CD-LOVE-Q-36
F402 P2 through F409
“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்.” – மத்தேயு 7:1,2.
சபையின் திறமையான நியாயாதிபதிகளாக இருப்பவர்கள் பிதாவும். குமாரனுமாகும். குமாரன் பிதாவின் பிரிநிதியாக இருக்கிறார். நியாயந்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. (யோவான் 5:22,27) புது சிருஷ்டிகள் இரண்டு காரணங்கள் நிமித்தமாக ஒருவரையொருவர் நியாயந்தீர்க்க தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். 1. அவர்களில் ஒரு சிலரே, எல்லாரையும் ஆளுகிற திவ்விய அன்பின் பிரமாணத்தை முழுமையாக அறிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். 2. நாம் அறிந்திருக்கிறபடி அவர்களில் ஒரு சிலரே இருதயங்களை குற்றமின்றி தங்களுடைய நிர்ணயிக்க முடிந்தவர்களாய் இருக்கிறார்கள். அநேகர் தங்களை மிகக் கடுமையாக அல்லது மிக இலகுவாக நியாயந்திர்க்கிறார்கள். ஆகவே, இன்னொருவருடைய நோக்கங்கள் திருப்தியற்ற நிலமையில் இருக்கக்கூடும் என்பதால், அவருடைய இருதயத்தை நியாயந்தீர்க்க பண்புடன் மறுத்துவிடவேண்டும். நியாந்தீர்ப்பதில் நம்மூடைய திறமையற்ற நிலையை அறிந்த ஆண்டவர், முதலாம் உயிர்த்தெழுதலில் நாம் பங்கு பெற்ற பின்பு, இராஜ்யத்தில் நம்முடைய எதிர்கால வேலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்று உறுதி அளித்தாலும், இப்பொழுது அவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் எல்லா தனிப்பட்ட நியாத்தீர்ப்புகளையும் அவர் தடைபண்ணுகிறார். மேலும் தொடர்ந்து ஒருவரையொருவர் நியாந்தீர்க்கும் பட்சத்தில், அவர்கள் மற்றவர்களுக்கு காட்டுகின்ற அளவிற்கு மேலாக இனியும் இரக்கமும், தயாளமும் கிடைக்காது என்று எச்சரிக்கிறார். (மத்தேயு 7:2, லூக்கா 6:38) நமக்கு கொடுக்கப்பட்ட மாதிரி ஜெபமான “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை (மீறுதல்களை) எங்களுக்கு மன்னியும்” என்பதிலும் இதே சிந்தை வலியுறுத்தப்பட்டுள்ளது. (மத்தேயு 6:12)
நாம் மற்றவர்களோடு இப்படி நடந்து கொண்டால், ஆண்டவர் நம்மோடு நியாயமற்ற முறையில் இரக்கமில்லாமல் நடந்து கொள்வார் என்று பொருள்படுகின்ற ஏதோ ஒரு கட்டளை அல்ல ஆனால் இது அதற்கு மாறாக சரியான முறை காணப்படுகிறது. சுபாவத்தின்படி “நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாக ,அழிவுக்கு எத்தனமான பாத்திரங்களாக” இருக்கிறோம். மேலும், தேவன் நம்மை கிருபையாய் ஆசீர்வதித்து, நம்முடைய பாவங்களிலிருந்தும். பெலவீனங்களிலிருந்தும் நம்மை விலக்கி. நம்முடைய மீட்பர் மூலமாக பரிபூரணப்படுத்தி இருந்தாலும், அவருடைய அன்பின் பிரமாணத்தை நாம் ஏற்றுக்கொண்டு நம்முடைய இருதயத்தில் அதோடுகூட ஒத்துப் போகும்போது மாத்திரமே இதை அவர் செய்வார். அவருடைய குடும்பத்தில் மனந்திரும்பாதவர்களையும், “கோபாக்கினையின் பிள்ளைகளையும்” ஏற்றுக்கொள்வதாக இல்லை. பிதாவின் வாசஸ்தலங்களில் (யோவான் 14:2) ஏதாவது ஒன்றில் இடம் பெறுவதற்கும் தகுதி பெறுவதற்கும், எல்லாரும் கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருப்பதிலிருந்து அன்பின் பிள்ளைகளாக மாறவேண்டும். ஆண்டவருடைய ஆவியால், அன்பின் ஆவியால் மகிமையின் மேல் மகிமை அடைந்து மாற்றப்படவேண்டும். ஆகவே அன்பின் ஆவியை வளர்க்க யாரெல்லாம் மறுக்கிறார்களோ மற்றும் அதற்கு எதிராக தன்னோடு உள்ள மற்ற விசுவாசிகளை அன்பற்ற நிலையில் நியாந்தீர்க்க தீர்மானிக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் அறிவிலும், கிருபையிலும் வளரவவில்லை என்பதை அது நிரூபிக்கிறது. இருதயத்தில் ஆண்டவரின் சாயலுக்கேற்ப மகிமையின் மேல் மகிமைடைய வில்லை என்பதையும் நிரூபிக்கிறது. ஆகவே ஆண்டவர் சொல்லுகிறபடி சரியான முறையில் அவர் பின்பற்றுகிற அளவை விட அதிகமாக இரக்கம் காட்டக் கூடாது. ஆண்டவரின் சாயலை அவர் பெற்றிருக்கும் அளவானது (அன்பில்) அவர் தன்னுடைய சகவிசுவாசிகளுக்கு அவர் காட்டுகின்ற இரக்கம், பெருந்தன்மையான சிந்தை, வார்த்தை, செய்கை ஆகியவை மூலம் வெளிப்படுத்தப்படும்.
