CD-EVILSPEAK-Q-14
லூக்கா 6:45 “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.”
R1922 (col.1P4) : –
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பொதுவாக, பேசப்படும் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் நம்முடைய இருதயத்தின் முன்னுரையாக இருக்கிறது என்று நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுகிறார். “நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுக்காது. அதுபோல கெட்ட மரம் என்றுமே நல்ல கனிகளை கொடுக்காது. ஒவ்வொரு மரமும் அதன் கனிகளினால் அறியப்படும்…” அதுபோல “நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.” மத் 12:35
R1938 (col.1p1)
நம்முடைய ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை நாம் மனதில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பயனற்ற வார்த்தைகளுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும். இக்காலத்து சபையின் நியாயத்தீர்ப்பின் நாட்களில் நம்முடைய வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறுவதை நாம் காணலாம். நம்முடைய எல்லா வார்த்தைகளும் இருதயத்தின் முன்னுரையாக தேவன் ஏற்றுக்கொள்கிறார். நம்முடைய வார்த்தைகள் கலகமூட்டுவதாகவும், மரியாதை இல்லாததும், இரக்கமற்றதாகவும், அவிசுவாசமுள்ளதாகவும், அசுத்தமாக இருந்தாலும் – “இருதயத்தின் நிறைவு வாய் பேசும்” என்ற கோட்பாட்டின் கீழ் நியாயந்தீர்க்கப்படுகிறது. ஆகவே நம்முடைய இருதயத்தின் நிலையை எடுத்துக்காட்டும். “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” எபி 4:13 என்று நம்முடைய ஆண்டவரின் வார்த்தை காலத்திற்கேற்ற எச்சரிப்பாக இருக்கிறது. “தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நீங்களோ பூமியில் இருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் வார்த்தை சுருக்கமாக இருப்பதாக” ஆகவே உங்கள் வார்த்தைகள் தேவனுக்கு முன்பாக நிற்கபோகிறதினாலே சிந்தித்ததாகவும், ஞானமுள்ளதாகவும் இருப்பதாக, தேவையற்ற புறங்கூறுதல், கோபம், வதந்திகளைப் பேசவேண்டாம்.