CD-EVILSPEAK-Q-16
1 சாமு 16:7 “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”
R3305 (col.2p2-5): –
நம்முடைய வார்த்தைகள் மற்றும் நடத்தையிலும் ஒவ்வொரு சிந்தையும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற கோட்பாட்டில் நம்முடைய வசனப்பகுதியின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. ஆகவே நம்முடைய சிந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். இருதயத்தின் நிறைவால் வாய் பேசும் என்று நம்முடைய இரட்சகரும் இதே காரியத்தை வேறு கோணத்தில் வெளிப்படுத்துகிறார்.
நாம் சரியான இருதயத்தை பெற்றிருப்பது மிக அவசியம். கசப்பான நீரூற்று தித்திப்பான தண்ணீரை கொடுக்காதது போல, பாவமுள்ள கசப்பு நிறைந்த இருதயத்தில் ஆசீர்வாதமான வார்த்தைகள் வரமுடியாது. சில வேளைகளில் தேவ கிருபை கசப்பு நிறைந்த இருதயத்திலிருந்து ஆசீர்வாதமான வார்த்தைகள் வரமுடியாது. சில வேளைகளில் தேவ கிருபை பெற்ற ஜனங்களிடமிருந்து துன்மார்க்கமான ஜனங்கள் சிலவற்றை கற்றுக்கொள்வதுண்டு. ஆனால் அதை அவர்கள் ஆழமாக கொண்டிராததினால், அவர்களுக்குள் இருக்கும் கசப்புகள் வெகு சீக்கிரத்தில் வெளிப்படும்.
இக்காலத்தில், கசப்பான நீரூற்றுகள், தித்திப்பான தண்ணீரை கொடுக்கும் என்று கர்த்தர் எதிர்பார்ப்பதில்லை. உடன்படிக்கை செய்த விசுவாசிகளின் இருதயம் மாற்றம் அடைய வேண்டும் என்று வசனங்கள் குறிப்பிடுகிறது. ஆகவே அவர்களை “பரிசுத்தவான்கள்”, தேவனுடைய புத்திரர்” கிறிஸ்துவுக்குள் சுத்திகரிக்கப்பட்டவர்கள், “ஆண்டவரின் சகோதரர்கள்” என்று ஒவ்வொரு நிருபமும் அவர்களை அழைக்கிறது. இவர்கள் தேவனுக்காக புதிய இருதயம், புதிய சித்தம் கொண்டவர்களாக தங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும் சிந்தையிலும், நீதி சத்தியம் மற்றும் நன்மையான காரியங்கள் உள்ளதா என்று எப்போதும் எச்சரிப்போடு கவனித்திருப்பார்கள்.
இதற்கு இசைவாக காரியங்கள் அப்போஸ்தலன் இந்த வகுப்பாருக்கு சொல்ல விரும்புகிறார். நம்முடைய வெளிப்படையான செயல்பாடுகளையும் நடத்தைகளையும் நாம் ஆராய்வது நலமாக இருக்கும். ஏனெனில் நம்முடைய உள்ளார்ந்த நன்மையான எண்ணங்களை நம்முடைய செயல்களினால் சிலர் தவறாக புரிந்து கொள்வதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு. “உங்களுடைய நன்மைகள் தீமையாக பேசப்படுவதற்கு அனுமதியாதேயுங்கள்” நம்முடைய உதடுகள் பாவம் செய்யாதபடிக்கும் நம்முடைய வாய்க்கு காவல் வைப்பது” நல்லது. நம்முடைய வார்த்தைகள் தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அல்லது சகோதரர்களை போஷிப்பதற்கும் அல்லது உலகத்திற்கு நன்மை உண்டாக பேச வேண்டும். ஆனால் நம்முடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் சவாலாக நிற்கும் இராணுவப்படைகள் அல்லது காவலர்களின் எண்ணிக்கை, நம்முடைய சிந்தைனைகளை காவல்காக்கும் காவலர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவும் வலிமை குறைவாக இருக்கிறது. ஆகவே நாம் எல்லா நேரங்களிலும் கவனமாக இருக்கவேண்டும்.
