CD-LOVE-Q-1
R3150 [col. P4] : –
அன்பை விவரிப்பது இயலாத காரியமாகத் தோன்றுகிறது. ஆகவே நாம் அதின் குணாதிசயங்களின் விளக்கத்தைக் காண்போம். இப்படிப்பட்ட குணாதிசயங்களை அன்பின் அடிப்படையில் பெற்றிருந்தால் மட்டுமே அன்பைப் பற்றி புரிந்துக்கொள்ள முடியும். இல்லாவிடில் அதை விவரிக்க முடியாது. ஏனெனில் – இது தேவனுடையது. இருதயம், நாவு, கரங்கள், சிந்தை சகலத்திலும் தேவனைப் போல செயல்பட்டு, முழு மனுக்குலத்தின் காரியங்களை மேற்பார்வையிட்டு அவர்களை முழுமையாக தன் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.
R3151[col.2P2]: –
கிறிஸ்துவின் சீஷர்கள் அல்லது மாணவர்களாக அவரது பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் நாம் நம்முடைய உன்னத அழைப்பின் பந்தயப்பொருளை அடைவதற்கு நாளுக்கு நாள் பல குணாதிசயங்களில் பூர்த்தி அடைவதற்கு அன்பின் பாடத்தையே நாம் அநுதினம் கற்றுக் கொள்ள வேண்டும். “ஒவ்வொரு அழகான சாயலும் ஒளியாக இருப்பது போல, ஒவ்வொரு கருணையும் அன்பாகும்” என்று ஒரு கவிஞர் கூறினது போல, நம்முடைய அநுதின வாழ்க்கையில் செய்யும் கிரியைகளிலும், சிந்தையிலும், வார்த்தையிலும் இந்த அன்புக்கு தொடர்புள்ளதாக இருக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 13:1 – “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக் கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.”
R3150[col.1P5]: –
அன்பின் செயல்பாடுகளை விவரிப்பதற்கு முன், அதன் முக்கியத்துவத்தை அப்போஸ்தலர் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறார். வசனத்தில் கூறப்பட்டது போல பல வரங்களைக் காட்டிலும் “அன்பு” மேலானது என்றும், மேலும் இந்த “அன்பு” நமக்குள் இராவிட்டால் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கக்கூடிய ஆதாரத்தை இழந்து விடுவோம் என்றும் கூறுகிறார். “நாம் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், கைத்தாளம் போலவும்” இருந்து விடுவோம். நம்முடைய வார்த்தைகளுக்கும், நம்முடைய செய்கைகளுக்கும் தொடர்பில்லாமல் போய்விடும். நாம் சுவிசேஷத்தை சரளமாக பேசக்கூடிய திறமையை பெற்றிருந்தாலும் அது ஆண்டவருக்குள் புது சிருஷ்டிகளுக்கான தொடர்பை நிரூபிப்பதில்லை. “இராவிட்டால்” என்ற வார்த்தையோடு அப்போஸ்தலர் துவங்குகிறார். ஏனெனில் தேவனுடைய குமாரனின் நற்செய்தி வல்லமையோடும், வலுக்கட்டாயத் தோடும் அல்ல, அன்பின் ஆவியோடு போதிக்கப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார். மிக அருமையாக பேசக்கூடிய அநேக பொதுப் பேச்சாளர்களை நாம் கண்டிருக்கலாம். அவர்கள் சத்தியத்தின் மேல் முழு அன்புள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய உபதேசம் உணர்வுள்ளதாய் இருக்கும். இல்லாவிடில் மாயமானதாக தோன்றும். (பணத்தின் மேல் அல்லது கௌரவத்தின் மேலுள்ள நேசத்தினால் இவர்கள் போதிக்கிறார்கள்.)
1 கொரிந்தியர் 13:2 – “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.”
R3150[col. 1P6]: –
தீர்க்கதரிசன வரத்தை அதிகமாக நாடும்படி பவுல் கட்டளையிடுகிறார். தேவனுடைய மறை பொருள்களை அறிந்து கொள்ளக்கூடிய அறிவையும் பெற வேண்டுமென்று கூறுகிறார். மேலும், ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக இவைகளின் மேல் மிக ஆழமான விசுவாசம் தேவைப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் நாம் பூரணமாக பெற்றிருந்தாலும் அன்பில்லாவிட்டால், அதில் ஒரு பயனும் இல்லை என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். அன்பு இராவிட்டால் புது சிருஷ்டியின் அங்கத்தினராக மட்டும் அல்ல, ஒரு பூஜ்யமாக என்னப்படுவோம். ஏனெனில் அன்பின் ஆவியினால் மட்டுமே ஒரு புது சிருஷ்டி கருத்தரிக்கப்படுகிறது. இது எவ்வளவு அற்புதமான ஒரு பரீட்சையாய் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் இதை பொருத்தி பார்க்கலாம். நாம் தேவனுடைய பார்வையில் பூஜ்யமாக இருக்கிறோமா? அல்லது தேவன் மேல், சகோதரர்கள் மேல், அவருடைய நோக்கத்தின் மேல் பொதுவாக நம்முடைய பகைவர் மேல் உள்ள அன்பில் நாம் எந்த அளவுக்கு தேவனால் அளவிடப்பட்டிருக்கிறோம். நாம் பெற்ற அறிவினாலோ, புகழ்ச்சியினாலோ, பேச்சு திறமையினாலோ இதை அளவிட முடியாது. ஆனால் தேவனுடைய ஆழமான இரகசியங்களை அறிந்து கொள்ளக்கூடிய அறிவை ஒருவர் அன்பின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாமல் பெற்றுக் கொள்ள முடியாது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு தேவ ஆவி கொடுக்கப்படா விட்டால் அவர் தேவனுடையவைகளை அறிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் தேவனுடைய அறிவைப் பெற்று ஒருவர் தவறான கிரியைகளை நடப்பிக்கும்போது அவர் தேவனுடைய அறிவை இழப்பதற்கு முன், தேவனுடைய ஆவி அவரிடத்திலிருந்து எடுக்கப்படும். ஆகவே நம்முடைய குணலட்சணங்களை அளவிடும் போது தேவனிடத்தில் நாம் கொண்ட நெருக்கத்தையும், அங்கீகாரத்தையும் நமக்குள் இருக்கும் அன்பை பிரதானமாக சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.
