CD-KNOWLEDGE-Q-16
எபே 6:17 – “இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.”
F658 (P1): –
அறிவுப்பூர்வமாக அல்லது தெய்வீக திட்டத்தை முழுமையாக புரிந்துக்கொள்வதே “இரட்சணிய தலைச்சீரா” அடையாளப்படுத்துகிறது. இப்போதைய நிலையைக்காட்டிலும் கடந்த காலத்தில் இதை பற்றிய காரியங்கள் அந்த அளவுக்கு அவசியப்படவில்லை. ஆனால் சாத்தான் மிக ஆவேசமாக சத்தியத்தை எதிர்த்து சகலத்தையும் விஞ்ஞான ரீதியாகவும், அழிவுக்குரிய ஆயுதங்களாகிய உலக ஞானத்தின் கல்வி அறிவுக்கு திசை திருப்பிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், இந்த தலைச்சீரா மிக அவசியமாக இருக்கிறது. மேலும், இக்காலத்தில் அதாவது இந்த நேரத்தில் மிக தாழ்மையுள்ள கிறிஸ்தவ போர் வீரர்கள் மட்டுமே அணிந்து கொள்ளும்படிக்கு இந்தத்தலைச்சீரா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதிராளியிடமிருந்து நம்முடைய ஆண்டவர் தம்முடைய சேவகர்களை விசுவாசத்தின் கேடகத்திற்குள்ளும் இந்தத் தலைச்சீராவுக்குள்ளும் வைத்துப் பாதுகாக்கிறார். இப்போதோ சர்வாயுதவர்க்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
R2873 :- “ஈடுபலியின் தத்துவம்”
கேள்வி – நீதிமானாக்கப்படுவதற்கு ஈடுபலியின் தத்துவத்தைப் புரிந்துக்கொள்வது மிக அவசியமா?
பதில் – தேவனுடைய பார்வையில் நாம் பாவிகளாக காட்சி அளிக்காமல் அவருடைய புத்திரர்களாக நம்மை அவர் ஏற்றுக்கொள்வதற்காக கொடுக்கப்படும் நிலையை நாம் நீதிமானாக்கப்பட்ட நிலைமை கூறுகிறோம். தேவனோடு கூட ஐக்கியப்படும் இந்த நிலை ஆபிரகாமின் காலத்திலிருந்தே நடைமுறையில் காணப்படுகிறது. மேலும் தேவனோடு இப்படிப்பட்டத் தொடர்பு வைத்தவர்களை அவர் சிநேகிதர்களாக பாவித்தார். ஆபிரகாம், தாவீது, சாமுவேல் அல்லது வேறு எந்தத் தீர்க்கதரிசிகளும் ஈடுபலியின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளவில்லை. அக்காலத்தில் தேவன் அவர்களுக்கு அதை முழுமையாக அறிந்துக்கொள்ள வாய்ப்பளிக்கவில்லை. ஆனாலும், இதைக்குறித்த குறிப்புகளையும், நிழல்களையும் அநேக வாக்குத்தத்தங்களின் மூலம் உணர்த்தினார்.
ஆயினும், இவர்கள் அனைவரும் தேவன் மேல் விசுவாசம் வைத்தார்கள். ஆகவே இவர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகப்பட்டார்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். தேவனுடைய சித்தத்தையும், திட்டத்தையும் அவர்களுக்கு வெளிப்படுத்தின அளவுக்கு, அவர்கள் முழுமையாக விசுவாசித்தார்கள். தேவனுடைய அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு ஆபிரகாமின் நாட்களில் அவர்கள் புரிந்துகொள்ளுதலின் அறிவு தேவையான அளவுக்கு அதிகரித்திருந்தது. தேவன் மேல் நாம் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே நாமும் நீதிமானாக்கப்பட்ட நிலையைப்பெறுகிறோம் என்று ரோமர் 4:24ல் அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டின் ஜனங்களை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த விசுவாசத்தையே அடிப்படை தகுதியாகவே வைக்கப்பட்டது. அதனால் இப்போதோ நம்முடைய ஆண்டவராம் இயேசு இரட்சகரின் மேலும் அவர் வழியாக பிதாவாகிய தேவன் மேலும் விசுவாசம் வைக்கக்கூடியவர்களாக இருக்கிறோம். அவரைப்பற்றி கேள்விப்படாதவர்களுக்கு அவரை விசுவாசிக்க முடியாது. ஆனால் ஆபிரகாம் தேவனையும், அவருடைய வார்த்தைகளையும் (அவருடைய சந்ததிக்குள் பூமியின் முழு குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்) விசுவாசித்தார். இப்படிப்பட்ட ஆபிரகாமின் விசுவாசம் தேவனுக்கு முன்பாக நீதியாக எண்ணப்பட்டது. நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்பதற்கு ஒப்பாக அவர்களுடைய கிரியையுள்ள விசுவாசம் முழுமையான கீழ்ப்படிதலின் மூலம் நிரூபிக்கப்பட்டது. நம்முடைய ஆண்டவரின் பகிரங்கமான வருகையில் அவர்களுடைய விசுவாசம் பூரண நிலையை அடைந்துவிடும்.
