Q-8
“பிலி 2:8 – “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”
E111 [P1]-E112
2. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டகரமான ஆலோசனைகளை சாத்தான் நம்முடைய ஆண்டவராம் இயேசுவிடம் கூறினான் – ஆலயத்தின் உச்சியிலிருந்து ஜனங்கள் காணும்படி குதித்து, எந்த விதமான சேதமும் இன்றி தப்பித்தால், நிச்சயமாக இவர் ஒரு அதிசயப்பிறவி என்று ஜனங்கள் நம்பி, அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வார் என்று கூறினான். ஆனால் இப்படிப்பட்ட யோசனைகள் அனைத்தும், தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு முற்றிலும் முரண்பாடானது என்று அறிந்து, நீதியின் கோட்பாடுகளை இயேசு கடைப்பிடித்தார். சாத்தான் தவறாக வசனங்களை பயன்படுத்தினாலும், அவர் கொஞ்சமும் தயங்காமல், தேவனுடைய கிருபைகளை சோதிக்காதபடிக்கு தேவனுடைய வசனங்களைக் கொண்டு சாத்தானை முறியடித்தார். தன்னுடைய நிலையைக் குறித்து அவர் எண்ணாமல், சடுதியில் பதில் அளித்தார். ஏனெனில், அவருடைய தந்தையின் வல்லமையை பற்றி அவர் முழுமையாக அறிந்திருந்தார். தேவன் மேல் வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கை, தெய்வீக கட்டளையின்றி, எந்த அபாயத்தையும் வருவிக்காது. வீணாக பிதற்றுவதோ, அல்லது மற்றவர்களின் முன்னிலையில் தாங்கள் மெச்சிக்கொள்வதற்காகவோ இவைகள் செய்யப்படவில்லை.
ஆண்டவரின் சகோதரர்களுக்கு இப்படியான சோதனைகள் நிச்சயமாக வரும், அப்பொழுது நம்முடைய இரட்சிப்பின் அதிபதி நமக்கு முன் வைத்து போன பாடங்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதற்காக நாம் தேவையற்ற ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு, கிறிஸ்துவின் தைரியமான போர்வீரர்கள் என்று நம்மை நாம் மேன்மையாக எண்ணிக்கொள்ளக்கூடாது. “துணிகரமான தீச்செயல்கள்” உலகத்தின் மத்தியில் மட்டும் அல்ல ஆங்காங்கே தேவனுடைய பிள்ளைகள் மத்தியிலும் காணப்படுகிறது. இவைகளை தவிர்க்க தேவனுடைய ஜனங்கள் அதிக தைரியத்தோடே போர்களை நடப்பிக்கவேண்டியதாக இருக்கிறது. உலகம் பாராட்டுவதற்காக வேலை செய்வதல்ல, மாறாக உலகம் பகைப்பதற்காகவும், உபத்திரவப்படுத்துவதற்கான வேலைகளை செய்வதற்கு அழைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவமானத்தை சகிக்கவும், இகழ்ச்சிகளை தாங்கவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரட்சிப்பின் அதிபதியை பின்பற்றுபவர்கள் அவருடைய அடிச்சுவடுகளின் படியே நடக்கவேண்டும். இயல்பான மனிதன் ஆச்சரியப்பட்டு, வியப்படையவும் அளவிற்கு மிக பெரிய அற்புதங்களை நடத்தி, மகத்துவமான காரியங்களை செய்வதை காட்டிலும், தேவனுடைய பணிகளின் நிமித்தமாக, வரும் உலகபிரகாரமான அவமானங்களையும், இகழ்ச்சிகளை உதறித் தள்ள நமக்குள் விசேஷித்த தைரியம் தேவைப்படுகிறது.