1 கொரிந்தியர் 13:3 – “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப் படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை”
R3150[col.2 P1,2]: –
அப்போஸ்தலன் மற்றொரு கோணத்தில் வாதத்தை துவங்குகிறார். அன்னதானத்தைக் குறித்தும் தனக்கு உள்ளதெல்லாம் மற்றவருக்கு கொடுக்க வேண்டியது என்பதை குறித்தும், அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே இதன் முக்கியத்துவத்தை காட்டிலும் அன்பின் கொள்கைகளை மனதில் பதிய வைக்கும்படி இவ்வசனத்தை கூறுகிறார். அதாவது எந்த விதமான நல் நடக்கையும் அன்பின் அடிப்படையில் இராவிட்டால் அதில் எந்த பயனும் இல்லையென்று கூறுகிறார். மேலும் ஒரு இரத்த சாட்சியாக மரிப்பதற்கு துணிந்தாலும் சரி, அவர்கள் எரிக்கப்பட்டாலும் சரி, அன்பின் குணங்கள் அவர்களிடத்தில் இல்லாவிடில், அவர்கள் எந்த ஆசீரும். பலனும் பெற முடியாது,
சுயக்கட்டுப்பாடு, பலியின் ஜீவியம், விசுவாசத்தில் உறுதி, போன்ற நல்ல குணங்களில் வளர்ச்சி அடையக் கூடியவர்கள் அன்பில் வளர்ச்சி அடையாமல் எவ்வாறு இருக்கக்கூடும்? அன்பில்லாமல் இக்குணங்களை நாம் வளர்க்க வேண்டுமென்பது நம்முடைய நோக்கமல்ல. ஆனால் இக்குணங்களோடு அன்பும் ஓரளவிற்கு வளர வேண்டும். தானம், தர்மம் செய்வதும், பலி செலுத்துவதும் நம்முடைய அறிவு, நம்முடைய போதனை அனைத்துமே அன்பின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவோம் என்று மிக உறுதியாக அப்போஸ்தலர் கூறுகிறதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேற்கூறப்பட்ட நற்குணங்களில் சிறிதளவு அன்பு காணப்பட்டால் தேவனும் சிறிதளவேப் பாராட்டுகிறார். அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில் காணப்பட்டால் அந்த அளவிற்கு அந்த நல்ல குணங்களை பாராட்டுகிறார். முழுமையாக அன்பின் தூண்டுதலினால் செயல்பட்டால் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வார். புது சிருஷ்டிகளாக நம்முடைய நடக்கையில், அன்பு ஒரு பகுதியாக மட்டுமே இருந்தால், தேவனுடைய நாமம் மற்றும் அவருடைய மதிப்பார்ந்த வேலைகளுக்காக நாம் செய்யும் உயர்வான ஊழியங்கள், செலுத்தும் பலிகள் அனைத்தையும், மட்டுப்படுத்தப்படும் மற்ற எண்ணங்கள் நமக்குள் இருப்பதை பொருள்படுத்தும். ஆகவே இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நம்மை காத்துக்கொண்டு, நம்முடைய முழு இருதயமும், பூரண அன்பினால் நிரப்பப்படுவதற்கு ஆர்வத்தோடு முயற்சிக்க வேண்டும் – அதாவது நம்முடைய ஆண்டவர். நம்முடைய சகோதரர்கள் மற்றும் சத்தியத்திற்காக நம்முடைய ஒவ்வொரு சேவையும், தனிப்பட்ட லட்சியம், பெருமையின்றி, தூய்மையான இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பட வேண்டும்.
1 கொரிந்தியர் 13:4 – “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,”
R3150[col.2 P3-6]: –
அன்பைப் பற்றி இவ்வளவு முக்கியமான கருத்தை கொடுக்கும் அப்போஸ்தலர், அது என்ன என்றும் மற்றும் அது எதுவாக இல்லை என்றும், அது எவ்வாறு செயல்படுகிறதென்றும் மற்றும் அது எவ்வாறு செயல்படாது என்றும் அல்லது தன்னை நடத்திகொள்ளும் விதத்தைப் பற்றியும் விவரிக்க தொடருகிறார். இந்த விஷயத்தை குறித்து நாம் ஒவ்வொருவரும் நடைமுறைக்கேற்றபடி சுயமாக, நமக்குள் விசாரிக்கலாம். நான் அப்படிப்பட்ட அன்பை பெற்றிருக்கிறேனா? – குறிப்பாக விசுவாச வீட்டாரிடம், நீண்ட காலமாக கணிசமான உபத்திரவத்திற்குள் என்னை வழிநடத்தினாலும், நான் தயவாகவே இருக்கிறேனா? எவ்வளவு சீக்கிரத்தில் நான் புண்படுகிறேன்? வெகு சீக்கிரத்தில் என்றால், நிச்சயமாக நான் குறைவான தேவ ஆவியை – அன்பைப் பெற்றிருக்கிறேன் என்று குறிக்கிறது. வாழ்க்கையின் அற்பமான தவறுகளை நான் வெறுப்பதற்கு சினமடைந்தால், – கோபத்தின் ஆவியை கொண்டிருந்தால், தீமைக்கு தீமை மற்றும் உதாசினத்துக்கு உதாசினம் செய்தலால், தெய்வீக ஆய்வில், ஒரு வெற்றிசிறந்தவராக, இறுதியாக ஜெயிப்பவராக இருப்பதற்கு மிக முக்கியமான குணத்தில், நான் குறைவாக குறிப்பிடப்படுவேன்.
“நன்றி அற்றவர்களிடமும் அன்பாய் இருக்கிறார்.” என்று நம்முடைய பரலோக தந்தையைப் பற்றி சொல்லப்படுகிறது. நான் அவருடைய இந்த இரக்கத்தின் ஆவியை பெற்றிருக்கிறேனா? என் நண்பர்களிடம் கனிவாக, மென்மையாக. மரியாதையாக, நடந்து கொள்கிறேனா? என்னுடைய கிரியைகள் வார்த்தைகள் மற்றும் சிந்தனைகளில், இந்த அன்பின் அடையாளம் வியாபித்துள்ளதா? நான் மற்றவர்களிடம் கனிவுடன் இருக்கிறேனா? வார்த்தைகளில், பார்வையில், மற்றும் செயல்களில் இரக்கத்தை வெளிப்படுத்துகிறேனா? ஒரு கிறிஸ்தவனாக, எல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டிலும், வேலை ஸ்தலங்களிலும், சபையிலும் எல்லா இடங்களிலும், இரக்கம், அன்பு கலந்த மரியாதையோடு இருக்கவேண்டும். முள் செடியில் திராட்சை பழங்கள் கட்டப்படுகிறதைப் போல தேவ பிள்ளைகள், இந்த பொறுமை மற்றும் இரக்கத்தை பார்வைக்காக அணியாமல், அதற்கு மாறாக அவைகள் தேவனோடு ஐக்கியம் கொள்ளுதல், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அவருடைய பரிசுத்தமுள்ள ஆவி, அன்பின் ஆவியைப் பெற்றதன் பலன் அல்லது வளர்ச்சியே இந்த ஆவியின் கனிகளாகும்.
மற்றவர்கள் செழிப்பாக வாழ்வதை கண்டு, அவர்களின் வளர்ச்சியில் மகிழும் படியாக, பொறாமை இல்லாத அன்பை நான் கொண்டிருக்கிறேனா? என்னுடைய சொந்த விஷயங்களில் நான் வளமாக இராதபோதிலும், இந்த அன்பு என்னில் காணப்படுகிறதா? இது பெருந்தன்மை. இது பொறாமைக்கும் நேர் எதிரானது. பொறாமையின் வேர் சுயநலம். அன்பின் வேரில் பொறாமை வளராது. அன்புக்கு பொறாமை இல்லை, நன்மையின் எல்லா வளர்ச்சியிலும் அன்பு மகிழும்.
தன்னை தான் புகழாத அன்பை நான் பெற்றிருக்கிறோனா? – இது பெருமை இல்லாத. மனத்தாழ்மைக்கு முனைகிற அன்பாகும். “தன்னலமற்ற தன்மையைக் காட்டிக் கொள்ளும் நிலைக்கு தன்னைத்தானே அழைத்துச் சென்று, தன்னை புத்தியீனனாக்கி கொள்வதிலிருந்து ஒருவரை இந்த அன்பு விடுவிக்கிறது.” என்று யாரோ ஒருவர் உண்மையிலே கூறியிருக்கிறார் “சுய மதிப்பைப் பெருமைப்படுத்துதல், ஒருவரை மடமைக்கு மட்டும் அல்ல, சில நேரங்களில், பெருமைக்காக அவர் செய்யும் நன்மைகள், மிகுந்த பாவங்களுக்குள் அவரை வழிநடத்தும். தேவனுடைய ஆவியே, திடமான சிந்தனை ஆற்றல். இது மற்றவர்களை பெருந்தன்மையாக மதிப்பிட முயலுவது மட்டுமல்ல, தன்னைத் தான் பெருமை பாராட்டாது.
R2204[col.1 P2-5]: –
நல்ல எண்ணங்களை கொண்டவர்களின் குறைபாடுகளுக்கும், அபூரண தன்மைக்கும். பரிபூரண அன்பு பொறுமையாக இருக்கும். இதை தவிர, அப்போஸ்தலர் கூறுகிறபடி, வெகு ஜனங்களின் மனதை குருடாக்கி, எதிராளியான சாத்தானின் தாக்குதலின் கீழ் அதிகமாகவோ, குறைவாகவோ, இந்த உலகமும் கிடப்பதை உணர்ந்து வழியை விட்டு வெளியே செல்பவர்களிடமும், நீதியின் பாதையை எதிர்ப்போரிடமும் இந்த அன்பு பொறுமையாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவராம் இயேசுவுக்குள் இந்த அன்பின் வெளிப்பாடு முக்கியமாக காணப்பட்டது. அவருடைய எதிராளிகளிடம் அவர் எவ்வளவு பொறுமையாக இருந்தார். அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளை நாம் கவனிக்கலாம். “ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்” (எபிரெயர் 12:3)
பரிபூரண அன்பு அதன் செயல்முறையிலும் இரக்கமுள்ளது. இது மற்றவர்களின் நலனை மட்டும் தேடாமல், அதை மிகச் சிறந்த வழியில் செயல்ப்பட முயலுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு விவகாரத்திலும், தொனி மற்றும் முறைகள் அதிகமாக சம்மந்தப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கா தவர் யார்? கருணை நிறைந்த சிந்தனைக்கு ஏற்ற, ஒவ்வொரு வார்த்தையையும், செயல்பாட்டையும், உடனடியாக செய்யும். இருதயத்தின் முயற்சியினாலே, பரிபூரண அன்பு பெறப்படுகிறது. முதுமையான கழக உறுப்பினரின் குறிக்கோளை நினைவில் கொள்வது நல்லது – “இந்த உலகத்தை நான் ஒரு முறை கடந்துப்போவேன். நான் இந்த வழியில் மறுபடியும் கடந்து செல்லாததினால், எந்த ஒரு மனுஷனுக்கும், நான் செய்யத்தக்க எந்தவொரு நன்மை அல்லது எந்தவொரு இரக்கச் செயலையும், இப்போது நான் செய்யட்டும். எதையும் நான் தள்ளி வைக்கவோ, புறக்கணிக்கவோ வேண்டாம்.”
பரிபூரண அன்பு பெருந்தன்மையுள்ளது, பொறாமைக்கு இடமில்லை. இந்த பொறாமை, சுயநலம் என்ற ஒரு தவறான இயல்பிலிருந்து தோன்றுகிறது. இதற்கு எதிராக, அன்பு, ஒவ்வொரு நல்ல கிரியைகள் மற்றும் வார்த்தைகளின் செழுமையிலும் மற்றும் கிறிஸ்தவ கிருபையின் முன்னேற்றம் மற்றும் தெய்வீக ஆவியின் உந்தக்கூடிய அனைத்து தெய்வீக சேவைகளிலும் மகிழக்கூடியவர்களோடு, மகிழும்.
பரிபூரண அன்பு தாழ்மையுள்ளது, “அன்பு தன்னைப் புகழாது.” அதற்கு முன் எக்காளம் ஊதாது. அதன் நல்ல செயல்களை, மனுஷர் காண வேண்டும் என்று செய்யாது. ஒருவரும் அதை காணவும் மாட்டார்கள் அறிந்துக்கொள்ளவும் மாட்டார்கள். தேவன் மட்டுமே அறிந்துக்கொள்வார். அதனுடைய அறிவு அல்லது கிருபையினிமித்தம் அது பெருமைப் பாராட்டாது. ஆனால் எந்த நன்மையும், பரிபூரணமான எந்த ஈவும் பிதாவிடமிருந்து வருவதை மிக தாழ்மையோடு ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொரு இரக்கத்திற்கும் அவருக்கு கைமாறு செய்கிறது. “தன்னலமற்ற தன்மையைக் காட்டிக் கொள்ளும் நிலைக்கு தன்னைத்தானே அழைத்துச் சென்று, தன்னை புத்தியீனனாக்கி கொள்வதிலிருந்து ஒருவரை இந்த அன்பு விடுவிக்கிறது.” என்று யாரோ ஒருவர் உண்மையிலே கூறியிருக்கிறார்.”
1 கொரிந்தியர் 13:5 – “அயோக்கியமானதைச் செய்யாது, தற் பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,”
R3151[col.1 P1-6]: –
இனிய தோற்றமில்லாத நடைநயமற்ற, பண்புகுறைவுள்ள அன்பு என்னிடம் உள்ளதா? அற்ப விஷயங்களிலும் அன்பு செலுத்துவதை நற்பண்பு என்று வரையறுக்கப்படுள்ளது. சிறிய விஷயங்களிலும், அன்பின் வெளிப்பாட்டை மரியாதை அல்லது உபசரிப்பு என்று சொல்லப்படுகிறது. நற்பண்பின் இரகசியம், மேற்பரப்பான பளப்பளப்பு அல்லது இருதயத்திலுள்ள அன்பாகும். விசுவாச வீட்டாரோடு மட்டும் அல்ல இந்த உலகம், நம்முடைய வீடுகளிலும், மரியாதை மற்றும் இரக்கமுள்ள கிரியைகளை செயல்படுத்து வதற்கு உந்தக்கூடிய மனமார்ந்த அன்பை கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்றிருக்க வேண்டும்.
எனக்குரியதை மட்டுமே தேடக்கூடிய அன்பை நான் பெற்றுள்ளேனா ? மற்றவர்களின் நலன்களுக்காக சில சொந்த உரிமைகள் சிலவற்றை தியாகம் செய்ய அனுமதிக்கக்கூடிய அன்பை பெற்றிருக்கிறேனா அல்லது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் சொந்த உரிமைகளை மட்டும் கோருகின்ற சுயநலநெறியை நான் கொண்டிருக்கின்றேனா ? ஆனால், மற்றவர்களின் வசதி, ஆறுதல் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அந்த உரிமைகளை கோருகின்றேனா? இந்த குறிப்பிட்ட விஷயத்தில் அன்பைப் பெற, மற்றவர்களின் எந்தவொரு அநியாயமான நன்மைகளைப் பெற்றுகொள்ளாமல் இருக்க எச்சரிப்போடிருந்து, எந்த ஒரு தவறான செயலுக்கும் தவறான செயலைச் செய்வதை விட மோசமான துன்பத்தை அனுபவிப்பதை விரும்ப வேண்டும். – அநீதி செய்வதை விட அநீதியை அனுபவிப்பதே மேல்.