ஓ, “புது சிருஷ்டி”யாகிய ஆவியினால் பிறந்தவர்கள் அனைவரும், இந்த நியாயம் தீர்க்கிற (குற்றப்படுத்துகிற) ஆவி, பரிதாபமான நிலையில் மிகவும் சாதாரணமாக (உண்மையிலேயே, ஆண்டவருடைய ஜனங்களை “சூழ்ந்து இருக்கும் பாவமாக” இருக்கிறது) காணப்படுகிறது என்பதை உணரவேண்டும் இது அவர்களுடைய அன்பின் ஆவியிலும், கிறிஸ்துவின் ஆவியிலும் குறைவுபட்டுள்ளதைக் காட்டுகிறது என்பதையும், இவைகள் ஒருவரிடத்தில் முற்றிலுமாக இல்லாதிருக்கும் போது அவர்கள் “அவருடையவர்கள் அல்ல” என்பதையும் உணர வேண்டும். (ரோமர் 8:9) இந்த உண்மையை நாம் எவ்வளவு சீக்கிரமாக புரிந்துகொள்ளுகின்றோமோ அவ்வளவு வேகத்தில் “மகிமையின் மேல் மகிமை” என்ற மாறுதலைப் பெறுவோம். நாம் புது சிருஷ்டியின் அங்கங்கள் என்று திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது மிகவும் அவசியம்.
ஆனால், ஆண்டவருடைய ஜனங்களில் வெகுசிலரே இதை, அதாவது எந்த அளவுக்கு அவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறார்கள், எவ்வளவு கடுமையாக மற்றவர்களை நியாயந்தீர்க்கிறார்கள், அதே கடுமையான நியாயத்தீர்ப்பு அவர்களிடத்தில் ஆண்டவர் மேற்கொள்வாரானால், நிச்சயமாகவே அவர்களை இராஜ்யத்திற்குள் செல்ல தடை செய்யும் என்பதை உணருகின்றனர். ஆண்டவருடைய தயாளமான வாக்குத்தத்தத்தின்படியாக, மற்றவர்களை நாம் இலகுவாக நியாயந்தீர்ப்பது போன்று நாமும் நியாயம் தீர்க்கப்படுவோம் என்று பயந்திருக்கலாம். இந்த நோக்கம் அதிகதிமான இரக்கத்திற்கும். அதிகதிமான தயாளத்திற்கும் வழிநடத்தும், மேலும் “பொல்லாங்கு நினையாதே” என்ற உயர்ந்த நிலைக்கும் எடுத்து செல்லப்படக் கூடும். ஆனால் அப்படி அல்ல, நம்முடைய விழுந்துபோன சுபாவம் எல்லாம் எதிர்வழியில் உறுதியாக இருக்கிறது. இந்த தயாள எண்ணத்தை நம்முடைய ஆண்டவர் அறிவித்து, அதாவது அவர் நம்மை இரக்கத்துடன் நியாயந்தீர்ப்பது போன்று நாம் மற்றவர்களையும் நியாயந்தீர்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை வெளிப்படுத்தி பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், மிக குறைவானவர்கள் மாத்திரமே இந்த வாக்குத்தத்தின்படி இரக்கத்தை எதிர்பார்க்க முடியும். நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்க முற்படும் குணத்தை நாம் ஆராய்ந்து பார்ப்பது நமக்கு நன்மை தரும். நாம் அதை ஜெபத்துடன் செய்வோமாக.
விழுந்துபோன அல்லது மாம்ச சிந்தை சுயநலம் உள்ளதாக இருக்கிறது. நாம் எவ்வளவு சுயம்நலம் உள்ளவர்களாக இருக்கிறோமோ அதே அளவுக்கு மற்றவர்களுக்கு எதிரிடையாக அது உள்ளது. ஒன்று ஆதரிக்கும்படியாக உள்ளது. இல்லையெனில் சுயநலத்திற்கு இடம் அளித்துவிட்டு, மற்றவர்களை ஆதரிக்காமல் குற்றப்படுத்தும்படியாக உள்ளது. இது நம்மை அறியாமலே நமக்குள்ளாக வளர்ந்துள்ள பழக்கமாக உள்ளது. நாம் நம்மை அறியாமலே கண் சிமிட்டுவது அல்லது மூச்சுவிடுவது போன்று உள்ளது. கல்வியறிவு வளரும் போது இந்த பழக்கம் அதிகமாக உள்ளது. மனம் மேலான நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்வதுடன், உடனடியாக மற்றவர்களையும் இதே போன்று அளவிட முற்படுகிறது. அப்படி செய்யும் போது எல்லாரிலும் ஏதாவது பிழையைக்காண்கிறது. அது மற்றவர்களுடைய பிழைகளையும் பெலகீனங்களையும் மனதளவில் திரும்ப திரும்ப கொண்டு வருவதில் சந்தோஷப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய பிழைகளை அதே வழியில், அல்லது வேறு முறையில் காணாது விட்டு விடுகிறது.சில வேளைகளில் தன்னுடைய பிழையை மறைப்பதற்கு அல்லது அதே முறைப்படி தன்னுடைய குணாதிசயம் மிக உயர்வானது என்ற எண்ணத்தை உண்டு பண்ணும்படியாக, மற்றவருடைய பெலவகீனங்களை மாய் மாலத்துடன் கேலி செய்கிறது விழுந்துபோன பழைய சுபாவம் இப்படியாக, கேவலமான முறையில் காணப்படுகிறது – புதிய மனம், அன்பு எனும் பரிசுத்த ஆவியினால், ஆண்டவருடைய ஆவியினால் பிறந்திருப்பது. ஆரம்பத்திலிருந்தே சுயநலத்துடன் உள்ள பழைய மனதோடு போராட்டத்தில் உள்ளது. அது ஆண்டவருடைய வார்த்தையின் வழி நடத்துதலின்படி, அன்பு எனும் பிரமாணத்தின்படியும் முக்கிய கட்டளையின்படியும் இருப்பதோடு. நாம் அதிகதிகமாக கிருபையிலும் அறிவிலும் வளரும்போது, ஆரம்பத்திலிருந்தே சுயத்துடன் போராடுகிறது. ஆரம்பத்தில் புது சிருஷ்டிகள் “கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாய்” இருந்து இந்த புதிய பிரமாணத்தை மேலோட்டமாக விளங்கிக்கொள்ளுகிறார்கள். ஆனால் வளர்ச்சிடையாமல், அன்பின் பிரமாணம் வாஞ்சிக்க்பபட்டு, விருத்தி பெறாவிடின் மகா பெரிய வெகுமதியை அடைய முடியாது.
