CD-EVILSPEAK-Q-30
1 தீமோ. 5:19 “மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது.”
அப்போஸ்தலர் தன்னுடைய வாக்கியத்தை கொண்டு இரண்டு கோட்பாடுகளை குறிப்பிடுகிறார்.
1. மூப்பர்கள் சத்தியத்திற்கும் தேவபக்திக்கும் மிகுந்த வைராக்கியம் காட்டுபவர்களாக இருப்பதால் தங்களுடைய மேன்மையான குண நலங்களை கொண்டு சபையோர் அனைவராலும் முன்னதாகவே அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.
2. சில நேரங்களில் சபையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நபர்களை தன்னுடைய வேலைகளை செய்வதற்காக சாத்தான் பயன்படுத்தலாம். – பகை, விரோதம், பொறாமை, மூர்க்கம் போன்ற குணங்களை இவர்களை கொண்டு அவனுடைய சித்தத்தை சபையில் செயல்படுத்துவார்கள்.” என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.” “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.” “வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? (மத் 10:25, யோவன் 15:18, 1 யோ 3:13) என்று நம்முடைய ஆண்டவர் இவர்களை குறித்து எச்சரிக்கிறார். விசுவாசமும், திறமையும் உள்ள சகோதரர் கிட்டத்தட்ட ஆண்டவரின் சாயலைப் பெற்றவர், மூப்பருக்குரிய ஓரளவு தகுதி பெற்றவர். இவருக்கு சாத்தான் மற்றும் சீர்கெட்ட தூதர்கள் மட்டுமே எதிரிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவரைக் கூட சாத்தான் தவறான பாதையில் வழி நடத்திவிடலாம். ஆகையால் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்த காரணங்கள், எந்த ஒரு நபரும் சொல்லும் வார்த்தையை வைத்து மூப்பரை குற்றப்படுத்தாதபடி உறுதி செய்கின்றன, அப்படியில்லாவிடினும் அவருடைய வாழ்க்கை குற்றமற்றதாக இருக்கலாம். காதில் விழுந்த காரியம் அல்லது வதந்திகளைப் பொறுத்த வரையில், அவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஏனெனில் உண்மையாகவே நுகத்தை சுமக்கிற எவனும், ஆண்டவருடைய ஆட்சிய கவனத்தில் கொண்டுள்ளவனாய் இருக்கும்போது, வதந்திகளைப் பரப்பமாட்டான், இல்லையெனில், ஆண்டவருடைய நடத்துதல்களை இப்படியாக உதாசினம் பண்ணுகிறவர்களின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கமாட்டான். முதலாவதாக, அவைகளுக்குச் செவி கொடுப்பதற்கு குற்றம் சாட்டுபவர்கள் சாட்சிகளாக இருந்ததாக கூற வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் புகார் கூறினாலும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டதைக் காட்டிலும் மேலதிகமாக விஷயத்தை விசாரிப்பதற்கு வேறு வழி இல்லை. மூப்பருக்கு எதிராகப் புகார் கூறும் எந்த ஒரு நபரும், தனிப்பட்ட ஆலோசனையும் பயன் அளிக்காத பட்சத்தில், அவரோடு இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்துக் கொள்வார், அவர்கள் இவ்விதமாக பிடிவாதமான எதிர்ப்புக்கு சாட்சிகளாவார்கள். அதன் பின்னர், இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, தீமோத்தேயுவினால் அல்லது வேறு எவர் மூலமாகவாவது சபையினிடத்திற்கு கொண்டு வரப்படலாம்.
குற்றம் சாட்டுவதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருக்க வேண்டும் என்பது, எல்லா அங்கங்களையும் மதிப்பதற்கு தேவையானதாகும். உண்மையிலேயே அப்போஸ்தலர், எந்த சகோதரருக்கும் மூப்பர் எல்லா உரிமையும், சிலாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்று யோசிப்பதற்கு இடம் இருக்கிறது. ஒரு மூப்பர் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் நன் மதிப்பைப் பெற்றவராக இருப்பதினிமித்தம், ஒரு சிறிய குற்றச் சாட்டுக்கும், அவருடைய உயர்ந்த ஸ்தானத்தினிமித்தம் விசாரிக்கப்படல் வேண்டுமா என்று ஒரு வேளை சிலர் நினைக்கலாம். ஆனால், அப்போஸ்தலருடைய வார்த்தையின்படி ஒரு மூப்பருக்குக் கிடைக்க வேண்டிய தருணம் மற்றவர்களுக்குக் கிடைப்பதைப் போலவே சரிசமமாக இருக்க வேண்டும்.
