CD-LOVE-Q-49
R3434 [col. 2 P1-3]: –
இது வரையில் பதிவுகள் காட்டுகிறபடி, பேதுருவின் அவமதிப்பு அல்லது அவருடைய அவதூறையைப்பற்றி, ஆண்டவர் அவரிடம் ஒரு முறைக்கூட குறிப்பிடவில்லை. இவைகள் சொல்லப்படாமல் இருந்தாலும், பேதுரு அவைகளைப் பற்றி அறிந்திருந்தார், முன்னதாக அதற்காக அவர் மனங்கசந்து அழுதார். ஆண்டவரின் வெறுமனே கடிந்துக்கொள்ளும் வார்த்தைகள், கண்டித்தல் அவரை நம்பிக்கை அற்ற விதத்தில் சோர்வடையச் செய்திருக்கலாம். “நீ என்னை நேசிக்கிறாயா?” என்ற கேள்வியே நம்முடைய ஆண்டவரின் பாணியில், சிட்சிப்பதாக இருந்தது. சீயோனின் ஆறுதலின் உண்மையான குமாரரும் குமாரத்திகளுமாகிய அனைவருமே, நம்முடைய பெரிய போதகரிடமிருந்து இந்த பாடத்தை கற்றுக் கொள்ளலாம். தண்டிக்கவும், திருத்தவும். கண்டிக்கவும் கடிந்துக்கொள்ளவும் முயலாமல், கூடுமான வரையில் இவைகளை தவிர்த்து, ஆண்டவரிடமும், அவருடைய மந்தையினிடமும் அந்த குற்றவாளியின் நோக்கம் என்ன என்பதை அறிந்துக்கொள்ள, கடந்த காலத்தைப் பற்றி அல்ல நிகழ்காலத்தை குறித்தே விசாரணை செய்வது நலமாக இருக்கும். “நான் போகாதிருந்தால் தேற்றவாளன் (பரிசுத்த ஆவி ) உங்களிடத்தில் வரார்.” என்று நம்முடைய ஆண்டவர் சொன்னபடி கண்டிப்பதற்கும், கடிந்துக் கொள்ளுதலுக்கும் பதிலாக, சபைக்கு ஆறுதல் தேவை என்பது ஒரு உண்மையான காரியம் என்று முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும். பரலோக பிதாவின் ஆசீர்வாதங்கள் பொழியப்படுவதற்குமுன் “மகா பரிசுத்தஸ்தலத்தில்” அவரிடம் “மீட்கும் பொருள் செலுத்தப்படவேண்டும். இயேசுவை அங்கீகரித்து, அவர்களுடைய வார்த்தையினால் அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் இந்த ஆசீர்வாதம், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதலின் ஆறுதலையும், மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களின் ஆறுதலையும் அளிக்கும். உண்மையில், பரிசுத்த ஆவி உங்களை கடிந்துக் கொள்ளுவார் என்று நம்முடைய ஆண்டவர் பேசினார் – ஆனால் சபையை கடிந்து கொள்வதாக அவர் சொல்லவில்லை. “இந்த உலகத்தின் பாவத்தை, வரக்கூடிய நியாயத்தீர்ப்பில் நீதியோடு கண்டித்து உணர்த்துவார்கள்.” பரிசுத்த ஆவியைப் பொருத்த வரையில், சபையை அது கையாள்வதில், கடிந்துக் கொள்தலுக்காக கொடுக்கப்படும் நெருங்கிய ஆலோசனையை அப்போஸ்தலர் கொடுக்கிறார் – “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் “, மீண்டுமாக, “ஆவியை அவித்துப் போடாதிருங்கள்” என்று அவர் கூறுகிறார். எபேசியர் 4:30. 1 தெசலோனிக்கேயர் 5:19. இதுவே சபையை பொருத்த வரைக்கும் பரிசுத்த ஆவியின் கிரியையாகும். தேவனுடைய ஜனங்களின் ஆறுதலுக்காக செய்யப்படும் மகத்தான முன்னேற்பாடு, இத்தகைய ஆறுதலின் அவசியத்தை தெளிவாக குறிப்பிடுகிறது. இதை கண்டுபிடிப்பது கடினமானதுமில்லை. கிருபை, அறிவு மற்றும் அன்பின் வளர்ச்சியை தடைச்செய்து, புது சிருஷ்டியை சிறைப்பிடிக்க அல்லது சோர்வடைச் செய்ய அல்லது பயமுறுத்த முயற்சி செய்து, விசுவாசமுள்ளவர்களுக்கு மட்டுமே தேவன் வாக்களித்த, பூரணத்தையும் மகிமையையும், அடைவதை தடுப்பதற்கு, தேவனுடைய ஜனங்கள் பாதகமான நிலையில் உள்ள