CD-PRAYER-Q-12
எபிரெயர் 4:16 – ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், எற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
R2249 [Col. 2:2]: –
அல்லது தெய்விக உதவியை முன்கூட்டியே நாம் தேடக்கூடாது. எடுத்துக்காட்டாக, வரக்கூடிய ஒரு வருடத்திற்கு அல்லது வரக்கூடிய ஒரு மாதத்திற்கு அல்லது வரக்கூடிய ஒரு வாரத்திற்கு அல்ல அதற்கு மாறாக, நாம் கர்த்தரிடத்தில் ஒரு உடன்படிக்கை செய்து. நாம் அவருடையவர்களாக இருக்கிறோம் என்பதையும், ஒவ்வொரு சோதனையின் போதும் அவர் நம் அருகில் இருக்கிறார் என்பதையும், நாம் ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்படுவோம் என்ற மனதுடையவர்களாக இருந்தால், அவரது உதவி நம்முடைய பயன்பாட்டிற்காக தயாராக உள்ளது என்பதையும்நாம் அறிந்துக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே நம்முடைய ஜெபங்கள் தேவை நேரத்தில் உதவி வேண்டுவதாக இருக்கவேண்டும். அதேபோல் ஒவ்வொரு நாளுக்கான பாதுகாப்பு மற்றும் அவருடைய ஆசீர்வாதங்களுக்காக பொதுவான ஜெபங்கள் ஏறெடுக்கப்படவேண்டும். சோதனையின் அந்த நொடிபொழுதில், விசுவாசத்தின் முழு உறுதியோடும், அவருடைய அன்பையும், ஞானத்தையும், நமக்கு அவர் உதவி செய்யும் திறனையும், அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகல காரியங்களையும் நன்மைக்கு ஏதுவாக நடத்திவரும் அவருடைய விருப்பங்களை நாம் உணர்ந்தவர்களாக, நம்முடைய இருதயம் ஆண்டவரை நோக்கி உயர்த்தவேண்டும். அத்தகைய தேவைக்கான உதவிகளை வேண்டும் போது, நம்மை நிச்சயமாக ஆண்டவரின் ஆலோசனைக்கும், உதவிக்கும் நீதிக்காக பெலத்திற்கும். சத்தியத்திற்கும், பரிசுத்தத்திற்கும் மற்றும் அன்பினிடத்திற்கும் இழுத்துச்செல்லும், மேலும் இவ்வாறாக, ஒவ்வொரு மணிநேரமும் ஜெயித்து, ஒவ்வொரு நாளும் ஜெயித்து, இறுதியாக முற்றிலும் ஜெயம் பெறவேண்டும்.