எளிதில் சினமடையாத அன்பு எனக்குள் இருக்கிறதா? உண்மையில், மூலபிரதியில் “எளிது” என்ற சொல் விடுப்பட்டுள்ளது. அன்பு எரிச்சலடைந்து, கோபத்திற்கு ஆளாகிவிடாது என்ற எண்ணத்தைத் தருகிறது. அன்பு அதன் உரிமையாளரை, கேள்வியின் இரண்டு பக்கங்களை பார்க்க இயலசெய்கிறது. அது அவரை மெய்யான தத்துவவாதியாக மாற்றுகிறது. நல்ல மனதுக்குரிய ஆவியை அவருக்கு தருகிறது. ஆத்திரமும், வன்முறையான கோபமும், மிக மோசமான தீங்கை, அவர்களுக்கு எதிரானவர்களுக்கு மட்டும் அல்ல, தங்களுடைய இருதயம், சரீரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அன்பானது, கொள்கையை கையாளும் போதும், மதிப்புமிக்க பாடங்களை ஆழப் பதிய வைத்து பயிற்றுவிப்பதற்கும், ஒரு சில வேளைகளில் கடுமையானதாகவும், விறைப்பாயும் இருக்கநேரிடும், மேலும் இது கோபம் என்னும் தலைமையின் கீழ்வரலாம், சரியான அர்த்தம் என்னவெனில், அது நீதியான கோபமாகவும், அன்பின் நோக்கமுடையதாகவும், நன்மை செய்வதற்காகவும், தேவையான நேரத்தில் மாத்திரம் இருப்பதாயும் இருத்தல் வேண்டும். நீதிக்கான கோபமெனில் நாம் உதடுகளினாலும் இருதயங்களினாலும் பாவம் செய்யாது காத்துக் கொள்ள வேண்டும். எப்போதும், அன்பையும் பெருந்தன்மையான மனோபாவங்களையும், நமது எதிரிகள் மீதோ அல்லது நாம் உதவிச்செய்பவர்கள் மீதோ, சரி செய்ய விரும்பும் நண்பர்கள் மீதோ காண்பிக்க வேண்டும்.
பேராசையுடன் செயல்படுவது, தீய தோற்றம், தீய வார்த்தைகள் மற்றும் கோபமான உணர்வுகளைக் கொண்ட மோசமான மனநிலையில் உள்ளவர்கள் எளிதில் சினமடைவார்கள். இது அன்பின் ஆவிக்கு முற்றிலும் எதிரிடையானது. ஆண்டவரின் பக்கத்தில் இருப்பவரும், அவருக்கு பிரியமாக இருக்க விரும்புபவர்களும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களின் நிலையை பெறவேண்டும் என்று முயலுகிற யாவரும், நம்முடைய நாட்களின் பொதுவான சூழ்ச்சிகளிலிருந்து தம்மை வைராக்கியத்தோடு காத்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் நல்ல மனமுடையவர்களாக இருக்கவேண்டும். இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய அன்பின் ஆவியை, நம்முடைய அன்றாட வாழ்க்கையின் விஷயங்களில், வெளிப்படுத்துவதை விட, எந்தவிதத்திலும் நாம் சிறப்பாக அவருடைய புகழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. எந்தவிதமான தீமையும் எண்ணாத அன்பும் எனக்குள் இருக்கிறதா? இது கபடற்றது. தீமையான சந்தேகம் இருப்பதில்லை. அல்லது மற்றவர்களில் குற்றம் காணாது அல்லது அவர்களின் தீய எண்ணங்களுக்கு ஒத்து போவதில்லையா? ஒரு பழைய பழமொழி – “அன்பு மெலிந்த இடங்களில் குற்றங்கள் பருமனாக இருக்கும்.”
இங்கு புதிய மொழிபெயர்ப்பில், இந்த சிந்தனை சற்று வேறுப்படுகிறது. தீமையை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். மன்னிப்புக்காக, அல்லது ஒரு திரும்பி கொடுத்தலுக்காக அல்லது இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருப்பது போல குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் சாட்ட வேண்டாம். குற்றங்களை கணக்கிடாமல், எந்த ஒரு மனபோக்குகளும் இராமல், அன்பு அதை கடந்துசெல்லட்டும். அந்த அன்பானது அதனுடைய நண்பர்களை நடத்துவது போலவே துல்லியமாக குற்றவாளிகளையும் நடத்தும் என்பது அர்த்தமல்ல. முன்பு இருந்த அதே மனநிலையை வெளிப்படுத்தாத அளவிற்கு குற்றங்களை கொஞ்சம் கவனிப்பது அவசியம் அல்லது தேவையாக இருக்கலாம். ஆனால், எந்தவிதமான வெறுப்போ, தீமையோ, சண்டையோ வெளிப்பட வேண்டாம் – முடிந்தவரை விரைவாக முழுமையான நல்லிணக்கத்திற்காக திறந்த வாய்ப்பை கொடுத்துவிட்டு, இரக்கம் மற்றும் மென்மையைத் தவிர வேறெதும் வெளிப்படக்கூடாது. சீர் பொருந்துவதை ஊக்கமளிப்பதற்கும், தவறுகளை மன்னித்து, மறப்பதற்கும், ஒரு விருப்பத்தை எடுத்துக்காட்டுவதற்கு எல்லாவற்றையும் செய்யக்கூடிய செய்ய வேண்டும்.
R2204[col.1 P6 through col. 2 P2]: –
பரிபூரண அன்பு நற்பண்புள்ளது – “அயோக்கியமானதை செய்யாது” பெருமை என்ற வேரிலிருந்து மிக பல அயோக்கியமானவைகள் மற்றும் முரட்டுத்தனம் வளருகிறது. இவைகள், பொதுவாக தங்களை அறிவாளிகள் என்றும் அல்லது நீதி ரீதியாகவே வசதியானவர்கள் என்று எண்ணுபவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு எதிரிடையாக, பரிபூரண அன்பு மனத்தாழ்மையோடு, நற்பண்புகளை வளரச்செய்கிறது. சிந்தனையுள்ள ஒரு மனுஷன் -“அன்பின் சிறுதொகை நற்பண்பு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சிறிய விஷயங்களிலும், அன்பின் வெளிப்பாட்டை மரியாதை அல்லது உபசரிப்பு என்று சொல்லப்படுகிறது. நற்பண்பின் இரகசியம் அன்பு செய்வதாகும். காரியங்களை அமைதியாக, அன்போடு செய்யக்கூடியவரே ஒரு பண்புள்ள மனிதர்.”