அன்பின் பிரமாணம் கூறுகிறது சகோதரர்களுடைய அல்லது மற்றவர்களுடைய பெலவீனங்களும், குறைகளும் உலகத்தார் முன்பாக கூறப்படுவது வெட்கத்துக்குரியது. அவைகளை முற்றுமாக மறைக்கும்படியாக அவர்களுடைய பிழைகள் மீது இரக்கம் என்கிற போர்வையை விரிக்க தாமதமாகிவிட்டாலும் கூட, குற்றம் சாட்டப்படுபவர்கள் சார்பில் ஒரு வார்த்தை கூட பேசும்படியாக அன்பும், இரக்கமும் உடனடியாக எழாவிட்டால் வெட்கத்துக்குரியது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பாவியை ஆக்கினைக்குள்ளாக குற்றப்படுத்தும்படி நம்முடைய பிரபுவான, அன்புள்ள ஆண்டவர் கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அவர் சொன்னதாவது – “உங்களில் பாவமில்லாதவன் முதாலவது கல்லெறியக்கடவன்” தன்னில் பெலம் இல்லாத மனுஷன், ஆண்டவர் கேட்காமலேயே அவர், தவறு செய்பவர்கள் மேல் பழிவாங்க வேண்டும், அவர்களை வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டும் என்பது போன்று, நீதி வழங்கும் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும்போது ஓர் அளவுக்கு முக்கியத்துவம் கொடாமல் விட்டுவிடலாம். ஆனால், நம்முடைய ஆண்டவர், பாவம் அறியாதவர், அவருடைய இருதயம் அவ்வளவு அன்பினால் நிறைந்திருந்தபடியால் எளிமையாக எடுத்துக் கூறி மன்னித்தார், அவர் தண்டிக்கவோ, எல்லோரிடம் தெரியும்படி செய்யவோ, அதட்டவோ இல்லை என்பதை நாம் காண்கிறோம். ஆகவே ஆவியினால் பிறந்தவர்கள் எல்லோரும் அப்படியாகத்தான் இருப்பார்கள். எவ்வளவுக்கு அதிகமாய் அவருடைய சாயலில் வளருகிறார்களோ, அதன்படியாக பழிவாங்குதலுக்காக ஜெபிப்பதிலும் முந்திக்கொள்ளமாட்டார்கள், அவர்கள் தங்கள் நாக்கின் மூலமாகவோ, மற்றபடியோ தண்டனை வழங்கு வதற்கு மகாபெரும் நியாயாதிபதியால் கட்டளையிடப்பட்டால் ஒழிய, மற்றபடி முந்திக்கொள்ளமாட்டார்கள். இதற்கு மாறாக, அவர் நமக்கு போதனையாக கூறுகிறதாவது- மேலும் நம்மிடம் “பழிவாங்குதல் எனக்குரியது” என்று அறிக்கையிடுகிறார்.