R2891 (col.2p4,5): –
“சுத்தமுள்ளவைகள் எவைகளோ” – இந்த உலக முழுவதிலும் எல்லா இடங்களில், அதிகமான அசுத்தங்கள் நிறைந்திருக்கிறது. ஆகவே உடன்படிக்கை செய்த ஜனங்கள் அப்போஸ்தலரின் போதனைகளை பின்பற்றி மிக கவனமாக, அசுத்தங்களை நம்மை விட்டு அகற்றி, மீண்டுமாக அவைகள் தங்களுடைய இருதயத்திற்குள்ளும், சிந்தைக்குள்ளும் நுழையாமல், காத்துக் கொள்வது இக்காலத்தில் ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எவ்வளவு கிரியைகளை செய்தாலும், இந்த அசுத்தங்கள் நம்முடைய கிரியைகளின் பலன்களை கெடுத்துவிடும். சிந்தையிலும், சித்தத்திலும் பரிசுத்தத்தை காத்துக்கொள்பவர்கள், தங்களுடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் காத்துக் கொள்வது எளிதாக இருக்கும். ஓர் அசுத்தம் நமக்குள் நுழைய வேண்டும் என்றால் உலகம், மாம்சம் மற்றும் பிசாசு – இம்மூன்றின் வழியாக தான் நுழையும். முதலாவது அது சிந்தையை தாக்குகிறது, அங்கு போராட்டங்கள் ஏற்பட்டால் யுத்தம் ஜெயிக்கப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை எந்த விதமான போராட்டங்கள் இல்லை என்றால், அதன் முடிவு எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” யாக் 1:15
நம்முடைய சிந்தையை பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு காரியம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டபின், அதில் எந்தவிதமான் அநீதி காணப்படவில்லை என்றாலும் அது அசுத்தமாக இருந்தால், தேவனோடு உடன்படிக்கை செய்த ஜனங்களின் சிந்தைக்கு இது தகாததொன்றாகும். அல்லது இப்படிப்பட்ட மாசுகள் சிந்தையில் நுழைந்து அதை அசுத்தப்படுத்துவதோடிராமல், அவைகளை முழுமையாக வெளியேற்றும் போது தொடர்ந்து சில வருடங்கள் இவைகள் கொடுக்கும் உபத்திரவங்களை தாங்கமுடியாது.
R2480 (col.2p2): –
தடுத்து நிறுத்த வேண்டிய காரியம் அல்லது தவிர்க்க வேண்டிய காரியத்தை விரும்புவதும், தீமையான காரியங்களில் முன்னேறி செல்வதாகும். இப்படிப்பட்ட காரியத்திலிருந்து முற்றிலுமாக விடுபடவேண்டும் என்று அப்போஸ்தலர் கண்டிக்கிறார். இவைகளை தாழ்த்தி முற்றிலுமாக அழிக்கும்படி கூறுகிறார். பலவகையான தீமைகள், பாவம் என்று நாம் அறிந்தால் மட்டும் போதாது. அதற்கு எதிராக போராடுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுவதை காட்டிலும் தேவனால் அங்கிகரிக்கப்படாத எல்லா காரியங்களிலும் நமக்குண்டான விருப்பங்களையும், ஏக்கங்களையும் நம்முடைய இருதயத்திலிருந்து முற்றிலுமாக வேரோடு பிடுங்கிவிட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு காரியம் நம்முடைய இருதயத்தையும், வாழ்க்கையையும் அதிகமாக சுத்திகரிக்கும். விசேஷமாக கிறிஸ்துவின் பெயரைக் கொண்டவர்களின் சிந்தை எவ்வளவு தூய்மைப்படும். இந்தக் குறிப்பையும் அப்போஸ்தலரின் எச்சரிக்கையை கவனியாத அநேகர், தொடர்ந்து எதிராளியானவனால் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் வெளிப்புறமாக தேவனுக்கு விரோதமான காரியங்களை வெறுத்து, இருதயத்தில் அவைகளை இரகசியமாக நேசித்தால் என்ன பிரயோஜனம்? இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மிக குறைவான ஆவிக்குரிய வளர்ச்சி காணப்படுகிறது. ஆகவே சரியான நேரத்தில், சிறந்த பரிசை பெற அப்போஸ்தலனாகிய பவுல், சரியான நடைமுறையை நமக்கு முன் வைத்திருக்கிறார். – நம்முடைய சிந்தை, விருப்பம் இலக்கும் மற்றும் இருதயத்தின் ஆசைகள் அனைத்தும் தேவனுடைய பரிபூரணமான சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும். இப்படி நடப்போர் சுவிசேஷத்தில், நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டப்பந்தையத்தில் சீரான பாதையில் சரியாக ஓடுபவர்களாக இருப்பார்கள்.