CD-LOVE-Q-51
உபாகமம் 13:3 “அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிற வைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்”
R2258 [col. 1 P2]: –
இந்த சிந்தைக்கு இசைவாக, மாம்ச இஸ்ரயேலுக்கு, நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் – “அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்” (உபாகமம் 13:3) இது சுவிசேஷ யுகம் முழுவதிலும், உண்மையான இஸ்ரயேலர்களாகிய நமக்கு, தேவனுடைய வழிகளையும், நோக்கத்தையும், பொருளையும் விளக்குகிறது. அவர்கள் அவர் மேல் கொண்ட அன்பின் பலத்தையும், வலிமையையும் உறுதிப்படுத்தும்படிக்கு. அவர் தம் ஜனங்களை சோதித்து, நிரூபிக்கிறார். “என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன், தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை” என்று அவர் கூறுகிறார். முழுமையாக தங்களை அர்ப்பணித்து, உடன்படிக்கை செய்தவர்கள், அதை கடைப்பிடிக்க தவறிவிட்டு, அதன் தேவைகளுக்கு கீழ்ப்படிய தவறின அனைவரிடமும், தேவனுக்கான அன்பில் உள்ள குறைகள் குறிப்பிடப்படும். மற்றும் அந்த சுய – சித்தம் இன்னும் அவர்களின் இருதயத்தை ஆளுகைச் செய்து, தேவனுக்கு இரண்டாவதாக ஒரு இடத்தை கொடுக்கிறது. தேவனுடைய கிருபையினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல இருதயத்தை உடையவர்கள் மட்டுமே இராஜ்யம் கொடுக்கப்படும். அவர்கள் தங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேவனை நேசிப்பார்கள். “கர்த்தாவே, என்னுடைய சித்தம் அல்ல. உம்முடைய சித்தம் செய்ய வருகிறேன்” என்று அவர்களால் சொல்ல கூடும். கர்த்தருக்கு முழுமையான கீழ்ப்படிதல் என்ற இந்த சூழ்நிலையைக் காட்டிலும் வேறு எந்த சூழ்நிலையும், நம்மை இராஜ்யத்திற்கு தகுதிப்படுத்தாது. தேவனிடம் முழுமையான அன்பும், கீழ்படிதலும் இருப்பதற்கு இந்த நிலையே அடையாளமாக உள்ளது. “…தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை (பரலோகத்தின் அனைத்து காரியங்களும்) கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;” என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
F369[P1]:
நம்முடைய ஆண்டவரோடு நாம் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அன்பின் பிரமாணம் அடிப்படையாக இருந்தபோது, அதன் கீழாக நாம் புது சிருஷ்டிகளானோம். இருந்தாலும் முதலாவது, நாம் அந்தப் பிரமாணத்தை முற்றுமாக விளங்கிக்கொள்ளவில்லை. நாம் கிறிஸ்துவின் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து, அன்பின் உண்மையான அர்த்தத்தை அதன் பூரணத்தில், அதன் முழுமையான தன்மையில் கற்றுக்கொண்டு, கிருபையிலும், அறிவிலும் வளர்ந்து – மென்மை, சாந்தம், பொறுமை, சகோதர இரக்கம் போன்ற பல அன்பின் கூருகள் மற்றும் குணங்கள் நம்முடைய விசுவாசத்தோடு கூட்டப்படுகிறது. நாம் இந்த அன்பின் வழிகளில் சோதிக்கப்படுகிறோம். நம்முடைய பட்டப்படிப்பின் பரிசோதனை குறிப்பாக இருந்த விஷயத்தில் இருக்கும். பரிபூரண அன்பையும், சுயத்தை பலியாக செலுத்தும் அன்பையும் பெற்றவர்கள் மட்டுமே, புது சிருஷ்டியாகவும், கிறிஸ்துவின் சரீரமான சபையின் உறுப்பினராகவும் இருக்கத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணப்படுவார்கள்.