இயேசுவின் முதலாம் வருகையில், அவருடைய உபதேசங்கள் பெரிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தது. புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும், ஈடுபலியின் அர்த்தங்கள் விவரிக்கப்படும். ஆகவே சுவிசேஷ யுகம் துவங்கி இந்நாள் வரைக்கும், நம்முடைய ஆண்டவர் உவமைகள் மூலமும், அநேக உபதேசங்கள் வழியாகவும் ஈடுபலியின் மகத்துவத்தை அறிவித்து வருகிறார். ஆகவே கிறிஸ்துவின் மரணம் முழு உலகத்தின் பாவங்களுக்குப் பதிலாக கொடுக்கப்பட்டது என்ற உண்மையை தேவனுடைய ஞானத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருப்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் உலகம் இதை புரிந்துக்கொள்ளவில்லை.
நம்முடைய நீதிமானாக்கப்பட்ட நிலைக்கு அஸ்திபாரமாக, ஈடுபலியின் சத்தியம் மிக அவசியமானது. அதே நேரத்தில் நம்மை பொறுத்தவரைக்கும் “தேவனையும்” அவருடைய வார்த்தைகளின்படி கிறிஸ்துவின் ஜீவன் கொடுக்கப்பட்டது என்று விசுவாசித்து அதன்படி செயல்பட வேண்டும்.
நம்முடைய நாட்களில் இந்தப் பாடம் “காலத்திற்கு ஏற்ற போதனையாக” இருக்கிறது. ஏனெனில் இந்தப்பாடத்தில் அநேக முரண்பாடுகளும், நம்முடைய அடிப்படையான விசுவாசத்திற்குரிய சோதனைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டோம் என்ற தத்துவத்தை தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய காலத்தில் இருக்கிறோம்.
பாபிலோனின் மேஜைகள் முழுவதும் (-புறக்கணிக்கப்பட்டவைகள்-) வாந்தியால் நிறைந்திருக்கிறது என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார். ஒரு காலத்தில் அந்த மேஜையில் ஈடுபலியைக் குறித்த நன்மையான காரியங்கள் காணப்பட்டது. ஆனால் இப்போது அவர்களின் இருதயமோ சரியான நிலையில் இல்லாததினால் அவர்கள் போதனைகளைத் தவறாக புரிந்துக்கொண்டார்கள். இதனிமித்தம் தேவன் பாபிலோனை புறக்கணித்தார். மேலும் அவளுக்குள் இருக்கும் அவருடைய ஜனங்களை வெளியே வந்து “காலத்திற்கு ஏற்ற போதனைகளை” உட்கொள்ள அழைப்புக்கொடுக்கிறார் (நான் என் வாயிலிருந்து உன்னை வாந்திப்பண்ணி போடுவேன்). ஆகவே விடியலின் வெளிச்சத்தில் பாபிலோனின் மேஜைகளின் மேலுள்ள வாந்திகளும், தேவன் அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய ஏற்றகால சத்தியங்களும் தெளிவான வித்தியாசத்தோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன் கொடுக்கும் ஆகாரத்தை (ஈடுபலியின் சத்தியம்) உண்பவர்கள் புத்துணர்ச்சி அடைகிறார்கள்.
R3156 (col.2 P3): –
நம்முடைய வேத பகுதியைத் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கிறது. தேவனுடைய ஜனங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் தேவன் நினைத்தபடியே நடந்துவருகிறது என்று தவறாக போதிக்கிறார்கள். அதாவது தேவன் அவருடைய ஜனங்களின் விருப்பத்தை ஒதுக்கிவிட்டு இயந்திரங்களைப்போல அவருடைய வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்துகிறார் என்று பொருள்படுகிறது. இது மிக தவறானது. தேவனுடைய வார்த்தையில் இப்படியாக ஏதும் சொல்லப்படவில்லை. தேவன் மகிழ்ச்சியோடு எல்லாவிதத்திலும் முழு சுயாதீனத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நம்மை சில வாகனங்களைப் போல சிருஷ்டித்து, அவர் விரும்பியபடி நம்மை அங்கும் இங்கும் இழுத்துச்செல்லக்கூடிய நிலைமையில் நம்மை சிருஷ்டிக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் அவருடைய பிள்ளைகளாக இருக்கமுடியாது. மனிதனை சுயாதீனம் உள்ளவனாக சிருஷ்டித்தார். தேவனைப்போல, தான் விரும்பியதை செய்யக்கூடியவனாக இருந்தான். நாம் விரும்பியதை செய்வதற்கு எல்லா சூழ்நிலையும் சாதகமாக இல்லாமல் போனாலும், நாம் விரும்பியதை சித்தங்கொள்ள நாம் சுயாதீனம் பெற்றிருக்கிறோம். நம்முடைய ஆண்டவரும் அவருடைய ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் முன்னதாகவே பார்த்திருக்கிறோம். இயல்பான மனிதனில் சித்தங்களுக்கு மதிப்பு கொடுக்கும் தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புது சிருஷ்டிகளாக இருப்பவரின் சித்ததிற்கு தேவன் எவ்வளவு மதிப்புக் கொடுப்பார்?