இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-11

இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?

How may we purify and keep our hearts pure from these sins?

R2517 [col.1P6 to end of article]

சிந்தனைகளில் அசுத்தம் இருப்பதாக் காணப்பட்டால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நன்மையை காட்டிலும் தீமையும், சுயநலமும், மன்னிக்க இயலாத மனநிலைகளும், பகையும், பொறாமையுள்ளவர்கள் தங்களை புகழக்கூடியவர்களை மட்டும் நேசிப்பவர்களை குறித்து ஏதாகிலும் நம்பிக்கைகள் உண்டா? இப்படிப்பட்டவர்களை தேவன் முற்றிலுமாக நிராகரித்து விடுவார் அல்லவா?

தேவன் மிகுந்த இரக்கமுள்ளவர், நாம் அனைவரும் துரோகிகளும் பாவிகளுமாய் இருக்கையில் நமக்கான ஈடுபலியை கொடுத்தாரே. ஆகவே இப்படிப்பட்ட மன நிலையை பெற்றவர்களும் தாங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக பரிசுத்தப்படுவார்கள்.” என்னுடைய அழுக்கான பாவங்களை அவருடைய இரத்தம் சுத்திகரிக்கும்.”

ஆனால் மனம்வருந்தி சீர்பொருந்த வேண்டும் என்பதே உண்மையான குற்றமுணர்ந்த நிலையாகும். குணமடைவதற்கு நம்முடைய பரம வைத்தியரின் உதவிகளை நாட வேண்டும். ஏனெனில் அவர் மட்டுமே சகல நோய்களையும் குணமாக்குகிறவர் என்று எழுதியிருக்கிறது. அவரால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒவ்வொருவரும் – “அவருடைய பணியை செய்வதற்கு நாங்கள் அபாத்திரர்” என்று கூறுவதைக் காணலாம். உண்மையில் ஒருதரம் சுத்திகரிக்கப்பட்டும் மீண்டும் பாவத்திற்குள் பிரவேசிப்பது மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும். ஆயினும் இவர்களைக் குறித்து இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. பரம வைத்தியரின் மருந்துகளை அன்றாடம் உட்கொள்வதின் நிமித்தம் மீண்டும் சுத்திகரிக்கப்படலாம். ஆனால் மனசாட்சியே மனித சுபாவத்தில் இருக்கிறது. தித்திப்பை கசப்பென்றும், பகையையும் தீமையையும் நீதியென்றும் நியாயத்தீர்ப்பை திசைதிருப்பும் அளவுக்கு அது கடினப்பட்டு இருப்பதினால் பாவத்தின் காரியங்களை பரிசுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் அவர்களை சுத்திகரிப்பது நம்பிக்கையற்றதாகிவிடுகிறது.

நம்முடைய பரம வைத்தியர் இப்படிப்பட்ட விஷம் நிறைந்த இருதயங்களுக்கேற்ற தடுப்பு மருந்தினை குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட மருந்துகளை சரியான முறையில் உட்கொள்வதின் மூலம் கடினமான இருதயங்கள் இலகுவாக்கப்படும். குரோதமும் பகையும் உருவாக்குவதற்கு பதிலாக அன்பு நிறைந்த வழியும், சண்டைகளும் சச்சரவுகளும், எதிர்பேச்சுகளும் தீமையான பேச்சுக்களும், பின்னாக பேசுவதும், புறங்கூறுதலும், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அன்பையும் அதற்கேற்ற வார்த்தைகளையும் பிறப்பிக்கும். ஒருவரை குறித்தும் தீங்கு நினையாது, எந்த அயலானை குறித்தும் அவதூறு கூறாமலும், நீடிய பொறுமையுடன் சகலத்தையும் சகித்து, தன்னுடைய புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய மகிமையைத் தேடும். இப்படிப்பட்ட ஆவியே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் அன்பின் பிரமாணமாகும். இந்த மருந்துகள் மிக மோசமாக வியாதிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவ ஜீவியத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நமக்கும் தேவைப்படுகிறது. கொடுக்கப்பட்ட மருந்துகள் சிலவற்றை காணலாம்.

“அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்.” 1 யோவா 3:3

நாம் தேவனுடைய புத்திரர்களாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை மேற்கூறப்பட்ட வசனத்தில் காண்பிக்கப்படுகிறது. அவரைப் போல் இருப்பவர்கள் அவர் மகிமையடைந்த நிலையில் தாங்களும் மகிமையடைந்து, அவரை காண்பார்கள் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய இருதயத்தின் சிந்தனைகள் இந்த ஒரே நம்பிக்கையில் விரிவடையும் பட்சத்தில் நாம் இதன் அகலத்தையும் நீளத்தையும் ஆழத்தையும் உயரத்தையும், அளவிடும் போது பரலோகப் பிதாவின் அன்பையும் நம்முடைய இரட்சகரின் அன்பையும் நாம் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. எனெனில் நாம் அவர்களை நேசிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் நம்மை அதிகதிகமாக நேசித்தார்கள். இப்படிப்பட்ட தெய்வீக அன்பின் முறையை நமக்கு மாதிரியையாக கொண்டு நாம் அதில் வளர்ந்தால் நிச்சயமாக நம்முடைய இருதயங்களில் சுத்திகரிக்கப்பட்டு பூரணமான அன்பையும், கிறிஸ்துவுக்குள்ளான சுயாதீனத்தையும் பெறுவோம். முற்காலத்தில் நமக்குள் இருந்த அர்த்தமில்லாத சுயநலத்தைக் கண்டு அதிகதிகமாய் வெட்கப்படுவோம். நம்முடைய மாம்சத்தின் பலவீனங்களாகிய கோபம், மூர்க்கம், பகை, வஞ்சனை, தீமையான பேச்சுக்கள், வதந்திகள், புறங்கூறுதல், வெட்டிப் பேச்சுக்கள் போன்றவைகளை உண்மையான வெளிச்சத்தில் காணும்போது நாம் மிகவும் வருத்தமடைவோம். மேலும் இறுதியாக இப்படிப்பட்ட தீமையான குணங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட தீமைகளையும் நம்முடைய ஆத்துமாக்களை நித்திய மரணத்துக்கு வழி நடத்தும். மாம்ச பலவீனங்களையும் விட்டு வேகமாக விரைந்தோடச் செய்யும். நம்முடைய இருதயங்கள் உடனடியாக சுத்திகரிக்கப்படும். நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் தேவனுக்கு முன் எப்போதும் பிரியமாக இருக்கும்.

2. “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” தீத்து 2:14

எப்படியாகவோ யார் மூலமாகவோ நாம் மீட்கப்பட்டோம் என்ற பாடத்தை தெளிவாக நாம் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் நாம் எதற்காக இரட்சிக்கப்பட்டோம் என்ற காரணத்தை நாம் சற்று மறந்துவிட்டால் நாம் அறிந்து கொண்ட அனைத்தும் வீணாகிவிடும். மரணத்தின் வல்லமையிலிருந்து மட்டுமே நம்மை மீட்காமல், “சகல துர்க்குணத்திலிருந்து நம்மை மீட்டார். ஒரு விசேஷித்த ஜாதியாக ஜனங்களைத் தேடாமல் விசேஷமாக சுத்திகரிக்கப்பட்ட தூய்மையானவர்களை அவர் தேடுகிறார். நம்முடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கும், துர்குணங்களிலிருந்து நாம் வெளிவருவதற்கு மிக ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்த மருந்து நிச்சயமாக நமக்கு உதவிசெய்யும்.

3. அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” 2தீமோ 2:22

நாம் சரியாக துவங்கினால் மட்டும் போதாது, சரியான வழியை தேர்வு செய்பவர்களாக இருக்கவேண்டும். அநீதியான காரியங்களை ஒருபோதும் நாம் பின்பற்ற மாட்டோம். எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டாலும் நீதியையும் நியாயத்தையும் பின்பற்ற வேண்டும். ஆனால் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகள் எழும்பலாம் – சிலர் நியாயமாக தீர்ப்பளிப்பதற்கு அறியாமல் இருக்கிறார்கள். தாங்கள் காணக்கூடியவைகளையும், கேட்கக்கூடிய அனுமானங்களை வைத்தும் அல்லது பரிசேயர் சதுசேயரின் தீர்ப்பை பெற்றுக்கொண்ட ஜனங்களை போலவும், நியாயந்தீர்க்க முடிவெடுக்கிறார்கள். ஆனால் ஆண்டவரின் வாழ்க்கையில் காணப்பட்ட நன் நடக்கைகளையும், அற்புதமான வார்த்தைகளையும் கவனித்திருந்தார்களானால் நீதியான பாதையில் வழி நடக்க முடிந்திருக்கும். ஏனெனில் இயேசு பாவத்திற்கு விலகினவரும், “பரிசுத்தரும் கபடற்றவரும், மாசற்றவருமாக” இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

“நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கற்பனையை எந்நாளும் நாம் பின்பற்ற வேண்டும். இந்தக் கற்பனையை தவிர்க்கும் பட்சத்தில் அந்த இரத்தப்பழியை தங்கள் தலையின் மேல் சுமந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கு பங்காளிகளாவார்கள். நம்முடைய ஆண்டவருக்கு நடந்தபடியே அவருடைய சகோதரருக்கும் நடத்தப்படும். ஆகவே, நம்முடைய இருதயங்கள் அதிகதிகமாக பரிசுத்தப்படும் போது, நமக்கு எதிராக பேசப்படும் தீயப் பேச்சுக்களுக்கும், புறங்கூறுதலுக்கும், நாம் பாதிக்கப்படமாட்டோம். இருதயத்தில் கசப்பான நஞ்சையுடையவர் இப்படிப்பட்ட பேச்சுக்களை மட்டுமே பேசுபவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்துவருவது உண்மை அதாவது விசுவாசம், நம்முடைய ஆண்டவர் தன்னுடைய விசுவாசத்தை குறித்து சொல்லி ஒரு சகோதரனைக் காட்டிலும் நெருங்கிய உறவான சிநேகிதர் என்று தம்முடைய சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட இரக்கத்தை இந்த உலகம் உண்மை என்று அங்கீகரித்துக்கொண்டு முதலிடம் கொடுக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையில் நீதி முதலிடத்தை பெறுவதை கவனியுங்கள் விசுவாசம், அன்பு சமாதானமும், நீதிக்கு இசைவாக செயலாற்றப்படும். ஆனால் அநீதி ஒரு சகோதரனுக்கு விரோதமாக நிருபிக்க இயலாது. அப்படிப்பட்டவரிடம் நம்முடைய அன்பு, பாசம், சமாதானத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். உண்மையில், அவருக்கு எதிராக “நியாயமில்லாமல்” பேசப்படும் வதந்திகள் புறங்கூறுதல் அனைத்தும் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மதிப்புள்ள ஆலோசனை நம்முடைய இருதயங்களை பரிசுத்தமாக காத்துக்கொண்டு சாத்தான் வெகு துரிதமாக விதைத்துக் கொண்டிருக்கும் விஷத்திலும், கசப்பிலிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளமுடியும்.

