CD-KNOWLEDGE-Q-15
நீதி 2:3-6 “ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக்கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்”.
2பேதுரு 3:18 “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக ஆமென்”.
R3153 (col.1 P6,7 through col.2 P2-4): –
முதலில் கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொண்டது, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். ஆனால் இந்தப் படியை கடக்கக்கூடியவர்களுக்கு கிடைக்கும் பரிசு, அவருடைய வார்த்தைகளில் நிலைத்து நிற்பதிலும், அவருடைய உண்மையான சீஷர்களாக தொடர்ந்து வாழக்கூடிய உண்மையான நோக்கத்தைப் பொருத்தே உள்ளது. இதை செய்வதில் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் மனித பெருமையானது தெய்வீக சத்தியதை விட்டு விலகி, அங்கும் இங்கும் திரிந்து புதிய தத்துவங்களையும் கூற்றுக்களையும் தேடி அலையும். இந்த உலகத்தின் ஞானத்தில் தேறினவர்களுடைய கருத்தோடே இசைந்திருக்க வழித்தேடும்.
தொடர்ந்து சீஷத்துவத்தில் வளர்ந்துக் கொண்டிருப்பவர் நிச்சயமான சத்தியத்தை அறிந்துக் கொள்வார்கள் என்ற வாக்குறுதியை வசனத்தின் மூலம் பெறுகிறார்கள். ஆனால், “பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற….” (2தீமோ 3:6,7) அநேகர் உண்டு. இவர்கள் தேவனுடைய வார்த்தைகளை நிராகரிக்கக்கூடிய மனித தத்துவங்களை நாடுகிறார்கள். இவர்கள் என்றுமே சத்தியத்தைக் கண்டடையமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எந்த விதமான வாக்குத்தத்தங்களும் கொடுக்கப்படவில்லை. தெய்வீகமாக நியமிக்கப்பட்ட சரியான வழி முறையில் சென்றால் மட்டுமே ஒருவர் சத்தியத்தைக் கண்டடைய முடியும். நம்முடைய ஆண்டவரும், அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தேவனால் நியமிக்கப்பட்ட வழியாக இருக்கிறார்கள். ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்ட எழுத்துக்களில் காணப்படும் போதனைகளைத் தொடர்ந்து படித்து தியானம் செய்து, அவைகளை நம்பி, தேவனுடைய வார்த்தைகளில் சொல்லப்பட்டவைகளின் அடிப்படையில் நம்முடைய குணங்களைச் சரியாக உருவாக்க வேண்டும்.
அப்போஸ்தலர் கூறுகிறபடி, தேவனிடமிருந்து அவ்வப்போது கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்களான சகோதர்கள் வழியாக கொடுக்கப்படும் சகல உதவிகளுக்கும் இந்தக் கருத்து முழுமையாக ஒத்துப்போகிறது. (எபே 4:11-15, 1 கொரி 12:13,14) தேவன் எப்போதும் எழுந்தருளியிருக்கிறார், அவர் முடிவு பரியந்தம் எழுந்தருளியிருப்பார். கிறிஸ்துவின் சரீரத்திற்குத் தேவையானதை போஷிக்க அவர் உதவி செய்வார், ஆனால் தேவனுடைய போதனைகளை அவருடைய உறுதியான வார்த்தைகளின் மூலம் ஜாக்கிரதையாக நிரூபிக்க வேண்டியது ஒவ்வொரு சரீர அங்கத்தினர்கள் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.
இப்படியாக தொடர்ந்து தேவனுடைய வார்த்தைகளில் உண்மையும், உத்தமுமான சீஷர்களாய் நிலைத்திருந்தால், உண்மையில் “நாம் சத்தியத்தை அறிந்துக்கொண்டு” காலத்திற்கேற்ற போதனைகளில் நிலைவரப்பட்டு, அதில் ஆழமாக வேரூன்றி, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தில் நிலைக்கொண்டவர்களாக “நல்ல போராட்டத்தை போராடி”, “நல்ல சாட்சிகளாக” கிறிஸ்து இயேசுவுக்குள் நல்ல போர் சேவகனாக இறுதிவரைக்கும் அதாவது மரணபரியந்தம் நிலைத்திருப்பார்கள். ஒரே நாளில் நாம் சத்தியத்தின் அறிவை பெற முடியாது. ஆனால் பொறுமையாகவும், படிப்படியாகவும், நாம் சத்தியத்தை அறிந்துக்கொள்ளலாம். நாம் அடி எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு படிகளும் நிச்சயமானதும், வளர்ச்சிக்கு ஏதுவானதுமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு படிகளும் அடுத்தபடியைத் தாண்டுவதற்கு வழி நடத்தக்கூடியதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும், அறிவிலும், நற்கனிகளிலும் அதிகதிகமான வளர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும்.
இப்படியாக, கிடைக்கபெற்ற சத்தியம் நமக்குள் சுத்திகரிப்பின் வல்லமையை படிப்படியாக அதிகரித்து, நமக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் கனிகளாகிய நீதி, சமாதானம், சந்தோஷம், அன்பு, சாந்தம், விசுவாசம், பொறுமை மற்றும் ஒவ்வொரு நல்ல குணமும் ஒவ்வொரு கிருபைகளும் காலத்திற்கேற்றபடி வளர்ச்சி அடைந்து மகிமையாக பூரணத்துவத்திற்கு வழிநடத்தும்.
R3156 (col.2 P1):-
இந்நிலையை பெற்ற பின், நம்முடைய வேதபகுதியின் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நமக்கு சொந்தமாக ஏற்றுக்கொண்டபின் தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சரியாக புரிந்துகொள்வதற்கு தேவைப்பட்ட நேரத்தை செலவழித்து, விசுவாசத்தில் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இதுவே “கிருபை மற்றும் அறிவின் வளர்ச்சி” என்று வசனங்கள் குறிப்பிடுகிறது.
தேவனுடைய வாக்குத்தங்களை ஏற்றுக்கொண்டு அதை விசுவாசத்தோடு செயல்படுத்தும் போது நிச்சயமாக, நாம் அறிவில் வளர்ச்சி அடையலாம். இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற நாம் ஆயத்தப்பட்டு பெற்றுக்கொண்ட ஒவ்வொரு அறிவையும், உண்மையான இருதயத்திலும் நேர்மையான சிந்தையிலும் பெற்றுக்கொள்ளும்போது இயல்பாகவே நாம் கிருபையில் வளர்ச்சி அடைவோம். அது மட்டும் அல்ல, அடுத்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவுக்கேற்ற கீழ்ப்படிதலும், நீதியிலும் (கிருபை) நாம் ஆயத்தப்பட்டு, தகுதி பெறுவோம். ஒருவேளை நாம் திரும்பிப் பார்க்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்த வளர்ச்சியின் காரியங்கள் தடைபடும். அறிவை இழக்கும்போது, கிருபைகளும் குறைந்து இருளுக்குள் போக துவங்குகிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் நாளுக்கு நாள் மங்கலாகி இந்த உலகத்தில் அல்லது பாவத்தில் தொலைத்து விடுவார்கள்.