“தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-38

“தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

What additional thoughts are found in the index of Heavenly Manna under “Evil”?

39. தீமையான வதந்திகளை ஓரளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் மேற்கொள்வதற்கு எப்படிப்பட்ட விசேஷித்த அனுபவங்களும், பழக்கங்களும் உங்களுக்கு உதவியாக இருந்தது?

What special experiences and practices have helped you to overcome evil surmisings to some extent?

40. புதிய சிருஷ்டியின் எதிராளி வல்லமையுள்ளவனும், தந்திரம் உள்ளவன் என்பதை உணர்ந்து நம்முடைய அன்றாட ஜெபங்கள், எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
As we realize how insidious this foe of the “new creature,” what should be our daily prayer?

சங் 119:12-14 “கர்த்தாவே, நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவது போல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.”

சில கேள்விகளுக்குண்டான நீண்ட குறிப்புகள் தொடருகிறது

R2443 [col.2 p3] through R2444 [col.2 p2] (5# வது கேள்வியை பார்க்கவும்)

வெகு காலத்திற்கு முன்பு தீய பழக்கங்களை விரட்டிய பின்பும், பாவமென்று தெளிவாக அனைவரால் புரிந்துக் கொள்ளப்பட்ட பின்னும், சகோதரர் மத்தியில் இது பிரபலம் இல்லாத போதிலும் விழுந்து போன மனித நிலை அநேக உபாயதந்திரங்களை குறிப்பாக பயன்படுத்தி, மனசாட்சியின் குரலை அடக்க முயற்சித்து, தீமையான வழிகளை பயன்படுத்துவதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது.

1. “நான் ஒருவருக்கும் தீங்கு செய்வதில்லை, ஆனால் என் நண்பர்களோடும், அயலகத்தாரோடும் அமர்ந்து சிறிது நேரம் பேசுவது போல சுவாரஸ்யமான காரியம் ஒன்றும் இல்லை. இதை தவிர வேறு பொழுது போக்கு எனக்கொன்றுமில்லை.” என்று நம்முடைய மனசாட்சி கூறலாம். ஆயினும் வெளிச்சத்தின் பிள்ளைகள் இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு நிச்சயமாக கணக்கு ஒப்பிக்க வேண்டும் அல்லவா? “உங்கள் சம்பாஷனை பரிசுத்தவான்களுக்கு ஏற்றவிதமாக இருக்கக்கடவது” என்று வசனங்கள் நமக்கு கற்பிக்கிறதே”

“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (பிலிப் 1:27, கொலோ 4:6, எபே 4:29) என்ற கட்டளைகளை வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட அவதூறு பேசும் நபர்கள் தங்களுடைய வார்த்தைகளையும், செயல்களையும் சுத்திகரித்த போதிலும், வெகு தூரத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கையில், மீதியுள்ள அந்தக் காரியங்களை சொல்லுவதற்கு மிகத் துரிதமாய்ச் சென்று விடுவார்கள். சரியோ தவறோ அல்லது அவர்களுக்கு தேவையான செய்தியோ தேவையில்லாத செய்தியோ, அவர்கள் இருதயத்தில் உள்ள எண்ணங்கள் அதிகதிகமாக தூண்டப்பட்டும் காட்டை கொளுத்திவிடும் நெருப்பாக அவர்களின் நாவு துரிதமாக செயல்படுகிறது. இது போல் மற்ற பலவீனங்களிலும் தேவனுடைய ஜனங்கள் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். விழுந்து போன நிலை இப்படிப்பட்ட காரியங்களில் மிகவும் மகிழ்ந்து, விருந்துண்கிறது. தாங்கள் செய்வது மிகச் சரியான காரியம் என்றும் பாவத்திற்கு எளிதாக போதித்து விட்டார்கள் என்று எண்ணியும் தங்களை நீதிமான்களாககாட்டிக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியிலும், அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். ஐயோ பாவம், விழுந்து போன மனிதனின் கிரியைகள் தேவனுடைய நீதிக்கு முன்பாக நிற்க முடியாமல் போய்விடுகிறது.

இதைக் குறிப்பாக கடைப் பிடிப்பதற்கு கிறிஸ்தவ சம்பாஷனைகளில், வெட்டிப் பேச்சுகளையும், குறை பேசுதலையும், முற்றிலும் அகற்றி விடுவது நலமாயிருக்கும். “அவதூறான பேச்சுக்களையும், தூஷணங்களும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது.” என்ற நம்முடைய அப்போஸ்தலரின் கட்டளைகளை கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்தவர்களின் மத்தியில் எல்லாக் காரியங்களையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்படுவதில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் உண்டான தேவனுடைய கிருபையின் ஐசுவரியங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள விலையேறப்பெற்ற வாக்குறுதிகளை மட்டுமே பேசுவதற்கு அனுமதி பெற்றிருக்கிறோம். மேலும், இவைகளை பேசும் போது கேட்போருக்கு மட்டும் அல்ல பேசக்கூடியவர்களும் உண்மையாக கிருபை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பாஷனைகள் அங்கு கூடியுள்ள அனைவர் மேலும் ஆசீர்வாதங்களைப் பொழியும். அழிந்துக் கொண்டிருக்கும் பழைய மனுஷனின் கிரியைகளை புறம்பாக்கும். மேல் சொல்லப்பட்ட காரியங்களை அப்போஸ்தலர் மனதில் வைத்து – “அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார். மேலும் அன்பின் ஆவி தேவனுடைய ஆவி, சத்தியத்தின் ஆவி நிரம்பி வழியக்கூடிய இருதயங்களின் வாயிலாக எந்தத் தீமையான காரியங்களும், மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளும் வெளிவராது. ஒரு வேளை தீமையான காரியங்கள் வந்தால் இருதயம் பரிசுத்தமாக காத்துக் கொள்ளவில்லையென்பது உறுதிப்படுகிறது. “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” மத் 5:8, 1 பேது 2:9, மத் 12:14)

2. 27வது கேள்வியின் பதிலை காண்க

3. இப்படிப்பட்ட கேள்விகளை நல்ல கிறிஸ்துவ ஜனங்கள் வேறுவிதங்களில் தவிர்த்து விட்டு, தாங்கள் சத்தியத்தின்படி நடப்பதாக எண்ணி, மனிதனின் பொதுவான தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால் வழக்கமாக பேசும் அவதூறான காரியங்களையும், உண்மையில்லாத காரியங்களும் தங்களை நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தும் என்று அறியாமல் பேசக்கூடிய காரியங்கள் மெய்யா, பொய்யா என்பதையும் அறியாமல் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட தவறான பேச்சை பேசி முடித்தபின், அவைகள் தவறாய் இருக்கும் பட்சத்தில் தேவனுக்கு முன்பாக அவர்களை பொய் சாட்சிகளாக நிறுத்திவிடும். அந்தத் தவறை கட்டாயமாக சரிசெய்ய வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் வந்தாலும், மாம்ச சிந்தைக்குள் வளர்ந்திருக்கும் பெருமை, சத்தியத்தை விசுவாசிப்பதற்கு மறுத்து, தங்களை திருத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை தவிர்க்கும். இப்படியாக ஒரு பாவம் மற்றொன்றுக்கு வழி வகுக்கும். இப்படிப்பட்டவர்கள், “உண்மையை தவிர நான் எதையும் பேசுவதில்லை. என் கண்களினால் கண்டு, தனிப்பட்ட முறையில் அது உண்மை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் மட்டுமே நான் பேசுவேன். உண்மை என்று நிரூபிக்கப்படாத காரியம் எதுவானாலும் சரி – நான் மிக ஜாக்கிரதையுடன் இவைகள் எனக்கு சொல்லப்பட்டது என்று சொல்லி முடித்துவிடுவேன். இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கு நான் உறுதியளிக்க மாட்டேன். இப்படியாக நாம் யாரைக் குறித்தும் தீமையான காரியங்களை பேசுவதில்லை” என்று சிலர் கூறலாம். இப்படிப்பட்ட துன்மார்க்கமான காரியங்கள் மனசாட்சிக்குபின் ஒழிந்துக் கொண்டு உண்மையைப் பேசுவது மட்டுமே மிகச் சரியானது என்று கூறிக்கொண்டு இருக்கிறது. ஏனெனில், உண்மை பேசுவது மட்டுமே, மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான தீய பேச்சுக்கள் என்று சொல்லப்படுகிறதே.