இந்த சாட்சிகள் என்ற விஷயம் ஒவ்வொரு புது சிருஷ்டியின் மனதிலும் ஆழமாக பதிக்கப்பட வேண்டும். மற்றவர்கள் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லுவதும், அவதூறாக அவர்கள் சொல்லுவதும் கேட்கப்படக் கூடாது. மேலும், ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. ஆண்டவர் கூறியுள்ளபடியே இரண்டு அல்லது மூன்று பேர், யாராவது ஒருவருக்கு எதிராக புகார்களைக் கொண்டு வருவார்களானால், புறம் பேசாமல், அவதூறு பேசாமல், ஆனால் கட்டளையிட்டபடி சபைக்கு முன்பாகக் கொண்டு வரும்போது, அந்த வேளையில் அவைகளை நம்பக்கூட வேண்டியதில்லை. ஆனால் அந்த வேளை தான் சபை செவி கொடுப்பதற்கேற்றதாகும். இரு தாராரும் வந்திருக்கும்போது அவர்கள் முன்னிலையில் கேட்க வேண்டும், அதன் பின்னர் தேவ பயத்துடன் கூடிய தீர்மானத்தையும், எச்சரிப்பையும் கொடுக்க வேண்டும். அதுவும் குற்றம் செய்தவரை வெளியில் உள்ள இருளுக்குள் தள்ளாமல், அவரை மறுபடியும் நீதிக்குள்ளாக வரும்படியாக, வார்த்தைகள் கவனமானவைகளாக அவருக்கு உதவி செய்கிறவைகளாக இருக்க வேண்டும்.
F418[p1,2]: –
ஒரு தனிப்பட்ட நபர் மனக்குறைப்பட்டாலும் அனைவரும் அ|றிந்தபடி தனிநபர் பாவம் செய்தாலும், மூப்பர்கள் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் சபைக்கு முன், இந்தக் காரியத்தை கொண்டு வந்து, விசாரணை நடத்த வேண்டும். அதே போல மூப்பருக்கு எதிராக ஒருவர் வதந்திகளை பரப்பினால், தனிப்பட்ட முறையில் அவரை விசாரியாமல் சபையில் விசாரிக்க வேண்டும். ஒரு வேளை இவர்களின் நோக்கம் நியாயமான காரணங்கள் கொண்டிருந்தாலும், ஆண்டவரின் கற்பனையை மீறுபவர்களாக இருப்பார்களே. (முதலில் ஒருவராக போய், பேச வேண்டும், திருந்தாவிட்டால் இருவர் அல்லது மூன்று பேர்களோடும் போய் பேச வேண்டும்) அவதூறு செய்யும் நோக்கத்துடன், இந்தச் செய்திகளை பரப்பி, ஒருவரை மட்டும் அல்ல அநேகரிடம் சென்றடைந்ததினால், இந்த காரியங்கள் சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூப்பர், மூப்பர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதற்குப் பின் அவர் மேல் சொல்லப்பட்டக் குற்றச் சாட்டை மறுத்து, விளக்கம் அளித்துவிட்டு குற்றம் சாட்டினவர்களை சபைக்கு முன் கொண்டு வரவேண்டும். சபையின் மூப்பர் விதித்த கற்பனைக்கு எதிராக புறம்கூறி, அவருடைய நல்ல பெயரைக் கெடுத்து குற்றம் செய்திருக்கிறார்கள். சபை ஏக மனதாக தேர்ந்தெடுத்த மூப்பருக்கு விரோதமாக இவர்கள் பேசினதால், முழு சபைக்கு விரோதமாகவும் இவர்கள் குற்றம் புரிந்தவர்களாவார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் கண்டிக்கப்பட்டு எச்சரித்து, அவர்களின் குற்றத்தை உணர்த்த வேண்டும். இவைகளை நடத்தின பின், மூப்பர் தவறு செய்திருந்தால், முன் சொல்லியபடி அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதற்கு நியாயமான உரிமையைப் பெறுவார்கள்.