நியாயம், இருதயத்தின் தூய்மையாகும் – அநியாயத்திலிருந்து விடுதலை
நீதி, இருதயத்தின் தூய்மையாகும் – அநீதியிலிருந்து விடுதலை.
அன்பு இருதயத்தின் தூய்மை – சுயநலத்திலிருந்து விடுதலை

4. “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாரிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூருங்கள்.” 1 பேது 1:22

மற்ற மருந்துகளை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். இருதயம் சுத்திகரிக்கப்பட்டதன் முக்கிய காரணம் – சத்தியத்தை கேட்டதினால் மட்டும் அல்ல, அவைகளை விசுவாசித்ததினால் மட்டுமல்ல அவைகளுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலமே என்பதை வசனம் குறிப்பிடுகிறது. மேலோட்டமான அனைவரும் காணும்படியாகவும், பழக்க வழக்கத்தின் அடிப்படையிலான கீழ்ப்படிதல் அல்ல. ஆனால் சத்தியத்தின் ஆவிக்கு முழுமையாக கீழ்ப்படிதலின் வழியாகவே – இந்தக் காரியங்களே உண்மையாக சுத்திகரிப்பை ஏற்படுத்தும். இவை அனைத்துமே போலியானதாக அல்ல உண்மையும் உத்தமமான கிறிஸ்துவுக்குள்ளான “சகோதர” சிநேகத்தை நமக்குள் நிலைத்திருக்க செய்யும். துவக்கத்தில் அனைவரையும் நல்ல பண்புடன் நடத்தினோம். ஆனால் அநேகரை நமக்கு பிடிக்கவும் இல்லை. அவர்களை நாம் நேசிக்கவும் இல்லை, அவர்கள் ஏழைகளும், அழுக்கானவர்களும், விசித்திரமானவர்களும், அறியாமையிலும் இருந்திருக்கக்கூடும். ஆனால் சத்தியத்தின் ஆவிக்கு கீழ்ப்படியும்போது, விலையேறப் பெற்ற இரத்தத்தை விசுவாசித்து இரட்சகரிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களை புரிந்துகொள்ளும் பட்சத்தில் எந்த விதமான தடைகள் இருந்தாலும் அவர்களை நம்முடைய உண்மையான சகோதரர்களாக பாவிக்க வழிநடத்தும். உங்கள் ஆண்டவரின் ஆவி உங்கள் இருதயத்தில் பொங்கி வழிவதினால், சுய நலம், பெருமை, பகை, குரோதம் போன்ற காரியங்கள் காணாமல் போய்விட்டது. இந்தக் கட்டத்தை நீங்கள் எட்டினால், “நான் எல்லா சகோதரர்களையும் உண்மையாக நேசிக்கிறேன்” என்று தைரியமாகச் சொல்லலாம்.

நன்மையான பாதையில் இவ்வளவு தூரம் பிரயாணப்பட்டு வந்தபின், அடுத்து, நம்முடைய இருதயத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய காரியத்தை அப்போஸ்தலர் கூறுகிறார். “நீங்கள் ஒருவரை ஒருவர் பரிசுத்தமான இருதயத்தோடு அன்பு செய்கிறீர்களா என்று சோதித்து அறியுங்கள்” ஆம், நாம் பரிசுத்தமான இருதயத்தை பெற்றிருக்கிறோம் என்பதை என்றுமே மறந்துவிடக்கூடாது. ஏனெனில் இந்த நிலையிலிருந்து ஒரு அடி வெளியே வைக்கும் போது சாத்தானின் அன்பின் மாய வலையில் அகப்பட்டுவிடுவோம். உண்மையான் அன்பு குளிர்ச்சியாயிராது. அது அனல் உள்ளதாகவும் “சகோதரர்களுக்காக ஜீவனை இழக்கக் கூடிய அளவுக்கு அந்த அன்பு” உறுதியானதாயும் இருக்கிறது – 1 யோ 3:16

இப்படிப்பட்ட அன்பு நம்முடைய இருதயங்களாகிய பலிபீடத்தில் தேவனுக்கேற்ற சுகந்த வாசனையாக கொழுந்துவிட்டு எரியும் போது தீமையான சிந்தனைகளுக்கும், சுய நலத்திற்கும், எந்தவிதமான இடமும் இருக்காது. கூடியிருக்கும் அனைத்து சகோதரர்களும் இப்படிப்பட்ட ஆவியை பெற்றிருந்தார்களானால், அனைவரும் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஆண்டவரின் பணியை செய்வதற்கும், நம்மை சுத்திகரிப்பதற்கும் தேவையான அனைத்து மருந்துகளை இப்போதும், எப்போதும் சகோதரர்களாகிய நாம் அதிக அதிகமாய் உட்கொள்ளுவோம்.