இது மிகப் பெரிய தவறாகும். தீமையான பேச்சுக்கள் உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி அது தீமையான பேச்சு தான். தேவனுடைய சட்டத்தில் மட்டுமல்ல நாகரீகமுள்ள எந்த மனுஷனின் சட்டத்திலும் இது நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையில் மனித சட்டத்தில் ஒருவருடைய தீமையான காரியங்களை பேசினதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால், உண்மையாக நடந்த சம்பவமாக இருந்தாலும், அதைக் குறித்து பேசினதற்காக அவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். ஏனெனில் அவரின் வார்த்தையினால் காயப்பட்டு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இந்த உலக பிரகாரமான நீதிமன்றங்கள் நியாயம் செய்ய விரும்புகிறதே, ஆகவே உண்மையானாலும் சரி பொய்யானாலும் சரி, ஒருவரை காயப்படுத்தக் கூடிய நோக்கத்துடன் எந்தக் காரியங்களையும் நிச்சயமாக பேசக்கூடாது. மற்றவர்களை துன்புறுத்தக்கூடாது என்ற விஷயத்தில் தேவனுடைய சட்டமும் மனுஷருடைய சட்டமும் ஒன்றுக்கொன்று இசைவாக காணப்படுகிறது.

மற்றொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் முதல் தவறை இரண்டாவது தவறு நியாயப்படுத்தாது என்ற பிரமாணத்தை, மனித நேயமும் தெய்வீக கற்பனையும் ஒத்துக்கொள்ளுகிறது. ஒரு தவறு நடந்துவிட்டால், தவறு செய்பவர்களை தண்டிக்க நீதி மன்றங்கள் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீமைக்கான தண்டனையை – ஆயுதங்களை பயன்படுத்தியோ, தங்கள் நாவினால் தீமையான முறையில் புறங்கூறியோ, அவரின் குணலட்சணங்களை கசப்பான வார்த்தைகளை பேசுவதினாலோ தங்களது சொந்த கரங்களினாலோ, கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று மனித சட்டம் கூறுகிறது. உண்மையில் இப்படிப்பட்ட அநேகர் குற்றம் சாட்டப்படுவதில்லை, ஆயினும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட மானநஷ்ட வழக்குகள் நீதி மன்றங்களில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

R2517 [col.1P6 to end of article] (11ம் கேள்வியை காண்க)

சிந்தனைகளில் அசுத்தம் இருப்பதாக் காணப்பட்டால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நன்மையை காட்டிலும் தீமையும், சுயநலமும், மன்னிக்க இயலாத மனநிலைகளும், பகையும், பொறாமையுள்ளவர்கள் தங்களை புகழக்கூடியவர்களை மட்டும் நேசிப்பவர்களை குறித்து ஏதாகிலும் நம்பிக்கைகள் உண்டா? இப்படிப்பட்டவர்களை தேவன் முற்றிலுமாக நிராகரித்து விடுவார் அல்லவா?

தேவன் மிகுந்த இரக்கமுள்ளவர், நாம் அனைவரும் துரோகிகளும் பாவிகளுமாய் இருக்கையில் நமக்கான ஈடுபலியை கொடுத்தாரே. ஆகவே இப்படிப்பட்ட மன நிலையை பெற்றவர்களும் தாங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக பரிசுத்தப்படுவார்கள்.” என்னுடைய அழுக்கான பாவங்களை அவருடைய இரத்தம் சுத்திகரிக்கும்.”

ஆனால் மனம்வருந்தி சீர்பொருந்த வேண்டும் என்பதே உண்மையான குற்றமுணர்ந்த நிலையாகும். குணமடைவதற்கு நம்முடைய பரம வைத்தியரின் உதவிகளை நாட வேண்டும். ஏனெனில் அவர் மட்டுமே சகல நோய்களையும் குணமாக்குகிறவர் என்று எழுதியிருக்கிறது. அவரால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒவ்வொருவரும் – “அவருடைய பணியை செய்வதற்கு நாங்கள் அபாத்திரர்” என்று கூறுவதைக் காணலாம். உண்மையில் ஒருதரம் சுத்திகரிக்கப்பட்டும் மீண்டும் பாவத்திற்குள் பிரவேசிப்பது மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும். ஆயினும் இவர்களைக் குறித்து இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. பரம வைத்தியரின் மருந்துகளை அன்றாடம் உட்கொள்வதின் நிமித்தம் மீண்டும் சுத்திகரிக்கப்படலாம். ஆனால் மனசாட்சியே மனித சுபாவத்தில் இருக்கிறது. தித்திப்பை கசப்பென்றும், பகையையும் தீமையையும் நீதியென்றும் நியாயத்தீர்ப்பை திசைதிருப்பும் அளவுக்கு அது கடினப்பட்டு இருப்பதினால் பாவத்தின் காரியங்களை பரிசுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் அவர்களை சுத்திகரிப்பது நம்பிக்கையற்றதாகிவிடுகிறது.

நம்முடைய பரம வைத்தியர் இப்படிப்பட்ட விஷம் நிறைந்த இருதயங்களுக்கேற்ற தடுப்பு மருந்தினை குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட மருந்துகளை சரியான முறையில் உட்கொள்வதின் மூலம் கடினமான இருதயங்கள் இலகுவாக்கப்படும். குரோதமும் பகையும் உருவாக்குவதற்கு பதிலாக அன்பு நிறைந்த வழியும், சண்டைகளும் சச்சரவுகளும், எதிர்பேச்சுகளும் தீமையான பேச்சுக்களும், பின்னாக பேசுவதும், புறங்கூறுதலும், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அன்பையும் அதற்கேற்ற வார்த்தைகளையும் பிறப்பிக்கும். ஒருவரை குறித்தும் தீங்கு நினையாது, எந்த அயலானை குறித்தும் அவதூறு கூறாமலும், நீடிய பொறுமையுடன் சகலத்தையும் சகித்து, தன்னுடைய புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய மகிமையைத் தேடும். இப்படிப்பட்ட ஆவியே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் அன்பின் பிரமாணமாகும். இந்த மருந்துகள் மிக மோசமாக வியாதிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவ ஜீவியத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நமக்கும் தேவைப்படுகிறது. கொடுக்கப்பட்ட மருந்துகள் சிலவற்றை காணலாம்.

“அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்.” 1 யோவா 3:3

நாம் தேவனுடைய புத்திரர்களாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை மேற்கூறப்பட்ட வசனத்தில் காண்பிக்கப்படுகிறது. அவரைப் போல் இருப்பவர்கள் அவர் மகிமையடைந்த நிலையில் தாங்களும் மகிமையடைந்து, அவரை காண்பார்கள் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய இருதயத்தின் சிந்தனைகள் இந்த ஒரே நம்பிக்கையில் விரிவடையும் பட்சத்தில் நாம் இதன் அகலத்தையும் நீளத்தையும் ஆழத்தையும் உயரத்தையும், அளவிடும் போது பரலோகப் பிதாவின் அன்பையும் நம்முடைய இரட்சகரின் அன்பையும் நாம் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. எனெனில் நாம் அவர்களை நேசிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் நம்மை அதிகதிகமாக நேசித்தார்கள். இப்படிப்பட்ட தெய்வீக அன்பின் முறையை நமக்கு மாதிரியையாக கொண்டு நாம் அதில் வளர்ந்தால் நிச்சயமாக நம்முடைய இருதயங்களில் சுத்திகரிக்கப்பட்டு பூரணமான அன்பையும், கிறிஸ்துவுக்குள்ளான சுயாதீனத்தையும் பெறுவோம். முற்காலத்தில் நமக்குள் இருந்த அர்த்தமில்லாத சுயநலத்தைக் கண்டு அதிகதிகமாய் வெட்கப்படுவோம். நம்முடைய மாம்சத்தின் பலவீனங்களாகிய கோபம், மூர்க்கம், பகை, வஞ்சனை, தீமையான பேச்சுக்கள், வதந்திகள், புறங்கூறுதல், வெட்டிப் பேச்சுக்கள் போன்றவைகளை உண்மையான வெளிச்சத்தில் காணும்போது நாம் மிகவும் வருத்தமடைவோம். மேலும் இறுதியாக இப்படிப்பட்ட தீமையான குணங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட தீமைகளையும் நம்முடைய ஆத்துமாக்களை நித்திய மரணத்துக்கு வழி நடத்தும். மாம்ச பலவீனங்களையும் விட்டு வேகமாக விரைந்தோடச் செய்யும். நம்முடைய இருதயங்கள் உடனடியாக சுத்திகரிக்கப்படும். நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் தேவனுக்கு முன் எப்போதும் பிரியமாக இருக்கும்.

