Q-11
““புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து” – (எபே 5:25)
F497 [P1]
குடும்பத்தில் தலைமை வகிக்கக்கூடிய நபர் குடும்பத்தின் மேல் ஆதீக்கம் செலுத்த அல்ல, மாறாக தன்னுடைய பராமரிப்பின் கீழ் இருக்கும் ஒவ்வொருவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து, வழிநடத்தி, அவர்களை வழிநடத்த தக்க ஆலோசனை கூறவேண்டும். இப்படிப்பட்ட புருஷர்களுக்குள் இருக்கும் அன்பின் ஆவி, மனைவியின் விருப்பு, வெறுப்புகளையும், அவளுடைய நல்ல ஆலோசனையையும் என்றுமே ஒதுக்கிவிடக் கூடாது. ஆதாம் சகல விதமான பரிபூரணத்தில் சிருஷ்டிக்கப்பட்டபோதும், ஏவாளின் பிரிவினால், சில முக்கிய குணங்களை இழந்துவிடுவோமோ என்ற ஆதாமின் தவிப்பை இவர்களும் நிச்சயமாக உணருவார்கள். தெய்வீக ஏற்பாட்டின் முக்கியத்துவம் குடும்பத்தின் தலைவரிடமிருந்தாலும், நிச்சயமாக சில விசேஷித்த குணங்களை தன் மனைவியிடம் கண்டுணரச் செய்யும். தன்னுடைய சொந்த சிந்தையும் யோசனைகளும், மனைவியினிடத்திலிருக்கும் இசைவான ஆதரவையும் நன்கு உணருவார்கள். ஆகையால், நல்ல சிந்தையுள்ள மனுஷன் தன்னுடைய மனைவியின் உதவியை நாடி, அவளுடைய ஆதரவை அங்கிகரித்து, அவளுடைய நோக்கங்களுக்கு செவிக் கொடுத்து அவளுடைய அன்பை உணர்ந்து அவளை உயர்வாக புரிந்துக்கொள்வார்.