CD-PRAYER-Q-26
F681 [3] through F684 [1]: –
ஆனால் புதிய சிருஷ்டிகளாகிய, அர்ப்பணித்த ஆசாரியர்கள் மட்டுமே, தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கிருபாசனத்தண்டைக்கு செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில் ஒப்புரவாக்குதலின் (ஈடுபலி) புண்ணியத்தின் வழியாக பாவங்களை முழுமையாக மன்னிப்பதற்காக தேவன் செய்த ஏற்பாட்டை உணர்ந்த, விசுவாச வீட்டார் கூட ஓரளவிற்கு நன்றிகள் மற்றும் துதிகள் செலுத்தி, தேவனுக்குள் மகிழ்ச்சியடையக்கூடிய சிலாக்கியத்தை அனுபவிக்கக்கூடும். ஆயினும்கூட, தைரியத்துடன், வேறு எந்த வகையிலும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வருவதற்கான சிலாக்கியம் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. பிரதான ஆசாரியருடைய சரீர அங்கத்தினராகிய அர்ப்பணிக்கப்பட்ட புது சிருஷ்டிகள் மட்டுமே, ஜெபத்தில் தேவனுடைய சமூகத்தில் நிற்பதற்கான சிலாக்கியம் பெற்றவர்கள். இவ்வாறாக, எஜமான் வாக்களித்த, முழுமையான மகிழ்ச்சியை அவர்கள் மட்டுமே, பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே, அவிசுவாசிகள் ஜெப உரிமையை முழுமையாக பெறவில்லை என்று நாம் கருதினாலும் கூட தேவனுக்கு முன்பாக அவர்கள் நிற்பதற்குமுன் அவர்கள் யாரை விசுவாசிக்க வேண்டும் என்றும் யாரை அறிந்துக்கொள்ளவேண்டும் என்றும், பேதுரு கொர்நேலியுவை “தேவனுடைய வார்த்தைகளினால்” தட்டியெழுப்பியது போல, அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும். ஆயினும், கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும். அனைவரும் இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவை மகிமைப்படுத்துவதற்கும், நன்றி செலுத்துவதற்கும் நாம் ஊக்குவிக்கலாம். எவ்வாறாயினும், விசுவாசத்தின் மூலம் பெற்ற தற்காலிகமான நீதிமானாக்கப்பட்டநிலை, தெய்வீக சித்தத்தை நிறைவேற்றுவதல்ல, மாறாக தேவனை அணுகுவதற்கு சரியான ஒரு தொடக்கம் என்பதை இப்படிப்பட்டவர்கள் புரிந்து கொள்ள சுதந்திரத்தை வழங்கவேண்டும் அந்த அணுகுமுறையின் முதல் படி மற்றும் ஜெபத்தின் சரியான சலுகைகளை அனுபவித்து. தேவனோடு தொடர்பு கொண்டு, மேலும் அதனுடன் தொடர்புடைய மகிழ்ச்சியின் முழுமை அடையும் யாவரும், தெய்வீக விருப்பத்திற்கு முழு ஒப்புக்கொடுப்பதற்கான இரண்டாவது படியை மேற்கொள்ளவேண்டும்.
இரண்டாவது படியை கடக்க தவறியவர்கள் தேவனுடைய கிருபையை (நீதிமானாக்கப்பட்ட நிலையை) வீணாகப் பெறுகிறார்கள் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். (2 கொரிந்தியர் 6:1) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வகையான ஜெப சிலாக்கியங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் தங்களை ஆண்டவருக்கென்று முழுமையாக பிரதிஷ்டை செய்ய மறுக்கும் போது, இவர்கள் ஜெபத்திற்கு தொடர்பான ஒரு கூச்சத்தை (சந்தேகம்) சரியாக உணரவேண்டும் கர்த்தரிடத்தில் தங்களை ஒப்புக்கொடுப்பதற்கு மறுக்கும்போது, அவர்கள் தேவனை புத்தியோடு ஆராதிப்பதற்கு, தொடர்ந்து தெய்வீக உதவிகளையும், மேலும் பல காரியங்களை கேட்பது முறையற்றது என்று அவர்கள் உணர வேண்டும். வசனங்களில், கிறிஸ்துவின் மணவாட்டியாக சபை நியமிக்கப்படுகையில், பொதுவான விசுவாச வீட்டார், மணவாட்டிக்கான சலுகைகள் வழங்கப்படுபவர்களை அடையாளப்படுத்துவார்கள், புதிய சிருஷ்டிகளாகிய கிறிஸ்துவின் மணவாட்டி தங்கள் இருதயத்தையும், நாவையும், மற்றும் ஒவ்வொரு வல்லமையையும், சக்தியையும் கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்ததினால், அவர் தனக்காக நியமிக்கப்பட்ட மணவாட்டிக்கு பிரியமாக வாக்களித்த ஆசீர்வாதங்கள், சலுகைகள், பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வரங்களை அவரிடமிருந்து நன்றியுணர்வோடு பெறுவது நியாயமானதாகும்.
ஒரு மாப்பிள்ளையை நிராகரித்து, அவளுடைய இருதயத்தை அவருக்கு கொடுக்க மறுக்கும் ஒரு பெண். அவர் ஏற்கனவே இலவசமாக கொடுத்திட்ட பராமரிப்பு பாதுகாப்பு, ஆசீர்வாதங்கள், சலுகைகள் மற்றும் சந்தோஷங்களை அவரிடம் அவள் தொடர்ந்து எதிர்ப்பார்ப்பது நியாயமல்ல. ஆகவே, தெய்வீக தயவை தொடர்ந்து நிராகரித்து, தங்கள் சிறிய காரியங்களை கூட கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்க மறுக்கக்கூடியவர்கள் எந்த விதமான உரிமையுடன் அவரை பார்க்கமுடியாது அல்லது அவரை நேசிப்பவர்களுக்கும் தங்கள் பக்தியினாலும், அர்ப்பணிப்பினாலும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துபவர்களுக்கு அவர் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் கேட்க முடியாது. கர்த்தரிடத்தில் பாவமன்னிப்பை பெற்றோம் என்று நம்புகிறவர்களுக்கும், அந்த தயவைப் நன்கு புரிந்துகொண்டு, தங்களை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து. ஆண்டவரோடு முழு ஐக்கியத்திற்குள் சென்றவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உண்மை என்னவெனில், விசுவாசிகளின் வெவ்வேறு வகுப்பினரிடையே தெய்வீகமாக வரையப்பட்ட இந்த கோடு, இன்னும் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்படாததே, இரு வகுப்பினருக்கும் பாதகமாக உள்ளது. விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை கூர்ந்து வரையறுக்க வேண்டும். பிந்தி சொல்லப்பட்டவர்கள் அல்ல, முன்பு சொல்லப்பட்டவர்கள் அனைவரையுமே சகோதரர்களாக. “விசுவாச வீட்டாராக” அங்கீகரிக்க வேண்டும். மறுபடியும். தங்களை அர்ப்பணித்த விசுவாசிகளுக்கும், அர்ப்பணிக்காத விசுவாசிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை தெளிவாகக் கண்டறிந்து, முன் சொல்லப்பட்ட வகுப்பாராகிய சபை, புது சிருஷ்டிகளும், இராஜரீகமான ஆசாரியர்களும் கொடுக்கப்பட்ட அனைத்து மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் சொந்தமானவைகள் என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும்.
இந்த வேறுபாடுகள் தெளிவாக கண்டறியப்பட்டால் அது நன்மை பயக்கும் (1) உலகுக்கு, மேலும் முழுமையான ஆராய்ச்சி மற்றும் உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. (2) தங்களை அர்ப்பணிக்காத விசுவாசிகளுக்கு நன்மையாக, அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்காவிட்டால், அவர்கள் எந்த விதத்திலும் பரிசுத்தவான்களின் உடன்பங்காளிகளாகவோ, எதிர்கால மகிமை அல்லது தற்போதைய சலுகைகள் மற்றும் சந்தோஷங்களை அனுபவிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதை அவர்கள் உணர வழிவகுக்கும். (3) இதை உணரும்படியாக, அர்ப்பணிக்கப்படாதவர்கள் மீது ஒரு ஊக்குவிக்கும் விளைவை ஏற்படுத்தும் என்று நாம் நம்புகிறோம். இது அவர்களின் ஆதாரமற்ற கற்பனைகளை அதாவது ஏதோ ஒரு விதத்தில் கிறிஸ்துவின் மேல் வெறும் விசுவாசம் கொண்டவர்களாக, தங்களை அர்ப்பணிக்காமல், அவர்கள் தங்களை தேவனுடைய புத்திர்கள் என்றும், அவருடைய சுதந்திரவாளிகள் என்றும், அவர்களின் தவறான சிந்தனைகளை அகற்றி, தற்காலத்திலும், இனி வருங்காலத்திலும் ஐசுவரியமுள்ள தெய்விக வாக்குத்தத்தங்களுக்கு அவர்களை பங்காளிகளாகும்படிக்கு நன்மைக்கு ஏதுவான முடிவுகளை அவர்கள் எடுக்கும்படிக்கு அவர்களை வழிநடத்தும்.
நெரிந்த நாணலை நாம் முறிக்க மாட்டோம், மங்கி எரிகிற திரியை நாம் அணைக்க மாட்டோம், ஆனால், இக்காலத்திலும், வருங்காலத்திலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை சரியாக பகிர்ந்துகொள்வதற்கும், அவர்கள் தெய்வீக நிலைமைகளின் அடிப்படையில் தெய்விக தயவைப் பெறவேண்டும். அதாவது அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து தேவனுடைய பணியில் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை அவர்கள் உணரவேண்டும். மங்கி எரியும் விசுவாசத்தை நாம் தணிக்க மாட்டோம், மாறாக அந்த தனலை விசிறியினால் வீசி, சுயத்தை முழுமையாக ஒப்புக்கொடுப்பதற்கு தூண்டும்படிக்கு, அதை பரிசுத்தமான அன்பின் சுடர்களாக மாற்றுவிடுவோம். அதாவது தெய்வீக அழைப்பின் படி, முழுமையாக அர்ப்பணித்து, தற்போதும் இனி வரக்கூடிய சந்தோஷங்களில் பங்கேற்க வழிவகுக்கும்.