2. “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” தீத்து 2:14

எப்படியாகவோ யார் மூலமாகவோ நாம் மீட்கப்பட்டோம் என்ற பாடத்தை தெளிவாக நாம் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் நாம் எதற்காக இரட்சிக்கப்பட்டோம் என்ற காரணத்தை நாம் சற்று மறந்துவிட்டால் நாம் அறிந்து கொண்ட அனைத்தும் வீணாகிவிடும். மரணத்தின் வல்லமையிலிருந்து மட்டுமே நம்மை மீட்காமல், “சகல துர்க்குணத்திலிருந்து நம்மை மீட்டார். ஒரு விசேஷித்த ஜாதியாக ஜனங்களைத் தேடாமல் விசேஷமாக சுத்திகரிக்கப்பட்ட தூய்மையானவர்களை அவர் தேடுகிறார். நம்முடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கும், துர்குணங்களிலிருந்து நாம் வெளிவருவதற்கு மிக ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்த மருந்து நிச்சயமாக நமக்கு உதவிசெய்யும்.

3. அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” 2தீமோ 2:22

நாம் சரியாக துவங்கினால் மட்டும் போதாது, சரியான வழியை தேர்வு செய்பவர்களாக இருக்கவேண்டும். அநீதியான காரியங்களை ஒருபோதும் நாம் பின்பற்ற மாட்டோம். எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டாலும் நீதியையும் நியாயத்தையும் பின்பற்ற வேண்டும். ஆனால் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகள் எழும்பலாம் – சிலர் நியாயமாக தீர்ப்பளிப்பதற்கு அறியாமல் இருக்கிறார்கள். தாங்கள் காணக்கூடியவைகளையும், கேட்கக்கூடிய அனுமானங்களை வைத்தும் அல்லது பரிசேயர் சதுசேயரின் தீர்ப்பை பெற்றுக்கொண்ட ஜனங்களை போலவும், நியாயந்தீர்க்க முடிவெடுக்கிறார்கள். ஆனால் ஆண்டவரின் வாழ்க்கையில் காணப்பட்ட நன் நடக்கைகளையும், அற்புதமான வார்த்தைகளையும் கவனித்திருந்தார்களானால் நீதியான பாதையில் வழி நடக்க முடிந்திருக்கும். ஏனெனில் இயேசு பாவத்திற்கு விலகினவரும், “பரிசுத்தரும் கபடற்றவரும், மாசற்றவருமாக” இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

“நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கற்பனையை எந்நாளும் நாம் பின்பற்ற வேண்டும். இந்தக் கற்பனையை தவிர்க்கும் பட்சத்தில் அந்த இரத்தப்பழியை தங்கள் தலையின் மேல் சுமந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கு பங்காளிகளாவார்கள். நம்முடைய ஆண்டவருக்கு நடந்தபடியே அவருடைய சகோதரருக்கும் நடத்தப்படும். ஆகவே, நம்முடைய இருதயங்கள் அதிகதிகமாக பரிசுத்தப்படும் போது, நமக்கு எதிராக பேசப்படும் தீயப் பேச்சுக்களுக்கும், புறங்கூறுதலுக்கும், நாம் பாதிக்கப்படமாட்டோம். இருதயத்தில் கசப்பான நஞ்சையுடையவர் இப்படிப்பட்ட பேச்சுக்களை மட்டுமே பேசுபவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்துவருவது உண்மை அதாவது விசுவாசம், நம்முடைய ஆண்டவர் தன்னுடைய விசுவாசத்தை குறித்து சொல்லி ஒரு சகோதரனைக் காட்டிலும் நெருங்கிய உறவான சிநேகிதர் என்று தம்முடைய சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட இரக்கத்தை இந்த உலகம் உண்மை என்று அங்கீகரித்துக்கொண்டு முதலிடம் கொடுக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையில் நீதி முதலிடத்தை பெறுவதை கவனியுங்கள் விசுவாசம், அன்பு சமாதானமும், நீதிக்கு இசைவாக செயலாற்றப்படும். ஆனால் அநீதி ஒரு சகோதரனுக்கு விரோதமாக நிருபிக்க இயலாது. அப்படிப்பட்டவரிடம் நம்முடைய அன்பு, பாசம், சமாதானத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். உண்மையில், அவருக்கு எதிராக “நியாயமில்லாமல்” பேசப்படும் வதந்திகள் புறங்கூறுதல் அனைத்தும் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மதிப்புள்ள ஆலோசனை நம்முடைய இருதயங்களை பரிசுத்தமாக காத்துக்கொண்டு சாத்தான் வெகு துரிதமாக விதைத்துக் கொண்டிருக்கும் விஷத்திலும், கசப்பிலிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளமுடியும்.

நியாயம், இருதயத்தின் தூய்மையாகும் – அநியாயத்திலிருந்து விடுதலை
நீதி, இருதயத்தின் தூய்மையாகும் – அநீதியிலிருந்து விடுதலை.
அன்பு இருதயத்தின் தூய்மை – சுயநலத்திலிருந்து விடுதலை

4. “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாரிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூருங்கள்.” 1 பேது 1:22

மற்ற மருந்துகளை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். இருதயம் சுத்திகரிக்கப்பட்டதன் முக்கிய காரணம் – சத்தியத்தை கேட்டதினால் மட்டும் அல்ல, அவைகளை விசுவாசித்ததினால் மட்டுமல்ல அவைகளுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலமே என்பதை வசனம் குறிப்பிடுகிறது. மேலோட்டமான அனைவரும் காணும்படியாகவும், பழக்க வழக்கத்தின் அடிப்படையிலான கீழ்ப்படிதல் அல்ல. ஆனால் சத்தியத்தின் ஆவிக்கு முழுமையாக கீழ்ப்படிதலின் வழியாகவே – இந்தக் காரியங்களே உண்மையாக சுத்திகரிப்பை ஏற்படுத்தும். இவை அனைத்துமே போலியானதாக அல்ல உண்மையும் உத்தமமான கிறிஸ்துவுக்குள்ளான “சகோதர” சிநேகத்தை நமக்குள் நிலைத்திருக்க செய்யும். துவக்கத்தில் அனைவரையும் நல்ல பண்புடன் நடத்தினோம். ஆனால் அநேகரை நமக்கு பிடிக்கவும் இல்லை. அவர்களை நாம் நேசிக்கவும் இல்லை, அவர்கள் ஏழைகளும், அழுக்கானவர்களும், விசித்திரமானவர்களும், அறியாமையிலும் இருந்திருக்கக்கூடும். ஆனால் சத்தியத்தின் ஆவிக்கு கீழ்ப்படியும்போது, விலையேறப் பெற்ற இரத்தத்தை விசுவாசித்து இரட்சகரிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களை புரிந்துகொள்ளும் பட்சத்தில் எந்த விதமான தடைகள் இருந்தாலும் அவர்களை நம்முடைய உண்மையான சகோதரர்களாக பாவிக்க வழிநடத்தும். உங்கள் ஆண்டவரின் ஆவி உங்கள் இருதயத்தில் பொங்கி வழிவதினால், சுய நலம், பெருமை, பகை, குரோதம் போன்ற காரியங்கள் காணாமல் போய்விட்டது. இந்தக் கட்டத்தை நீங்கள் எட்டினால், “நான் எல்லா சகோதரர்களையும் உண்மையாக நேசிக்கிறேன்” என்று தைரியமாகச் சொல்லலாம்.

