CD-EVILSPEAK-Q-17
R2734 [col.1 p5] through R2735 [col.1 p1]
“உங்கள் இருதயங்களை சுத்திகரியுங்கள்” என்ற செய்தியை நாம் பாவிகளுக்கு அறிவிக்கிறோமா? இல்லையே, பாவிகள் தங்களுடைய இருதயங்களை சுத்திகரிப்பதற்கு சுவிசேஷம் அழைக்கவில்லையே. ஏனெனில் பாவிகளுடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்படுவது இயலாத காரியம். தேவனோடு நல்லுறவு கொண்டு, பரிசுத்தமான அவருடைய சித்தத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய நோக்கமுடையவர்களே தேவனுடைய பார்வையில் பரிசுத்தவான்கள் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக பாவிகள் மனந்திரும்பும்படியாக அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் இருதயம் கலகத்தினாலும், அசுத்தத்தினாலும், தீமையினாலும் நிறைந்திருக்கிறது. ஒரு பாவி பாவத்திற்காய் வருந்தினபின்பு தேவனோடும் அவருடைய நீதியோடும் இசைந்திருக்க விரும்பினால், தன்னுடைய பாவத்திற்கு ஏற்ற பலியை பெற்றுக் கொண்டு தேவனோடு ஒப்புரவாகுவதற்கு மிகப் பெரிய இரட்சகரிடத்திற்கு அவர் வரவேண்டும். ஒரு பாவி இந்த ஒரு படியை கடந்து, தன்னால் முடிந்தவரைக்கும் சீர்பொருந்தப்பட்டு, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவர் கொடுக்கும் மன்னிப்பை பெற்று நீதியின் பாதையில் நடக்க முயற்சித்தால் அவர் நீதிமானாக்கப்படுகிறார். “கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதல்” என்ற வசனத்திற்கு அவர் உட்படுவதினால், எல்லா காரியங்களிலும் அவர் விடுதலைப் பெற்று தேவனோடு நல்லுறவு கொண்டு, தேவனுடைய மன்னிக்கக்கூடிய அன்பினால் வரும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒருவர் இவைகளை செய்து முடித்து விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட நிலையை அடைந்தபின் அந்தப் பாவி, தேவனுடைய பார்வையில் இனி ஒருபோதும் பாவியாக எண்ணப்படுவதில்லை. ஆகையால், தேவனோடு தொடர்பு கொள்ளும்போது “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக்குறித்து,” (ரோம 3:25) என்ற வசனத்தின்படி அவருடைய இருதயம் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்கிறது. இப்படிச் சீர்திருத்தப்பட்டவரை பற்றி, ஒரு புதிய கேள்வி எழும்புகிறதே, மேலும் சாத்தானின் சோதனைகள் நமக்கு எதிர்கொண்டு நிற்கிறதே. அந்த நீதிமான், தொடர்ந்து நீதியின் பாதையில் நடக்க துவங்குகையில், மாம்சம், உலகம், பிசாசால் சோதிக்கப்பட்டு அகப்படுகிறார். அவர் என்ன செய்யவேண்டும்? அப்பொழுது அவர் தன்னுடைய இருதயத்தை தேடினால் தன்னைத்தான் வழி நடத்திக் கொள்வதற்கு அவர் திராணி இல்லாதவரும், அவர் பெற்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள இயலாதவருமாய் இருக்கிறார். அவர் சரியான பாதையில் செல்வதற்கு, மிகப்பெரிய இரட்சிப்பான இரண்டாவது படியில் அவர் கிடக்க வேண்டியதாய் இருக்கும். மற்றொரு வார்த்தையில் சொல்லப்போனால் மற்றொரு தெய்வீக கிருபையை ஏற்றுக்கொள்ளவேண்டும் – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” (ரோம 12:1) என்று நம்முடைய ஆண்டவர் அப்போஸ்தலர் மூலம் சொல்லிய வார்த்தைகளுக்கு அவர் செவி கொடுக்க வேண்டும்.
