Q-17
“எபி 12:1 “ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்.”
எபி 6:12 “உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.”
R2792 (col.2 P4)
கிறிஸ்தவ மண்டலத்தில் இப்படிப்பட்ட ஆவி வளர நாம் உண்மையில், எதிர்பார்க்கிறோம். கடந்த காலத்தில் அவர்கள் மற்றவர்களைத் தாக்கும் தன்மை இல்லாதவர்களாக மிகுந்த பொறுமையுடன் இருந்திருக்கவேண்டும். நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களுடைய கரத்தில் இந்த வேலைகளைச் செய்திருந்தால், உலகம் முன்னதாகவே மனம் திரும்பியிருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நீடிய பொறுமையுடன் காத்துக் கொண்டவர்கள், பரத்திலிருந்து வரும் சுத்தமானதும், சமாதானம் கொடுக்கக்கூடியதும், கிருபை நிறைந்ததும், அநேக நற்கிரியைகள் செய்வதும், நீடிய சகிப்புத்தனமையுள்ள, தேவனுடைய ஞானத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டவர்கள் அனைத்தும் குறித்தக் காலத்தில் நிறைவேறும் என்று நன்கு அறிந்திருக்கிறார்கள். இதை கற்றுக்கொண்டதன் நிமித்தம் நம்முடைய ஆண்டவர் தீமைகளை எதிர்த்து, மனவேதனை அளித்த காரியங்களை ஞானமான நோக்கத்திற்காக அனுமதித்திருக்கிறார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் பங்காளிகளாக இருக்கும்படி, “சிறு மந்தைக்கான” ஆயத்தங்களும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பதை அவர்கள் உணருவார்கள்.
R3149 (col.1 P6)
இவ்வாறாக, “உங்கள் சிந்தையை கச்சையினால் கட்டி”, மன உறுதியோடு நீண்ட நாட்கள் சீராக தொடர்ந்து முயற்சிக்க மேலும் ஆலோசனைகளைக் கூறுகிறார். “தன்னடக்கமுள்ளவர்களாயிருங்கள்” நீங்கள் ஒன்றுக்கும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். ஒரு சிறிய விஷயத்திற்கு நீங்கள் உணர்ச்சி வசப்படும்போது, நாம் அதுவரைக்கும் பெற்றிருந்த ஆவிக்குரிய சகல கனிகளும் மிகக் குறுகிய நேரத்தில் இழக்கச் செய்யும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, சோர்வடைந்து நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும். ஆனால் நீண்ட காலம் நீடிய பொறுமையோடிருக்க விசுவாசம் மற்றும் பொறுமையின் சகலவிதமான சோதனைகளையும் ஜெயித்தால் மட்டுமே வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதத்தைப் பெறமுடியும். நமக்குமுன் வைக்கப்பட்டிருக்கும் பந்தயம் வேகமாக ஓடுவதற்கு அல்ல மாறாக “பொறுமையோடு தொடர்ந்து” பயணிக்கவே நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. தன்னடக்கத்தோடும் ஜாக்கிரதையோடும் நமக்களிக்கப்பட்ட விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை நாம் சீர்தூக்கிப் பார்த்து, அதன் முக்கியத்துவங்களை உணர்ந்து, அவைகளினால் கிடைக்கும் உற்சாகத்தை எச்சரிப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையினால் கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளைகளை நல்ல போதகர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு நம்முடைய இருதயத்திலும், சிந்தையிலும் உண்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகள் அனைத்தும் நம்மை வசனங்களை சரியாக தியானிக்கச் செய்து, பொறுமையோடு நம்மை நாம் மனத்தாழ்மையோடு கீழ்ப்படிந்தால், நாம் பெறும் சத்தியம் நமக்குள் தெய்வீக மாற்றத்தை உண்டுபண்ணி, நம்மை மறுரூபபடுத்தும். அதற்குப் பின் சிறிதானாலும், சரி பெரிதானாலும் சரி நம்மால் முடிந்த வரைக்கும், கேட்கும் யாவருக்கும் இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு நாம் ஒப்புக்கொடுத்த தாலந்துகளை உண்மையாக அவருடைய பணிக்கு செலவழிக்க வேண்டும்.