நன்மையான பாதையில் இவ்வளவு தூரம் பிரயாணப்பட்டு வந்தபின், அடுத்து, நம்முடைய இருதயத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய காரியத்தை அப்போஸ்தலர் கூறுகிறார். “நீங்கள் ஒருவரை ஒருவர் பரிசுத்தமான இருதயத்தோடு அன்பு செய்கிறீர்களா என்று சோதித்து அறியுங்கள்” ஆம், நாம் பரிசுத்தமான இருதயத்தை பெற்றிருக்கிறோம் என்பதை என்றுமே மறந்துவிடக்கூடாது. ஏனெனில் இந்த நிலையிலிருந்து ஒரு அடி வெளியே வைக்கும் போது சாத்தானின் அன்பின் மாய வலையில் அகப்பட்டுவிடுவோம். உண்மையான் அன்பு குளிர்ச்சியாயிராது. அது அனல் உள்ளதாகவும் “சகோதரர்களுக்காக ஜீவனை இழக்கக் கூடிய அளவுக்கு அந்த அன்பு” உறுதியானதாயும் இருக்கிறது – 1 யோ 3:16

இப்படிப்பட்ட அன்பு நம்முடைய இருதயங்களாகிய பலிபீடத்தில் தேவனுக்கேற்ற சுகந்த வாசனையாக கொழுந்துவிட்டு எரியும் போது தீமையான சிந்தனைகளுக்கும், சுய நலத்திற்கும், எந்தவிதமான இடமும் இருக்காது. கூடியிருக்கும் அனைத்து சகோதரர்களும் இப்படிப்பட்ட ஆவியை பெற்றிருந்தார்களானால், அனைவரும் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஆண்டவரின் பணியை செய்வதற்கும், நம்மை சுத்திகரிப்பதற்கும் தேவையான அனைத்து மருந்துகளை இப்போதும், எப்போதும் சகோதரர்களாகிய நாம் அதிக அதிகமாய் உட்கொள்ளுவோம்.

R2734 [col.1 p5] through R2735 [col.1 p1] (17# வது கேள்வியை பார்க்கவும்)

ஆனால் சுத்திகரிக்கப்பட்ட இருதயத்தின் நிலையை நாம் எப்படி பெறுவது?

“உங்கள் இருதயங்களை சுத்திகரியுங்கள்” என்ற செய்தியை நாம் பாவிகளுக்கு அறிவிக்கிறோமா? இல்லையே, பாவிகள் தங்களுடைய இருதயங்களை சுத்திகரிப்பதற்கு சுவிசேஷம் அழைக்கவில்லையே. ஏனெனில் பாவிகளுடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்படுவது இயலாத காரியம். தேவனோடு நல்லுறவு கொண்டு, பரிசுத்தமான அவருடைய சித்தத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய நோக்கமுடையவர்களே தேவனுடைய பார்வையில் பரிசுத்தவான்கள் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக பாவிகள் மனந்திரும்பும்படியாக அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் இருதயம் கலகத்தினாலும், அசுத்தத்தினாலும், தீமையினாலும் நிறைந்திருக்கிறது. ஒரு பாவி பாவத்திற்காய் வருந்தினபின்பு தேவனோடும் அவருடைய நீதியோடும் இசைந்திருக்க விரும்பினால், தன்னுடைய பாவத்திற்கு ஏற்ற பலியை பெற்றுக் கொண்டு தேவனோடு ஒப்புரவாகுவதற்கு மிகப் பெரிய இரட்சகரிடத்திற்கு அவர் வரவேண்டும். ஒரு பாவி இந்த ஒரு படியை கடந்து, தன்னால் முடிந்தவரைக்கும் சீர்பொருந்தப்பட்டு, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவர் கொடுக்கும் மன்னிப்பை பெற்று நீதியின் பாதையில் நடக்க முயற்சித்தால் அவர் நீதிமானாக்கப்படுகிறார். “கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதல்” என்ற வசனத்திற்கு அவர் உட்படுவதினால், எல்லா காரியங்களிலும் அவர் விடுதலைப் பெற்று தேவனோடு நல்லுறவு கொண்டு, தேவனுடைய மன்னிக்கக்கூடிய அன்பினால் வரும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவர் இவைகளை செய்து முடித்து விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட நிலையை அடைந்தபின் அந்தப் பாவி, தேவனுடைய பார்வையில் இனி ஒருபோதும் பாவியாக எண்ணப்படுவதில்லை. ஆகையால், தேவனோடு தொடர்பு கொள்ளும்போது “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக்குறித்து,” (ரோம 3:25) என்ற வசனத்தின்படி அவருடைய இருதயம் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்கிறது. இப்படிச் சீர்திருத்தப்பட்டவரை பற்றி, ஒரு புதிய கேள்வி எழும்புகிறதே, மேலும் சாத்தானின் சோதனைகள் நமக்கு எதிர்கொண்டு நிற்கிறதே. அந்த நீதிமான், தொடர்ந்து நீதியின் பாதையில் நடக்க துவங்குகையில், மாம்சம், உலகம், பிசாசால் சோதிக்கப்பட்டு அகப்படுகிறார். அவர் என்ன செய்யவேண்டும்? அப்பொழுது அவர் தன்னுடைய இருதயத்தை தேடினால் தன்னைத்தான் வழி நடத்திக் கொள்வதற்கு அவர் திராணி இல்லாதவரும், அவர் பெற்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள இயலாதவருமாய் இருக்கிறார். அவர் சரியான பாதையில் செல்வதற்கு, மிகப்பெரிய இரட்சிப்பான இரண்டாவது படியில் அவர் கிடக்க வேண்டியதாய் இருக்கும். மற்றொரு வார்த்தையில் சொல்லப்போனால் மற்றொரு தெய்வீக கிருபையை ஏற்றுக்கொள்ளவேண்டும் – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” (ரோம 12:1) என்று நம்முடைய ஆண்டவர் அப்போஸ்தலர் மூலம் சொல்லிய வார்த்தைகளுக்கு அவர் செவி கொடுக்க வேண்டும்.

நீதிமானாக்கப்பட்டவர் சரியான முறையில் சரியாக போதிக்கப்பட்டிருந்தால், தன்னுடைய சுய பலத்தில் கிறிஸ்துவுக்குள் நிற்பது கூடாத காரியம் என்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்வார். மேலும் இந்த நீதிமானாக்கப்பட்ட நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு தேவனால் மட்டுமே கூடும் என்பதை அறிந்து கொள்வார். முதலில் தேவனோடு ஐக்கியப்படும் போது என்னுடைய விருப்பத்தின்படி, தேவனுடைய சித்தத்தின்படி செய்வேன் என்று சொல்லலாம். ஆனால் இது நம்முடைய ஆண்டவருக்கு திருப்தியளிக்காது, என்பதை சரியான போதனையைப் பெற்றபின் அவர் கண்டறிவார். தேவனுடைய சித்தத்தை, தேவன் விரும்பியபடி செய்தால் மட்டுமே, தேவன் அவரை பொறுப்பெடுத்துக் கொள்வாரென்றும், அவர் செய்யக்கூடிய காரியங்கள் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படும் என்பதையும் உணர்ந்துக் கொள்வார். இப்படிப்பட்டவர்களுக்கு, முழுமையாக தங்களுடைய விருப்பத்தை, தேவனுடைய சித்தத்திற்கு அர்ப்பணித்து தங்களுடைய முழு இருதயத்தில் அதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு, நித்தியமான கன மகிமையை வாக்களிக்கிறார்.