ஒவ்வொன்றாலும் (உலகம் மாம்சம், சாத்தான்) சூழ்ந்துக் கொள்ளப்படுகிறார்கள். சபையில் ஆறுதலின் மகன்களாகவும், மகள்களாகவும் இருப்பதற்கு, நம்முடைய இருதயத்தில் ஏராளமான அன்பும், இரக்கமும் அதிகமாக தேவை. எந்த அளவுக்கு இரக்கமும் அன்பும் வருகிறதோ, அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் சண்டை மனபாண்மை, மற்றவர்களை நியாயந்தீர்த்தல், குற்றம் கண்டுபிடித்தல், வாதாடும் சிந்தனைகள் அனைத்தையும் வெளியேற்றப்படும். முதன் முதலில் கோபம், தீமை, பகை, கலகம், வீண் பெருமையின் ஆவி வெளியேற்றப்பட்டது போல இப்போதும் இது நடைபெறும்.
R3436 [col. 2P3]: –
இந்த இரட்சிப்பை குறித்தே அப்போஸ்தலர் கூறும் பொது, இயேசு மரித்தாலும், உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவாசித்தால், தேவனுடைய ஜனங்கள், நம்பிக்கையற்ற மற்றவர்களை போல துக்கிக்கக்கூடாது. மேலும் அவர் நமக்காகவும், இந்த முழு உலகத்தின் பாவங்களுக்காகவும், அவருடைய மரணம் ஒரு பலியானது என்ற வேத நூலின் பதிவுகளையும் விசுவாசிப்போம். அதனால் இயேசுவில் நித்திரையடைந்தவர்களை, தேவன் இயேசுவை கொண்டும். அவர் வழியாகவும். மரணத்திலிருந்து கொண்டு வருவார். (1 தெசலோனிக்கேயர் 4:11-14) ஆதாமுக்குள் மரணத்தில் இறங்கிய இந்த முழு மனுக்குலத்திற்கு, இது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டதும், ஆறுதல் அளிக்கக்கூடிய சிந்தையுமாக இருக்கிறது. அதையொட்டி, தேவனுடைய நற்குணத்தைப் பற்றி கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை பெற, இவர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அதனால், அவர்களின் மரணம் ஒரு நித்திரையாக மாற்றப்பட்டு, ஆயிரமாண்டு விடியலில், அனைவரும் எழுப்பப்படுவார்கள். அவர்களின் விருப்பப்படி கீழ்படிதலினால் நித்திய ஜீவனுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
R3353 [col. 1P5]:
இதுவே சரியான நிலை. நாம் குறைவுப்பட்டாலும், இதைவிட குறைந்த தரநிலை நமக்கு இல்லை. நம்முடைய சொந்த பலவீனங்கள் மற்றும் அபூரணங்களை நாம் உணர்ந்து, அந்த படிநிலையை அடைய நாம் முயலும்போது, நமக்கெதிராக குற்றம் புரியும் சக மனிதர்களிடம் இரக்கம் காண்பிக்க வேண்டும். இதுவே அன்பு, இரக்கம் கனிவாகும். மற்றவர்களின் பலவீனங்களுக்கு இரக்கம் பாராட்டி, அவர்களை மன்னிக்க மகிழ்ச்சியோடு ஆயத்தமாக இருக்கக்கூடிய அன்பின் அளவில் ஒருவர் வளர்ச்சி அடையாவிட்டால் மற்றும் அவர்களுடைய எதிராளிகளை நேசிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் முன்னேறாவிட்டால். அவர்களுக்காக ஜெபிக்கக்கூட முடியாமல் போனால், ஆண்டவர் கோரும் குணலட்சனத்தின் இலக்கை அடைவதில் அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், அவர் எல்லாவிதமான திரளான பாவங்களை மூடக்கூடிய, அன்பென்னும் ஒரு முக்கியமான குணலட்சனத்தில் குறைந்திருப்பதினால், அவருடைய சொந்த மீறுதல்கள் (வழி விலகிச் செல்லுதல்) தள்ளுபடி செய்யப்படுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக மணவாட்டி வகுப்பில் இடம் பெறமாட்டார்கள். அன்பின் குணம் மற்றும் கொடுக்கக்கூடிய குணத்தைப் பெற்றிருப்ப வர்களை மட்டுமே அதில் பங்குப் பெறுவார்கள்.
