CD-KNOWLEDGE-Q-7
(சங்கீ 25:9,12,14) “சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார்.”
“கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார்.”
“கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்”.
(மத் 11:25) “அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.”
R 2624 (col.2 P3): –
இவைகள் அனைத்தும் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கும் பாலகர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. இந்த உலகத்தில் மனத்தாழ்மையுடையவர்கள், தேவனால் கற்பிக்கப்படுவதற்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். ஆனால், உலக அறிவில் தேறினவர்கள், ஆண்டவருக்கு போதிக்க துணிகிறார்கள். இப்படிபட்ட மிகுந்த ஆசிர்வாதங்களை பெற்ற நாம் இனி வருங்காலங்களிலும் குழந்தைகளைப் போல மனநிலையை தக்கவைத்து கொள்வதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எளிமையான சிந்தையில் நிலை நின்று ஆண்டவரினால் இன்னும் அதிகமான சத்தியங்களை தொடர்ந்து கற்றுக்கொள்ள தகுதி பெற்று, தேவன் இலவசமாக கொடுக்கக்கூடியவைகளை பயன்படுத்திக் கொண்டவர்களாக மகிழ்ந்து களிகூறுவோம். இப்படியாக நம்முடைய வெளிச்சம் சுற்றிலும் பிரகாசிக்கக்கடவது. பெரும்பாலான படித்த மேதைகளுக்குத் தேவனுடைய தெய்வீக திட்டம் மறைக்கப்பட்டது. அவர்களின் ஞானத்தில் தொடர்ந்து ஓட பிதாவும் அனுமத்திருக்கிறார். “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாய் இருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்” (1 கொரி 3:19) கிறிஸ்துவின் முதல் வருகையில் பிதாவாகிய தேவன் நியாயப்பிரமாணத்தின் சட்டவல்லுனர்களையும், பரிசேயர்களையும் அவரிடம் அனுப்பாமல், உண்மையான கபடற்ற உத்தம இஸ்ரவேலர்களிடம் அவரை அனுப்பினார். ஆனால் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள். இந்த யுகத்திலும் இப்படிப்பட்டவர்களே மேலான அசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு வருகின்றார்கள்.
R 3103 (col.1 P5 through col.2 P2)
தேவனோடு இசைந்து மிக ஆர்வத்தோடு தங்களை வளர்ச்சிக்குள் உட்படுத்துபவர்களுக்கு மட்டுமே தேவனுடைய நோக்கங்களைப் பற்றிய அறிவு கொடுக்கப்படுகிறது. ஏனெனில் வளர்ச்சிக்குரிய எந்த செயலிலும் ஈடுபடாமலும் நூதன பிரியத்தோடு இருப்பவர்களுக்கு தேவன் அவருடைய திட்டங்களை வெளிப்ப்படுத்துவதில்லை. இருளுக்குள் இருப்பவைகளைப் புரிந்து கொள்வதற்கு முன் வெளியே காணப்படும் சத்தியங்களை முதலில் விசுவாசிக்க வேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும். அதற்குப்பின் தேவனோடு இசைந்து செயல்படுவதற்கும், தேவன் வைத்திருக்கும் அவருடைய தெய்வீக திட்டத்தை அறிந்து கொள்ள உற்சாகத் தோடும் முயற்சிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், நம்முடைய இரட்சகரினால் வாக்களித்த ஜீவனுக்காக, உள்ளம் நிறைந்த நன்றிகளை ஏறெடுக்க வேண்டும். “ஆண்டவரே நான் என்ன செய்ய நீர் சித்தமாக இருக்கிறீர்?” என்ற உண்மையான கேள்வி எப்பொழுதும் உங்கள் இருதயத்திலிருந்து எழும்பிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே தேவனுடைய அறிவை முழுமையாக அறிந்துகொள்வதற்குத் தகுதிப்படுகிறார்கள். இவர்கள் மட்டுமே