CD-LOVE-Q-6
R2032[col.1 P7]: –
பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு மூன்று விதமாக உள்ளது. (1) தேவன் மீது உச்சநிலையான அன்பு செலுத்தவேண்டும் மற்றும் துன்பப்படுவதற்கு ஏதுவானாலும், அவருக்காக மகிழ்ச்சியூட்டும் பற்றுறுதிக் கொண்டிருக்க வேண்டும். (2) சகோதர அன்பு – சுயநலமற்ற, மேன்மையான, சுத்தமான அவர்களின் நலனை விரும்பி. எப்போதும் நன்மைச் செய்ய விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். (3) இந்த உலகத்தின் மேல் அன்பு. அனுதாபத்தை பாராட்டுவதற்கு, வாய்ப்புகள் கிடைக்கும்போது நல்ல கிரியைகளுக்கு தூண்டப்படவேண்டும் மற்றும் எல்லா மனுஷரோடும் எப்போதும் சமாதானமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதினாலேயே, பொறுமை. சாந்தம் ஆகியவற்றில் வளர்ச்சி சுட்டிக்காட்டப்படும்.
மன்னா, ஜூன் 27 “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்” (2 கொரிந்தியர் 1:21,22) கிறிஸ்துவின் ஆவியே, புதிய சிருஷ்டியின் அடையாளம் அல்லது முத்திரையாகும்.