CD-KNOWLEDGE-Q-5
R3279[col.1 P1-8]:
தன்னுடைய சிருஷ்டிகளின் விருப்பத்தை அறிந்த தேவன், முதல் படியாக அவர்களுக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்கிறார். இதன் காரணமாக, சுவிசேஷ யுகத்தின் “போதித்தல் அல்லது சத்தியத்தை அறிவித்தல்” முதல் கற்பனையாக கொடுக்கப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மேலுள்ள விசுவாசம், மன்னிப்பை பெற்றுத் தரும் என்ற உபதேசம் உலகத்தாருக்கு ஞானமாக தோன்றவில்லை. தேவன் வேறு ஏதாகிலும் கட்டளைகளைக் கொடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று இவர்கள் எண்ணலாம். ஆனால் “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று” (1கொரி. 1:21) என்று பவுல் கூறுகிறார்.
ஆகவே மீட்கப்பட்ட வகுப்பாருக்கு தேவனுடைய முதல் பரிசே – அறிவு
1.தேவனுடைய மிக மேன்மையும் பூரணமான நீதியைக் குறித்த அறிவையும், நாம் பெறவேண்டும். இந்த அறிவு மோசேயினால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் மூலம் ஆயத்தப்படுத்தப்பட்டது. அந்த பிரமாணங்கள் கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தும் நல்ல உபாத்தியாக இருந்தது. அதற்குப்பின் கிறிஸ்து அந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, அதனுடைய மகத்துவத்தையும், கனத்தையும் தெளிவாக எடுத்துரைத்த நியாயப்பிரமாணத்தின் ஆசிரியராக இருந்த, பரலோக தேவனை மகிமைப் படுத்தும்படியாக அவருடைய குணங்களை வெளிப்படுத்தி கனப்படுத்தினார்.
2.தன்னுடைய சொந்த பலவீனத்தினால், அடைந்த வீழ்ச்சியும், பாவநிலையும், கைவிடப்பட்ட சூழ்நிலையைப் பற்றிய அறிவையும் பெறுவது, மனிதனுக்கு அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் தேவன் அவனுக்காக ஏற்படுத்தின திட்டத்தில் ஓர் இரட்சகர் அவனுக்காக கொடுக்கப்பட்டார் என்பதை அவனால் புரிந்துக்கொள்ளமுடியும்.
3.ஆதாமின் முழு சந்ததியும் தெய்வீக இரக்கத்திலிருந்தும், சரியான மனநிலையிலிருந்தும், உடல் ரீதியான பூரண நிலையிலிருந்தும் எப்படியாக விழுந்துப்போனார்கள் என்ற அறிவும், தேவைப்படுகிறது. இந்த அறிவு இல்லாமல், இந்த முழு உலகத்திற்குப் பதிலாக கிறிஸ்துவின் ஜீவனை ஈடுபலியாக தேவன் ஏற்றுக்கொள்ளும் அந்த விசேஷித்த காரியத்தை புரிந்துக்கொள்ள முடியாது.
4.“பாவத்தின் சம்பளம் மரணம்” – பற்றிய அறிவு இல்லாமல் – ஆதாம் மற்றும் அவருடைய சந்ததிக்கும், நம்முடைய இரட்சகரினால் கொடுத்த ஈடுபலியின் மகத்துவத்தை என்றுமே புரிந்துகொள்ளமுடியாது.
5. மேல் சொல்லப்பட்ட காரியங்களைப் புரிந்துகொள்ள நமக்கு அறிவு மிக அவசியம். இந்த அறிவு இல்லாமல், சரியான விசுவாசத்தில் நாம் வளர முடியாது. மேலும் தேவன் நமக்காக வைத்திருக்கும் நீதிமானாக்கப்பட்ட நிலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நிலையின் மூலம் பெறக்கூடிய விடுதலையை இப்படிப்பட்ட அறிவைப் பெறாமல் நம்மால் சரியான வழியில் நடக்க முடியாது.
ஆகவே இந்த அறிவு அல்லது தேவன் கொடுத்த அவருடைய திட்டங்களைப் பற்றிய இந்த ஞானத்திற்காகவும், நம்முடைய உள்ளார்ந்த மனதோடும் அவருக்கு நன்றி செலுத்துவோம். இங்கு சொல்லப்பட்ட அனைத்து ஞானமும், அறிவும், கிறிஸ்துவின் மூலமே நமக்கு கிடைத்தது. ஏனெனில், இரட்சிப்பின் திட்டத்தில் அவரும், அவருடைய சிலுவை மரணமும் இல்லாவிடில் இந்த அறிவைப் பெறுவதற்கும், போதிப்பதற்கும் பயனற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் இயேசுவைத் தவிர இரட்சிப்பளிப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.