CD-EVILSPEAK-Q-15
R3114 (col.2p1): –
“பரிசுத்தமான இருதயம்” – பரிசுத்தமான சித்தம், நோக்கம், சிந்தை – இவை அனைத்தும் நீதியை நோக்கி செல்லும் என்பதை முக்கியத்துவப்படுத்துகிறது. திடீர் என்று ஒரு கடுமையான சோதனை வரும்போது மாம்சத்தின் பலவீனத்தினாலே வலது பக்கம் சாய்வதா, இடது பக்கம் சாய்வதா என்று யோசிக்கும் போது, சுத்தமான இருதயம், நீதியின் பக்கம் நம்மை எளிதில் வழி நடத்தும். சுத்தமான இருதயம் நீதியையும் சத்தியத்தையும் நேசிக்கும், அநீதியை வெறுக்கும். அசுத்தமானவைகளை, விட்டு விலகும், பரிசுத்தமானவைகளை ஏற்றுக்கொள்ளும். ஒரு மனுஷனுடைய ஆடைகளில், மொழியில் மற்றும் பழக்க வழக்கங்களில் பரிசுத்தத்தை விரும்புவார்கள். இப்படிப்பட்டவர்களின் ஐக்கியத்தை மட்டுமே அந்த இருதயம் விரும்பும். “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும் என்று அறிந்து மற்ற எல்லாவற்றையும் புறக்கணிக்கும்.
R3604 (col.p1): –
“நம்மை நாம் நியாயந்தீர்த்துக் கொண்டால், நாம் நியாயந்தீர்க்கப்படோம்.” என்று நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை நினைவில் கொண்டவர்களாக நம்முடைய இருதயத்தின் சிந்தையை நாம் சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். நாம் நம்மை நியாயந்தீர்க்காவிடில், நாம் அவருடையவர்களாக இருப்பதாலும், நாம் நம்மை அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததினாலும், நாம் தேவனால் தூய்மைப்படுத்தப்படுவோம். கள்ளம் கபடம் இல்லாத இருதயத்தில் பரிசுத்தமான வார்த்தைகள் பிறக்கும். அது உண்மையும், சுத்தமும் நல்லொழுக்கம் உள்ளதாகவும் இருக்கிறது. இந்த வார்த்தையின்படி சபையிலோ, வெளியிலோ பரிசுத்தமானவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால், அதை புரிந்து கொள்ளுவதற்கு நம்முடைய ஆண்டவர் கொடுத்த திறவு கோலாகிய “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” – என்ற வசனத்தை கண்டு நாம் மகிழ்ச்சி அடையலாம். ஆகவே இந்த அழியக்கூடிய அபூரணமான நிலையில் இருக்கும் வரை, பரிபூரணமான பரிசுத்தத்தில் நிலைத்திருப்பது இயலாத காரியம். ஆனால் நமக்கு இது சாத்தியமானது. பரிசுத்தமான நோக்கத்துடன், பரிசுத்தமாக இருக்கும் இலக்கோடிருக்கும் நாம் பரிசுத்தமான இருதயத்தை பெற முடியும்.
R2250 (col.2p4): –
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” பரிசுத்தமுள்ள இருதயம், சித்தம், நோக்கம் அதாவது ஒவ்வொரு வார்த்தையிலும் கிரியையிலும் முழுமையாக பரிசுத்தமாக இருப்பதற்கும்” அதற்கு விரோதமாக இருப்பதற்குரிய வித்தியாசத்தை நாம் சரியாக அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இக்காலத்து சாதகமற்ற சூழ் நிலையில் இந்த அழியக்கூடிய சரீரங்களில் இருக்கும் வரையில் நாம் அசுத்தமாக இருப்பதால், நிச்சயமாக தேவனை தரிசிக்க முடியாது. ஆகவே இங்கு கொடுக்கப்பட்ட நிலைமை நம்முடைய இருதயத்திற்கு மட்டும் அல்ல நம்முடைய நடத்தைக்கும் பொருந்தும். “பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா பூரண சற்குணராக இருப்பதுபோல நீங்களும் பூரண சற்குணராக இருங்கள்” மற்றவர்களோடு அல்ல, இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நம்மை நாம் தொடர்ந்து அளவிட்டு பார்க்கவேண்டும். ஆகவே இந்த நிலைக்கு நம்முடைய இருதயத்தின் சிந்தைகளையும், நடத்தையையும் நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆனால் நம்முடைய சித்தங்கள் (இருதயம்) மட்டும் சுத்திகரிக்கப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டு, தூய்மைப்படும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை பெற்றிருக்கும் நம்முடைய இக்காலத்து அபூரணமான இந்த மண்பாண்டம் உயிர்த்தெழுதல் வரைக்கும் எந்த மாற்றமும் பெறாது. அதற்குப் பிறகு நாம் பரிபூரணமாக தெய்வீக சுபாவத்தைப் பெறுவோம். அது வரையில் இப்போது குறையுள்ள நிலையில் இருக்கும் நாம் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தை பெறமுடியாது.