தவறு செய்பவர்களுக்கு “அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளதாய் இருக்கிறது” என்று அப்போஸ்தலர் அன்பின் ஆவியைக் குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். மற்றவர்களின் வெற்றியின் மேல் “அன்புக்கு பொறாமையில்லை” அவர்களுடைய கனத்தை குறைவாய் மதிப்பிடவோ, அதை அவர்களிடமிருந்து எடுக்கவோ முயற்சிக்காது. “அன்பு தன்னைப் புகழாது. இறுமாப்பாயிராது.” ஆகவே மற்றவர்கள் மேல் உள்ள புகழ்ச்சியைத் இழிவுபடுத்தாது. அப்படிச் செய்வதன் மூலம் தனக்கு புகழ்ச்சியை தேட முற்படாது. அது “அயோக்கியமானதைச் செய்யாது” அன்பிற்கு தேவையற்ற, முறையற்ற வழிகளைத் தவிர்த்துவிடுகிறது. அன்பு “தற்பொழிவை நாடாது” மற்றவர்களுடைய புகழ்ச்சியையோ அல்லது செல்வத்தையோ, அல்லது புகழையோ நாடாது, அதற்குப் பதிலாக அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறது, அந்த ஆசீர்வாதங்களைக் கூட்டத்தான் முயற்சிக்குமே ஒழிய குறைக்காது. “அன்பு சினமடையாது,” பழிவாங்கும்படி கூட செயல்படாது, முழு மனுக்குலத்தின் வீழ்ச்சியின் மூலம் வந்த கஷ்டங்களை மனதில் நினைத்து, கோபமாய் இருப்பதற்கும் பதிலாக இரக்கப்படும். “அன்பு தீங்கு நினையாது” அது தீங்கு நினையாதிருப்து மாத்திரமன்றி, தீங்கு செய்ய எண்ணாது, சந்தேகம் எழும்பும் பட்சத்தில், சந்தேகத்திற்கு இடம் கொடாமல், அப்படியே விட்டு விடுவதுடன், சந்தேகத்துடன் ஊகிப்பதையும் தவிர்த்து விடும். (1 தீமோத்தேயு 6:4) அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷ்பபடும்” ஆகவே கனிவான வார்த்தைகளைச் கூறுவோ, அல்லது நலமானவைகளை செய்யவோ சந்தோஷப்படும். அது கனவீனமான வார்த்தைகளை சொல்லுவதிலோ அல்லது கனவீனமான காரியங்களை வெளிப்படுத்துவதிலோ பிரியப்படாது. அன்பு “எல்லாவற்றையும் தாங்கும்” அது இரக்கம் என்கிற போர்வையினால் மூடும், ஏனெனில், யாரும் எதுவும் பரீட்சைக்கு நிற்கும் அளவிற்கு பரிபூரணரல்ல. அன்பு எதிர்பார்ப்புடன் இருப்பதால் எப்பொழுதும் இரக்கம் (தயாளம்) என்னும் போர்வையோடு ஆயத்தமாய் இருக்கிறது. அன்பு “சகலத்தையும் நம்பும்” ஆகவே நல்ல எண்ணத்துடன் கேள்வி கேட்கலாம். அவைகளை நம்பும். அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும். கூடுமானவரை இழிவானவைகளைக் குறித்த எண்ணங்களை ஒதுக்கி விடும். அன்பு சகலத்தையும் சகிக்கும்” உண்மையாகவே மனந்திரும்புகிறவர்களை ஏற்றுக்கொள்வதில் “கெடு” நினைக்க இயலாது. “அன்பு ஒருக்காலும் ஒழியாது” மற்ற கிருபைகளும், வரங்களும், அவைகளின் நோக்கங்கள் நிறைவேறிய பின்னர் மறைந்து போகலாம். அன்பு அடிப்படையானது, அதை நாம் அடைந்த விட்டோமெனில் அது எப்பொழுதும் நம்முடையதாக, நித்திய காலம் வரை நம்மோடு நிலைத்திருக்கும். அன்பே பிரதானமானது. (1 கொரிந்தியர் 13:4-13)
அன்பற்ற வார்த்தைகளைக் கூறுவதே பொன்னான பிரமாணமாகிய அன்பின் பிரமாண ஒழுங்கை மீறுவதாக இருக்குமென்றால், உண்மையான காரியத்தை அறியாமல் இருக்கும் போது, மற்றவர்களைக் குறித்து அவதூறான காரியங்களையும், மோசமான. அன்பற்ற, குற்றப்படுத்தும் காரியங்களையும் பேசும் பழக்கம் உலகப்பிரகாரமானவர்கள், பெயர் கிறிஸ்தவர்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது, உண்மையான கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காண்பபடுவதைக் குறித்து என்ன சொல்ல முடியும். அது எவ்வளவு வெட்ககரமான காரியம். “ஒருவனையும் தூஷியாதே” என்கிற ஆண்டவரின் அறிவுரையை மீறுவது எவ்வளவு வெட்ககரமான காரியமாயிருக்கும். அன்பின் பிரமாணத்தில் குழந்தைகளும், அன்பின் பிரமாணத்தில் வளர்ச்சி அடையாதவர்களும் மாத்திரம் தான் தவறாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் மாத்திரமே இரண்டு மூன்று பேரின் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியான வார்த்தைகள் இல்லாமல் தனது அயலகத்தானைக் ஒரு குறித்தோ அல்லது சகோதரனைக் குறித்தோ, ஒரு பொல்லாங்கை நம்பவோ, அதுவும் மிகவும் பயத்துடன் நம்பவோ முடியும், சந்தேகத்தை ஆதாரமாக வைத்தோ, அல்லது மற்றவர்கள் சொல்வதை வைத்தோ அவதூறாக பேச முடியும். நம்மை நாமே நியாந்தீர்க்க வேண்டும். “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம்” (ஆண்டவரால் தண்டிக்கப்பட மாட்டோம் சீர்திருத்தப்பட மாட்டோம். – (1 கொரிந்தியர் 11:31)
மற்றவர்களைக் குறித்து, அவர்களுடைய காரியங்களைக் குறித்து “வீண் பேச்சு” பேச எத்தனிப்பதை பொன்னான பிரமாணம் நிச்சயமாக நியாயந்தீர்க்கும். அவதூறு கூறித்திரிகின்ற எந்த மனிதன் தான் அவதூறு கூறப்படுவதை விரும்புவான்? யார்தான் வீண் பேச்சு பேசுவான்? யார் தான் தன்னுயை விஷயங்கள், பெலவீனங்கள், பொதுவாகவோ அல்லது இரகசியமாகவோ பேசப்படுவதை விரும்புவான்? “உலத்தாருக்கு” வீண் பேச்சு பேசுவதும், அவதூறு பேசுவதும் தவிர, பேசுவதற்கு வேறொன்றும் கிடையாது. ஆனால், புது சிருஷ்டி. தேவதூதர்கள் பாடிய “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும். பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்ற பாடலின் கருத்தடங்கிய தேவனுடைய அன்பையும் திட்டத்தையும் அவர்கள் பெறும் வரை ஊமையாக இருப்பது நலமாக இருக்கும். அப்பொழுது “அவர்களுடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானங்களும்” ஆண்டவருக்கு பிரியமானதாயிருப்பது மாத்திரமன்றி அவர்கள் சந்திக்கின்ற ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்.