ஒரு பாவி இத்தனை நிலைகளை கடந்தபின் ஆண்டவரிடத்தில் தன்னுடைய இருதயத்தை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியும். அன்பின் பிரமாணத்தின் கீழ் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களைப் பற்றி மட்டுமே, நம்முடைய பாடம் விவரிக்கிறது. ஆனால் இருதயத்தின் சுத்திகரிப்பும், நோக்கங்களும், இலக்குகளும், சித்தங்களும், ஆண்டவரின் கற்பனைகளை நிறைவேற்றுவதற்கு பாத்திரமாய் இல்லாவிடில் அவர் ஒரு யுத்தக்களத்தில் போராட வேண்டியதாயிருக்கும். இருதயத்தில் ஆழமாய் வேரூன்றி வளர்ந்திருக்கும் சுய நலம் தேவனுடைய அன்பின் புதிய பிரமாணத்திற்கு எதிராய் செயல்படும். ஆகையால் ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பாக இந்தக் கற்பனையை முழுமையாக நாம் கடைபிடிக்க முடியாமல் போனாலும் நம்முடைய இந்தப் பாடத்தில் தெய்வீக அன்பின் பிரமாணத்தின் பொருளை நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை அப்போஸ்தலர் ஆலோசனை கூறுகிறார். ஆயினும் இந்தக் கற்பனையை முழுமையாக கடைபிடிக்க முடியாமல், இந்தக் கற்பனையை கடைபிடிப்பதற்கு, சுத்த இருதயம், நல்ல நோக்கங்களும் குறையாமல் இருக்க வேண்டும். மாம்சத்தின் பலவீனம், சாத்தானின் வஞ்சகம் மற்றும் சோதனைகள் வரும்போது நாம் தோல்வியடையும், ஒவ்வொரு நேரமும் நம்முடைய பரிசுத்தமான இருதயங்கள் அல்லது சித்தங்கள் அவைகளை தடுக்கவில்லையென்பது உறுதியாகிறது.

இவ்விடத்தில் ஆண்டவரின் வாக்குறுதிகள் நமக்கு உதவுகிறது. ஏனெனில், நம்முடைய பலவீனங்களும் அபூரண நிலையையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். அன்பின் ஆவிக்கு எதிராக செயல்படக்கூடிய சாத்தானின் வலைகளையும், உலகத்தின் ஆவியும், அபூரண நிலையின் காரியங்கள் எவ்வளவு வல்லமை உள்ளது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் தவறு செய்யும் போதெல்லாம் கிருபாசனத்தண்டைக்கு இலவசமாய் சென்று அவருடைய இரக்கங்களை இலவசமாய் பெற்று இந்தக் காரியங்களை மேற்கொள்வதற்கு நம்முடைய ஆண்டவர் நமக்கு வழிவகுத்து வைத்துள்ளார். ஆகவே பரிசுத்தமான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவைப்பட்ட ஒவ்வொரு நேரங்களிலும் தேவையான கிருபைகளை உதவியாகப் பெறலாம். நம்முடைய மகா பெரிய பிரதான ஆசாரியர் வழியாக கிடைக்கப்பெற்ற இந்த வாய்ப்புகளையும் கிருபைகளையும் அன்றாடம் பயன்படுத்தினால் பாவங்களுக்கு எதிரான நல்லப் போராட்டத்தில் சிறப்பாக வெற்றி அடைய முடியும். அப்பொழுது நம்முடைய மாம்சத்தின் வழியாக நம்முடைய இருதயத்திற்குள் சென்றிருக்கும் தேவையற்ற சகல காரியங்களையும், வெளியேற்றிவிடலாம். இப்படிச் செய்வதின் வழியாக மட்டுமே கிறிஸ்தவர்கள் தங்களுடைய இருதயத்தை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு நல்ல போராட்டத்தை போராடி, இந்த உலகத்தையும் அதன் ஆவியையும், வெற்றிகரமாய் ஜெயிப்பார்கள். இந்த அன்பின் பிரமாணத்தை பொறுத்த வரையில் நம்முடைய மாம்சத்தின் சிந்தனையும், மாம்சமும் பல வழிகளில் நம்மை ஏமாற்றுவதற்கு எத்தனிக்கும். மாம்சத்தின் சிந்தை புது சிந்தையோடு இணைந்து செயல்பட வகைத்தேடி சில விதிமுறைகளுக்குட்பட்டு அன்பின் பிரமாணத்தை வாழ்க்கையின் பிரமாணமாக ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படும். மாம்சத்தின் சிந்தை வார்த்தைகளினாலும் தொழில் ரீதியாகவும், தெய்வீக வடிவத்திலும் அன்பை எதிர்பார்க்கும். இப்படிப்பட்ட அன்பு சுயநலமான இருதயங்களிலிருந்து புறப்பட்டு தங்களையும், மற்றவர்களையும் ஏமாற்ற முயற்சிக்கும். அவர்கள் உதடுகளில் புன்னகையும், வார்த்தைகளில் புகழ்ச்சியும் அன்பும், கனிவும் காணப்படும். ஆனால் இருதயத்திலோ, சுயநலமான உணர்வுகளும், கசப்புகளும் பகைகளும் மறைந்திருக்கும். சாதகமான சூழ் நிலைகளில் இருதயத்தில் மறைந்திருக்கும் இந்தத தீய குணங்கள் அவதூறான பேச்சுக்களாகவும், வதந்திகளாகவும், பின்னாக பேசுவதும், புறணியாகவும் வெளிப்படும். அல்லது இப்படிப்பட்ட காரியங்கள் தொடர்ந்து இருதயத்தில் நிலைத்திருந்தால், சாதகமான சூழ்நிலைகளில் சுத்தமான இருதயத்தில் காணப்படும் புதிய உடன்படிக்கையின் அன்பின் பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரிடையான மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான கோபத்தையும் பகையையும் வாக்குவாதத்தையும், துன்மார்க்கமான கிரியையும் வெளிப்படுத்தும்.

ஆகவே நமக்காக செய்யப்படும் சகலவிதமான தெய்வீக காரியங்களும், நமக்காக கொடுக்கப்பட்ட சகல தெய்வீக வாக்குத்தத்தங்களின் முக்கியத்துவங்களும் இறுதியில் நமக்குள் தெய்வீக குணமாகிய அன்பை வளர்ப்பதே மையக்கருத்தாக இருக்கிறது. இந்தத் தெளிவான உண்மையை நம்முடைய சிந்தைக்கு முன்பாக எப்போதும் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், தேவன் அன்பாகவே இருக்கிறார். இப்படிப்பட்ட அன்பு நமக்குள் வளர்ச்சியடைய தேவனுடைய அன்பின் பிரமாணத்துக்கு இசைவாகவும் சாத்தானின் சுயநலமான பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரான பரிசுத்தமான இருதயம் மிகவும் அவசியமாயிருக்கிறது. மேலும் இதற்கு நல் மனசாட்சியும் தேவைப்படுகிறது. ஏனெனில் மனசாட்சியும் தீய காரியங்களை வலியுறுத்தும். விழுந்துபோன சுபாவத்தில் மனசாட்சியும் விழுந்துபோன நிலையில் உள்ளது. ஆகவே மனசாட்சியில் சரியான நேரத்தை காண்பிப்பதற்கு முதலில் மனசாட்சியை சீர்ப்படுத்த வேண்டும். நேரம் காட்டும் கடிகாரத்தை ஒருவர் சாவி கொடுத்து இயக்குவதுபோல நம்முடைய மனசாட்சியை தினமும் சத்தியத்தின் காரியங்களை செயல்படுத்துவதற்கு நித்தமும் நாம் அதற்கு நீதியின் வரிசையை காண்பிக்கவேண்டும். அப்பொழுது நாம் தவறு செய்யும் பொழுது அதை தவறு என்றும் சரியான காரியங்களை செய்யும் போது சரி என்றும் நமக்கு அறிவுறுத்தும். இந்த மனசாட்சி நீதியாக செயல்படுவதற்கும் இதனுடைய ஸ்பிரிங்கை (Spring) புதிய சிந்தையுடனும், பரிசுத்தமான சித்தத்துடனும் இணைக்க வேண்டும். அப்பொழுது அந்த மனசாட்சி தேவனுடைய அன்பின் பிரமாணத்திற்கு முழு இசைவோடு செயல்படும்.

