போஸ்தலர் தாமே இந்த அளவுக்கு ஏற்றபடி தன்னை நியாயம் தீர்த்து கொள்வதை நாம் காணலாம். மேலும் அவர் எழுதியபோது, அவர் இந்த இலக்கை அடையவில்லை அல்லது அந்த அளவிலான குணலட்சணத்தின் வளர்ச்சியை அவர் பெற வில்லை என்பதை அவர் கூறினார். இப்படிப்பட்ட பிரதிபலிப்புகள் இயலாததாக இருந்தாலும், இந்த ஓட்டத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கை தெளிவாக காண விருப்பமுள்ளவர்களின் அனைவருடைய இருதயத்தையும் தட்டி எழுப்பலாம். மேலும் நாம் மிக பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு முன் வைத்திருக்கும் அந்த மகா இலக்கை நோக்கி, நாளுக்கு நாள் நம்முடைய முன்னேற்றம் எந்த அளவில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்று நம்மில் ஒவ்வொருவரையும் இது செயல் விரைவுப்படுத்தலாம். (stimulate)
ஓட்டபந்தயத்தை பற்றிய சிந்தையை அப்போஸ்தலர் பெற்றிருந்ததாக நாம் காண்கிறோம். மேலும், ஆற்றல் வாய்ந்த அந்த எடுத்துக்காட்டை நாம் காணலாம். (1) பந்தயத்திற்காக ஓடுபவர் சட்டபடி அல்லது முறையாக பந்தய சாலைக்குள் பிரவேசிக்க வேண்டியதால், நாம் நம்முடைய பந்தய சாலைக்குள் பிரவேசிப்பதற்கு – நம்மை இரட்சித்து, தேவனுக்கு முன் நம்மை நீதிமானாக்கின விலையேறபெற்ற இரத்தத்தின் மேலுள்ள விசுவாசம் என்னும் வாசல் வழியாக மட்டுமே நாம் பிரவேசிக்க முடியும். (2) இந்த பந்தையத்தில் ஓடுபவர்கள், தங்களை நிலையான ஓட்டக்காராக தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும், இவர்கள் தங்களுடைய உள்நோக்குகளை நேர் அளவைக் கொண்டிருக்க வேண்டும், (positive) இல்லாவிடில் இவர்கள் பந்தயத்தில் பங்கு பெற இயலாது. ஆகவே நாம் “விசவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு”, இந்த பந்தயத்திற்கு தொடர்பான நம்முடைய சிலாக்கியங்களை (சிறப்புரிமைகளையும்) கிடைக்கக்கூடிய பரிசை பற்றியும், அறிவிக்கப்பட்டிருக்கிறோம். இந்த பூமிக்குரிய சபை புத்தகங்களில் அல்ல, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாக” காணப்படுவதற்கு கர்த்தரோடு உடன்படிக்கை செய்து, தொடர்ந்து அதை காத்துகொள்வோம் என்று அறிக்கையிடுவதற்கு நாம் கடமை பெற்றுள்ளோம். – (எபிரெயர் 12:23)
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஒரு பரிசும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் ஓடும் போது, அவர்களின் பார்வைக்கு இது காணும்படிக்கு தொங்க விடப்படுவதில்லை. இவர்கள் அந்த பரிசை நோக்கி ஓடுவதுமில்லை. மாறாக, ஒரு அடையாளம் அல்லது ஒரு இலக்கை நோக்கி ஓடுகிறார்கள். இதில் கால் பங்கு, அரை பங்கு, முக்கால் பங்கு, இறுதியாக முழு இலக்கை அடையும் போது ஓட்டம் நிறைவடையும். இந்த ஓட்டத்தில் ஓடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்கை கடக்கும் போது, பரிசை பெறுவதற்கான இலக்கை அடையும் வரையில், உற்சாகத்தோடு ஓடுவதற்கு ஒருவரை ஒருவர் கவனிக்கிறார்கள். வழியில் கடந்து செல்லும் இந்த அளவுகளை கவனித்து கொண்டிருந்தால், ஒவ்வொரு படிநிலையிலும் தன்னை கணக்கிடுவது, தனக்குள் ஒரு செயல் தூண்டுதலாக இருக்கும். ஒரு வேளை அவர் சோர்வடைந்தவராக பயணித்து கொண்டிருந்தால், அவர் மீதியுள்ள இடைவெளியை உற்சாகத்தோடு, துரிதமாக செல்ல உதவும். அவ்வாறாக, மகிமையுள்ள ஆண்டவராகிய இயேசுவுக்கு உடன் பங்காளிகளாக இருப்பதற்கு தேவன் வாக்களித்த, அந்த நெருக்கமான பாதையில் மாபெரும் ஓடும் கிறிஸ்தவர்களுக்கும் இது உரியது. (தகும்) – “பரிசை ஜெயிக்கும் இலக்கு” – அதை நோக்கி நாம் நெருங்கி, நெருங்கி வரும்போது, நம்முடைய பாதையில் இலக்குகளை குறிப்பதற்கும் நம்முடைய முன்னேற்றத்தை உணருவதற்கும் இது நம்மை ஊக்குவிக்கும். மேலும் இந்த ஓட்டத்தை ஓடுபவர் கவனமில்லாமல், கருத்தில்லாமல், மந்த நிலையில் இருந்தால், தன்னுடைய சொந்த கவன குறைவே அல்லது மந்த நிலையே, தான் பெறக்கூடிய பரிசை இழக்கசெய்யும் என்ற அறிவே அவரை அதிகபட்சமாக பெறுவார்.