தேவனுடைய திட்டங்களையும் இருளுக்குள் இருக்கும் சகல ஆழமான தேவனுடைய சிந்தனைகளையும் புரிந்துகொள்ள முடியும். இவர்கள் தெய்வீக நோக்கத்திற்காக அழைக்கப்பட்டவர்கள், அதில் படிப்பிக்கப்பட்டு சத்தியத்திற்கு ஊழியம் செய்ய அழிக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட நீதிமான்களுக்கு வெளிச்சம் (சத்தியம்) விதைக்கப்படுகிறது. “உம்முடைய சித்தத்தை செய்ய இதோ வருகிறேன்” (எபி 10:7) என்று சொல்லும் நேரத்தில் நம்முடைய ஆண்டவரும் இதே மன நிலையை பெற்றிருந்தார். அவர் சாந்தமும் மனத்தாழ்மையும், மேலும் தேவனுடைய சித்தம் செய்ய இருதயத்தில் முழுமையான கீழ்ப்படிதலை கொண்டிருந்தார். இதே போல மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும், நல்ல விசேஷங்களை பிரசங்கிக்க அவர் அனுப்பப்பட்டார். (ஏசா 61:1) “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையயும், கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்த்தலையும் கூறவும்”
“சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப்போதிக்கிறார்” (சங் 25:9). எந்த மனுஷனும் இப்படிப்பட்ட தகுதி பெற்றவராக நிருபிக்கப்பட்டால் – அதாவது சத்தியத்தில் பழக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் பெற்ற சிறப்புரிமைகளுக்காக – மகிழ்ந்து களிக்குரகடவர்கள் – அவர்கள் தொடர்ந்து, ஜீவனை பெற்றுக்கொள்ள தங்களை எப்போதும் தகுதியுள்ளவர்கள் என்று தங்களுடைய கிரியைகளினால் வெளிப்படுத்தக்கடவர்கள். – சங் 19:13
இந்த ஒரு தகுதி துவக்கத்தில் இருந்தால் மட்டும் போதாது, வெளிச்சத்தின் பாதையில் தொடர்ந்து நடக்க இந்தத் தகுதி மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இப்படியாக இந்தப் பாதையில் நாம் பயணிக்கும் போது, சில நேரங்களில் வெவ்வேறு சோதனை நாம் சந்திக்கும் போது, அதில் நாம் வெற்றி அடையாமல் தோல்வி அடைந்தால், தொடர்ந்து அந்த பாதையில் நடக்க நாம் தகுதியை இழந்துவிடுவோம். நமக்குள் இருக்கும் வெளிச்சம் மங்கிவிட்டது என்று, மிக கவனத்தோடு விழித்திருந்து அதை கண்டுபிடித்தால் மட்டுமே நமக்குள் இருக்கும் அவிசுவாசம் நீங்கிவிடும். வெளிச்சத்தையே வெளியேற்றிவிடும் அளவுக்கு, இந்த இருள் எவ்வளவு கடுமையாக இருக்கிறது! (மத் 6:23) நம்முடைய இருதயத்தை ஊக்குவித்த மகிமையான நம்பிக்கை, நம்மை விட்டு நழுவினால், சத்தியத்தினால் நமக்குள் கட்டப்பட்ட விசுவாசம், ஒரு பழமையான பாடல் போலவும், கதையைப் போலவும் இருக்கும். நாம் தப்பித்துக்கொள்ள செய்யும் முயற்சிகள், அனைத்தும், சத்தியத்திற்காக நாம் செய்யும் காரியங்கள் என்று தோன்றும் அளவுக்கு, சாத்தான் இக்காலத்து சத்தியங்களை தள்ளிவிட்டு, கடந்த காலத்தின் மிச்சமுள்ள சத்தியங்களை நமக்கு முன் அருமையாக காட்டி, நாம் இருளுக்குள் செல்வதை உணராதபடிக்கு அவன் நம்மை வழி நடத்துவான். தேவ வழி நடத்துதல் இல்லாததினால், நாம் இதை உணராதிருப்போம். ஒருவன் அந்த இருளுக்கு நழுவி பின்னிட்டு சாயும்போது அவனுக்குள் நுழைந்த இருள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
R 22 through R 2209 (col.1 P4) “தெய்வீக இரகசியங்களின் வெளிப்பாடு” (first half of article) – Reproduced at the end of theis section, p. 108: