CD-PRAYER-Q-24
R3136 [col. 2:5, 6]: –
“இடைவிடாமல் ஜெபிப்பது, ஒவ்வொரு காரியத்திற்காகவும் நன்றி செலுத்துங்கள்”. கிறிஸ்துவின் பள்ளியில் மேம்பட்ட மாணவர்கள் சிலர் மட்டுமே இந்த அறிவுரையை தெளிவாக புரிந்து கொள்ள ஆயத்தமாக உள்ளனர். பரலோக நலன்களுக்காக பூமிக்குரிய நலன்களை விட்டுகொடுத்து, அவர்களின் சித்தங்கள், தற்கால அவர்களது விருப்பங்களையும் தேவனிடம் ஒப்படைத்த பின்னர், தேவனுடைய ஜனங்கள், பூமிக்குரிய நல்ல விஷயங்களுக்காக இடைவிடாமல் ஜெபிப்பதில் மற்றவர்களை காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளார்கள். மேலுள்ள விஷயங்களின் மேல் தங்களுடைய நாட்டத்தை வைத்திருப்பதினால். அவர்களின் ஜெபங்கள் அவைகளைப்பற்றியதாகவே உள்ளது பரலோக வஸ்திரம், பரலோக உணவு. பரலோக இரக்கம், அவர்களின் ஜெபம் விசேஷமாக இப்படிப்பட்ட தெய்வீக முன்னேற்பாட்டின் வழிநடத்துதல்களுக்காக உள்ளது. இப்படிப்பட்ட தெய்வீக கிருபையான உதவிகள், அவர்களது சிறந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இரக்கமுள்ள தேவன் கொடுக்கக்கூடிய இப்படிப்பட்ட அனுபவங்களில் எப்போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆசீர்வாதங்களுக்கும், இன்னும் பெறப்போகிறவைகளுக்கும் நன்றி செலுத்துவதையே அவர்களின் ஜெபங்களில் அதிகதிகமாக காணப்படுகிறது. இவைகளை விசுவாசத்தினால் பற்றிக்கொள்கிறார்கள். தேவனோடு ஐக்கியப்பட்டு, அவருடைய சித்தத்தை செய்வதில் முழுமையாக அர்ப்பணிக்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருப்பதால் அவர்களின் ஜெபங்கள் இடைவிடாமல் ஏறெடுக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அவருடைய ஆசீர்வாதங்களுக்காகவும், ஒவ்வொரு நாளின் முடிவிலும் தங்கள் நன்றிகளை ஏறெடுப்பதற்காகவும் மட்டுமே ஜெபங்களை ஏறெடுக்காமல், வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அவர்களின் அனைத்தையும் தேவனிடம் அர்ப்பணித்துவிட்டதை நினைவுக் கூர்ந்தவர்களாக, வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களிலும் அவரை விசுவாசத்துடன் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் செய்யும் பணிகளின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, விசுவாசத்தினால், வாழ்க்கையின் அனைத்து நலன்களுடனும், தேவனுடைய ஏற்பாட்டின் தொடர்பை உணர்ந்து அதற்கேற்ப நன்றி செலுத்துவார்கள். இதுவே நம்மை குறித்த தேவனுடைய விருப்பமாகும்; – நாம் தொடர்ந்து அவருடைய சித்தத்தையும் ஆசீர்வாதத்தையுமே நோக்கி இருக்கக்கூடிய மன நிலையில் வாழவேண்டும் என்று அவர் சித்தம் கொண்டிருக்கிறார். நாம் குறுகிய பாதையில், முன்னேறி செல்வதற்கு மிகவும் சாதகமான நிலையாக இது இருப்பதினாலும், நம்முடைய அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலை உறுதிப் படுத்திக்கொள்வதற்கும் இது சிறந்த உதவியாக இருப்பதினாலும் நம்மை பொறுத்தவரை இவைகளையே அவர் விரும்புகிறார்.
R3351 [col.1:8]: –
தேவனுடைய ஜனங்கள் தொடர்ந்து முழங்காலில் நிற்கவேண்டும் என்று அப்போஸ்தலர் அர்த்தம் கொள்கிறார் என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. ஆனால் அதற்கு மாறாக, அவர்களின் இருதயம், மனரீதியாகவும், ஆவிக்குரிய வகையிலும். வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தேவனுடைய வழிநடத்துதலுக்காக எதிர்பார்த்து, தொடர்ந்து ஜெப சிந்தையோடு. அவர்களது நடத்தைகள் முழுமையாக தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா என்று கவனித்திருக்கவேண்டும். ஆண்டவரோடு நித்தியமான ஐக்கியத்தில் இருக்கவேண்டும் என்ற சிந்தை, தொடர்ந்து அவரது முகத்தில் உள்ள புன்னகையை பார்த்து, பூமிக்குரிய எந்த மேகமும் நம்முடைய தந்தையின் முகத்தையும் அவருடைய ஆசிர்வாதத்தையும் நம்மை மறைக்காதபடிக்கு தொடர்ந்து விழித்திருந்து கவனித்திருப்பதே ஒரு வளர்ச்சி அடைந்த கிறிஸ்தவருடைய மனநிலையாக இருக்கும். இப்படிப்பட்டவருக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தேவனோடு ஐக்கியம்கொள்ளுவதற்கான காலமாகும். தொழிலைப் பற்றிய கவலைகள், வீட்டு கவலைகள் போன்றவைகள், இப்படிப்பட்ட ஐக்கியத்தை குறுக்கிட்டால், இந்த வாழ்க்கையின் கவலைகளினால் நாம் அதிகமாக சுமத்தப்பட்டிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது. அது உடனடியாக சரிசெய்யப்படவேண்டும். நம்முடைய தொழில் உள்ள பொறுப்புகளை குறைத்து காரியங்களை சரிசெய்யவேண்டும் அல்லது இது இயலவில்லை என்றால், இவைகளை சமநிலைப்படுத்தும்படிக்கு வாழ்க்கையின் அற்பமான விஜயங்களில் கூட (மிக பெரிய காரியங்களானாலும் சரி) வழிகாட்டு தலுக்காக நம்முடைய இருதயங்களை தொடர்ந்து தேவனிடம் மறுபடியும் மறுபடியும் திருப்பககூடியவர்களாக இருக்கிறோம்.