CD-EVILSPEAK-Q-18
R2734 (col.1p2:4): –
“இருதயத்தில் பரிசுத்தம்” என்பதில் உள்ள அர்த்தங்களை அநேகர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இந்த மாம்சத்தில் இது கூடாத காரியம் என்று ஒரு வகுப்பார் கருதுகிறார்கள். வேறு சிலர் – ஒவ்வொரு வார்த்தைகளிலும், கிரியையிலும், சிந்தையிலும் பரிபூரணமான பரிசுத்தத்தில் இருக்க வேண்டும் என்று நம்பி, தாங்கள் அப்படியே இருப்பதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் போதித்து வருகிறார்கள். இவர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கிறார்கள்.
தங்களுடைய சொந்த இருதயத்தின் நிலையை அறியாத இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, நம்முடைய ஆண்டவரின் நாட்களிலிருந்த பரிசேயர்கள் தங்களை சட்டத்தை முழுமையாக கைக்கொள்ளக்கூடிய பரிபூரணமான நீதிமான் என்று பறைசாற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் அவர்களுக்கு மிக அவசியம் என்பதையும், அறியாமல், தங்களுடைய சொந்த நீதியாகிய கந்தையான வஞ்சகத்தை அணிந்து கொண்டு தங்களை ராஜ்யத்திற்கு அபாத்திரராக தீர்த்துக்கொண்டார்கள். அதே போல இந்நாளிலும், நாங்கள் வார்த்தையிலும், கிரியையிலும் அபூரணராக இருக்கிறோம் என்று கூறுகிறவர்கள், தங்களுடைய பலவீனங்களுக்கும் அபூரணத்திற்கும் தவறுகளுக்கும் தாங்களே குருடாக்கப்பட்டவர்களாக தேவனுடைய பார்வையில் மிக மோசமான நிலையில் உள்ளனர். தங்களை பாவி என்று தேவனிடத்தில் தங்களை அறிக்கையிடுபவர்களைக் காட்டிலும் இவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் தங்களை பாவிகள் என்று அறிக்கையிடுகிறவர்கள், கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தால் மூடப்பட்டு தேவனுடைய பார்வையில் நீதிமானாக எண்ணப்படுகிறார்கள்.
அதே, இக்காலத்தில் இருதயத்தில் தூய்மைப்படுவது கூடாத காரியம் என்று நினைப்பவர்களும் தவறாக சிந்திக்கிறார்கள். இருதயத்தில் பரிசுத்தத்திற்கும் – வார்த்தைகளிலும் கிரியைகளிலும் பரிப்பூரணமான நீதி வெளிப்படுவதற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசத்தை அறியாததினால், இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் வருவதுண்டு. இருதயம் என்பதின் சிந்தை, அதில் உள்ள சித்தம் – உண்மையான மனிதனின் நோக்கத்தை குறிக்கும். இப்படிப்பட்ட யோசனைகளை நம்முடைய சிந்தைக்கு முன் கொண்டுவரும் போது, ஒருவருடைய இருதயம் தூய்மையாக உள்ளதா, அதில் உள்ள நோக்கங்கள் தூய்மையாக இருந்தாலும், தனக்குள் இருக்கும் நல்ல நோக்கத்திற்கு இசைவாக கிரியை செய்ய முடியாது என்று அறிக்கையிடுவதைக் காணலாம். இந்தச் சிந்தைகளை நம்முடன் கொண்டுவந்தபின் ஒருவர் இருதயத்தில் சுத்தமுள்ளவரா அதாவது பரிசுத்தமான நோக்கம் உடையவர்களா என்று எளிதில் அறிந்துகொள்ளலாம். இருப்பினும், இந்த நல்ல எண்ணங்களைக் கடுமையான முயற்சியினாலும் செயல்படுத்த முடியவில்லை என்று அறிக்கையிடுதலையும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவுக்கு முன் சுத்தமான இருதயம் கொண்டவர்கள், ஒரே சிந்தை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் பரிசுத்தமான நோக்கத்தில், முதலில் தேவனுடைய சித்தத்தை செய்ய முயற்சிக்கும். “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” யாக் 4:8 என்று அப்போஸ்தலரின் உற்சாகமான வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அளிக்கிறது.