CD-PRAYER-Q-22
R2252 [col. 1:4]: –
“அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது. அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்.” சிருஷ்டிகரை அணுகுவதில், மனுஷனின் மனதின் இயல்பான போக்கில், அதன் வெளிப்பாடு மிகவம் எளிமையள்ளதாக இருக்கிறபடியால், சொன்ன காரியங்களை மீண்டும் மீண்டும் கூறி, இதை சரி செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறு ஜெபிப்பவர்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத நீண்ட ஜெபங்களையும், அவர்களுடைய விருப்பத்தையும், சித்தத்தையும் அடையாளப்படுத்தும்படியாக, சீனர்களிடம் “ஜெப சக்கரங்கள்” உள்ளது. இதே கோட்பாட்டை ரோம கத்தோலிக்கர்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் ஒரே ஜெபத்தை நூற்றுக்கணக்கான தடவைகள் மீண்டும் மீண்டுமாக உச்சரிக்கிறார்கள். மேலும் இந்த ஜெபங்களை “குறிப்பிட்ட” எண்ணிக்கையிலான முறைகள் “சொல்லுவதற்கு” சில சிறப்பு வெகுமதிகளை அவர்கள் பாதிரியார்கள் வாக்களிக்கிறார்கள் – பல நாட்கள் அல்லது வருடங்கள், உத்தரிக்கும் துன்பங்களிலிருந்து நீக்கப்படுதல், இதே போன்ற தாக்கங்கள் புரோட்டஸ்டன்ட்டுகள் மீதும் குறைவாக செயல்படுவதாகத் தெரிகிறது. இவைகள் பெரும்பாலும் நீண்ட ஜெபங்களுக்கும் சர்வல்லமையுள்ள வருடைய போதனைகளைப் பற்றி தவறான விவரங்களுக்கும் வழிவகுக்கிறது. கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவர்கள், புத்திசாலித்தனமாக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், நமக்கு என்ன தேவை என்பதை நம்மை காட்டிலும் தேவன் முன்னதாகவே நன்கு அறிந்திருப்பவரிடம் நாம் அணுகுகிறோம் என்ற உணர்வோடும், பூமிக்குரிய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய நன்மையான ஈவுகளை காட்டிலும் அதிகமான நன்மைகளை கொடுக்க தேவன் சித்தமாக இருக்கிறார் என்பதையும் நாம் உணரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகவே நம்முடைய விண்ணப்பங்களை மீண்டும் மீண்டும் கூறுவது வீணானது மட்டுமல்ல. அது நமக்கு எந்த பயனையும் அளிக்காது. ஆனால் இது குறைந்த அளவிலான ஆன்மீக வளர்ச்சியையும். தேவனைப் பற்றி அபூரணமான கருத்துக்களையும், அவரோடு அபூரணமான உறவையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்கள் எந்த விதமான ஜெபங்களையும் காலவரையறையின்றி மறுபடியும் மறுபடியும் செய்ய வேண்டியதும் இல்லை, உலகத்தின் விவகாரங்கள் மற்றும் சபையின் விவகாரங்களை எவ்வாறு தேவன் கட்டுப்படுத்தவேண்டும் என்பதைக் குறித்தும் அவரிடத்தில் ஜெபத்தில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. பொது ஜெபங்களை ஏறெடுக்கும் சிலர், சர்வல்லவரைவிட அதிகதிகமான ஞானம் உள்ளவர்களாக ஜெபிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். ஏனென்றால், வீட்டிலும், வெளியிலும், இந்த உலகம் முழுவதிலும், எப்படி, எப்போது, எங்கே என்ன செய்யவேண்டும் என்பதை சர்வவல்லமையுள்ளவரிடம் சொல்ல அவர் மேற்கொள்கிறார் – அவர் ஜெபம் செய்த கூட்டத்தில் எத்தனை பேர் மாற்றப்பட வேண்டும் என்பதையும், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு புறஜாதியினரும் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.