இடுக்கமான பாதையின் வழியாக செல்பவர்கள் சுயசித்தத்தை எதிர்ப்பதற்கு நடப்பிக்கும் யுத்தமே மிக முக்கியமானதாகும். தங்களுடைய சித்தங்களை பரலோக தந்தையின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்பித்து, அவைகளை காத்து, தங்களுடைய இருதயத்தை அவைகளை ஆளச்செய்து, கூடுமானால், பூரணமான மனிதனுடைய நியாயமான விருப்பங்களையும், குறிக்கோள்களையும் நசுக்கி, தங்களுடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, தங்களுடைய பூமிக்குரிய சகலவிதமான விருப்பங்களையும் தேவனுக்காகவும் அவருடைய பணிக்காகவும் முற்றிலுமாக பலிசெலுத்தவேண்டும். நம்முடைய இரட்சிப்பின் அதிபதி இப்படிப்பட்ட சோதனைகளை ஜெயித்து வெற்றி அடைந்தார், அவருடைய சகோதரர்களும் இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிக்கவேண்டும். “தன் ஆவியை அடக்காத மனுஷன் (தன்னுடைய சித்தங்களை தேவனுடைய விருப்பத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்காதவர்கள்) மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” அதேபோல, தவறான விசுவாசம் கொண்டு ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிப்பவர்களும், தேவனுக்காக என்று சொல்லிக்கொண்டு, அவருடைய திட்டத்திற்கு மாறான காரியங்களை நடப்பிப்பவர்களும் இப்படியாகவே இருப்பார்கள். தேவன் மேல் வைக்கும் விசுவாசம், குருட்டுதனமாக எதையும் நம்பி ஏமாறாது. மேலும், தேவனுடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும் குறித்து, வரம்புமீறிய காரியங்களை கற்பனை செய்யாது. மாறாக, இந்த உலகத்தின் காரியங்கள், பிசாசின் தந்திரங்கள் மற்றும் மாம்சத்தை மேற்க்கொண்டு ஜெயிக்க, தேவனுடைய அற்புதமான விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தின் சரியான பாதையில் ஓடி தெய்வீக வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்ப்படியச்செய்யும்.
E423 [ P 1]
தங்களுடைய ஆதிமேன்மையை காத்துக்கொண்ட தூதர்கள் தேவனுடைய சித்தத்தை விசுவாசத்தோடு நடப்பித்து, மனுஷனுக்கு ஈடுபலியாக தங்களை சந்தோஷமாக செலுத்துவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்திருப்பார்கள் என்பதற்கு சந்தேகமே இல்லை. ஆனால் இப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்கு சோதனைகளில் உச்சகட்டத்தை எட்டி தேவன் மேல் வைத்த விசுவாசத்தை நிரூபிக்கவேண்டியதாக இருந்தது. மேலும், தங்களுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு தேடக்கூடியவருக்கு (சாத்தான்) வீழ்ச்சியையும், தங்களையே தாழ்த்தி, பரலோக பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய திட்டத்தை நிறைவேற்றக்கூடியவர்களை அவர் மிக மேன்மையான நிலைக்கு உயர்த்தக்கூடிய ஒரு தெய்வீக நோக்கம் இதில் அடங்கியிருந்தது. எனவே, இந்தத் தெய்வீக திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும், தேவன் இந்த உலகத்தின் மேல் வைத்த அன்பிற்காகவும், இந்தத் தெய்வீக வாய்ப்பை பயன்படுத்தி, தன்னுடைய குமாரனின் கீழ்ப்படிதலையும், அன்பையும், மனத்தாழ்மையையும், இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி, தன்னுடைய ஒரே பேறான குமாரனை மகிமைப்படுத்தினார்.
R2201 [col. 2 P3,4]
“நான் உன்னை கழுவாவிட்டால், என்னிடத்தில் உனக்கு பங்கில்லை என்ற நம்முடைய ஆண்டவராம் இயேசு கூறினார். இங்கு “கழுவுதல்” என்ற வார்த்தை மனத்தாழ்மையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும், நேரங்களிலும் இந்தக் கோட்பாட்டை, நன்மைக்கு ஏதுவாக கடைப்பிடிக்க வேண்டும். கூடுமானால், சரீர அங்கங்களுக்கு முடிந்த வரைக்கும் தாழ்மையோடு எல்லா வகையான ஊழியங்களையும் செய்யவேண்டும். அவைகளை ஆண்டவருக்கு செய்வதைபோல் செய்யவேண்டும்.
ஆண்டவரின் பணி முடிந்தபின் அவர் அதனுடைய முக்கியத்துவதை விவரித்தார். முதலாவது மனத்தாழ்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவர் அங்கு செயலாற்றினார். அவருடைய உண்மையான அங்கத்தினர்களுக்கு எவ்வளவு இழிவான தொண்டுகளைச் செய்ய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை செய்யவேண்டும் என்று காட்டினார். அடுத்து, கால்களை கழுவுவதில் ஒரு மிக பெரிய சத்தியம் அடங்கியிருந்தது. சொல்லப்போனால், ஆண்டவரால் முன்னமே சுத்தகரிக்கப்பட்டவர்கள் அதாவது விசுவாசத்தின் மூலமாக சகலத்திலும் நீதிமானின் நிலையை பெற்றவர்களாக இருந்தாலும், இந்த உலகத்தில் இருக்கும் வரையில் சில மாம்சமான அசுத்தங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஞானஸ்நானம் பெற்று, நீதிமானாக்கப்படும் நிலைமை நீடித்த நாட்களுக்கு தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப்படவேண்டும். அதாவது ஒவ்வொருவருடைய கால்களும் (நடைகள்) ஜலத்தை அடையாளப்படுத்தும் வசனத்தினால் அடிக்கடி சுத்திகரிக்கப்படவேண்டும். (எபே 5:26) சபையின் ஒவ்வொரு அங்கத்தினர்களும், ஒருவர் மேல் ஒருவர் கவனமுள்ளவர்களாக தங்களை பரிசுத்தத்திலும், நீதியிலும், காத்துக்கொண்டு, உலகம், சாத்தான் மற்றும் மாம்சத்தினால் வரும் சோதனைகளினால் விழாதபடிக்கு ஒருவருக்கொருவர் தாங்கி, ஜெயிக்க முயற்சிக்க வேண்டும்.
R2450 [col.1 P3 and col2 P2]
சடங்காக நடத்தப்பட்ட ஞாபகார்த்தமான இராபோஜனமும், சடங்காக அனுசரிக்கப்பட்ட ஞானஸ்நானமும் ஒரே விதமான முக்கியத்துவம் பெற்றது என்று சில விளக்கம் சொல்லுவதை தவறு என்று நாம் யோசித்தோம். இவைகளுக்குள் எந்த விதமான ஒற்றுமையும் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் தாழ்மை மற்றும் சாந்தத்தின் கோட்பாடுகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு சுத்திகரிப்பு, அல்லது எந்தவித உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், அவர்களின் சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த வேலைகளை செய்யகடமைப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக ஆண்டவரின் ஆவியை பெற்றவர்கள் அவரைப் போலவே மகிழ்ச்சியோடு இக்காரியங்களை நடப்பிப்பார்கள். ஆனால் இப்பணிகளை செய்யும் தேவ ஜனங்கள் முதலாவது தங்களுடைய கால்களை கழுவி சுத்திகரித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்குபின் மற்றவர்களை சுத்திகரிக்க முயற்சிக்கவேண்டும். ஆகவே இயேசு நமக்கொரு மாதிரியின் மூலம் நமக்கு கட்டளைகளை விட்டு சென்றார்.
ஆகவே உண்மையில் இயேசுவை பின்பற்ற விரும்புவோர், அவருக்குள் இருந்த சாந்தம், அமைதல், மனத்தாழ்மை மற்றும் சரீர அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்யக்கூடிய மனநிலை – அனைத்தையும் மிக தெளிவாக உணர்ந்து, துல்லியமாகவும் பின்பற்றவேண்டும். இந்த முழு சிந்தனை அவருடைய வார்த்தைகளில் அடங்கியுள்ளது – “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், (இந்த கோட்பாடுகளை வாழ்க்கையின் அனைத்திலும் பொறுத்திக்கொள்ள அறிந்திருந்தால்) இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” (யோவான் 13:17)
R3495 [col.2 last P]
கிணற்றண்டையில் இயேசு அமர்ந்திருக்கையில், தண்ணீர் மொண்டுக் கொள்ள வந்த சமாரிய பெண்ணிடம் இயேசு பேசின காரியங்கள் – சுவிசேஷ யுகத்தின் தெய்வீக சத்தியத்தின் மிக முக்கியமான ஒரு காரியத்தை சுட்டிக்காட்டுகிறது. அநேக சந்தர்பங்களில் நம்முடைய ஆண்டவர் குறிப்பிட்ட காரியங்களை, குறிப்பிட்ட ஜனங்களுக்கு சாதாரணமாக கூறியுள்ளார். அவரை பின்பற்றுபவர்களை இது அதிகமாக ஈர்த்தது. உண்மையில், சுவிசேஷ யுகம் முழுவதிலும் நம்முடைய ஆண்டவரின் கோட்பாடுகள் மிக எளியோரிடத்தில் சொல்லப்பட்டு வந்தது. “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.” ஆனால் தேவன் உலகத்தில் இழிவானவர்களையும், விசுவாசத்தின் ஐசுவரியவான்களையும் தெரிந்துக்கொண்டார். ஆகவே தேவனுடைய கிருபையால், இயேசுவின் மூலம் தெய்வீக சமாதானத்தை அறிந்திருக்கிறோம். எனவே, இந்த உலகத்தின் இழிவான காரியங்களைக் கொண்டு மேன்மையான காரியங்களை சிருஷ்டிக்க நோக்கமாகி, அதன் வழியாக தம்முடைய மகிமையை பிரதிபலிக்கவும், அவரை துதிக்கும் துதி, நித்திய நித்தியமாக கிருபையின் அடையாளமாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொண்டவர்களாக மகிழ்ந்து களிக்கூறுவோம், நம்மை நாம் தாழ்மைப்படுத்துவோம்.