CD-FAITH-Q-2
அறிவாற்றல் சார்ந்த உறுதி மற்றும் நம்பிக்கைக்குரிய இருதயம் ஆகிய இரண்டு முக்கியமான உட்பொருட்களை விசுவாசம் கொண்டிருக்கிறது. முதலில் சொல்லப்பட்ட விசுவாசம் தனித்து பிரிக்கப்பட்ட ஒரு நிலையையும், இரண்டாவது, உறுதிப்பட்ட விசுவாசத்தைப்பற்றி சொல்லப்படுகிறது. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” (ரோமர் 10:10) இவ்வாறாக நம்முடைய விசவாசத்திற்கு இருதயத்தின் சிந்தையும், தலையில் உள்ள அறிவும் முழுமையாகத் தேவைப்படுகிறது. ஏனெனில் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி 11:6) என்று வாசிக்கிறோம். அநேகருக்கு விசுவாசம் இருந்தாலும், அது ஒரே ஒரு உட்பொருளை உடையதாகவே இருக்கிறது. சிலரிடத்தில் உணர்ச்சிவசத்தால் செயல்படும் விசுவாசமும், சிலரிடத்தில் அறிவினால் ஏற்படும் விசுவாசமும் காணப்படுகிறது. ஆனால் இவைகளினால் பொறி பறக்கும் கடுங்சோதனைகளைத் தாக்குப்பிடிக்க முடியாது. ஒருவேளை இவைகள் இணைந்து செயல்பட்டால், இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அவருக்கு மகிமையாக அவரை புகழக்கூடியவர்களாகக் காணப்படுவார்கள்.
திவ்விய சத்தியத்தில் அடிப்படைக் கொள்கையை ஒரு சுருக்கமாகப் பார்த்தால் – தனிப்பட்ட முறையில் தனித்து வாழ்ந்துவரும் ஞானமுள்ள தேவன், சகல காரியங்களின் சிருஷ்டிகரும், சகலத்தையும் தாங்குபவராக, தன்னுடைய இரட்சிப்பின் திட்டத்தை தன்னுடைய ஒரே பேறான குமாரன் – இயேசு கிறிஸ்துவின் மூலம் செயல்படுத்தினார். இதுவே விசுவாசத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதே நேரத்தில் நம்முடைய தந்தையாக, நம்மை உண்டாக்கினவரும், நம்மிடமிருந்து எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அன்பை செலுத்தினவரும், நம்மை அழைத்தவருமாகிய அவருடைய வாக்குத்தத்தங்கள் மேல் வைக்கப்படும் உறுதியான நம்பிக்கையே இந்த விசுவாசத்தின் அடிப்படையின்மேல் கட்டப்படும் கட்டுமானமாகும்.