பூரண அன்பு சுயநலமற்றது – “தற்பொழிவை நாடாது.” ஒருவர் பராமரிக்கக்கூடிய கடமைகளையும், இயற்கையாகவே அவரை நம்பியிருப்பவர்களுக்கு நன்மை செய்யும் பொறுப்புகளையும் புறக்கணிக்கவேண்டும் என்று இங்கு குறிப்பிடவில்லை. ஒவ்வொரு உணர்விலும், “அன்பு வீட்டில் துவங்குகிறது.” சரியான சிந்தையை நாம் ஒருமித்து பார்க்கும்போது, பரிபூரண அன்பின் ஆவியைப் பெற்ற ஆண்களும், பெண்களும், வாழ்க்கையின் எந்தவொரு விவகாரத்திலும் தங்களின் சொந்த நலன்களைப் பற்றி மட்டும் சிந்திக்க மாட்டார்கள். பேரம் பேசுவதில், வாங்குபவர்கள் அல்லது விற்றவர்களின் நலனில் அக்கறைக் கொண்டிருப்பார்கள். அயல்வீட்டாரிடம் நன்மை பெற விரும்பமாட்டார்கள். ஆனால் குடும்பத்திற்கு உள்ளே அல்லது வெளியே ஆனாலும் சரி, இந்த அன்பை வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும், இரக்கத்துடன், பெருந்தன்மையாக, நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் “வாழ்வோம். வாழட்டும்”
பரிபூரண அன்பு நல்ல மனமுடையது “எளிதில் சினமடையாது. இன்று பொதுவாக, மிகுந்த தீமையின் மத்தியில், இந்த கடும்கோபம், சிடுசிடுப்பான, கெட்ட நகைச்சுவை, எரிந்துவிழும் தன்மை, குற்றம் சாட்டுதலுக்கு விரைதல் போன்ற குணங்கள் அதிகமாக காணப்படுகிறது. எனினும், எந்த அளவுக்கு இந்த நிலைப்பாடு வளர்க்கப்படுகிறதோ அல்லது மனப்பூர்வமாக வளர்க்கப்பட்டு அல்லது அதற்கு எதிராக போராடாமல் இருக்கிறதோ, அந்த அளவுக்கு பிதாவின் பரிசுத்த ஆவியில் நம்முடைய வளர்ச்சிக்கும் ஆண்டவராம் இயேசுவின் சாயலில் நம்முடைய குறைபாட்டிற்கும், அபூரணத் தன்மைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இது போன்று, தவறான ஆவியின் சான்றுகளில், வெகு சிலவற்றை, அவர்களின் தொடர்ச்சியான, சாக்குபோக்குகளுக்கு மிகுந்த கருணை பெறுகிறார்கள். ஆனால் எப்படியாவது, எப்போதும் இயல்பான துன்பம், பாரம்பரை, மற்றும் நரம்பு கோளாறுகள் – சிடுசிடுப்பு, எரிந்துவிழும் தன்மை மற்றும் குறைபேசும் தன்மையின் ஆவியை நோக்கி செயல்படும். ஆண்டவரின் ஆவியில் நிரப்பப்பட்ட ஒவ்வொரு இருதயமும், மாம்சத்தில் உள்ள இந்த தீமையான மனநிலையை எதிர்த்து, அதற்கு எதிராக ஒரு நல்ல போராட்டத்தை நடத்த வேண்டும். “இது என் வழி” என்று அது சொல்லாது. ஏனெனில், விழுந்து போன இயல்புடைய எல்லா வழிகளும் மோசமானது. பழைய சுபாவத்தையும், மாம்சத்தின் கிரியைகளும் மற்றும் சாத்தானையும் வெல்லுவதே புது சிருஷ்டியின் வேலையாக உள்ளது. அன்பின் வல்லமை இதை காட்டிலும் மேலானது என்று நம்மில் வெகு சிலரே, நம்முடைய நண்பர்களுக்கும், வீட்டாருக்கும் காண்பிக்கிறோம். ஒவ்வொரு தேவ பிள்ளைகளும், இந்த அன்பில் வளரும் போது, இனிமையான மனநிலை அவர்களுக்குள் உருவாகவேண்டும்.
பரிபூரண அன்பு கபடற்றது -“தீங்கு நினையாது.” இது தர்ம சிந்தையோடு மற்றவர்களின் நடத்தையை புரிந்துகொள்ள முற்படுகிறது. தன்னிலே, தூய மற்றும் நல்ல எண்ணம் கொண்டிருந்தால், முடிந்த வரை, அதே நிலைப்பாட்டில் இருந்து மற்றவர்களின் வார்த்தைகளையும், நடத்தையையும் காண்கிறது. அது விரோதங்களையும், சந்தேகங்களையும் பொக்கிஷமாக கருதாது. இதுவுமல்லாமல், சின்ன சின்ன காரியங்களிலிருந்து, தீமையான எண்ணங்களுக்காக, சூழ்நிலையான சங்கிலி தொடரான ஆதாரங்களை அது உருவாக்காது. “அன்பு மெலிதாக இருக்கும் இடங்களில் தவறுகள் தடிமனாக இருக்கும்” என்று ஒருவர் ஞானமாக குறிப்பிட்டிருக்கிறார். அன்பு இருதயத்தின் உள் நோக்கங்களைக் குறைகூறுவதற்கு பதிலாக, நியாயத்தீர்ப்பில் பிழைகள் திருத்தப்படுவதற்கு சாத்தியாமான அனைத்து உதவிகளையும் செய்கிறது.
1 கொரிந்தியர் 13:6 – “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்”
R3151[col.1 P7]: –
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும் அன்பு எனக்குள் இருக்கிறதா? சரியான மற்றும் தவறான கொள்கைள் என் மனதில் உறுதியாக நிலைத்திருக்கிறதா? முற்றிலும், சரியான கொள்கைக்கு ஒத்திசைவாகவும். தவறான கொள்கைக்கு எதிராகவும் இருப்பதால், தவறை என்றுமே நான் ஊக்குவிக்காமல், எனக்கு லாபம் உண்டானாலும், அதை கண்டனம் செய்கிறேனா? என்னுடைய முன்தீர்மாணிக்கப்பட்ட கருத்துக்கள் கெட்டுபோனாலும் அல்லது என்னுடைய பூமிக்குரிய சில நலன்களில் குறைபாடுகள் ஏற்பட்டாலும் சத்தியத்திலும், அதன் வெற்றிப்பொலிவிலும், மகிழ்ச்சியாக இருப்பதை தவிர்க்க முடியாத அளவுக்கு நான் சத்தியத்தோடு இசைந்திருக்கிறேனா? ஆண்டவருடைய ஜனங்களின் ஆவி என்று அப்போஸ்தலர் விவரிக்கும் தேவனுடைய அன்பு, அனைத்து சுயநலத்திற்கும் மேலானதும், நிலையான கோட்பாட்டின் அடிப்படையிலும், நாளுக்கு நாள் தெளிவாக அறிந்துக்கொண்டு, எவ்வளவு நஷ்டங்கள் ஏற்பட்டாலும், எப்போதும் உறுதியாக பற்றிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
R2204[col.2 P3-5]: –
பரிப்பூரண அன்பு நேர்மை வாய்ந்தது – “அநீதியில் சந்தோஷப்படாது” எங்கெல்லாம் தீமைகளை காண்கிறதோ, அப்பொழுதெல்லாம் துக்கப்படுகிறது. தீமையில் விழக்கூடியவர்கள் மற்றும் சோதனையில் அகப்படும் யாவர் மேலும் அனுதாபம் கொள்ளும். இவ்விதமான அன்பு “அநீதியின் கூலியை விரும்பிய “பிலேயாமின் எதிரிடையான நடவடிக்கையை தூண்டியது. மற்ற தீர்க்கதரிசிகளை போல கர்த்தருடைய கட்டளைகளின் கடுமையான வார்த்தைகளை மீறி நடப்பதை குறித்து சிந்தியாமல் பிலேயாமும் கர்த்தருக்கு பயந்திருந்ததை நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அவருக்கு தேவனுடைய ஆவி, அன்பின் ஆவி இராததினால், இஸ்ரயேலை சபிப்பதற்கு, வெகுமதி வழங்கப்படும் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டபோது (அந்த பரிசை வாங்குவதற்கு) முழு விருப்பத்துடன், சிந்தையில் உள்ள தீய நோக்கத்தை செயல்படுத்த துவங்கினார், அதே சமயம் ஆண்டவர் சுட்டிக்காட்டும் காரியத்தை மட்டுமே செய்வதாக, வெளிப்படையாக சொல்லிக்கொண்டார். அவ்வாறு, கிறிஸ்தவர்களில் சிலர், பயத்தினால் தெய்வீக வார்த்தைக்கு மதிப்பளித்தாலும், அன்பின் பரிசுத்த ஆவி இல்லாதவர்கள், செல்வத்தின் மேலுள்ள அன்பின் காரணத்தினால், நெறி தவறி….ஆண்டவரை வெளிப்படையாக எதிர்க்காமல், அவரை காரணம் காட்டி முடிந்தவரை தீங்கு உண்டுப்பண்ணும் பல்வேறு பழக்கங்களில் ஈடுப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சில பிலேயாமுகள், சம்பளத்திற்கும். தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கும், ஊழியம் செய்கிறார்கள். இந்த ஐசுவரியமுள்ள பிலேயாம்களின் உறவு, அவர்கள் விசுவாசியாத உபதேசங்களை (நித்திய ஆக்கினை, போன்று…) போதிக்க மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள். மற்றும் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு முன் பல வழிகளில், தடுக்கலின் கல்லை போடுகிறார்கள். (எண்ணாகமம் 22:7, 31:16, வெளிப்படுத்தல் 2:14) இந்த பிலேயாம்கள் விசேஷமாக பெயர் சபைகளில் உள்ள பொய் போதகர்களை அடையாளப் படுத்துகிறார்கள் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். – 2 பேதுரு 2:15, யூதா 11, வெளிப்படுத்தல் 2:14 காண்க.