F474 through F417- “உன் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால்?” (29வது கேள்வியை பார்க்கவும்)

“நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு, மற்றவர்களை நியாயந்தீர்க்காதிருங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் கட்டளைகளுக்கு இது முரண்பாடாக இல்லையா? முதலில் நாம் பொல்லாங்கு செய்கின்றவனை தனிப்பட்ட விதத்தில் நியாயம் தீர்க்காதிருந்து விட்டு, அதன் பின்பு அவனது பொல்லாப்பைப் பற்றிப் பேசி அல்லது வீண் பேச்சு பேசி, அதன்படி அவனுடைய காரியங்கள் முழுவதும் சபைக்கு தெரியவரும்போது, அதன்பிறகு பொல்லாப்பு செய்தவனை விலக்கி வைக்கலாமா?

அப்படி இல்லவே இல்லை. திவ்விய கட்டளையை, ஒழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளும்போது அதில் முரண்பாடு இல்லவே இல்லை. உதாரணமாக A என்பவருக்கும் B என்பவருக்கும் இடையில் ஒரு கருத்து வேற்றுமை இருக்கும் பட்சத்தில், B தனக்கு ஒரு தவறு செய்துவிட்டார் என்று A எண்ணுகிறார். அப்படியிருக்கும்போது, அவர் B குற்றவாளியாக நியாயந்தீர்க்கக்கூடாது. அவர் “நமக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது, நான் செய்தது சரியானதுதான்” என்று மாத்திரம் சொல்லவேண்டும். அதே வேளையில் தன் பக்கத்தில் நியாயம் உள்ளதென்று B எண்ணலாம். இதன் காரணமாக A, B உடன் ஐக்கியம் கொள்வதை விட்டு விடாதிருக்க வேண்டும். அப்படி ஐக்கியத்தை விட்டுவிடுவது, அவனை நியாயந்தீர்ப்பது அல்லது குற்றப்படுத்துவதாகும். ஆனால், “விஷயம் மிகச் சாதாரணமானது, இது சகோதரருக்கிடையில் இருக்கிறபடியினால் நான் அதை விட்டு விடுவேன். ஏனெனில் B ஆண்டவருக்குள் இருக்கிற ஒரு சகோதரனாக இருக்கிறார், ஆனபடியால் வேண்டுமென்று அவன் எனக்கு தவறு செய்யமாட்டான், தவறு என்னுடையதாக இருக்கக்கூடும் அவனுடையதல்ல” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த பிரச்சனையை விட்டுவிடலாம்.

இந்த முடிவை எடுக்க முடியாத பட்சத்தில் A,B க்கு எதிராக தீர்ப்பிடக்கூடாது. அதற்குப் பதிலாக A,B யினிடத்தில் சென்று விஷயமானது தனக்கு எப்படி தோன்றுகிறது என்று விளக்கமாகக் கூறி முடிந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகோதரத்துவத்துடன் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துவராவிட்டால் சபையில் உள்ள ஞானமான, சகோதரர்கள் C, D சகோதரர்களிடத்தில் (இவர்கள் A மற்றும் B க்கும் நம்பிக்கைக்கு பாத்திரவான்களாக இருக்க வேண்டும்) சென்று, பிரச்சனைக் கூற வேண்டும். இவர்கள் B யை குற்றவாளி என்று தீர்ப்பிடாமல், முதலில் அவரின் காரியத்தையும் தெளிவாக கவனிக்க வேண்டும். இப்படியாக A மற்றும் B இருவர் முன்னிலையில் பிரச்சனைகளை தீர விசாரித்து, ஆலோசனை சொல்லவேண்டும். இது எல்லோருக்கும் திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கும் – விசேஷமாக எல்லோரும் அன்பின் ஆவியை உடையவர்களாகவும், அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரத்தின் அங்கங்களாகவும் இருந்து ஒருவருக்கொருவர் நன்மை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையுடன் காணப்படும்போது அப்படியிருக்கும், இன்னமும் அவர்கள் மத்தியில் சமாதானம் ஏற்படவில்லை என்றால், அப்பொழுதும் கூட தீர்ப்பு சொல்லாமல், அந்தப் பிரச்சனையை சபைக்கு முன் கொண்டு வரவேண்டும்.

ஆனால் C,D யினிடத்தில் A சென்ற போது அவர்கள் தங்களுடைய கருத்தை A க்கு எதிராகவும் B க்கு சாதகமாகவும் தெரிவித்தார்களானால் அந்த விஷயம் அங்கேயே முடிவு பெறும். இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் A இந்த விஷயத்தை சபைக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இந்த விஷயத்தை இன்னும் தொடர வேண்டும் என்று எண்ணுவாரானால், அவர் மூர்க்க குணமுள்ளவராக இருக்க வேண்டும். அவருக்கு ஆண்டவருடைய போதனைகள் இதற்கு மேல் அதிகமாக சிலாக்கியங்களை கட்டளையிடவில்லை. (மத் 18:15) இன்னமும் அவன் திருப்தி அடையாவிட்டால், இன்னும் இரண்டு அல்லது மூன்று திறமையுள்ள எந்தப் பக்கமும் சாயாமல், நடு நிலை வகிக்கும் மனதுடைய சகோதரர்களான E,F,G இன்னொரு முறை விஷயத்தைக் கூறி அவர்களுடைய கருத்தைப் பெறலாம்.

ஆனால் A,C யையும் D யையும் B யினிடத்தில் கொண்டு சென்று, அவர்கள் எல்லோருமே A சொல்லுகிறபடி B அவருக்கு தவறு இழைத்து விட்டார் என்று ஒருமுகமாக ஒத்துக் கொண்டாலும் தன்னுடைய நிலையை விட்டுக் கொடுக்க மறுத்தாலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மறுத்தாலோ அல்லது தவற்றை சரி செய்யாமல் விட்டு விட்டாலோ, A,C மற்றும் D உடனும் இணைந்து சபையின் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். A மற்றும் B முழு பிரச்சனையயும் சபைக்கு முன் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் B இன்னமும் சபையில் இருக்கவும், சபையில் ஆலோசனையையும், அதிகாரத்தையும் ஏற்றுக் கொள்ளுபவராகவும், அதோடு கூட மனசாட்சி உள்ளவராகவும் இருப்பது அவசியம். சபை அந்த விஷயத்தை கேட்கும் போது, நீதிமான்களாக்கப்பட்டு, அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அங்கு சபையாக கூடி வர வேண்டும். ஏனெனில், அவர்கள், தீர்ப்பு அளிக்கும்படி அவர்களுடைய தலைவரும் ஆண்டவரின் நாமத்தில் அவருடைய நியாயத்தை வழங்க இருக்கிறார்கள். இது சபையில் பாகுபாடு உண்டாவதற்கான ஒரு விஷயமாக அல்ல, மாறாக சபையின் ஒற்றுமையையும் சமாதான கூட்டையும் காத்துக் கொள்ளுவதற்காகும். A மற்றும் B வழக்கு பதிவு செய்யக்கூடாது. மேலும், இந்தக் காரியத்தில் ஆண்டவருடைய தீர்ப்பை மட்டுமே வழங்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் வழக்கு பதிவு செய்யக்கூடாது. எடுக்கப்படுகிற தீர்மானம் ஒருமனப்பட்ட அனைவரின் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கவேண்டும், அதிகமான உணர்ச்சிவயப்படுதல் கட்டுப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும் கூட, தீர்மானம் ஒரே மனதாக இருக்க வேண்டும், “நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு” (கலா 6:1) என்பதின்படியாக நியாயம் எப்பொழுதும் இரக்கத்துடன் கலந்து இருக்கவேண்டும்.

