CD-EVILSPEAK-Q-36
1 பேது 2:23 “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”
R2879 [col.2 p1, 2]: –
பொதுவாக (மாம்சத்திலிருக்கும்) சண்டை போடும் குணமுள்ளவர்கள் எப்போதும் பழிவாங்கும் உணர்வில் இருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவரிடமிருந்து சுயக்கட்டுப்பாட்டையும், சாந்தத்தையும் சகோதர அன்பையும் தயவும், கற்று கொண்டவர்கள் “தீமைக்கு பதிலாக தீமை செய்யாமலும், வையப்படும் போது பதில் வையாமலும்” என்ற கற்பனையை நிறைவேற்ற ஆயத்தமாய் இருப்பார்கள். நம்முடைய ஆண்டவரை பார்க்கும்போது அவருக்கு ஏற்பட்ட காரியங்களின் விதத்தை நாம் பார்க்கலாம். “அவர் வையப்படும்போது பதில் வையாமலும்”, அவருடைய எதிராளிகள் அவர் மேல் எந்தவிதமான குற்றத்தையும் நீதியாக கண்டுபிடிக்கவில்லை. மேலும் அவருடைய எதிராளிகள் அவரை குற்றம் சாட்டும் அளவுக்கு எந்த விதத்திலும் பூரணப்பட்டவர்களல்ல. அவர் தன்னை முழுமையாக தெய்வீக சித்தத்திற்கு ஒப்புகொடுத்ததின் நிமித்தம் அந்த ஜனங்களின் தவறான ஏச்சுப் பேச்சுக்களையும், தூஷணங்களையும் அவர் பொறுமையாய் சகித்து, தன்னுடைய முழு விசுவாசத்தை நிரூபித்து, அவருடைய இரக்கத்தையும், உணர்வுகளையும், அன்பையும் பூரணமாக வெளிப்படுத்தினார்.
கிறிஸ்துவின் சாயலில் வளர்ச்சியடையக்கூடிய நாமும் இப்படிப்பட்ட வளர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகப்படும்போது பழிக்குப் பழி வாங்காமல், அனைத்தையும் சகித்து, மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்தோடும் சோதனைகளையும், பிரச்சனைகளையும் எதிர் கொண்டு ஜெயிக்க வேண்டும். ஏனெனில் சகல காரியங்களும் நித்தியமான கன மகிமைக்காக இக்காலத்தில் நமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று அப்போஸ்தலரின் அறிவுரைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்கு பேதுருவின் வாக்கியத்திற்கும் நம் ஆண்டவர் பேசின வசனங்களுக்குமுள்ள இசைவை நாம் காணலாம். (பிலி 3:8, 11 கொரி 4:17, மத் 5:44, ரோமர் 12:14) ஆகவே சாபத்திற்கு பதிலாக ஆசீர்வாதத்தை கூற வேண்டுமென்று அப்போஸ்தலர் கூறுகிறார். இந்தப் பந்தயத்திற்கு முடிவானதும் பூரண அன்பை குறிக்கக்கூடியதும் பகைவரை நேசித்து, அவர்களை ஆசீர்வதிப்பதற்கு மனப்பூர்வமாக ஆயத்தப்பட்டு இருளிலிருந்து அவர்களை வெளியேற்றும் அளவுக்கு நாம் அந்த உயர்வான ஸ்தானத்தை பெறாவிட்டால் நாம் தெய்வீக திட்டத்தோடு இசைந்திருக்க மாட்டோம். இப்படிப்பட்ட நிலை நமக்குள் காணப்பட்டால் சோர்வடைய வேண்டாம். நம்மால் முடிந்த வரையில் இந்தப் பரிபூரணமான நிலையை அடைவதற்கு எல்லா வழிகளிலும் நித்தமும் முயற்சிக்கலாம். வெகு சீக்கிரத்தில் இந்த நிலையை அடையும்போது “நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுவது போல நாம் நித்தியமான ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ளலாம்.