தன்னுடைய இருதயத்தில், பரிசுத்த ஆவியையும், பரிபூரண அன்பையும் வளர்க்க முயல்கிற யாவரும், செயல் நோக்கத்தில் உண்மையுள்ளவர்களாகவும், நடத்தையில் நேர்மையுள்ளவர்களாக இருக்கும்படி கவனம் வேண்டும். நீதி மற்றும் நன்மையை பொருத்தவரையில், யாதொருவரின் விழ்ச்சி, அல்லது நீதியின் வளர்ச்சி அல்லது சொந்த முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதில் மகிழ்ச்சி அடைவதை காட்டிலும் முற்றிலுமாக வெறுத்து மேற்கொள்ளவேண்டும். பரிபூரண அன்பு எந்த சூழ்நிலையிலும், அநியாயத்தில் சந்தோஷப்படாது. மற்றவர்களின் வீழ்ச்சியில் அது என்றுமே உடன்படாமல், துக்கிக்கும். பரிபூரண அன்பு “சத்தியத்தில் சந்தோஷப்படும்.” தவறு எவ்வளவு லாபகரமாக இருந்தாலும், அன்பு அதில் எந்த பங்கும் வகிக்காது. தீமையினால் வரும் எந்த வெகுமதியையும் அது விரும்பாது. ஆனால் சத்தியத்தில் சந்தோஷப்படும் – ஒவ்வொரு உண்மையான விஷயத்திலும், மற்றும் குறிப்பாக எவ்வளவு பிரபலமற்ற சத்தியமானலும் சரி, எவ்வளவு துன்பங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், எந்த அளவுக்கு இந்த உலகத்தின் சிநேகம் இழப்பதற்கு காரணமானாலும், பரிபூரண அன்பு தெய்வீக வெளிபாட்டின் சத்தியத்தில் அதிகமாக சந்தோஷப்படும். இழப்பு, துன்புறுத்தல், துயரங்கள் அல்லது சத்தியத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எதிராக வரும் எதையும் பங்கெடுத்துக்கொள்ள அது சந்தோஷப்படும் அளவுக்கு அன்பின் ஆவிக்கு சத்தியத்தின் மேல் அத்தகைய உறவைக்கொண்டுள்ளது. நாம் அவரால் வெட்கப்பட்டாலும், அல்லது அவருடைய வார்த்தையினால் வெட்கப்பட்டாலும், ஆண்டவரின் மதிப்பீட்டில், அனைத்தும் ஒரே மாதிரியாகவே உள்ளது. அவர் தம்முடைய பரிசுத்தவான்களிலே மகிமைப்படும்படியான வேளை வரும் போது, அவர்கள் வெட்கப்படுவார்கள் என்று இவை அனைத்தையும் குறித்து, ஆண்டவர் அறிவிக்கிறார்.
1 கொரிந்தியர் 13:7 – “சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்”
R3151[col.2 P1]: –
தீய தாக்குதல்களுக்கு எதிராக அசைக்க முடியாத அளவுக்கு, தீமை, தூய்மையின்மை, பாவம் மற்றும் அன்புக்கு எதிரான அனைத்து காரியங்களையும் எதிர்த்து நிற்கக்கூடியதும், எல்லாவற்றையும் தாங்கக்கூடிய அன்பை நான் பெற்றுள்ளேனா? – எல்லாவற்றையும் விசுவாசிக்கக்கூடிய அன்பு என்னிடம் உள்ளதா? மறுக்க முடியாத ஆதாரங்களை கொண்டு, கட்டாயமாக மற்றவர்கள் மேல் தீமையை சுமத்த வேண்டிய சூழ்நிலை வரும் வரையில் அவர்களுக்கு தீமைக்கு தீர்ப்பளிப்பதற்கு விரும்பாத அன்பை பெற்றுள்ளேனா? – எல்லாருடைய தீமையை விட நன்மையை நம்பும் அன்பை பெற்றுள்ளேனா? – தீமையைக் கேட்பதில் சந்தோஷப்படாமல், அதை வெறுத்து அகற்றக்கூடிய அன்பைக் கொண்டுள்ளேனா? சாதகமற்ற சூழ்நிலையில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாலும், என்னுடைய உதவி வேண்டுபவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையோடு உழைக்கக் கூடியதும், எல்லாவற்றையும் நம்புகிற அன்பை நான் பெற்றுள்ளேனா? மற்ற அனைவரையும் பொறுத்த வரையில் அவர்களுக்கு சிறந்தவைகளை விரும்பி, அதற்காக போராடி. விடாமுயற்சியுடன், எல்லாவற்றையும் தாங்கக்கூடிய அன்பை நான் பெற்றிருக்கிறேனா?
R2205[col.1 P1-3]: –
பரிபூரண அன்பு “சகலத்தையும் தாங்கும்.” இது தேவனுக்காக எந்த விதமான நிந்தனைகள், கடிந்துகொள்ளுதல்கள், அவமானங்கள், இழப்புகள், தவறான விளக்கங்கள் மற்றும் மரணம் நேரிட்டாலும், சகித்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறது “நம்முடைய விகாவசமே இந்த உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” நமது வாழ்வின் உண்மையான மையமான விசுவாசமே கர்த்தரிடத்திலும், அவருடையவர்களுக்கும் பரிவாய் உலகத்தின் மீதான அன்பின் பரிசுத்த ஆவியாகும். – பரிபூரண அன்பு எல்லா சூழ்நிலைகளையும் சகித்து, மேலும் அவர் வழியாக நேசித்த நம்முடைய தேவனுடைய கிருபையால் ஜெயம் கொள்கிறவர்களாகவும் முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாகவும் நிறுத்தும்.
பரிபூரண அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்..” அவநம்பிக்கை கொள்ளாது, ஆனால் அதற்கு எதிராக, நம்பிக்கையில் பிரியப்படும். ஒரு நம்பமுடியாத சந்தேகத்திற்கிடமான மனதின் மூலம் புளித்துபோன வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக அல்லது எந்த ஒரு மனுஷனையாவது அநீதியாக தவறாக குற்றம்சாட்டி அல்லது சந்தேகப்படுவதை காட்டிலும், தேவைப்பட்டால், ஒரு நூறு முறை ஏமாற்றப்பட்டாலும், அது நல்லது என்ற கொள்கை மீது செயல்படுகிறது. “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று சொன்ன நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளின்படி, இந்த சிந்தனைகளுக்கு பொருந்தக்கூடியது ஒரு இரக்கமுள்ள மனநிலையாகும். கருணையற்ற, பொல்லாத எண்ணமானது, மற்றவர்களிடம் காட்டும் இரக்கமற்ற காரியங்களுக்கு ஊற்றாகும்.