இது பல்வேறு நாமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நாம் பதில் அளிக்கிறோம். எடுத்துக்காட்டாக “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத்தேயு 5:48) என்று நம்முடைய ஆண்டவர் கூறும்போது இதை பற்றி குறிப்பிட்டார். இதே இலக்கை பற்றி அப்போஸ்தலனாகிய பவுலும் குறிப்பிடுகிறார். “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29) இந்த இரண்டு வாக்கியங்களும் வடிவத்தில் வேறுபட்டிருந்தாலும், பொருள் ஒன்றுதான். இதே இலக்கை அப்போஸ்தலர் மீண்டும் குறிப்பிடுகிறார். “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும் படிக்கே அப்படிச் செய்தார்” “சகோதரசிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (ரோமர் 8:4, 13:10) இப்போது, இங்கே தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவ நற்குணத்தின் இலக்கை உருவாக்கும். உட்பொருட்களின் மொத்தமான ஒரு பொருள் விளக்கத்தை பெற்றுள்ளோம். இது தெய்வத் தன்மையுள்ள, கிறிஸ்துவை போன்ற, அன்பு . ஆகையால், பரிசுத்தமும் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ ஜனங்கள் அதே நற்குணத்தை அல்லது. தேவன் பெற்றிருக்கும் அன்பின் தன்மையையும். நம்முடைய ஆண்டவராம் இயேசுவினால் வெளிப்படுத்தப்பட்ட அதே அன்பையும் பெற்றிருக்க வேண்டும் என்ற தோன்றுகிறது.
ஆனால், “நம்மால் எப்படி முடியும்? இயல்பாகவே மற்றவர்களை போல கோபாக்கினையின் பிள்ளைகளாக இருக்கும் நாம், தேவன் அன்பு செலுத்துவது போலவும், கிறிஸ்து அன்பு செலுத்துவது போலவும், ஒரு உயர்வான நிலை அல்லது குணலட்சணத்தின் அடையாளத்தை நாம் எப்போதாவது அடைவதற்கு நம்பிக்கை உண்டா? “மாம்சத்தை பொருத்த வரையில் இப்படிப்பட்ட உயர்வான நிலையை அடைய வேண்டும் என்ற நம்பிக்கையை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நாம் பதில் அளிக்கிறோம். மாமிசத்தில், நாம் இந்த உயரிய நிலையை அடைய நாம் எதிர்பார்க்க தேவையில்லை, நாம் இந்த நிலையற்ற உடலில் இருக்கும் வரை, மற்றும் அதின் மூளையை நாம் பயன்படுத்த கடமைப்பட்டுள்ள போது, நாம் கட்டாயமாக அதிகாமாகவோ அல்லது குறைவாகவோ சுயநலத்தினால் எதிர்க்கப்படுவோம், அதன் மூலம் வீழ்ச்சியானது, ஆறு ஆயிரம் வருட சீரழீவின் விளைவாக மனம் அறநெறி மற்றும் உடல் சீர்குலைவின் மூலம் மற்றும் நமது இனத்தை உடைமையாக்கியுள்ளது.
பரிபூரண அன்பின் இலக்கை இருதயத்திலும், சித்தத்திலும் நாம் அடைய வேண்டும் புதிய சித்தம், “அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.” அல்லது நம்முடைய கிறிஸ்தவ அனுபவங்களின் துவக்கத்திலே, இந்த புதிய சிந்தை இந்த உயர்வான நிலையை அடைய வேண்டும் என்று நாம் எதிர்பார்த்து விடக்கூடாது. தேவனுடைய வார்த்தைகளாகிய அவருடைய விலையேற பெற்ற வாக்குத்தத்தங்களின் வழியாக தேவன் இந்த புதிய சிந்தையை தூண்டினாலும் நம்முடைய சொந்த சித்தமும் ஏறக்குறைய மனித மூளையின் கட்டுபாட்டை சார்ந்துதான் இருக்க வேண்டும். ஆகவே புதிய சிந்தை, தொடர்ந்து மாம்சத்தோடு போராடி கொண்டிருக்க வேண்டும் என்றும் அதன் வெற்றி மாம்சத்தின் மரணமே என்றும் அப்போஸ்தலர் நமக்க அறிவிக்கிறார். முதல் உயிர்த்தெழுதலின் போது, புதிதாக ஜெநிப்பிக்கப்பட்ட புதுசிருஷ்டி ஆவிக்குரிய சரீரத்தை பெற்ற இந்த நிலை, “மாற்றம்” ஏற்படும் வரையில் உண்மையான பரிபூரணத்தை அடைய முடியாது. ஆனால், முதலாம் உயிர்த்தெழுதலின், ஆவிக்குரிய சரீரத்தை பெறுவதே, பரிசை பெறுவதாகும். அந்த இலக்கை நோக்கி தொடர்வதும், அந்த இலக்கை அடைவதும், இந்த புதிய சிந்தை, அழியக்கூடிய இந்த மாம்சத்தில் அல்லது “மண்பாண்டங்களில்” பூரண நிலையை அடைய வேண்டும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும் – 2 கொரிந்தியர் 5:2-4.