மன்னா டிசம்பர் 7: “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (பேதுரு 2:23)
இயேசுவின் எதிராளிகள் அவர் மேல் நியாயமான குற்றங்களை கண்டுபிடித்துவிட்டு, அதை நிரூபித்ததினால் அவரை திட்டவில்லை. அல்லது அவருடைய எதிராளிகள் ஒரு பூரண நிலையில் இருந்ததினால் இயேசுவினால் எந்தவிதமான குற்றத்தை காணமுடியாததினால் அவர் மெளனமாக இருக்கவில்லை. தெய்வீக சித்தத்திற்கு அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததினால், அபூரணமான ஜனங்கள் தன்னை திட்டும் போதும், தூற்றும் போதும் அவர் பொறுமையாக இருந்தார். இதனிமித்தம் அவர் அநேக பாடங்களை கற்றுக்கொண்டு, தனக்குள் இருந்த விசுவாசத்தையும், உண்மையான குணங்களையும் நிரூபித்தார். இந்த ஜனங்கள் தங்களுடைய அறியாமையினாலும், குருட்டாட்டத்தினாலும் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நன்கு உணர்ந்திருந்தார். ஆகையால், அவர்கள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு மிகப் பெரியது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
R3091 [col.2p2]: –
தீமையான செய்தியை கொண்டு வந்த பத்து வேவுக்காரர்களைப் பற்றி யோசுவாவுடன் இருந்த காலேபின் தாராளமான வார்த்தைகள் குறிப்பிடுவதற்கு மனரம்மியமாக இருக்கிறது. இவர்களை பற்றி குறைவாக பேசுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், தன்னைக் குறித்து மேன்மையாக எண்ணுவதற்கும், யோசுவாவிடம் தன்னை மேன்மையாக காட்டுவதற்கும், அருமையான சூழ்நிலை அமைந்திருந்தாலும், அவர் அப்படிச் செய்யாமல், மிக மேலோட்டமாக அந்தப் பத்து பேரின் தவறுகளை சொல்லி, அதனால் அவர்களை காயப்படுத்தாமலும், கோபமூட்டாமலும், “என் சகோதரர்களே” என்று பாசத்துடன் அழைத்தார். ஆவிக்குரிய இஸ்ரயேலருக்கும் இப்படிப்பட்ட மனநிலை காணப்பட வேண்டும். ஏனெனில் நாம் ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, அந்த அபிஷேகத்தின் வழியாக “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்தவர்களாக இருக்கிறோம். மாம்சத்திற்குரிய இஸ்ரயேலர்களைக் காட்டிலும் மேன்மையான பங்கை நாம் பெறவிருக்கிறோம். ஆகவே, புதிய ஜீவனைப் பெற்று ஆவியின் கனிகளில் வளர்ச்சி அடையும் ஒருவர் தன் சகோதரருக்கு விரோதமான தீமைகளை பேசக் கேட்கும் போது “தீமைக்கு பதிலாக……தீமை செய்யாதிருங்கள்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளை நாம் உடனே நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் தீய காரியங்களை பேசுவது மாம்சத்தின் கிரியையாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று அப்போஸ்தலர் முன் அறிவித்திருக்கிறார். இதற்கு மிக சரியான எடுத்துக்காட்டாக நம்முடைய பிரதான தூதனாகிய மிகாயேல் இருக்கிறார். சாத்தான் தன்னோடு வழக்காடுகையில், சாத்தானை குற்றப்படுத்தாமலும், தூஷிக்காமலும் “கர்த்தர் உன்னை கடிந்து கொள்வார்” என்று சொன்னார். அப்போஸ்தலனாகிய பவுலின் குறிப்பான அறிவிப்பை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். மற்றவர்களை பற்றி பேசக்கூடிய தீய காரியங்கள் மாம்சத்தின் அசுத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. நாம் தேவனுடைய ஜனங்களாக இருந்தால் இப்படிப்பட்ட அசுத்தத்திலிருந்து நாம் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட வேண்டும். அப்போது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவோம். ஏனெனில், தீமையான காரியங்களை பேசுபவர் தேவனுடைய இராஜ்யத்தை சுத்திகரிக்கமாட்டார்கள்.