பரிபூரண அன்பு “சகலத்தை நம்பும்.” இது எளிதில் சோர்ந்துபோவதில்லை. இது அன்பின் விடாமுயற்சியின் இரகசியமாகும். தேவனைப் பற்றி கற்றறிந்து, மற்றும் பரிசுத்தமான அவருடைய ஆவியின் பங்குதாரர்களாக அவருக்குள் நம்பிக்கை வைத்து, உடனடியான சூழ்நிலைகள் எவ்வளவு இருளாக இருந்தாலும், அவரது கிருபையான உடன்படிக்கையை நிறைவேற்றவதில் ஊக்கம் குலையாமல் இருக்கிறது. அன்பின் இந்த நம்பிக்கையுள்ள, மூலக்கூறுகளில் (element) பரிசுத்தவான்களின் விடாமுயற்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இது கடினத் தன்மையைத் தாங்கிக்கொண்டு நல்ல வீரர்களாக செயல்பட உதவி செய்யும். அதன் நம்பகமான தரம் எளிதில் பாதிக்கப்படுவதை இது தடுக்கிறது அல்லது எளிதில் கர்த்தருடைய வேலை நிறுத்தப்படும். மற்றவர்கள் சோர்வடைந்து, விரைந்தோடிவிடுவார்கள். நம்முடைய இரட்சிப்பின் அதிபதியை மகிழ்விக்க, நாம் ஒரு நல்ல போராட்டத்தை போராட, அன்பின் ஆவி நமக்கு பொறுமையை கொடுக்கிறது. அன்பு திரைக்கு அப்பால் நுழைந்து உறுதிப்பட்டிருப்பதால், அதனுடைய நம்பிக்கை விரக்தி அடையாது.
1 கொரி 13:8 – “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்”
R3151[col.2 P3]: –
அடுத்ததாக, அன்பே மிக சிறந்தது என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். ஆகவே இது நிலைத்திருக்கும். தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும். அந்நிய மொழிகளில் பேசுவதற்கான தேவைகளும், மதிப்புகள் ஓய்ந்துபோம் இக்காலத்து எல்லா அறிவும் ஒழிந்துபோகும். புதிய யுகத்தில் பூரணநிலைமைகள் முழுமையாக அறிமுகப்படுத்தப்படும்போது, நிச்சயமாக இப்போது இருக்கிற அபூரணங்கள் ஒழிந்துபோகும். இப்போது நாம் அறிந்த சிறப்பான தகவல் ஒரு பகுதி மட்டுமே. இராஜ்யத்தின் நிர்வாகத்தின் கீழ், பரிபூரணம் அடையும்போது, தற்போதைய காலத்தின் அனைத்து பகுதிகளிலும் மற்றும் அபூரண நிலைகள் ஒதுக்கப்பட்டுவிடும். ஒரே ஒரு விஷயம் மட்டும், நிச்சயமாக நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது – அந்த ஒரு காரியம் அன்பாகும்.
R2205[col.1 P4]: –
எல்லாவற்றிலும், அன்பு சிறப்பானது மட்டும் அல்ல, உண்மையில் நாம் பார்த்தபடி, இவை அனைத்தின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பில் சிறப்பானது. ஆனால் இது நீடித்திருக்கும் மிக அருமையான ஒரு கிருபை. அன்பு ஒருக்காலும் ஒழியாது – அது என்றுமே முடிவுப்பெறாது. இந்த அன்பின் குணத்தை பெற்றிருக்கும் யார் ஒருவரும் தோல்வியடைய மாட்டார். இப்படிப்பட்டவருக்கே, தெய்வீக திட்டத்தில், நித்திய ஜீவன் கொடுக்கப்படுகிறது.
1 கொரிந்தியர் 13:9-12 “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப்பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ குழந்தைக் கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன்.”
R3151[col.2 P4,5]: –
வளர்ச்சிக்கு ஒரு விளக்கம் – தற்போதைய மற்றும் இனி வரக்கூடிய அறிவிற்கும் அதன் ஆற்றலுக்கும், இடையில் எதிர்பார்க்கக்கூடிய வளர்ச்சி, ஒரு குழந்தை பூரணப் புருஷராக வளரும் வளர்ச்சிக்கு ஒப்பாக உள்ளது. மற்றொரு விளக்கம் – பழங்கால கண்ணாடிகள், தெளிவற்ற உருவங்களை அதாவது அபூரணமான பிரதிபலிப்புகளை அளித்தது. புதிய நிபந்தனையின் வரையறையின்படி நாம் பரிபூரணமாகப் பார்ப்போம், பரிபூரணமாக அறிந்துக் கொள்வோம். பரிபூரணமாக புரிந்துக்கொள்வோம். ஆதி சபையில் கொடுக்கப்பட்ட வரங்கள் அந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்ததுப் போல, அதாவது ஒரு குழந்தை நிலைக்கு பொருந்துவதாக இருந்தது. ஆனால் அது முதிர்ச்சி அடையும் போது அந்த “வரங்களின்” மதிப்பு குறைந்தது. அவைகள் இனி இருப்பதில்லை. ஆனால் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு போன்ற தெய்வீக ஆதரவின் உயர்ந்த வளர்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. தேவனுடைய சபை இந்த மூன்றையும் பேணி வளர்த்து, ஆவிக்குரிய வரங்களைக் காட்டிலும் ஆவிக்குரிய கனிகளை உயர்வாக மதிப்பிட வேண்டும். – இந்த மூன்றில் அன்பே பெரிது. அன்பு நீடித்திருக்கும். நாம் கண்டு, முற்றிலுமாக அறிந்துக்கொண்டபின், விசுவாசம் நடைமுறையில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் அல்லவா? மற்றும் நம்முடைய எதிர்பார்ப்புகள் மகிழ்ச்சியை எட்டும் போதும், நம்முடைய பரம தந்தையின் வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நாம் உடமையாக்கிக் கொள்ளும் போதும், நம்பிக்கையும் முடிவடையும் அல்லவா? ஆயினும், அன்புக்கு துவக்கம் இல்லாதது போல, அதற்கு ஒருபோதும் முடிவும் இராது. தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருக்கு ஒரு துவக்கம் இல்லாததுபோல, அன்புக்கு துவக்கம் இல்லை. ஏனெனில் அது அவருடைய குணம், அவருடைய மனநிலை மற்றும் அவர் நித்தியமாக நிலைத்திருப்பதைப் போல, அன்பும் நித்தியமாக நிலைத்திருக்கும். ஆயினும், யாரேனும், இக்காலத்தில் கிறிஸ்துவின் பள்ளியில் இப்பாடங்களை முற்றிலுமாக கற்றுக் கொண்டால், இந்த அற்புதமான அன்பின் கனி ஒரு மிகுதியான கையிருப்பாகும். இது நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் பொக்கிஷத்தை பரத்தில் சேமிக்கும் – இது அவருக்கும், இப்பொழுது அவரை சந்திப்பவர்களுக்கும் ஒரு சிறந்த ஆசீர்வாதமாகும். மேலும், ஆயிரவருட ஆட்சியில் அவர் ஆளுகைச் செய்ய அனுமதிக்கப்படுவதால், இந்த உலகம் ஆசீர்வதிக்கப்படும். அது தெய்வீக அதிகாரத்தின் முத்திரையாக இருப்பதால், இந்த ஆசீர்வாதம் நித்தியமானது.
