CD-EVILSPEAK-Q-24
R3595 (col.2p1)
உலகத்தின் அளவுகோலின்படி அவதூறு பேசுபவன் ஒரு திருடன் என்று – ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.
R2444 (col.1P5-col.,2P2): –
முதலாவதாக செய்யப்பட்ட தவறு, அடுத்துவரும் தவறை நியாயப்படுத்த முடியாது என்று தெய்வீக சட்டங்களும், மனித சட்டங்களும் ஒத்துக் கொள்கிறது. ஒரு குற்றம் புரிந்துவிட்டால், உலகப்பிரகாரமான நீதிமன்றங்கள் குற்றவாளிக்கு நியாயமான தண்டனைத் தீர்ப்பு அளிக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் கைகளினால் தண்டனைகள் அனுமதிக்கப்படுவதில்லை. முரட்டாட்டமான வார்த்தைகளினாலும், நாவைப் போல கூர்மையான ஆயுதங்களினாலும், பகையினாலும் பொறாமையினாலும் குற்றம் புரிந்தவரின் பெயரைக் கெடுப்பது போன்ற எந்தக் காரியங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையில் அவதூறு பேசுகிற அநேகர் என்றுமே குற்றப்படுத்தப்படுவதில்லை. இப்படிப்பட்ட அவதூறான பேச்சுக்கள் பேசுபவர்களுக்கும் தங்களை சமுதாயத்திற்கு காலப்போக்கில் அதிகமான கேடுகளை விளைவிக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய நல்ல பெயரை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள்.