R2249 (col.1 p1 through col.2p1): –

ஒவ்வொரு அறிவுள்ள கிறிஸ்தவர்களும் இதற்காக தொடர்ந்து ஊக்கத்தோடு மனதார ஜெபிக்கையில் இரகசியமான குற்றங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பகிரங்கமான துணிகர பாவங்களை கட்டுப்படுத்த முடியும் எனத்தோன்றுகிறது. பாவங்களின் துவக்க நிலையை கண் காணித்து கொண்டு, தேவைப்படுகிற நேரங்களில் தொடர்ந்து கிருபாசனத்தண்டையில் சேர்ந்து தேவனுடைய உதவியோடு இருதயத்தை சுத்தமும், பரிசுத்தமான நிலையில் காத்துக் கொள்ளலாம். தங்களுடைய சிந்தையில் இரகசியமான பாவங்களை துவக்கத்திலேயே புறக்கணிப்பதை விட்டு விட்டு மிகவும் கஷ்டப்பட்டு, வெளிப்புறமான பாவங்களை தவிர்ப்பதின் மூலமாக தேவனோடு நெருக்கமாகவும், பரிசுத்தமாகவும் ஜீவிக்க விரும்பும் யாவரும், நியாயமான காரியத்தை மூடத்தனமாகவும், முயற்சிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாம் அம்மை நோயை தடுப்பதற்கு வெளிப்புறமான சுகாதாரத்தில் கவனம் செலுத்திவிட்டு, அந்தக் கிருமி நம்முடைய சரீரத்திற்குள் அனுமதித்தால் என்ன பிரயோஜனம்? வெளியரங்கமான பாவங்கள் முதலில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போல சிந்தையில் நுழைந்துவிடுகிறது. தடுப்பூசிகளாகிய சத்தியத்தையும், அதன் ஆவியையும் அனுப்ப அந்தப் பாவ சிந்தைகள் வளர்ச்சி அடைந்த நம்முடைய நடத்தையில் அந்தத் தீய குணங்களும் செயல்பாடுகளும் பயங்கரமாக வெளிப்படுவதற்கு முன், அவைகளை அழிக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக – பெருமை மற்றும் சுயமரியாதை என்ற கிருமிகள் நம்முடைய சிந்தையில் நுழையும்போது, பெருமை – மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியையாக இருக்கிறது என்றும், அது கிறிஸ்துவின் ஆவிக்கு விரோதமானது என்ற தடுப்பூசியை நாம் உடனடியாக போடக்கூடியவர்களாக இருக்கிறோம். அந்தக் கிருமியை அழிக்கக்கூடிய தடுப்பூசியில் போடப்படும் சரியான அளவு மருந்தை நாம் இங்கு காணலாம். “தன்னை உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான், தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ மற்றும் அழிவுக்கு முன்னாது அகந்தை.”

நம்முடைய சிந்தையில் பகை என்னும் கிருமி நுழந்துவிட்டால், பகை மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியையாகவும் நம்முடைய உடன்படிக்கையில் நமக்குரியது என்று சொல்லக்கூடிய கிறிஸ்து இயேசுவின் ஆவிக்கு எதிராகவும் இதுவே பகை என்னும் கிருமிக்கு, எதிராக பயன்படுத்தக்கூடிய தடுப்பூசியாகும். மேலும் பகையானது, குரோதம், விரோதம், சண்டை, சச்சரவு போன்ற தீமையான எண்ணங்களோடு இணைந்து செல்லும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. புதிய உடன்படிக்கையை மற்றும் நம்முடைய ஆண்டவரின் விளக்கவுரையின்படி இப்படிப்பட்ட குணங்கள் கொலைக்கு சமமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. 1 யோவா 3:15, மத் 5:21,22.