அப்போஸ்தலர் நாவைக் குறித்து பேசும் போது, நம்முடைய சரீரங்களில் சிறிய அவயவமாயிருக்கிற இதற்கு அதிக வலிமை உண்டு என்கிறார். அது அழியாத அன்பான வார்த்தைகளையும் பரப்பலாம். அதன் மூலம் ஜீவிகிறவர்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்கலாம். அவர்கள் மூலமாக இன்றும் பிறக்காதவர்களையும் ஆசீர்வதிக்கலாம். இல்லையெனில், “சாவுக் கேதுவான விஷம் நிறைந்தது மாயிருக்கிறது.” அது விஷம் நிறைந்த சிந்தனை விதைகளைப் பரப்பி சிலரின் வாழ்க்கையை கசப்பாக்கி விடலாம். மேலும் மற்றவர்களுடைய வாழ்க்கையை நோயுற்றது போலாக்கி, அவர்களுடைய வாழ்க்கையை நசுக்கியும் விடலாம். அப்போஸ்தலர் கூறுகின்றார் – “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்…. மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” (யாக்கோபு 3:8-11)
“இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது” ஆகவே நாம் மற்றவர்களைப் பற்றி வீண் பேச்சு பேசும் போதோ, அல்லது மற்றவர்களுடைய அலுவல்களில் மும்முரமாய் இருக்கும்போதோ, அது நம்முடைய இருதயங்களில் பெரும் பகுதி, தேவனுடைய அன்பினாலும் கிருபையினாலும் நிரப்பப்படாமல் வெறுமையாக இருப்பதை நிரூபித்துக் காட்டுகின்றது. இந்த சிந்தனை உடனடியாக நம்மை கிருபையின் சிங்காசனத்திற்கும், தேவவசனத்திற்கும் நேராக, ஆவியினால் நிரப்பப்படுவதற்காக வழி நடத்த வேண்டும், ஏனெனில் அதின் மேல் தாகமுள்ளவர்களுக்கும் பசியுள்ளவர்களுக்கும், ஆவியை அருளிச் செய்வேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். மற்றவர்களைக் குறித்து பொல்லாங்கு பேசப்படுவதை கேட்கும் போதோ அல்லது அதைக் கேட்பதில் மகிழ்ச்சி அடையும்போதோ, இருதயத்தின் நம்முடைய நிலைமை இன்னும் மோசமாயிருப்பதைக் காட்டுகிறது. இப்படியான ஒர் நிலை காணப்படும் என்றால் அது, வீணான வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், மற்றவர்களுடைய அலுவல்களில் தலையிடுவதைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அப்படியென்றால் இருதயமானது கசப்பினாலும், பொறாமையினாலும் சண்டையினாலும், விரோதங்களினாலும், பகைகளினாலும் நிறைந்துள்ளது. இந்த குணாதிசயங்களை அப்போஸ்தலர் “மாம்சத்தினாலும், பிசாசினாலும் உண்டான கிரியைகள்” என்கிறார். (கலாத்தியர் 5:19-21) இந்த விஷயத்தில் புது சிருஷ்டியை முற்றிலுமாக ஆச்சரியப்படவும் விழிப்புணர்வு பண்ணவும் செய்வோமா? ஏனெனில், இந்த மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படுமென்றால், நாம் நிச்சயமாக விழுவது மாத்திரமன்றி, இப்படிப்பட்டவர்களுக்கு நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிகிடைக்காது.
இராஜ்யத்திற்கு தகுதி பெறுவது என்பது இதற்கு மிக எதிர்மாறான வழியில் நடத்துகின்றது. அப்போஸ்தலர் பேதுரு கூறுகின்றபடி, “உங்கள் விசுவாசத்தோடே பொறுமையையும்.. சகோதர சிநேகத்தையும்… அன்பையும் கூட்டி வழங்குங்கள்…இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை…..நித்திய இராஜ்யத்துக் குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” (2 பேதுரு 1:5-11) அப்போஸ்தலனாகிய யாக்கோபு இந்த விஷயத்தைக் குறித்து மிக தெளிவாகக் கூறுகிறார். “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும், விரோதத்தையும் வைத்தீர்களானால் நீங்கள் பெருமை பாராட்டா திருங்கள், சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகீக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத் துக்குரியதும், பேய்த்தனத்துக் கடுத்ததுமாயிருக்கிறது.” (யாக் 3:14,15) எவனிடம் இப்படிப்பட்ட ஒரு அவதூறு பேசும் ஆவியும், கசப்பான ஆவியும் காணப்படுகிறதோ, அவன் கிறிஸ்துவின் ஆவியான, பரிசுத்த ஆவியான, அன்பின் ஆவிக்கு நேர் எதிரானதை உடையவனாய் இருக்கிறான். அவன் தனக்குள்ளாகவோ அல்லது மற்றவர்களிடத்திலோ பொய் சொல்லாதிருப்பானாக. அவன் தன்னுடைய வெட்கத்தில் பெருமை பாராட்டாமல் இருப்பானாக, அவன் இப்படியாக அபிஷேக ஆவிக்குப் பதிலாக சாத்தானின் ஆவியாயிருக்கிற இருளை வெளிச்சம் என்று காண்பியாதிருப்பானாக.