சபையின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒழுக்கத்தைக் குறித்தான ஒரு விஷயத்தில் (மனசாட்சியைப் பற்றியதல்ல) யாராவது ஒருவர் அதன்படி கீழ்ப்படியாவிட்டால் அல்லது அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் சபைக்கு எதிர்த்து நிற்பதை விடும் வரை மற்றவர்களுக்கு (அவன் அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பான்.” அவன் கீழ்ப்படியும் பட்சத்தில், மன்னிக்கப்பட்டு முன்பு இருந்த மாதிரியே ஐக்கியத்திற்குள்ளாக சேர்த்துக் கொள்ளப்படுவான். இதன் நோக்கம் என்னவெனில், சகோதரனை முற்றிலுமாக ஒதுக்கிவைத்து விடவேண்டும் என்பதல்ல, ஆனால் அவருடைய தவறான வழியை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று காட்டுவதன் மூலம் அவன் திருந்துவதற்காக உதவி செய்வதாகும். இப்படியான ஒருவனை அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப்போலவும் நடத்துவது, அவன் ஒதுக்கி வைக்கப்பட்ட பின்னரும் அவனைப் பற்றி அவதூறாக பேசுவதற்கோ அல்லது அவமரியாதை செய்வதற்கோ அல்ல. ஆண்டவருடைய ஜனங்கள் எந்த வேளையிலும் அவதூறு பேசுகிறவர்களாகவோ அல்லது முதுகுக்குப்பின் பேசுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. “பிறனைப் பற்றி பொல்லாப்பு பேசாதே” என்பதை இதற்கு மிக பொருத்தமாய் இருக்கிறது. நாம் பொல்லாங்கும் பேசக்கூடாது, அல்லது அஞ்ஞானிகளையும் பாவிகளையும் கடுப்பாக பார்க்கக்கூடாது. மேலும் அவர்களோடு தொடர்பு வைத்துகொள்ளாமலும் இருக்ககூடாது, ஆனால் பரிசுத்த ஆவியினாலும், அதன் அன்பினாலும் சமாதனத்தினாலும் நிறைந்து இருக்கின்ற புது சிருஷ்டியின் சகோதருக்கு உரியதான மரியாதையும், விசேஷமான ஐக்கியத்தையும் அவர்களுக்கு கொடாதிருக்கவேண்டும்.

F583 [p1] through F586 – மனசாட்சியுடன் தலையிடுவது (33ம் கேள்வியை காண்க)

“அந்நிய காரியங்களில் தலையிடுவதினால்”, புதுசிருஷ்டியின் புதிய மனங்கள் முற்றிலும் மாறுபடும். அப்போஸ்தலர் இதை கடுமையாகக் கண்டிக்கிறார். (1 தீமோ 5:13, 1 பேது 4:15) மற்றவர்களின் காரியங்களில் துணிகரமாக தலையிடுவது தேவையற்ற காரியமாக இருக்கிறது. சில நேரங்களில் அந்த காரியத்தைக் குறித்து அறியாத போதிலும் அதில் சம்பந்தம் இல்லாமல் தலையிடுவார்கள். ஆனால், இந்த உலகத்தில் பிள்ளைகள் கூட தற்போதைய வாழ்நாளில் போதுமான அளவு தெளிந்த புத்தியுள்ளவர்களாக, தன்னுடைய சொந்த அலுவல்களைச் சரியான முறையில் பார்க்கும்படி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகிற அளவுக்கு, தங்களுடைய சிந்தையிலே ஞானமுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள். மேலும், அவர் மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுகிறவராகவும், மற்றவர்களுக்கு புத்திசொல்லும் அளவுக்கு திறமை உள்ளவர்களாகவும் இருப்பதாக காண்பித்துக் கொண்டு, அதன் விளைவாக மற்றவர்களுடைய வியாபாரத்திற்கு போதுமான அளவு நேரம் ஒதுக்குவாராகில், அவர் நிச்சயமாகவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தன்னுடைய விஷயங்களை அலட்சியம் பண்ணுகிறவராக இருப்பார். தெளிந்த புத்தியின் ஆவியினால் கர்த்தருக்குள் பிறந்த புதுசிருஷ்டிகள் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதற்கு உலகத்தாரைக் காட்டிலும் தனக்கு நேரம் இன்னும் குறைவாக இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஏனெனில், தங்களுடைய நேரம், தாலந்து, செல்வாக்கு அனைத்தையும் ஆண்டவருக்கும் அவருடைய ஊழியத்திற்கும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் இயற்கையாகவே இந்த விஷயத்தில் தெளிந்த புத்தி இல்லாதவர்களாக இருந்தால், வேதாகமத்தில் உள்ள கட்டளைகளால், அவர்களுடைய உடன்படிக்கையின் பலியை நிறைவேற்றுவதற்கான காலம் குறுகியதாக இருக்கிறது என்ற உணர்வினால் சரியான வழியில் நடக்கும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். மேலும் புது சிருஷ்டிக்குரிய கட்டளையான, பொன்னான கட்டளை அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுவதை தடுக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும். நிச்சயமாகவே, மற்றவர்கள் தங்கள் விஷயங்களில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆகவே, அவர்களும் செய்யாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஆனாலும் பொதுவாக உலகத்தின் ஆவி இதற்கு எதிர்மாறாக உள்ளது என்று அப்போஸ்தலர் உணர்ந்து, அதன்படி இதைக் குறித்து பரிசுத்தவான்கள் அறிந்து, அப்பியாசப்படுத்திக்கொண்டு, கற்கவேண்டும் என்று அவர்களை எச்சரிக்கிறார். “அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்… வேண்டுமென்று புத்தி சொல்லுகிறோம்” (1 தெச 4:12) என்று கூறுகிறார்.

மற்றவர்களுடைய அலுவல்களைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க முற்படுகிற இயற்கையான குணம், அவர்களை திருத்தும்படியாக ஒரு கரம் நீட்டுவதும், ஒருவன் தன் கண்ணிலுள்ள உத்திரத்தை அசட்டை பண்ணிவிட்டு, மற்ற சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முற்படுவதும், ஆண்டவர் விளக்கமாக கூறுகிறார். (மத் 7:3-5) சில சமயங்களில் புது சிருஷ்டியை ஒரு புதுமையான வழியில் தாக்குகிறது. அவன், புத்திமதி கூறுவதும், விசாரிப்பதும், கடிந்து கொள்ளுவதும், கண்டிப்பதும் தன்னுடைய கடமை என்று நினைக்கிறார். விஷயத்தை தன்னுடைய மனதில் எடுத்துக் கொள்ளும்போது, அப்படிச் செய்யாவிடில் அது பாவமாக இருக்கும் என்று தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளுகிறார். இப்படி, அவன் வீண் அலுவற்காரன் என்று நாம் சொல்லுகிற அளவுக்கு மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுகிறவனாகி விடுகிறார். இப்படி தவறாக வழி நடத்தப்பட்ட மனசாட்சியினிமித்தம், எதிர்க்கக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது. அநேக தடவைகளில், பணிவுள்ள நல்ல ஜனங்கள் உண்மையான புதுசிருஷ்டிகள் ஆண்டவருடைய ஊழியத்தில் அவர்கள் செய்ய முற்படுகிறதெல்லாவற்றிலும், இந்தக் குறைபாட்டினால் தடை பண்ணப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை கட்டுப்படுத்தி, நீதியின் கொள்கைகளை அப்பியாசப்படுத்தவும், கற்றுக்கொள்ளவும், ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகளை நேசிக்கவும் வேண்டும். அவன் சகோதர கடமைக்கும், மற்றவர்களின் அலுவல்களில் தலையிடுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் காணும்படி, தன்னுடைய மனசாட்சிக்கு கற்பிக்க வேண்டும். நாம் பார்த்தபடி, பெரும்பாலான ஆண்டவரின் ஜனங்கள், மாத்திரமல்ல உலகத்தாரும்கூட, நீதி, மற்றும் அன்பின் கொள்கைகள் பொன்னான கற்பனையில் இணைக்கப்பட்டிருப்பதை விரும்பி வந்தபின்னரும், அதை வாழ்க்கையின் அலுவல்களிலும், மற்றவர்களோடு பழகும்போதும் நடைமுறைப்படுத்தும் வேளையில், கடிந்து கொள்ளுதலும், அதட்டுவதும், தவறு கண்டுபிடிப்பதும், எடுத்துப் போடுவதும் மிகக் குறைவாயிருக்கக் காண்பார்கள்.