நீதிமானாக்கப்பட்டவர் சரியான முறையில் சரியாக போதிக்கப்பட்டிருந்தால், தன்னுடைய சுய பலத்தில் கிறிஸ்துவுக்குள் நிற்பது கூடாத காரியம் என்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்வார். மேலும் இந்த நீதிமானாக்கப்பட்ட நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு தேவனால் மட்டுமே கூடும் என்பதை அறிந்து கொள்வார். முதலில் தேவனோடு ஐக்கியப்படும் போது என்னுடைய விருப்பத்தின்படி, தேவனுடைய சித்தத்தின்படி செய்வேன் என்று சொல்லலாம். ஆனால் இது நம்முடைய ஆண்டவருக்கு திருப்தியளிக்காது, என்பதை சரியான போதனையைப் பெற்றபின் அவர் கண்டறிவார். தேவனுடைய சித்தத்தை, தேவன் விரும்பியபடி செய்தால் மட்டுமே, தேவன் அவரை பொறுப்பெடுத்துக் கொள்வாரென்றும், அவர் செய்யக்கூடிய காரியங்கள் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படும் என்பதையும் உணர்ந்துக் கொள்வார். இப்படிப்பட்டவர்களுக்கு, முழுமையாக தங்களுடைய விருப்பத்தை, தேவனுடைய சித்தத்திற்கு அர்ப்பணித்து தங்களுடைய முழு இருதயத்தில் அதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு, நித்தியமான கன மகிமையை வாக்களிக்கிறார்.
ஒரு பாவி இத்தனை நிலைகளை கடந்தபின் ஆண்டவரிடத்தில் தன்னுடைய இருதயத்தை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியும். அன்பின் பிரமாணத்தின் கீழ் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களைப் பற்றி மட்டுமே, நம்முடைய பாடம் விவரிக்கிறது. ஆனால் இருதயத்தின் சுத்திகரிப்பும், நோக்கங்களும், இலக்குகளும், சித்தங்களும், ஆண்டவரின் கற்பனைகளை நிறைவேற்றுவதற்கு பாத்திரமாய் இல்லாவிடில் அவர் ஒரு யுத்தக்களத்தில் போராட வேண்டியதாயிருக்கும். இருதயத்தில் ஆழமாய் வேரூன்றி வளர்ந்திருக்கும் சுய நலம் தேவனுடைய அன்பின் புதிய பிரமாணத்திற்கு எதிராய் செயல்படும். ஆகையால் ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பாக இந்தக் கற்பனையை முழுமையாக நாம் கடைபிடிக்க முடியாமல் போனாலும் நம்முடைய இந்தப் பாடத்தில் தெய்வீக அன்பின் பிரமாணத்தின் பொருளை நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை அப்போஸ்தலர் ஆலோசனை கூறுகிறார். ஆயினும் இந்தக் கற்பனையை முழுமையாக கடைபிடிக்க முடியாமல், இந்தக் கற்பனையை கடைபிடிப்பதற்கு, சுத்த இருதயம், நல்ல நோக்கங்களும் குறையாமல் இருக்க வேண்டும். மாம்சத்தின் பலவீனம், சாத்தானின் வஞ்சகம் மற்றும் சோதனைகள் வரும்போது நாம் தோல்வியடையும், ஒவ்வொரு நேரமும் நம்முடைய பரிசுத்தமான இருதயங்கள் அல்லது சித்தங்கள் அவைகளை தடுக்கவில்லையென்பது உறுதியாகிறது.
இவ்விடத்தில் ஆண்டவரின் வாக்குறுதிகள் நமக்கு உதவுகிறது. ஏனெனில், நம்முடைய பலவீனங்களும் அபூரண நிலையையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். அன்பின் ஆவிக்கு எதிராக செயல்படக்கூடிய சாத்தானின் வலைகளையும், உலகத்தின் ஆவியும், அபூரண நிலையின் காரியங்கள் எவ்வளவு வல்லமை உள்ளது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் தவறு செய்யும் போதெல்லாம் கிருபாசனத்தண்டைக்கு இலவசமாய் சென்று அவருடைய இரக்கங்களை இலவசமாய் பெற்று இந்தக் காரியங்களை மேற்கொள்வதற்கு நம்முடைய ஆண்டவர் நமக்கு வழிவகுத்து வைத்துள்ளார். ஆகவே பரிசுத்தமான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவைப்பட்ட ஒவ்வொரு நேரங்களிலும் தேவையான கிருபைகளை உதவியாகப் பெறலாம். நம்முடைய மகா பெரிய பிரதான ஆசாரியர் வழியாக கிடைக்கப்பெற்ற இந்த வாய்ப்புகளையும் கிருபைகளையும் அன்றாடம் பயன்படுத்தினால் பாவங்களுக்கு எதிரான