Q-8
R2355 [col. 1 P6 through col. 2 P1]
கிறிஸ்தவர் மகிழ்ச்சியிலும் நிதானமாக இருக்கவேண்டும். அவர் பூமி அல்லது பூமிக்குரிய விஷயங்களின் இன்பம், செல்வம், செல்வாக்கு, புகழ் முதலியவற்றின் மீது பிரதானமாக அன்பை அவர் வைக்கக்கூடாது. தற்போதைய விஷயங்களின் பெரும்பகுதி முற்றிலும் நீதிக்கு முரணானது என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் இந்த உலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விஷயங்களை கூட தற்காலிகமாக பயன்படுத்தவும், உண்மை, நீதி, தூய்மைக்கு முரணானவற்றை முற்றிலும் நிராகரிப்பதற்கு அவர் விரும்பி நாட வேண்டும். நீதியைச் சேவிப்பதிலும், கர்த்தருடைய ஊழியத்திலும், அவருடைய வார்த்தையிலும், அவருடைய வாக்குத்தத்தங்களிலும், அவருடைய ஆவியிலும் அவர் தனது மகிழ்ச்சியை காண வேண்டும்.
கிறிஸ்தவர் தனது துக்கங்களிலும் நிதானமாக இருக்கவேண்டும். அவர் “நம்பிக்கையற்ற மற்றவர்களை போல் அவர் வருத்தப்படக்கூடாது” மாறாக, உலகத்தின் பாவங்களுக்காக இயேசு மரித்தார் என்று நம்ப வேண்டும். அவரை நம்பி, அவருக்கு கீழ்ப்படிபவர்களுக்கு நீதிமானாக்குவதற்கு அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் இப்போது அல்லது இனிவரக்கூடிய யுகத்தில், முழு மனுக்குலமும் தெய்வீக கிருபையைப் பற்றி அறிந்துகொள்ளவும், புது உடன்படிக்கையின் நிபந்தனைகளின் கீழ் அவைகளை ஏற்றுக்கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் ஒரு முழு வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் நம்ப வேண்டும். இவ்வாறு, கிறிஸ்தவர், தெய்வீக கிருபையின் கீழ் தனது சலுகைகளைப் பெற்று, தனது துயரங்களில் நிதானமாக இருக்கவேண்டும்.
“அவர் உலகின் அச்சங்களுக்கு கலங்காமலும், அதன் இகழ்ச்சியான புன்னகையை கவனியாமலும், அவருடைய பிரச்சினை என்ற கடல்களில் முழ்காமலும், சாத்தானுடைய கலைகளுக்கு ஏமாறாமலும் இருப்பார்.”
R3530 [col. 1 last P]
அனுதாபத்தின் கண்ணீரை பலவீனத்தின் அறிகுறியாக புரிந்து கொள்ளக்கூடாது. நம்முடைய ஆண்டவரின் கண்ணீர் இதை நிரூபித்தது. கூடுதலாக, நாம் மற்றவர்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்ற அவருடைய அறிவுரையைப் பெற்றுள்ளோம். அழுகிறவர்களுடன் அழுவும், சந்தோஷப்படுவோருடன் சந்தோஷப்படவும் அவரே நமக்கு கட்டளையிட்டார். அழாததும் அல்லது மகிழ்ச்சியாக இல்லாததுமான நிலையான இருதயங்கள் நம்முடைய சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியாது. நாம் மேலும் மேலும் அவரைப் போல இருப்போம், நம்முடைய அனுதாபங்கள் நியாயமான அளவுக்கு வெளிப்படுத்தப்படுவதற்கு அனுமதிப்போம். ஆயிலும்கூட, பெரும் அழகையும், புலம்பலும் நமக்குப் பொருத்தமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால், “நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையும் விசுவாசமும் நம்முடைய பூமிக்குரிய துக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துகின்றது.