CD-PRAYER-Q-8
R1864 [col. 1 P8 through col. 2 P2]: –
உருவாக்கப்பட்ட உன்னதமான நிலையிலிருந்து நாம் விழுந்துபோன சிருஷ்டிகளாக இருப்பினும், நாம் பாவிகளாக இருக்கும்போதே, தேவன் நம்மை மிக அதிகமாக சித்ததினால், நம்முடைய மீட்புக்காகவும், நாம் இழந்ததை திரும்ப கொடுப்பதற்காகவும். பின்னர் நித்திய மகிமையை அடையும்படியாகவும், மிக பெரிய கிரயத்தை அவர் ஏற்பாடு செய்தார். ஆகையால், அவர் நம்மை நேசிப்பதினால், கிறிஸ்துவின் வழியாக, அவருடைய பிள்ளைகளாக வருவதற்கான ஒரு அருமையான தயவை நமக்கு வழங்கினார். தேவனுடைய அன்பும், அருளும், இரக்கமும் தயவும் எவ்வளவு அற்புதமானது!
ஆயினும், நம்முடைய தேவன் மதிப்புக்குரியவர்: அவர் நம்மை போன்றவர் அல்ல, நமக்கு சமமானவரும் அல்ல, அவரது மகிமையான மற்றும் அலுவலகத்தின் காரணமாக அந்த விழா மற்றும் அலங்காரமின்றி நாம் அவருடைய சமூகத்திற்கு வரலாம். (யோபு 9:1-35) பரலோக நீதிமன்றத்திற்கு அதற்கே உரிய மரியாதையான ஒழுங்குகளும் விழாக்களும் உள்ளது. இராஜாதி இராஜாவுக்கு முன் பார்வையாளராக இருக்கும் வாய்ப்பை பெறக்கூடிய ஒவ்வொரு மனுஷனும், இந்த ஒழுங்கு முறைகளோடு இசைந்திருக்கவேண்டும். ஆகவே. நாம் அவரை சந்திக்கும் முன் இந்த ஒழுங்குகளை பற்றி அறிந்துக்கொள்வது நமது கடமையாக உள்ளது. இங்கு தேவனுடைய வார்த்தை, வெளிப்படையான வழிமுறைகளை தருகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு, நியமித்த “மனுஷகுமாரனுடைய நாட்களுக்கு”. யோபு மிகவும் ஆவலோடு காத்திருந்தார். (யோபு 9:32,33) “நானே வழி, என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்றும் கூறினார். பின்னர் கர்த்தரின் ஜெபம் (மத்தேயு 6:9-13) என்று அழைக்கப்படுவதில் நாம் அவரை அணுகவேண்டிய முறைக்கு ஒரு எடுத்துக்காட்டை கொடுத்தார். இந்த எடுத்துக்காட்டு நமக்கு கற்பிக்கும் பாடங்கள் பின்வருமாறு: (1) தேவனுடைய மதிப்பீட்டில் விசுவாசிகளாகிய நாம் (கிறிஸ்துவின் வழியாக விசுவாசித்து) தேவனுடைய உண்மையான பத்திரங்களாக நம்மை எண்ணிக்கொண்டு. “எங்கள் பிதா” என்று நம்பிக்கையுடன் கூறலாம். (2) நம்முடைய பங்கில், இது உயர்ந்த மற்றும் புனிதமான ஒரு ஆராதனை வழிபாட்டையும், நம்முடைய தேவனுடைய நற்பண்புகள் மற்றும் மகிமையான குணலட்சனங்களின் ஆழ்ந்த பயபக்தியையும் குறிக்கிறது “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”. (3) அவருடைய சித்தத்தின்படி உருவாக்கப்பட்ட உன்னதமான நிலையிலிருந்து, வரவிருக்கும் இராஜ்யத்தினுடைய திட்டத்தை முழுமையான வெளிப்பாட்டின் மேல் உள்ள பரிவை காட்டுகிறது – “உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.” இருதயத்தின் நோக்கம் நீதியை நோக்கி இருப்பதற்கும், தேவன் அவருடைய நல் மகிழ்ச்சிக்காக கிரியை செய்வதற்கு. தெய்வீக சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் முழுமையாக அர்ப்பணிப்பதையும் காட்டுகிறது. (4) அநுதின தேவைகளுக்கு தேவன் மேல் சார்ந்திருப்பதை மிக எளிய மொழியில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது மேலும், ஒரு குழந்தை அதனுடைய தேவைகளை தன் தந்தையின் ஏராளமான நிறைவுகளிலிருந்து பெறும்படியான முழு நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு தாரும்” (5) இது மீறுதல்களுக்கான மன்னிப்பை கோருகிறது மேலும் நமக்கு எதிராக இதே குற்றம் புரிந்தவர்களுக்கான மன்னிப்பையும் பெறும் பொறுப்பை அங்கீகரிக்கிறது – “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” மற்றும் (6) – சோதனைகளுக்கு எதிராகவும், எதிராளியின் சகலவிதமான தந்திரங்களிலிருந்து தேவனுடைய அபரிமிதமான கிருபையே வலுவாக நம்மை காத்துக்கொள்ள முயலுகிறது “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”
R2251 [col. 1 P4,5]: –
அனைத்து ஜெபங்களுக்கும் சில விதிமுறைகள் இருப்பதால், தேவனிடத்தில் தொடர்பு கொள்ளும் அனைவரும். மனத்தாழ்மையோடும், எளிமையோடும், பயபகதியோடும் இயேசுவின் நாமத்திலே அணுகவேண்டும். ஆயினும், சில குறிப்பிட்ட விஷயங்களில் சூழ்நிலைகளே ஆட்சிச் செய்யும்.
(1) பாவிகள், அந்நியர் மற்றும் பரதேசிகளின் ஜெபம், பாவ மன்னிப்பை பெற்று, தெய்விகமாக நியமிக்கப்பட்ட ஒழுங்குகளுக்கு உட்பட்டு ஒப்புரவான தேவனுடைய பிள்ளையின் ஜெபத்திலிருந்து வேறுபட வேண்டும். எடுத்துக்காட்டாக, யேகோவா தேவனை. “பிதா” என்று அழைக்காமல் தேவன் என்று அழைத்த, ஆயக்காரனுடைய ஜெபம் – “தேவனே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்” – நம்முடைய ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு எதிரிடையாக. கிறிஸ்துவுக்குள்ளான உடன்படிக்கையின் கீழ் தேவனோடு தொடர்பு கொள்பவர்களுக்கு, தேவனை சிருஷ்டிகராகவோ, ஆளுனராகவோ மட்டும் அல்ல அவர்களின் “பரலோக தந்தையாக” அழைக்க சிறப்புரிமைப் பெற்றிருக்கிறார்கள்.
இது பக்தியுள்ள ஆராதனையையும், தெய்வீகநற்குணத்தையும், மகத்தவத்தையும். உயர்வாக மதித்தலையும், அதனுடன் தொடர்புடைய பக்தியையும் தெரிவிக்கிறது. நாம் நம்முடைய விண்ணப்பத்தை ஆண்டவரிடம் தெரிவிக்கும்போது, நம்முடைய முதலாவது சிந்தை, நம்மை குறித்து சுயநலமானதாக இருத்தல் ஆகாது. அல்லது நம்மை பொறுத்த வரையில், நமக்கு மிக மதிப்புள்ளதாக தோன்றும் மற்றவர்களின் விருப்பங்களையும் அல்ல. அதற்கு பதிலாக நம்முடைய எண்ணங்களிலும் நோக்கங்களிலும் மற்றும் கணிப்புகளிலும் தேவனே முதன்மையாக இருக்க வேண்டும். நம்முடைய பரலோகத் தகப்பனின் பெயருக்கு நன்மதிப்பை தராத எதற்கும் நாம் ஜெபிக்கக்கூடாது. தேவன் முழுமையாக அங்கீகரியாததும். நாம் ஜெபிப்பதற்கு சொல்லப்படாத எந்த காரியத்திற்காகவும். நமக்கென்றோ, நம்முடைய அன்பார்ந்தவர்களுக்கென்றோ, நாம் எதையும் ஜெபிக்க விரும்பவும் கூடாது. அநேகமாக, கிறிஸ்தவர்களாக தங்களை சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில், தேவனுக்கு பயபக்தியுள்ள சிந்தனை, இராததினால், அந்த இருதயத்தின் தரநிலை வெளியேறுவதற்கான அபாயத்தில் உள்ளது. நாம் அறிவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், தவறுகளிலிருந்தும் நாம் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மற்றும் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு ஒரு நூற்றாண்டுக்கு முன்னிருந்ததை காட்டிலும் சிலவற்றில் மேம்ப்பட்டு இருந்தாலும், பெயர் சபைகளில் மட்டும் அல்ல “பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கும். ஜீவனுள்ள தேவனுடைய சபையிலும்” தேவனுக்குரிய பயபக்தி இழந்துக்கொண்டிருப்பதை எண்ணி அஞ்சுகிறோம். பயபக்தியின் ஒவ்வொரு இழப்பும் ஒரு தனித்தன்மை வாய்ந்த நஷ்டமாகும். இது சபையிலும், இந்த உலகத்திலும், பல்வேறு தீமைகளுக்கும், இறுதியில் அராஜகத்திற்கும் வழிவகுக்கும்.