இதே போன்று, எந்த விஷயத்திலும் விசாரிப்பது நல்லது, அது என்னுடைய வேலையா? நாம் உலகத்தாரோடு பழகும்போது, பொதுவாக கவனமாக ஆராய்ந்து பார்க்கும் வேளையில், அவர்களை கடிந்து கொள்ளுவதோ, அல்லது கண்டிப்பதோ, அல்லது அதட்டுவதோ நம்முடைய வேலையல்ல என்று காண்கிறோம். நம் ஆண்டவரால் அழைக்கப்பட்டிருக்கிறோம். குறுகலான பாதையில் நடக்கும்படியாக உலகத்தின் பாதையிலிருந்து திரும்பியுள்ளோம். அதுவே நம்முடைய வேலை, நாம் ஆண்டவரை பின்பற்றும்படியாக உலகம் நம்மை தனியே விட்டுவிட வேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டும். அதே போன்று உலகத்தின் கவலைகளை நாம் தனியே விட்டு விட்டு, நம்மையும் நம்முடைய சுவிசேஷ செய்தியையும் “கேட்கிறதற்கு காதுள்ளவனிடத்தில்” கூற வேண்டும். உலகமானது, ஆண்டவரால் அழைக்கப்படவில்லை, “இடுக்கமான வாசலுக்குள்” வரவில்லை. ஆகவே அது தன் வழியைத் தெரிந்துகொள்வதற்கும், நாம் அதன் வழியில் குறுக்கிட மாட்டோம் என்று எதிர்பார்க்கவும் அதற்கு உரிமை உண்டு, ஏனெனில், நாமும் நம்மில் குறுக்கிடுவதை விரும்பமாட்டோம். இது நம்முடைய வெளிச்சம் பிரகாசிப்பதை தடை பண்ணாது, இப்படியாக, நாம் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமலும், கண்டிக்காமலும் இருந்தாலும், நாம் மறைமுகமாக உலகத்தின் மேல் தொடர்ச்சியாக செல்வாக்கை அப்பிரியாசப்படுத்திக் கொண்டிருப்போம். விஷயம் வியாபாரத்தைப் பற்றி இருக்கும் போது, அதில் நாம் பணம் சம்பந்தமாக அக்கறையுள்ளவர்களாக இருக்கும்போது, அப்பொழுது அது மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதாகாது. அது நம்முடைய காரியத்தையே பார்ப்பதாகும். அதில் முறைப்படியான கவனம் செலுத்துவதாகும். குடும்பத்திலும் வீட்டிலும் நடைபெறுகின்ற எல்லா காரியங்களைக் குறித்தும் பெற்றோர்கள் ஓர் அறிவுள்ள வழியைக் காட்டுவது, தலையிடுதல் ஆகாது. இருந்தாலும், இங்கு கூட குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட உரிமைகள் கவனிக்கப்படவேண்டும், பாதுகாக்கப்படவேண்டும். புருஷனும் குடும்பத்தின் தகப்பனும் அதன் தலைவராகவும், முழு அதிகாரம் உள்ளவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் போது, அந்த அதிகாரத்தை அன்புடன் கூடிய நிதானத்துடனும், ஞானமுள்ள சிந்தனையோடும் பயன்படுத்த வேண்டும். மனைவியின் தனித்தன்மையும், அவளுக்கு பிடித்தமானவைகளும், அவனுடைய கவனத்தில் இருக்கவேண்டும். அவளும், அவனுடைய பிரதிநிதியாக அவனுக்கு உதவி செய்யும் துணையாக, வீட்டை பராமரிக்கிறவளாக, அவளுடைய விசேஷமான வரம்பிற்குட்பட்டு, முழு அதிகாரமும், ஆளுகையும் அவளுக்கு கொடுக்கப்படவேண்டும். மேலும் அவன் இல்லாத வேளையில், குடும்பத்தின் எல்லா காரியங்களைப் பொறுத்தவரையிலும் அவனுடைய வயதின்படி போதுமான அதிகாரத்தை, பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பிள்ளைகளுக்கும் கூட, அவர்களுடைய வயதின்படி போதுமான அளவு தனிப்பட்ட முறையில் இடமும், அவர்களுடைய விஷயங்களில் தனித்தன்மையும் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் வீட்டின் ஒழுங்கு, சௌகரியத்தைப் பொறுத்த விஷயங்களில், வீட்டில் உள்ளவர்கள் மனதில், ஒழுக்கத்தில், சரீர பிரகாரமான விஷயங்களில் வளர்ச்சி பெறுவதைக் குறித்து, அவனுடைய அதிகாரத்தையும் மேற்பார்வையையும் மாத்திரமே அப்பியாசப்படுத்த வேண்டும். பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தை மற்ற குழந்தையிடம் குற்றம் கண்டுபிடிக்காமலிருக்கவும், ஆனால் மற்றவர்களுடைய உரிமையை மதிக்கவும், பொன்னான கற்பனையின்படி மற்றவர்களுக்கு தயாளத்துடனும், அன்புடனும், உதவவும் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீண் அலுவற்காரராய் இருப்பவர்களுக்கு எதிராக உள்ள எச்சரிக்கையை நினைப்பதற்கு சபையைத் தவிர வேறு இடம் கிடையாது. சகோதரர்கள் வசனத்திலிருந்தும், கட்டளையிலிருந்தும், மூப்பர்களின் உதாரணத்திலிருந்தும் சீக்கிரமாக கற்றுக் கொள்ள வேண்டியதென்னவெனில், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதோ, மற்றவர்களைப் பற்றி விவாதிப்பதோ தேவனுடைய சித்தம் கிடையாது என்பதேயாகும். ஆனால் மற்ற இடத்தில் உள்ளது போலவே இங்கேயும் ஒருவரைக் குறித்தும் பொல்லாங்கு பேசாதே” என்கிற திவ்விய கட்டளை உரியதாக இருக்கிறது. நமக்கு நேரிடையாக அக்கறையில்லாத மற்றவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுதல், பொல்லாப்பு பேசுவதற்கும், புறங்கூறுவதற்கும், கோபம் அடைவதற்கும், பொறாமை அடைவதற்கும், வெறுப்பு அடைவதற்கும், சண்டையிடுவதற்கும், பல்வேறு மாம்சீகத்தின் காரியங்களிடத்திற்கும், பிசாசினிடத்திற்கு வழி நடத்தும் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (கொலோ 3:5-10) இப்படியாக, அநேக வேளைகளில் அவதூறு பேசும் பழக்கத்தின் சிறிய விதைகள் விதைக்கப்படுகின்றன. கசப்பின் பெரிய வேர்கள் வளருகின்றன, அதன்மூலம் அநேகர் தீட்டுப்படுகிறார்கள். புதிய மனம் உள்ள அனைவரும் இந்தப் பொல்லாங்கின் விஷத்தன்மையை உணருகிறார்கள். அவர்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளிலும் அயலகத்திலும் முன் மாதிரியாக இருக்கவேண்டும். மாம்சீக மனம், கொலை செய்வதும், கொள்ளையடித்தலும் தவறு என்று உணரலாம். ஆனால் திவ்விய பிரமாணத்தின் ஆவியை பெற்றவர்களுக்கும் இன்னும் ஓர் உயர்வான நீதியின் எண்ணம் அதாவது அவதூறு கூறுவது என்பது ஒருவருடைய குணாதிசயத்தை கொலை செய்வதாகும், மேலும் எந்த வழியிலாவது அயலானின் நல்ல பெயரைத் திருடுவது, கொள்ளையடிப்பதாகும் என்ற எண்ணம் தேவைப்படுகிறது. உலகப்பிரகாரமான எண்ணம் உடையவர்கள் இந்த விஷயத்தை ஓர் அளவுக்கு கிரகித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகள் புலவரின் வார்த்தையில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது – “என்னுடைய பணப்பையைத் திருடுகிறவன் குப்பையைத் திருடுகிறான்……. ஆனால் என்னுடைய நல்ல பெயரைத் திருடுகிறவன் அவனை செழிப்பாக்காத ஒன்றைத் திருடுகிறான், ஆனால் என்னை உண்மையிலேயே தரித்திரமாக விட்டுவிடுகிறான்.”