விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-18

விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?

What are some of the present rewards of faith?

1 கொரி 2:9-10

F689(P2) – F692

தேவனுடைய பெயரிலுள்ள அர்த்தத்தின்படி தேவன் இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் சுயமாக வாழ்ந்து, முழு வல்லமை, முழு ஞானம், முழு நீதி மற்றும் முழு அன்பு செலுத்தும் நம்முடைய சிருஷ்டிகராக இருக்கிறார். விடாமுயற்சியோடு அவரைத் தேடுபவர்களுக்கு அவர் பரிசளிப்பார் என்று விசுவாசித்தோமானால், நிச்சயமாக அதை பெற்றுக்கொள்வோம். அவருடைய வார்த்தைகளை அறிந்து, புரிந்துகொள்ள ஆவலுள்ளவர்களாக, அவைகளைத் தேடி புரிந்துகொண்டால், அதில் நாம் நம்பிக்கை கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையை அதின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட விசுவாசத்தின் துவக்கமானது, தெய்வீக இரக்கத்தின் கீழ் கிறிஸ்துவை நோக்கி செல்லும் பொழுது, தேவனிடத்தில் நாம் திரும்பி, மறுபடியும் அவருடைய இரக்கங்களைப் பெற்று அவருடன் ஐக்கியப்படும் புதிய வழியை நமக்கு ஆயத்தப்படுத்தும். இந்த விசுவாசத்தோடு, கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும் பட்சத்தில், நமக்குள் கீழ்ப்படிதல் அதிகரித்து, அதற்குத்தக்கதான ஆசீர்வாதங்கள் நம்மை வந்து சேரும். அப்போது நாம் புது சிருஷ்டிகளாக அங்கீகரிக்கப்படும் காரியங்கள் உறுதிப்படுகிறது. வளர்ச்சியடையக்கூடிய இந்த விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு, – தேவனுக்குச் சுதந்தரவாளிகளாகவும், இரட்சகரகாகிய கிறிஸ்துவுக்கு உடன்சுதந்திரவாளிகளாகவும் நம்மை மாற்றுகிறது. இதன் விளைவாக பரிசுத்த ஆவியின் மூலம் நாம் ஜெநிப்பிக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, குமாரர்களாக தத்தெடுக்கப்படுகிறோம்.

மேலும், இதன் வளர்ச்சியானது, பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள ஏழு விளக்குகளிலுள்ள வெளிச்சத்தைக் கண்டு, மகா ஆசாரியனுடைய விசேஷித்த ஊழியத்தை அறிந்துகொள்ள நமக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் உள்ள சமூகத்தப்பம், தூபப்பீடத்தின் நற்சுகந்தம் மற்றும் திரைக்கு அப்பால் உள்ள கிருபாசனம் நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் ஊழிய முறைமைகளை நமக்குக் காட்டுகிறது. கீழ்ப்படிதலோடுகூடிய விசுவாசமானது படிப்படியாக தேவனுடைய இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு, தெய்வீக வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டது போல உறுதிக்கு மேல் உறுதியடைந்து, தெளிவுக்கு மேல் தெளிவடைந்து, புதிய சிந்தைக்கு அடிப்படையான பகுதியாக அமைகிறது. மாம்ச சிந்தையிலிருக்கும் நிலையில் நாம் ஒருபோதும், வளர்ச்சியடைந்த இந்நிலையை புரிந்துகொள்ள முடியாது என்று அப்போஸ்தலர் தெளிவாக அறிவிக்கிறார் – “எழுதியிருக்கிறபடி – தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” – 1கொரி 2:9

வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் செயல் முறைகளின் மூலமாகவும், பரலோகக் காரியங்களில் உள்ள அநேக விலைமதிப்பற்றவைகளையும், முதலாம் உயிர்த்தெழுதலில் அடையும் மகிமைகளையும் காணலாம். அதற்குப்பின் – இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவது – பூமியில் உள்ள முழு குடும்பங்களுக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதற்கான நீதியுள்ள அரசாட்சி – பாவம் மற்றும் தேவனுடைய மகிமைக்கும், அவருடைய தெய்வீகத் திட்டமாகிய அன்புக்கும் இசைவாயிராத தனிப்பட்ட பாவிகளின் முற்றிலுமான அழிவு – போன்றவைகள் நடைபெறும். புது சிருஷ்டிகள் இவையனைத்தையும் விசுவாசத்தின் கண்களினால் காண்கிறார்கள். சராசரி மனுஷருக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்துகொள்ள முடியாத காரியங்களை மிகத் தெளிவாக இவர்கள் கண்டு அறிந்துகொள்வார்கள் என்று அப்போஸ்தலர் உறுதியளிக்கிறார் – 1கொரி 2:9,10

பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசமானது, இதுவரைக்கும் புது சிருஷ்டிகளின் இன்றைய ஆசீர்வாதங்களைக் காணக்கூடியதாக இராமல், ஒவ்வொரு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் வரக்கூடிய மகிமையைக் குறித்தே இருக்கிறது. உண்மையில், அப்போஸ்தலர் விவரிப்பதுப்போல நம்முடைய அனைத்து சந்தோஷங்களும், நம்பிக்கைகளும் இதன் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” இப்படியாக காணப்படாதவைகளைக் குறித்த தேவனுடைய வார்த்தைகளை நாம் விசுவாசிப்பதின் நிமித்தமாக அவைகளை நம்முடைய சிந்தையில் கண்டது போலத் தோன்றுகிறது. ஏனெனில், காணக்கூடியவைகள் அநித்தியமானது, காணக்கூடாதவைகள் நித்தியமானது என்று மிகத் தெளிவாக அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். ஆகவே விசுவாசத்தின் கண்களின் மூலமாகக் காணக்கூடியவைகள் மட்டுமே நித்தியமானது.

வரக்கூடிய ஆசீர்வாதங்களைப்பெற, இன்று விசுவாசத்தின் மூலம், பரிசுத்த ஆவியினால் நாம் பெற்று, தக்கவைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் எவ்வளவு அவசியமானது என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபும் குறிப்பிடுகிறார் – “ஒருவர் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” மேலும் – “சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்” என்று அடுத்த வசனத்தில் சொல்லுகிறார். ஏனெனில், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் என்றும், அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று யாக்கோபு மிகத் தெளிவாகக் கூறுகிறார் – யாக்கோபு 5:8 ஆகவே விசுவாசமில்லாமல், நாம் எதையும் மேற்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாது என்று யாக்கோபு நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஆகவே ஒவ்வொரு தேவ ஜனங்களும் விசுவாசத்தில் வளர்ச்சியடைவதற்கு, அப்போஸ்தலர்கள் செய்தது போல, தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும் என்று வேத வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்த ஜெபம் கேட்கப்படும் விதத்தில் நாம் ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபங்கள் கபடற்றதாக இருந்தால், நிச்சயமாக நாம் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் தேடி, அவைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும், அவருடைய பணியில் சந்தோஷப்படுபவர்களாகவும், சகல பரிசுத்த ஆவியின் கிருபைகளை அணிந்து கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்போம். இப்படியிருக்கும் பட்சத்தில் நாம் உறுதியான விசுவாசத்தைப் பெற்றிருப்போம். அந்த விசுவாசத்தின் மேல் முழு நம்பிக்கையுள்ளவராக இருப்போம். இவைகளைச் செய்தால் நாம் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், குறித்தக் காலத்தில் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும் – 11பேதுரு 1:10,11

F686(P3)

நாம் இருக்கும் எந்தச் சூழ்நிலையிலும், விசுவாசத்தின் வழியாக மகா பரிசுத்தமான விசுவாசத்தைப் பெற்று, தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசிக்க, அவருடைய கிருபாசனத்தண்டையில் சேர்ந்து, கிருபை பெற்று, தேவைப்படும் நேரத்தில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.