Q-5
யாக்கோபு 1:19,26, “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவீர்கள். “உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவலுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.”
கொலோசேயர் 4:6 “அவனவலுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”
பிரசங்கி 5:2 “தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் கருக்கமாயிருப்பதாக,”
R2355 [col.1 P3]
கிறிஸ்துவுக்குள் தன்னடக்கம், நிதானம், சுய கட்டுப்பாடு, வாழ்க்கையின் அனைத்து விவகாரங்களுக்கும் பொருந்தும் அவர் தனது பேச்சில் நிதானமாக இருக்கவேண்டும், மிகைப்படுத்தல் மற்றும் தவறாக சித்தரிக்கப்படுதல் கூடாது, உண்மைகள் சிறந்தவைகளானாலும் சரி, மிக மோசமானவைகளாக இருந்தாலும் சரி, ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை என்று சொல்லவேண்டும். அவர் “நிதானமான வார்த்தைகனை” பேச வேண்டும், மேலும் திருத்தம் அல்லது கண்டனமாக பேச வேண்டிய அவசியம் இருந்தாலும், அவர் உண்மையை கசப்பு அல்லது கொடுரமாக பேசாமல், நிதானமாக அன்பினால் பேகவதை உறுதிசெய்யவேண்டும். அவருடைய பேச்சு கிருபையுடன் இருக்கவேண்டும் உப்பால் சாரமேறினதாகவும், கிறிஸ்துவுக்கு அவருடைய அர்ப்பணிப்பில் தரத்தை பாதுகாக்கவேண்டும் ஏனெனில் நீங்கள் “பூமியின் உப்பின்” ஒரு பகுதி அல்லவா?
R2447 [col.2 P1]
ஆனால் நம்முடைய அனைத்து உறுப்புகளிலும் நாக்கு மிகவும் செல்வாக்கானது. நாவின் செல்வாக்கு நமது மற்ற அனைத்து அவயவங்களையும் மீறுகிறது. ஆகையால், ஆண்டவரின் சேவையில், அவருடைய ஜனங்கள் தங்களுடைய மாம்ச சரீரத்திலும், ஆண்டவரின் சேவையைச் செய்வதிலும், நாவை கட்டுப்படுத்துவதே முக்கியமான வேலையாகும். அன்பு, கருணை, உதவிகரமான சில வார்த்தைகள் – எத்தனை முறை மனித வாழ்க்கையின் போக்கையே மாற்றியுள்ளது/ – தேசங்களின் விதியை வடிவமைப்பதில் எவ்வளவு செய்யவேண்டியதாக இருக்கிறது! மேலும் தீய வார்த்தைகள், கொடுரமான வார்த்தைகள் அவதூறு வார்த்தைகள் எத்தனை முறை கடுமையான அநீதி, நற்பெயர்களை படுகொலை செய்யப்படுதல் போன்றவை நடப்பித்துள்ளது. அப்போஸ்தலர் கூறுகிறபடி, அது “ஆயுள் சக்கரத்தைக் கொழுத்திவிடுகிறது’ – முதலில் யோசிக்காமல், உணர்வுகளை தூண்டுதல், சச்சரவுகள், பகைமை ஆகியவற்றை நடப்பிக்கிறது. “கெஹன்னாவின் நெருப்பை கொழுத்திவிடும்” இப்படிப்பட்ட நாவுகள் இரண்டாம் மரணத்திற்குரிவை என்பதில் ஆச்சரியமில்லை.