CD-FAITH-Q-17
யாக்கோபு 1:3,4, 1பேதுரு 4:12,13
F642 – F644
இக்காலத்தில் தேவன் புது சிருஷ்டிகளோடு வைத்திருக்கும் தொடர்பைப்பற்றி புரிந்து கொண்டிருந்தோமானால், இந்த தெய்வீக நிலையில் பூரணப்படக்கூடியவர்கள் சரியான நோக்கத்துடன் மட்டும் அல்லாமல், தவறானக் காரியங்களை செய்வதை விட சரியானக் காரியங்களை செய்ய விரும்புவார்கள் என்று நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் அவர்கள் பெற்ற அநேக அனுபவங்களினால் – நீதியானக் காரியங்களைச் செய்வதினால் வரும் ஆறுதல்களையும், நன்மைகளையும், தீமையினால் வரும் துன்பங்களையும், குழப்பங்களையும் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். இதன் காரணமாகவே, புது சிருஷ்டிகள் விநோதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எல்லா வகைகளிலும், சொல்லப் போனால் தூதர்களைக் காட்டிலும், நியாயத்தீர்ப்பின் நாளில் இந்த உலகத்திற்கு வரும் சோதனையைக் காட்டிலும் இவர்கள் அதிகமாக சோதிக்கப்படுவார்கள். நமக்கு தெரிந்தவரைக்கும் சாத்தானுடைய பேராசையினால் இந்த உலகத்தை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தேவனை விட்டு திரும்பும் வரைக்கும், எந்தப் பரிசுத்த தூதர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று நாம் அறிவோம். ஆனால் சாத்தானுடைய மீறுதலினால், மனுக்குலம் வீழ்ச்சியடைந்து, சோதனைக்கு வாய்ப்பளித்தது என்று தெளிவாக உள்ள காரணங்கள் நம்மிடத்தில் உண்டு. இது விழுந்துப்போன தூதர்களுக்கு மட்டும் சோதனையாக அமையாமல், பரிசுத்த தூதர்களுக்கும் சோதனையாக அமைந்தது. ஏனெனில் தேவன் பொறுமையாக இந்தத் தீமைகளை அனுமதித்து, அவைகளை உடனடியாக அழித்துவிடாமல் இருப்பதை அவர்கள் கண்டபோது இவர்கள் யேகோவா தேவனுடைய வல்லமையின் மேல் வைத்திருக்கும் விசுவாசம் சோதிக்கப்பட்டது. இதைக் கண்ட அநேக தூதர்கள் விழுந்துபோன தூதர்களின் பாதையில் செல்ல தூண்டப்பட்டிருக்கவேண்டும். ஆனாலும், பரிசுத்தமான தூதர்கள் உண்மையில் தேவனிடம் விசுவாசம் வைத்தவர்களாக, நீதியான கோட்பாடுகளுக்கு முழு மனதோடு கீழ்ப்படிந்து நேர்மையாக வாழ்ந்தார்கள். கிறிஸ்துவின் மூலமாக நடக்கக்கூடிய மகத்தான தெய்வீகத் திட்டத்தைப்பற்றி முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும், வெகு சீக்கிரத்தில் கிறிஸ்து இயேசு மற்றும் மகிமையடைந்த சபையின் மூலமாக யேகோவா தேவன் தம்முடைய வல்லமை, பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியினால் நடப்பிக்கப்போகும் பிரம்மாண்டமான காரியங்களைக் கண்டு தங்களுக்குள் நம்பிக்கை கொள்வார்கள்.
எப்படியிருந்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் புது சிருஷ்டிகளுக்கு வரும் சோதனைகளின் அளவுக்கு பரிசுத்த தூதர்கள் சோதிக்கப்படுகிறதில்லை. மனிதனுடைய அபூரணமான நிலை பூரணப்படுவதற்கு விசுவாசம், பொறுமை, அன்பு மற்றும் வைராக்கியத்திற்கான தொடர்ச்சியான சோதனைகள் மரண பரியந்தம் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், மேசியாவின் யுகத்திலும், இருதயத்தில் முழுமையாக தேவனுக்கும், நீதியின் கோட்பாடுகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்களா? என்று முற்றிலுமாக சோதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த சுவிசேஷ யுகத்தைப் போலிராமல், அவர்களின் எல்லா சூழ்நிலைகளும் நன்மைக்கு சாதகமாக இருக்கும். இதற்கு எதிர்மாறாக, அப்போஸ்தலர் சொன்னதுபோல, இக்காலத்தில், புது சிருஷ்டிகள் “தேவபக்தியாக நடக்க மனதாயிருக்கும் யாவரும் துன்பப்படுவார்கள்.” இப்படிப்பட்ட பாடுகளை மனப்பூர்வமாக, அனுபவிக்க முன்வந்து, தேவனுக்கும் அவருடைய கோட்பாடுகளுக்கும் உண்மையாக இருப்பதே தேவன் அங்கீகரிக்கும் விசேஷித்த குணங்களில் ஆதாரமாக இருக்கிறது. இந்த யுகத்தில் அவர் புது சிருஷ்டிகளோடு வைத்திருக்கும் உறவானது, அவர்களின் குணநலன்களில் முடிந்தவரையில், முழுமையாக பரிசுத்ததைக் கொண்டுவருவதேயாகும். தேவனுக்கென்றும், சத்தியத்தின் நிமித்தமாகவும், மகிழ்ச்சியோடே துன்பப்பட்டு, பூமிக்குரிய எல்லா சௌகரியங்கள், மேன்மைகள், வேலையினால் அடையும் ஆதாயங்கள் மற்றும் ஜீவனையே பணையம் வைத்து சத்தியத்திற்கு ஊழியம் செய்பவர்களே இந்த நிலையை அடைவார்கள்.
தெய்வீகத் திட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததின் காரணத்தினால், தேவன் சிறு மந்தைக்கு அளிக்கும் நன்மைகளைக் குறித்து குழப்பம் அடைகிறார்கள். ஓர் உலோகத்தில் மென்மையாக ஒரு பொருளைச் செய்ய அது பல முறைகள் சூடாக்கப்பட்டு குளிரச்செய்வது போல, மனுக்குலம் மீண்டும் சீரமைக்கப்படும் – மிகப் பிரம்மாண்டமான பணிக்கு தேவனுடைய கருவிகளாகவும், பிரதிநிதிகளாகவும், ஆயத்தப்படுபவர்கள். இப்படிப்பட்ட அக்கினிமயமான சோதனைகளுக்கும், அதன்பின் வரும் அதற்கு எதிரான சூழ்நிலைகளுக்கு (குளிர்) அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தீமை என்றுமே நன்மையை விளைவிக்காது. தேவன் என்றும் தீமைக்கும் மற்றும் செய்யப்படும் பாவங்களின் அளவிற்கும் மூலக்காரணர் அல்ல. மேலும், அவருடைய ஞானமும், வல்லமையும் அந்தத் தீமைகளின் பலன்களை நன்மைக்கு ஏதுவாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, தேவன் சாத்தானை பாவம் செய்ய அனுப்பவில்லை. அவரை பரிசுத்தம், நேர்மை மற்றும் பூரணருமாக சிருஷ்டித்தார். மேலும், சுயாதீனத்தை விசேஷித்த ஆசீர்வாதமாகக் கொடுத்திருந்தார். இவைகளை அவர் தேவனுடைய தெய்வீகத் திட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தினதால், பரிசுத்தமாக இருந்த தூதன், சாத்தானாகவும் – தேவனுக்கு எதிராளியாகவும் மாறினான். உடனடியாக அவனை அழிக்க தேவன் வல்லவராக இருந்தார். ஆனால் இதை அனுமதிப்பதின் மூலம் வரும் தீமையான அனுபவங்களின் அநேகப் பாடங்களைத் தூதர்களுக்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கும் உள்ளடக்கியிருப்பதை அவர் முன்னறிந்திருந்தார். அதுபோல் மனுக்குலத்தின் மத்தியில் உள்ள பாவத்தை – தேவன் எந்த நேரத்திலும் அகற்ற வல்லவராக இருந்தும், காலப்போக்கில் அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய அனந்த ஞானத்தினால், மனுஷனுடைய கோபம், தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும் என்று அவர் முன் அறிந்திருந்தார். ஆகவே பாவிகள் மற்றும் பாவத்தின் மேல் தேவனுடைய இறுதியான எச்சரிப்பைக் குறித்து தேவனுடைய பிள்ளைகள் பயப்படவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய திட்டத்தில், தீமையை அனுமதித்ததின் இரகசியத்தை வெளிப்படுத்தும் காலம், வெகு சமீபத்திலிருப்பதினால், பாவத்திற்கும், பாவிகளுக்கும் மிகுந்த செழிப்பாக இருக்கக்கூடிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தேவனுக்கு எதிராக செயல்படும் காரியங்களில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.