R3646 [col. 2Last P] and R3647 [col. 1 P4 to end]: –
“ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” – என்பது தேவபிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் ஒன்றாகும். கிறிஸ்துவின் பிரமாணம் என்பது அன்பின் பிரமாணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கும்படி” அன்பு கூருகிறது. பெரும்பாலும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும், சில நேரங்களில் சிக்கல்கள் அதிகரித்து, அவைகளினால் பயந்து, குறுகக்கூடிய ஆத்துமாக்கள், அநேகமாக அதற்குள் மூழ்கடிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின் உடன் அங்கத்தினரின் அனுதாபமும், ஆலோசனையும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. உலக சிந்தை கொண்ட நண்பர்கள் இரக்கம் பாராட்டலாம், ஆனால் அவர்களின் ஆலோசனைகள் நிச்சயமாக தவறாக இருக்கும். ஆகையால் உலகத்தோடு அல்ல, கிறிஸ்துவின் சரீரத்திலே நாம் ஐக்கியப்பட்டிருப்பது அவசியம். கிறிஸ்துவின் சரீரத்தில் பல்வேறு அங்கங்கள், சுதந்தரிக்கப்பட்ட பல்வேறு பலவினங்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதிலும் போராட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் இந்த பலவீனங்கள் சில சமயங்களில் தாங்களும், மற்றவர்கள் பெற்றிருக்கும் கொண்டிருக்கும் உரிமைகளையும் வசதிகளையும் ஓரளவுக்கு தலையிடக்கூடியதாக இருக்கும். இங்கே தான் அப்போஸ்தலர் அறிவுரையாக ஒரு வார்த்தை கூறுகிறார். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக் கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15: 1,2) இப்படிப்பட்டவர்களோடு நாம் விவாதம் செய்யவேண்டும் என்றோ மற்றும் அவருடைய குறைகளை போக்க உதவிட முயற்சிக்கக்கூடாது என்றோ இதற்கு பொருள் அல்ல. இதை அன்பு மற்றும் சாந்தத்தின் ஆவியோடு, செய்யவேண்டும். நம்மை பிரியப்படுத்த முயலாமல், நம்முடைய பலவீனமான சகோதர, சகோதரிகளுக்கு உதவியாக நம்முடைய பொறுமையின் பரீட்சையை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். அப்போஸ்தலரின் ஆலோசனையின்படி, “நாம் ஒவ்வொருவரும், அவரவர் சகோதரரின் நன்மைக்காகவும், நல்லொழுக்கப்படுத்துவதற்கும் முயலுவோம். “அதாவது, அவரது தவறுகளை வெறுமனே புறக்கணித்து, அவைகள் அனைத்தும் சரி என்று கருதாமல், உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளையும் இன்னும் பொறுமையோடும் தாழ்மையோடும் சகித்து. அவைகளுக்கு எதிராக போராட அன்போடு வலியுறுத்த வேண்டும். இந்த ஆவி நிலவினால், சரீரத்தில் எந்தவிதமான பிரிவுகளும் இராது என்று மேலும் அப்போஸ்தலர் காட்டுகிறார். (1 கொரிந்தியர் 12:24-26) ஏனெனில், உறுப்பினர் அனைவருமே பரஸ்பர கவனிப்பும், ஒருவருக்கொருவர் அன்பையுைம் கொண்டுள்ளனர். இந்த விதமான கவனிப்பு. எல்லாரையும் நன்மைக்கு