தொடர்ந்து அப்போஸ்தலர் கூறுகிறதாவது குழப்பமும், சமாதானமற்ற நிலையும், எல்லா நேரங்களிலும் ஆண்டவரின் ஜனங்களை துன்பப்படுத்துவதின் இரகசியம். இருதயம் அசுத்தமாயிருப்பதும், முழுமையாக அர்ப்பணிக்கப்படாமல் இருப்பதும் தான் – “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே சகல துர்ச் செய்கைகளுமுண்டு” (யாக்கோபு 3:16) பழைய விழுந்துபோன சுபாவத்திற்குரிய இந்த களைகள் வளர அனுமதிக்கப்பட்டால், அவைகள் தீங்கு விளைவிப்பது மாத்திரமல்ல, இந்த களைகள் அதிகமாக வளர்ந்து ஆவியின் இன்பமான, அழகான பூக்களையும் கிருபைகளையும் கொன்றுவிடும்.
இந்த பாடத்தை வலியுறுத்தி, தங்களைப் போல நெருக்கமான வழியில் செல்ல முயற்சிக்கும் “சகோதரர்களை” ஓயாமல் குற்றம் காண்கிறவர், ஆண்டவருடைய சாயலைப் பெறுவதற்கு சகோதரர்கள் எடுக்கும் உயர்ந்த முயற்சிகளை என்றுமே காணாமல், அவர்களை தொடர்ந்து வேதனைப்படுத்திக் கொண்டிருப்பவர்களே மிகுந்த தவறுகளை செய்தவர்கள் – அன்பற்றவர்கள் என்று நம்முடைய ஆண்டவர் கருதுகிறார். இந்த வகுப்பாரை கடிந்துக்கொள்வதற்கான நம்முடைய ஆண்டவரின் மிகைப்படுத்திய வார்த்தைகள் ஏளனமாக தோன்றுகிறது. ஏனெனில், – “உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை கவனியாமல் சகோதரரின் கண்ணில் இருக்கும் தூசியை கண்டு அவனை ஏன் முறைக்கிறாய்?” என்று அவர் சொல்லர்த்தமாகவே கூறுகிறார். எல்லா “சகோதரர்களும்” ஏதோ ஒரு வகையில், மாம்சத்தின் பலவீனத்தால், அதிகமாகவோ, குறைவாகவோ கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால், பழைய பாவங்களின், அபூரண மண்பாடங்களில் புதிய சுபாவத்தை பொக்கிஷமாக அனைவரும் பெற்றிருக்கிறோம். “நீதிமான் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” ஆயினும், இருதயத்தில் முழுமையான அன்பை கொண்டிருக்கும் ஒரு சகோதரனுடைய விசுவாசத்தின் கண்களில் தூசி இருந்தாலும், அல்லது அறிவார்ந்த புத்தி
சாலித்தனமான விவேகத்தோடும், ஆன்மீக அறிவோடும், ஒருவேளை வாழ்க்கையின் எல்லா செயல்களையும் பாதிப்புக்குள்ளாக்கி, அபூரணமான வேலைகளை வழங்கத்தக்கதாக அவர்களின் கைகளில் பிளவுகளும், தாங்கள் விரும்பி, பரிபூரணமான நடக்கை நடக்க இயலாதபடிக்கும் பாதங்களிலும் பிளவுகள் இருக்கலாம். ஆனாலும், விசுவாசம், அன்பு, மற்றும் இரக்கத்தின் ஆவியை, அதாவது கிறிஸ்துவின் ஆவியை அவர்கள் பெற்றிருந்தால், அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். மற்றும் அன்பு மற்றும் இரக்கத்தின் ஆவி இல்லாதவர்களை காட்டிலும் இவர்கள் ஆண்டவரால் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். ஆகவே இந்த உவமையில், ஆண்டவரின் ஆவி மிக குறைவாக பெற்றிருப்பதினாலும், சகோதரர்களை ஓயாமல் குற்றம் சுமத்துகிற எதிராளியின் ஆவியை அதிகமாக பெற்றிருப்பதினாலும், மற்றவர்களைப் பற்றிய அவர்களின் நியாயத்தீர்ப்பில் முழுமையாக நெறி தவறி இருப்பதாக இந்த உவமை குறிக்கிறது. இந்த அன்பற்ற, குற்றம் கண்டுபிடிக்கிற, சகோதரர் மேல் குற்றம் சுமத்துகிற வகுப்பாரை வெளிவேஷக்காரர் என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார். ஏன்? ஏனென்றால், மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், அந்த குற்றங்களை அவர்கள் செய்யவில்லை என்று அவர்கள் குறிப்பிட விரும்புகிறார்கள். அல்லது அப்படிப்பட்ட குற்றங்களின் தாக்கங்களை அவர்கள் பெறவில்லை என்பதை காட்ட விரும்புகிறார்கள், மேலும் இது பொய்யானது என்று தங்கள் இருதயங்களில் அறிந்தும், அவர்கள் பரிசுத்தவான்கள் என்ற வெளிப்படுத்துகிறார்கள். அநேக குறைபாடுகளும். பல தோல்விகளும் உள்ளதால், அவர்களின் போக்கு வெளி வேஷமானதும், பொய்யானதும், வஞ்சிக்கக் கூடியதும், தேவனுக்கு வெறுப்புண்டாக்கக் கூடியதுமாக உள்ளது. பாவத்தின் மேலுள்ள வெறுப்பினாலும், அன்பினால் ஏவப்பட்டு தவறு செய்கிறவர்களை, குற்றம் கண்டுபிடிப்பதாக கூறுவது, ஏமாற்றக்கூடியதும், பாசாங்குத்தனமானதும் என்று நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் தெளிவாக காட்டுகிறது. இல்லையேல், தங்கள் சொந்த பாவங்களையும், பலவீனங்களையும், பகைத்து, எதிர்த்து போராடி, தங்களுடைய சொந்த சுய பெருமை மற்றும் பாசாங்குத்தனத்தை வெளியேற்றுவதற்கு, ஏராளமான வழிகளை கண்டுபிடித்திருப்பார்களே. இவைகளினால் பெறக்கூடிய அனுபவங்கள், மற்றவர்களுக்கு உதவுவதில், மிக மென்மையாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கலாம். நம்முடைய கர்த்தர் சித்தரித்ததை அனைத்து சகோதரர்களும் ஜாக்கிரதையாக கவனிக்கவேண்டும். மற்றும் அவர்கள் – தவறு கண்டுபிடித்தல், தொடர்ந்து தொல்லை கொடுக்கும் மனபாங்கு, கடுமையான விமர்சனம், மற்றும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் அதே தவறின் வெவ்வேறு அளவிலான தீமையான எண்ணங்கள் இருதயத்தில் உள்ளதா என்று கவனமாக பார்க்கவேண்டும். அத்தகைய ஒரு அன்பற்ற மற்றும் சுயத்தின் மேல் தற்பெருமையாகிய உத்திரம் அவர்களின் ஆவிக்குரிய கண்களில் காணப்பட்டால் அவர்கள் விரைவாக “சகோதரர்களுக்கு” மென்மையாகவும். அனுதாபத்தோடும் உதவிச் செய்யவதற்கு உடனடியாக அவர் பரம வைத்தியரிடம் சென்று. அதை முற்றிலுமாக அகற்றிவிடவேண்டும். மற்றும் மனுக்குலத்தின் குருடாக்கப்பட்ட கண்களை அன்போடும் இரக்கத்தோடு திறக்கவும், பாவத்தின் எல்லா காயங்களை குணப்படுத்தக்கூடிய ஆயிர வருட ஆட்சியின் வேலைக்கு, வெற்றிகரமான வைத்தியர்களாகவும், அறுவை சிகிச்சையாளர்களாகவும் ஆயத்தப்படலாம். – அன்பற்ற சுய தற்பெருமையை எவ்வாறு வெல்லுவது.
R2590 [col. 1 P2, 3] –
“சகோதரர்கள்” கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளுக்கு திரும்பி வருகிறார். ஒருவருக்கொருவர் தீர்ப்பளிக்கும் போக்கை, திருத்த, சிறப்புமிக்க சாத்தியமான காரியங்களை மனதில் கொண்டு, நம்முடைய ஆண்டவர் இந்த தவறான குணங்களை எவ்வாறு அழிப்பது என்பதற்கான கட்டளைகளை கொடுக்கிறார். நாம் மற்றவர்களை செய்வதற்கு, நியாயந்தீர்ப்பதை தடை தேவையான அன்பையும் இரக்கத்தையும் அனுதாபத்தையும் தேவனிடம் கேட்க வேண்டும். இது நம்முடைய சொந்த குறைபாடுகளை திருத்திக்கொள்வதற்கு தேவையான உதவிகளைச் செய்யும். நாம் உண்மையோடும், விசுவாசத்தோடும் கேட்டால், இந்த வழிக்கு தேவையான உதவியையும், கிருபையையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். கேட்கும்போது, நம்மிடம் இல்லாத காரியம் அதாவது நம்மடைய இருதயங்களில் அன்பின் பரிசுத்த ஆவி நிரப்பப்படும்படியான காரியங்களை தேட கடமைப்பட்டிருக்கிறோம். தேடினால் கண்டடைவோம். நாம் கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு தொடர்ந்து முயற்சித்து, தேவனுடைய களஞ்சியத்தை தட்டிக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும். இதன் விளைவாக அவைகள் நமக்கு திறக்கப்படும். கேட்டல், தேடல், தட்டுதல், அனைத்தும், கர்த்தருக்குள் விசுவாசத்தைக் குறிப்பிடுகிறது. இது அவருடைய பார்வைக்கு பிரியமாக இருக்கும். நம்முடைய சார்பில், அது நம்முடைய விசுவாசத்தையும், கர்த்தருடைய சித்தத்தின்படியே முழுமையாக செய்வதற்கு ஒரு விருப்பத்தையும் ஏற்படுத்தும். பூமிக்குரிய பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் விரும்பி கேட்கக்கூடிய பூமிக்குரிய ஆகாரத்தை, கொடுப்பதுபோல, ஆண்டவரும் தம்முடைய பிள்ளைகளின் தேவைக்கு ஏற்றபடி கிருபை அளிப்பது நிச்சயம். ஆகவே, நம்முடைய இருதயங்களில் உள்ள நல்ல ஆசைகள் திருப்தியாகும். அவர் நம்மை வஞ்சிக்கமாட்டார் அல்லது தீமையான காரியங்களை நமக்கு கையளிக்கமாட்டார். நாம் நன்மையானதை விரும்பும் போது, நாம் கேட்டதைவிட, எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக கொடுப்பார். ஏனெனில், நம்முடைய பரலோக தகப்பன் பூமிக்குரிய அபூரணமான தகப்பன்களை காட்டிலும் எவ்வளவு மேலானவர்? இந்த பிரசங்கத்தை லூக்கா 11:13ல் குறிப்பிடுகிறார். கேட்கிறவர்களுக்கும், தேடுகிறவர்களுக்கும், தட்டுகிறவர்களுக்கும். நன்மையான, அதாவது அவருடைய பரிசுத்தஆவியை கொடுப்பதற்கு தேவன் பிரியமாக இருக்கிறார் என்று அறிவிக்கிறார். இதுவே தேவைப்பட்ட துல்லியமான ஒன்று. மேலும் இது அசுத்தமான, அன்பற்ற, சுயநலமான, நியாந்தீர்க்கிற, மற்றும் மாம்சத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் ஆவியை புறம்பே தள்ளிவிட வேண்டும். நாம் பரிசுத்த ஆவியினால், அன்பின் ஆவியினால் நிரப்பப்படுவதே இந்த விஷயத்திற்கு கொடுக்கக்கூடிய தடுப்பு மருந்து. ஏனெனில், “அன்பு மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாது”, “அன்பு நீடிய பொறுமையும் இரக்கமானது.” தன்னுடைய குற்றத்தை கவனியாமல், மற்றவரின் குற்றங்களை கண்டுபிடிக்கும்படிக்கு, “அன்பு இறுமாப்பாயிராது,” “தன்னை தான் புகழுவதற்காக” ஒரு பொது விமர்சகராக, தவறு கண்டுபிடிப்பவராக அல்லது சகோதரர்களை குற்றம் சாட்டுகிறவராக இராது. “அன்பானது பரிவுள்ளதும், உதவிகரமானதும். தேவனுடையஆவியுமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 13:4 13:10)
குற்றம் கண்டுபிடிக்கும் மனபாங்கு, அதாவது அனைவரையும் குற்றம் சாட்டி தீர்ப்பளிக்க ஆயத்தமான நிலை, ஒருவருடைய தவறான இருதயத்தின் நோக்கத்தை குறிப்பிடுகிறது. ஆண்டவருடைய ஜனங்கள் அனைவருமே இப்படிப்பட்ட நிலைக்கு எதிராக தன்னை காத்துக் கொள்ள வேண்டும். அப்போஸ்தலர் விளக்குவது போல, இது எந்த தீமையையும் சிந்திக்காது, இரக்கம், பரிவு, அன்பும் உள்ள ஆவி அல்ல. இது தேவனுடைய மனப்பான்மைக்கு இணங்காத ஆவி, அல்லது நம்முடைய ஆண்டவர் விளக்குவதை போல, பலியை காட்டிலும் தேவன் இரக்கத்தையே விரும்புகிறார். மேலும், மற்றவர்களை கண்டனம் செய்வதற்குத் தயாராக உள்ளவர்கள், ஆண்டவரின் இரக்கம் மற்றும் மன்னிப்பிற்கான ஆவி இல்லாதவர்கள் என்று காட்டுகிறது. நம்முடைய ஆண்டவர் துவக்கத்தில் தம்முடைய இரண்டு சிறந்த சீஷர்களை இந்த குற்றத்திற்காக கண்டனம் தெரிவித்தார். ஆண்டவர் யூதர்கள் மத்தியில் செய்தது போல. சமாரியாவில் நிற்காமலும், அங்கு அற்புதங்களை செய்யாமல் சென்றதினால், சமாரியாவின் ஜனங்கள் அவருடைய சீஷர்களுக்கு உணவு விற்கவில்லை. அப்போது, யோவானும், யாக்கோபும். கோபமடைந்து,” ஆண்டவரே, எலியா செய்தது போல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.” அதற்கு இயேசு திரும்பி பார்த்து “நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டினார், “மனுஷனை அழிப்பதற்கு அல்ல அவர்களை இரட்சக்கவே மனுஷகுமாரன் வந்தார்” என்றும் கூறினார். எனவே கர்த்தருடைய சீஷர்கள் அனைவரும் – தங்களுக்கு இரக்கம் பெறுவதை விரும்பும் போது, மற்றவர்களின் குறைகளை கண்டுபிடித்து தீர்ப்பளிக்கும் மனநிலை மற்றும் மற்ற ஜனங்களை அழிக்கக்கூடிய நோக்கங்களை தவிர்ப்பதற்காக தொடர்ந்து நாம் படித்து கொண்டிருக்க வேண்டும். ஆண்டவர் நிலைநாட்டிய பிரமாணத்தில், மற்றவர்களிடம் நாம் காண்பிக்கக் கூடிய இரக்கத்தின் விகிதத்தின்படியே, தேவனிடம் நாம் இரக்கத்தை எதிர்ப்பார்க்க முடியும்.