CD-EVILSPEAK-Q-31
யாக் 3:2 “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்குக் கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்.”
R2447 [col.2 p2]: –
சபையின் பொதுவான ஊழியக்கார்கள் விசேஷமாக தங்களுடைய நாவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் – தங்களுடைய நாவை தீமைக்காகவோ அல்லது சபையோரை ஆசீர்வதிப்பதற்காகவோ, சபிப்பதற்காகவோ? எப்படிப்பட்ட காரியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்று நிதானிக்க வேண்டும். நம்முடைய ஆண்டவரின் சரீரத்தின் நாவாக செயல்படும் ஊழியக்காரர்கள் முழுமையாக அவருடைய ஆவியை பெற்றிருக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இவர்களின் பேச்சுக்கள் சபையில் மட்டும் அல்ல, உலகத்தார் மத்தியிலும் கேட்கப்படுகிறது. சபையின் ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தினர்களுக்கும் கிறிஸ்துவின் நாவாக செயல் படக்கூடிய ஒவ்வொருவருக்கும் இந்தக் கோட்பாடு பொருந்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர், தன்னுடைய நாவு ஞானமாகவும் அல்லது ஞானமற்ற முறையிலும், பரலோக ஞானத்திற்கும், அல்லது பூமிக்குரிய ஞானத்திற்கும் பயன்படுத்தலாம். தன் நாவினால் விசுவாசத்தை தகர்த்து, சகோதர்களின் நல்ல பெயரைக் கெடுத்து அன்பையும், நம்பிக்கையையும் தூக்கி எறியலாம். அல்லது ஆவிக்குரிய கனிகளில் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக பயன்படுத்தலாம். விழுந்து போன சுபாவத்தின் விஷம் நிறைந்த தீமையான காரியத்தைப் பேசி, சபையாகிய முழு சரீரத்தையும் கொளுத்தி விடுவதற்கோ அல்லது தூய்மைப்படுத்துவதற்கோ நாவானது பயன்படுத்தப்படுகிறது. தேவனுடைய ஜனங்கள் மத்தியில், தேவனுடைய சித்தத்தை செய்வதற்கும் நன்மையான காரியங்களை பேசுவதற்கும் தங்களுடைய நாவை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்தவர்கள் வெகு சிலர். ஆகவே தேவனுடைய இரக்கத்தினால் நம்முடைய நாவை தேவனுடைய சித்தத்திற்கு மட்டுமே செயல்படுத்துவோம் என்ற பிரதிதினையை நாம் எடுத்துக் கொண்டு வரக்கூடிய நாட்களில் நம்முடைய சரீரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த நாவை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருளில் இருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவரும் நம்முடைய இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தரின் ஊழியத்திற்குக் கீழ்ப்படுத்துவோம்.
R2157 [col.1 p1]: –
சபை கூடுதல்களுக்கு மூப்பர்களை தேர்வு செய்யும் பட்சத்தில் இந்த நாவை குறித்ததான தகுதிகள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். வார்த்தையினால் மற்றவர்களை எரித்துவிடக்கூடிய நபர்களை நாம் தேர்வு செய்யாமல், சாந்தமும், அமைதியும், தங்களால் தங்கள் நாவை கடிவாளத்தால் கட்டுப்படுத்தக் கூடியவர்களையும் தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே பேசுபவரை நாம் தேர்வு செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நாவு, ஒருவரை குணப்படுத்தும். இல்லாவிட்டால் மற்றவர்களை காயப்படுத்தி விடும். தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளதாயும், இருதயங்களை ஊடுருவும் அளவுக்கு கருக்குள்ளதாக இருந்தாலும், எந்த விதமான கசப்புள்ள நோக்கங்கல் இன்றி கூறப்படுகிறது. ஆகவே நாம் பேசக்கூடிய சத்தியம் முழுமையாக, அன்பின் அடிப்படையில் கூறப்பட வேண்டும்.
F249 [p2]:-
இவர்கள் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்பவர்களும், ஒரே மனைவி உடையவர்களாய் இருக்க வேண்டும். பிள்ளைகள் உடையவர்களாயிருந்தால், தன்னுடைய குடும்பத்தை சரியாக நடத்துபவராய் இருக்க வேண்டும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். அப்பொழுது, சபையில் உள்ள தேவ ஜனங்களை மிகச் சரியாக நடத்தலாம். அவர் இரு நாவு உள்ளவராகவோ, வஞ்சனை பேசுபவராகவோ, சண்டையிடுபவராகவோ வாக்குவாதம் செய்கிறவராகவோ இருக்கக் கூடாது. சபைக்கு வெளியிலும் இவர் நல்ல பெயரை பெற்றவராக இருக்க வேண்டும். இந்த உலகம் பொதுவாக பரிசுத்தவான்களை மெச்சிக் கொள்வதில்லை. ஆனாலும் பரிசுத்தவான்களின் நேர்மை, நீதி, உண்மை போன்ற குணங்களுக்கு இந்த உலகம் மெச்சிக் கொள்ளும். ஒரு சபையின் தேவைக்கேற்றபடி மூப்பர்களை தேர்வு செய்யலாம்.