ஏதுவாக ஊக்கப்படுத்தவும், பலப்படுத்தவும், தோல்வியுற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தி, பலவீனமான சகோதரர்களின் குறைகளை மற்றவர்கள் கண்டிப்பதற்கு வெளிப்படுத்தாமல், அவைகளை மறைக்க முயற்சித்து, அன்பென்னும் போர்வையால் அவைகளை மூடுவார்கள். இவ்வாறாக, அன்பினால் பிணைக்கப்பட்ட, உண்மையான கிறிஸ்துவின் சரீரத்தில், அனைவரும் அவரோடு பாடுப்படுவார்கள். அல்லது ஒருவர் மகிமைப்படுத்தப்பட்டால், எல்லாரும் அவரோடுக்கூட சந்தோஷப்படுவார்கள். பூமிக்குரிய குடும்பத்தில் ஒரு உறுப்பினர் கௌரவமான ஒரு நிலைக்கு உயரும்போது, மற்ற அனைத்து உறுப்பினர்களும் அந்த கௌரவத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கைப் பெறுவதை போல, ஓர் அளவுக்கு அந்த மகிமையிலும் பங்கையும் பெறுவார்கள். இத்தகைய தன்னலமற்ற அன்பிற்கு, மனத்தாழ்மை. மென்மை, பொறுமை, விசுவாசம் ஆகியவை எவ்வளவு அவசியம், ஆண்டவரின் வார்த்தைகள் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தாக உள்ளது. ” நீங்கள் மனந்திரும்பி (இந்த உலகத்தின் ஆவியிலிருந்து, கிறிஸ்துவின் ஆவிக்கு பிள்ளைகளைப் போல் (சாந்தத்திலும், ஆகாவிட்டால், கற்றுக்கொள்ளுதலிலும்) பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 18:1-6)
மேலும், “இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றும் கூறுகிறார். ஆகையால், நாம் ஒவ்வொருவரோடும், மனதார ஐக்கியப்படுதற்கு துரிதப்படுவோம். மேலும், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” என்று அனைவரும் கவனிக்கும்படியாக நமக்கொரு எச்சரிப்பும் கொடுக்கிறார். அப்படியானால், நாம் எவ்வளவு கவனத்தோடு ஒருவரையொருவர் நோக்க வேண்டும். அன்பார்ந்தவர்களே, நேசிக்கப்பட்டவர்களே, ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவின் சரீரத்தில் பிளவுகள் இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்தை அதாவது அன்பின் பிரமாணத்தை நிறைவேற்றி. அதிகதிகமாக அன்பின் கட்டினால் பிணைக்கப்பட்டிருப்போம். கிறிஸ்துவின் நாமத்தினால் தங்களை அர்ப்பணித்தவர்கள் அனைவரையும், ஆசீர்வதிக்கப்பட்ட இந்த கிறிஸ்துவின் பிரமாணம் முழுமையாக ஆளக்கடவது. மற்றும் சமாதானத்தையும், இசைவையும், மகிழ்ச்சியையும் எவ்வாறு கொண்டு வரும் என்றும் மென்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள மனைவிகளையும், சிறந்த, கனிவுள்ள, அன்பான கணவர்களையும், அதிக விசுவாசமுள்ள, அன்பான பிள்ளைகளையும், மிகவும் நல்ல அயலகத்தாரையும் எவ்வாறு உண்டு பண்ணுகிறது என்றும் தற்போதைய அனுபவத்தின், கஷ்டத்தின், தண்ணீரின் மீது எண்ணெய் ஊற்றி, நீதியின் பலன்களின் மகிழ்ச்சிக்காக இருதயத்தை எப்படி ஆயத்தப்படுத்துகிறது என்றும் காண்பிக்கக்கூடிய, அதன் பக்தியுள்ள தாக்கம் இந்த உலகத்தின் மேல் பிரகாசிக்கட்டும்.