நம்முடைய சிந்தையில் பேராசை என்ற கிருமி நுழைந்துவிட்டு, அவைகளுக்கு இசைவாக அநீதியான முறைகளை பயன்படுத்தினால் – “ஒருவன் உலகத்தையே ஆதாயப்படுத்திக் கொண்டு தன்னுடைய ஜீவனை நஷ்டப்படுத்திக்கொண்டால் அதனால் என்ன பயனுண்டு” மற்றும் “பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது…. அநேக வேதனை தங்களை உருவ குத்திக்கொள்கிறார்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளாகிய தடுப்பூசியை நாம் உடனே போட்டுக்கொள்வோம்.

இந்தப் பாடத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பாவத்தின் துவக்கமாக சிந்தையில் நுழையக் கூடிய இரகசிய குற்றங்களைப் பற்றி, வசனங்கள் சொல்லக்கூடிய சத்தியங்களை நம்முடைய சொந்த அனுபவங்கள் மூலமாக நாம் அறிவுறுத்தப்படுகிறோம். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்திலிருந்து ஜீவஊற்று புறப்படும்.” (நீதி 4:23) என்ற வசனத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

நம்முடைய சிந்தையில் சோதனைகள் வரும்படியாக தேவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை அல்லது சோதனைகள் வரும்போது நாம் ஜெபிக்கக்கூடாது என்று சொல்லப்படவும் இல்லை. ஏனெனில் இப்படிப்பட்ட சோதனைகளும், பிரச்சனைகளுமின்றி நம்முடைய தரப்பில் பாவங்களை மேற்கொள்ளுதலோ, சாத்தானை ஜெயிப்பதிலோ எந்தவிதமான வெற்றியும் பெறமுடியாது. ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக நாம் கிறிஸ்துவின் பள்ளியில் பயிற்சி பெற்று கொண்டிருக்கிறோம் என்று நாம் நன்கு அறிந்திருக்கிறோம். ஆகையால் வரும் அனைத்து சோதனைகளும் நம்மை அணுகாதபடி தேவன் நமக்கு பாதுகாப்பு கவசம் போடவில்லை. அதற்குப் பதிலாக நம்முடைய போதகரிடமிருந்து சோதனைக்காரனை சந்திக்க கற்றுக்கொள்ளலாம். மேலும் நம்முடைய ஆண்டவரின் கிருபையாலும், உதவியாலும் பாவத்திற்கு எதிரான போராட்டங்களில் நாம் வெற்றி பெறலாம். இந்தப் பிரச்சனைகளில் நம்முடைய வெற்றியின் அளவு, நாம் பெற்ற விசுவாசம் மற்றும் ஆண்டவரின் மேல் உள்ள நம்பிக்கையைச் சார்ந்துள்ளது. அவருடைய ஞானத்தின் மேல் உள்ள நம்பிக்கையை உணர்ந்தால், அவருடைய கட்டளைகளை முழுமையாக கடைபிடித்து நம்முடைய இருதயத்தை முழு எச்சரிப்போடு காத்துக் கொள்வோம். அவருக்கு முழுமையாக கீழ்ப்படிவதின் மூலம் தேவனுடைய ஞானத்தின் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் நமக்கு தேவைப்படும் நேரங்களில் அவருடைய உதவியைப் பெறலாம். ஆகவே “உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது” என்று எழுதியிருக்கிறது. அதாவது கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசத்தை செயலாற்றுவதன் மூலம் – “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” (ரோம 8:37)