நல்லப் போராட்டத்தில் சிறப்பாக வெற்றி அடைய முடியும். அப்பொழுது நம்முடைய மாம்சத்தின் வழியாக நம்முடைய இருதயத்திற்குள் சென்றிருக்கும் தேவையற்ற சகல காரியங்களையும், வெளியேற்றிவிடலாம். இப்படிச் செய்வதின் வழியாக மட்டுமே கிறிஸ்தவர்கள் தங்களுடைய இருதயத்தை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு நல்ல போராட்டத்தை போராடி, இந்த உலகத்தையும் அதன் ஆவியையும், வெற்றிகரமாய் ஜெயிப்பார்கள். இந்த அன்பின் பிரமாணத்தை பொறுத்த வரையில் நம்முடைய மாம்சத்தின் சிந்தனையும், மாம்சமும் பல வழிகளில் நம்மை ஏமாற்றுவதற்கு எத்தனிக்கும். மாம்சத்தின் சிந்தை புது சிந்தையோடு இணைந்து செயல்பட வகைத்தேடி சில விதிமுறைகளுக்குட்பட்டு அன்பின் பிரமாணத்தை வாழ்க்கையின் பிரமாணமாக ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படும். மாம்சத்தின் சிந்தை வார்த்தைகளினாலும் தொழில் ரீதியாகவும், தெய்வீக வடிவத்திலும் அன்பை எதிர்பார்க்கும். இப்படிப்பட்ட அன்பு சுயநலமான இருதயங்களிலிருந்து புறப்பட்டு தங்களையும், மற்றவர்களையும் ஏமாற்ற முயற்சிக்கும். அவர்கள் உதடுகளில் புன்னகையும், வார்த்தைகளில் புகழ்ச்சியும் அன்பும், கனிவும் காணப்படும். ஆனால் இருதயத்திலோ, சுயநலமான உணர்வுகளும், கசப்புகளும் பகைகளும் மறைந்திருக்கும். சாதகமான சூழ் நிலைகளில் இருதயத்தில் மறைந்திருக்கும் இந்தத தீய குணங்கள் அவதூறான பேச்சுக்களாகவும், வதந்திகளாகவும், பின்னாக பேசுவதும், புறணியாகவும் வெளிப்படும். அல்லது இப்படிப்பட்ட காரியங்கள் தொடர்ந்து இருதயத்தில் நிலைத்திருந்தால், சாதகமான சூழ்நிலைகளில் சுத்தமான இருதயத்தில் காணப்படும் புதிய உடன்படிக்கையின் அன்பின் பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரிடையான மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான கோபத்தையும் பகையையும் வாக்குவாதத்தையும், துன்மார்க்கமான கிரியையும் வெளிப்படுத்தும்.
ஆகவே நமக்காக செய்யப்படும் சகலவிதமான தெய்வீக காரியங்களும், நமக்காக கொடுக்கப்பட்ட சகல தெய்வீக வாக்குத்தத்தங்களின் முக்கியத்துவங்களும் இறுதியில் நமக்குள் தெய்வீக குணமாகிய அன்பை வளர்ப்பதே மையக்கருத்தாக இருக்கிறது. இந்தத் தெளிவான உண்மையை நம்முடைய சிந்தைக்கு முன்பாக எப்போதும் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், தேவன் அன்பாகவே இருக்கிறார். இப்படிப்பட்ட அன்பு நமக்குள் வளர்ச்சியடைய தேவனுடைய அன்பின் பிரமாணத்துக்கு இசைவாகவும் சாத்தானின் சுயநலமான பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரான பரிசுத்தமான இருதயம் மிகவும் அவசியமாயிருக்கிறது. மேலும் இதற்கு நல் மனசாட்சியும் தேவைப்படுகிறது. ஏனெனில் மனசாட்சியும் தீய காரியங்களை வலியுறுத்தும். விழுந்துபோன சுபாவத்தில் மனசாட்சியும் விழுந்துபோன நிலையில் உள்ளது. ஆகவே மனசாட்சியில் சரியான நேரத்தை காண்பிப்பதற்கு முதலில் மனசாட்சியை சீர்ப்படுத்த வேண்டும். நேரம் காட்டும் கடிகாரத்தை ஒருவர் சாவி கொடுத்து இயக்குவதுபோல நம்முடைய மனசாட்சியை தினமும் சத்தியத்தின் காரியங்களை செயல்படுத்துவதற்கு நித்தமும் நாம் அதற்கு நீதியின் வரிசையை காண்பிக்கவேண்டும். அப்பொழுது நாம் தவறு செய்யும் பொழுது அதை தவறு என்றும் சரியான காரியங்களை செய்யும் போது சரி என்றும் நமக்கு அறிவுறுத்தும். இந்த மனசாட்சி நீதியாக செயல்படுவதற்கும் இதனுடைய ஸ்பிரிங்கை (Spring) புதிய சிந்தையுடனும், பரிசுத்தமான சித்தத்துடனும் இணைக்க வேண்டும். அப்பொழுது அந்த மனசாட்சி தேவனுடைய அன்பின் பிரமாணத்திற்கு முழு இசைவோடு செயல்படும்.