Q-4
R2791 (col.2 P1,2)
தேவனுடைய இராஜ்யத்தில் அவருடைய குமாரனுக்கு உடன்பங்காளிகளாக அழைக்கப்படுகிறவர்களுக்கு இந்த ஒரு குணத்தையும் அடிப்படைத் தகுதியாக தேவன் வைத்திருக்கிறார் என்று நாம் பதில் அளிக்கலாம். நாம் செய்யக்கூடிய வேலைகளைக் குறித்து கவனிக்கும் பொழுது இதற்குள் இருக்கும் ஞானம் வெளிப்படுத்தப்படுகிறது. நம்முடைய ஆண்டவரின் உடன்பங்காளிகளாக அவரோடு தேவனுடைய ஆயிரவருட ஆட்சியில் பூமியின் முழு குடும்பங்களையும் ஆசீர்வதிக்க வேண்டிய வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய வேலையாகும். ஆகவே இதற்குத் தகுதியான ஆட்களை மட்டுமே தேவன் தேர்வு செய்வார். தேவனுடைய குணங்களையும் நன்மைகளையும் அறிந்து. பாவத்தையும், அநீதியையும் வெறுத்தால் மட்டும் போதாது, இவைகளின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையில் நடை முறைப்படுத்த வேண்டும். நீதியினிமித்தம் சந்தோஷத்தோடு மனப்பூர்வமாகத் துன்பப்படும் போது, நீடிய பொறுமையோடு சகிக்க வேண்டும். தற்காலிகமாக, ஒரு சில சோதனைகள் மட்டுமே, ஒருவரை நீதியின் பாதையில் நடப்பவர் என்று நிரூபித்து விடாது. ஆனால் மரிக்கும் வரைக்கும் சந்தோஷத்துடன் பாடுகளைச் சகிப்பதனால் மட்டுமே நமக்குள் இருக்கும் நீடிய பொறுமையை நாம் நிரூபிக்கமுடியும்.
நாம் வைரத்தைக் கொண்டு இதை விளக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வைரத்தை உற்பத்தி செய்யலாம் என்ற பட்சத்தில், முடிந்த வரையில் வைரத்தைப் போலவே நாம் அந்த பிளாஸ்டிக்கை உருமாற்றினாலும், அதன் விலை வைரத்திற்கு ஒப்பாகுமா? அல்லது வைரத்தைப் போல மதிப்பு பெறுமா? நிச்சயமாக இல்லை. அதேபோல் ஒரு கிறிஸ்தவனும் தேவனுடைய குணலட்சணங்கள் பூரணமாக அடையாதிருந்தால் மட்டும் அவர் தேவ புத்திரனாக முடியும். விசேஷமாக இந்த “நீடிய பொறுமை” என்ற குணம் நம்மில் இல்லை என்றால், நிச்சயமாக நாம் அவருடைய பொக்கிஷமாகக் கருதப்பட வாய்ப்பில்லை. ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் உறுதியாக, துன்பங்களை சந்தோஷத்துடன் சகிக்கும் குணத்தை உடையவர்கள் மட்டுமே இராஜ்யத்திற்கு ஏற்றவர்களாக இருக்க முடியும் என நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.