R2205[col.1 P6 through col.2 P1]: –
அற்புதமானதும், தேவையான பண்பின் இந்த பகுதியை, அதன் பூரண நிலையில் விவரித்த அப்போஸ்தலர், மீண்டுமாக வந்து, மிக சிறந்த “வரங்களும்” அன்புக்கு கீழானவைகள் என்பதை காண்பிப்பதற்கு, அன்போடு, மற்றும் ஆவலோடு விரும்பத்தக்க வரங்களை ஒப்பிடுகிறார். தீர்க்கதரிசனத்தின் தேவை நிறுத்தப்படுவதினால், அவர் அறிவிக்கும் தீர்க்கதரிசனம் நிறுத்தப்படும். அந்நிய மொழிகளில் பேசக்கூடிய அற்புதமான வல்லமையும் இதே காரணத்தினால் நிறுத்தப்படும். பரிபூரண ஒளி அனைத்து மனுஷரிடமும் வரும் போது, முழுமையான, தெளிவான வெளிச்சம் வரும்போது எதுவும் மறைந்திருக்காது. அப்போது இரகசியங்களை அறியக்கூடிய அறிவு மற்றும் தேவனுடைய ஆழமான காரியங்களை விவரிக்கும் திறன் படிப்படியாக மறைந்துவிடும். எல்லாம் வெளியாக்கப்படும், எல்லாரும் பார்க்கமுடியும். எனவே, இரகசியங்களை புரிந்துக்கொள்ளும் திறன்களின் வல்லமை மற்றும் அதை மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கூடிய ஆற்றல் ஆகிய இவ்விரண்டும் வரங்களில் சிறந்தவைகளாக இருப்பினும், பூரண வெளிச்சத்தில் இவைகள் மறைந்துபோகும். ஆனால் அன்பு ஒருகாலமும் ஒழிந்துபோகாது. உலகத்தில் இதுவே மிக பெரிது. இனி வரவிருக்கும் உலகிலும், இதுவே மிக பெரிதாக தொடரும். தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய இரக்கத்திலும், வெகுமதிகளிலும், மகிழக்கூடிய அனைவரும், இந்த பரிசுத்தமான குணத்தை உடைமையாக்கிக்கொள்ளவேண்டும். ஒரு இடைநிறுத்தத்திற்கு பின், தற்போதைய காலத்தில் நாம் அனைவருக்கும் எவ்வளவுக் குறைவான அறிவைப் பெற்றுள்ளோம் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். மிக பெரிய அளவில் அறிவைக் கொண்டவர்கள் கூட, தெய்வீக வார்த்தை மற்றும் மறைந்திருக்கும் மறைப் பொருளை விளக்குபவர். ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். தெளிவற்றதாக காண்கிறார்கள். நீதியின் சூரியன் உதிக்கும் போது, அதன் பரிபூரண வெளிச்சத்தில் இந்த தெளிவற்ற நிலை மறைந்துவிடும். ஆயினும், அந்நேரம் வரையிலும், ஒரு பகுதியை மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும். அப்போது, பரிபூரண நிலைக்கு இடம் கொடுக்கும்போது, நாம் மாற்றப்படுவோம். நம்முடைய குழந்தைப் பருவத்தை திரும்பிப் பார்க்கும் போது, இந்த பூமிக்குரிய விஷயங்களில், நாம் உடல் ரீதியாகவும், அறிவிலும், வளர்ச்சி அடைந்திருப்பதையும், அதற்கு ஏற்றபடி, நம்முடைய சிந்தனை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றை நமது செயல் முறைகளை மாற்றி விட்டதை காணலாம். அதேபோல, ஆவிக்குரிய விஷயங்களிலும், நம்முடைய ஆதிகால கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு “குழந்தையைப்” போலிருந்ததை நாம் உணர வேண்டும். மற்றும் நாம் அவ்வாறே இருந்து விடுவதில் திருப்தி அடைந்துவிடக்கூடாது. ஆனால் எல்லா காரியங்களிலும், கிறிஸ்துவாக வளர்ச்சி அடைவதற்கு ஒரு தனி நபராக விரும்பவேண்டும். உண்மையான ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், கூட்டமைப்பில் உண்மை சபையாவார். அந்நிய பாஷையின் வரங்களும், அற்புதங்களும் குழந்தை பருவமாக இருந்தது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ், முன்னேற்றம் ஏற்பட்டபோது, குழந்தைப் பருவத்திற்கு பொருத்தமாகவும், மிக தேவையான சில சிறப்பம்சங்களும் மறைந்து போனது. அதற்கு பதிலாக, சத்தியத்திற்குள் வழிநடத்தும் மற்ற அனுபவங்கள், நெறிமுறைகள் வந்தது. எனவே இன்று “அந்நிய பாஷைகள்” மறைந்துவிட்டது. வருங்காலத்து நிகழ்வுகளை அறிவிக்கும் “தீர்க்க தரிசனங்கள்” தங்களுடைய நோக்கங்களை சிறப்பாக பணியாற்றிய பின் சென்றுவிட்டது…. ஆனால், சபை இன்னும் அபூரண அறிவில் இருந்தாலும், கர்த்தர் தொடர்ந்து “அறிவை” அளிக்கிறார். அவிசுவாசிகளுக்கு நற்செய்தியை அல்லது சத்தியத்தைப் பிரசங்கிக்கக்கூடிய முறைகளையும் தொடர்ந்து தருகிறார். அவர் சபைக்கு உதவியாக இன்னும் போதகர்களை தந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஆதியில் கொடுத்தது போல, இவைகள் அற்புதவிதமாக கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இயல்பாகவும். இயற்கையான தகுதிகளோடும்கூட ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் இவைகளைத் தருகிறது. ஆனால், சபையை பொருத்த வரையில், அவளுடைய ஓட்டம் முடிவுப்பெறும் போது, இவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் – “பூரண நிலை வரும்போது”, அபூரணமான எந்த உதவிகளும் அவருக்கு தேவைப்படாது.
1 கொரி 13:13 – “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது”
R2205[col.2 P2]: –
ஆவியின் மூன்று வரங்கள், கனிகளாக வளர்ச்சி அடையும்போது, அது நீடித்து வாழும். இம்மூன்றையும் ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் பேணி வளர்க்கவேண்டும். அவையாவன – விசுவாசம். நம்பிக்கை மற்றும் அன்பு ஆனால் இதில் மேலானதும், சிறந்ததும் அன்பே. தற்போதைய காலத்திற்கு நம்முடைய அழைப்பையும், தெரிந்துக் கொள்ளுதலையும் உறுதிப்படுத்தும்படிக்கு நம்மை வழிநடத்தக் கூடிய நம்பிக்கையும். விசுவாசமும் மிக முக்கியமாக பண்புகளாக இருப்பினும், அவைகள் நித்தியத்திற்கும் இருப்பதில்லை. “பரிபூரணமானவைகள் வரும் போது “சுறுசுறுப்பாக செயலாற்றும் இவைகளின் நடவடிக்கைகள் கனிசமான அளவுக்கு குறைந்துவிடும். ஏனெனில், பெரிய அளவில், பல பாடங்களின் குறிப்புகள், பார்வை மற்றும் அறிவு, விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் இடத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால் அன்பு ஒழியாது. மங்காது, ஒளி குறையாது. அது சுறுசுறுப்பாகவும், மகிமையாகவும், இப்போதைய வாழ்க்கையில், பயனுள்ளதாக இருப்பது போல வருங்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வருங்காலத்து வாழ்க்கையின் மொத்தத்தொகை அன்பாகும்.