CD-PRAYER-Q-21
R3061 [col. 1:2-4]: –
சில நேரங்களில் ஆவிக்குரிய இஸ்ரலேர்களுடனும் இதே போன்ற காரியங்கள் நடக்கிறதல்லவா? சிலர் ஆவிக்குரிய மன்னாவை திருப்தியாக புசித்த பிறகும், பூமிக்குரிய பெரிதும். மாம்சமான நன்மைக்காக தேவனுடனான அவர்களின் ஐக்கியத்தை தடைச்செய்யக்கூடிய வாஞ்சையுள்ள ஆவியாகிய சுயநலத்தை அனுமதிக்கிறார்களே. நம்முடைய தலைவருமாகிய ஆண்டவருடைய ஞானத்தைப் பெறுவதற்கும், இதுவரை நம்மை விடுவித்து, உணவளித்து, வழிநடத்திய அவருடைய அன்பு, இன்னும் ஞானமாகவும் நித்தியத்திற்கு நன்மையாகவும் இருக்கிறது அல்லவா.
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் அதிகபட்சமான மறுசீரமைப்பை கொண்டுவரும், அதாவது நம் வசம் இருப்பதை விட அதிக வசதி, சுகம், செல்வம் மற்றும் சமூக செல்வாக்கிற்கான ஆசை, சிலநேரங்களில் அது தவிர்க்கக்கூடிய சிருஷ்டியின் வலி மற்றும் வேதனைகளின் நமது பங்கிற்கும் மேலும் இவைகளை அகற்றுவதற்கான நம்முடைய இயலாமைக்கும் எதிராக உள்ளது. சில நேரங்களில் அது நோய்களுக்கும் நேசிப்பவரின் மரணத்திற்கும் எதிராக உள்ளது.
எவ்வளவு விவேகமற்ற காரியம்! ஆவிக்குரிய இஸ்ரயேலின் அனைத்து விவகாரங்களும் தேவனுடைய பராமரிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இருப்பதை, ஆவிக்குரிய மன்னாவினால் போஷிக்கப்பட்டவர்கள் உணரவேண்டாமோ!” அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.” (புலம்பல், எபிரெயர் 12:10) ஆஹா! முணுமுணுப்பவர்களின் ஜெபங்கள், பதிலளிக்கப்படும் போது கூட (இஸ்ரயேலை போல) சில சமயங்களில் எதிர்பாராத பின்னேற்றத்தை கொண்டு வருவதாக சிலர் கண்டறிந்துள்ளனர் அதாவது சுயநலமான ஜெபங்களுக்கு அதிக செலவுள்ளது. சிலர் செல்வத்தைப் பெற்றிருக்கிறார்கள், சத்தியத்தையும் அதன் ஊழியத்தையும் இழந்துவிட்டார்கள், ஒருசிலர் ஆஸ்தியைச் சேர்த்து, இதனிமித்தம் தேவ ஊழியத்தையும் சத்தியத்தையும் இழந்துவிடுகின்றனர். சிலர் சரீர பெலனைப் பெற்று அதனிமித்தமாகக் கடினமான பல சோதனைகளை அடைகின்றனர், சிலர் தாங்கள் நேசிப்போரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டுக்கொண்டாலும் அவர்களது ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கவில்லை எனப்தைப் பிற்பாடு உணர்ந்து கொண்டனர்.
அவர்கள் கர்த்தரை மறைமுகமாக நம்பவேண்டும் மற்றும் அவர்கள் பெற்றிருந்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, பயன்படுத்தி, சுற்றுப்புறங்கள் வழங்கும் அனைத்தையும் புத்திசாலித்தனமாகவும், முடிந்தவரை முழுமையாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதே இஸ்ரயேலுக்கான ஒரு பாடமாக இருந்தது – எல்லாவற்றையும் தேவனுடைய பரிசுகளாக இயற்கையாகவும், அதிசயமாகவும் ஏற்றுக்கொள்வது, அங்கு அவர்கள் திருப்தியோடும் நன்றியோடும் மகிழ்ச்சியாக இருந்திருக்கவேண்டும். அதேபோல ஆவிக்குரிய இஸ்ரயேலரும், அவர்கள் வசம் இருப்பதை ஞானமாக பயன்படுத்தவேண்டும் தேவனுடைய பரிசுகள் அனைத்தையும் நன்றியோடு ஏற்றுகொள்ளவேண்டும். ஆனால் அவர்களின் விண்ணப்பம் நீடிய பொறுமை மற்றும் இருதயத்தின் நிறைவை, உள்ளடக்கிய ஆவிக்குரிய வரங்களுக்காகவே இருக்கவேண்டும்.