CD-PRAYER-Q-14
R3128 [Col. 2:5): –
நமக்கு தேவையானவைகளுக்காக நாம் விண்ணப்பிக்காமல், அவருடைய வாக்குத்தத்தங்களை கோராமல் அவைகளை தேவன் நமக்கு ஏன் கொடுப்பதில்லை என்ற கேள்வி எழும்பலாம். சந்தேகமின்றி, அவருடைய கிருபைகளைப் பெறுவதற்கும் அவைகளினால் நன்மையடைவதற்கும். முன்னதாகவே நம்முடைய இருதயத்தை சரியான மனநிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே காரணமாகும். அப்படியாக இருந்தாலும், இதுவரை நமக்கு வழங்கப்பட்ட, பொழிந்திட்ட தெய்வீக கவனிப்பை நாம் போதிய அளவில் புரிந்துப் பாராட்ட வில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அநேகமாக ஜெபம் மற்றும் நன்றியுணர்வுக்கான காரணங்களுக்கு ஒரு பகுதியும் கூட நாம் பகுத்துணராதவர்களாக இருக்கிறோம் நாம் அறியப்பட்டதை போல, நாம் அறிந்துகொள்ளும் போது காலப்போக்கில் நாம் அதை காண்போம். இது இயற்கையான பசியாக இருந்தாலும் சரி, நாம் ஒரே ஒழுங்கு முறையில் சரியான நேரத்தில் அதிகமாக உணவை உட்கொண்டிருப்பதை காட்டிலும் நாம் மிகுந்த பசியாக இருந்தால் மட்டுமே, உணவுக்கான நம்முடைய தேவையை நாம் உணர்ந்துக்கொள்ள முடியும்.
R2865 [Col. 2 P2]: –
இங்கு, தேவதூதனுடனான யாக்கோபின் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு சரியான பாடம் வருகிறது. பண்டைய காலத்தில் அடிக்கடி நடந்ததுபோல ஒரு தூதன் மனுஷனைப் போல தோன்றினார். இருப்பினும், அவர் தேவனால் அனுப்பப்பட்ட பிரதிநிதி என்று யாக்கோபு அவரை அடையாளம் கண்டுகொண்டவராக, அவரை பிடித்துக் கொண்டு, தன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று கெஞ்சினார். தேவதூதன் யாக்கோபின் பிடியில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு போதுமான வல்லமை இல்லாதவராக, விடியற்காலம் வரைக்கு, “நான் போகட்டும்” என்று தூதன் சொன்னபோது, “என்னை ஆசீர்வதித்தால் மட்டுமே உம்மை விடுவேன்” என்று யாக்கோபு சொல்லி போராடி கொண்டு இருந்ததாகவும் நாம் எதிர்ப்பார்க்க முடியாது. இதற்கு மாறாக நாம் நினைக்கவேண்டிய காரியம் என்னவெனில், தேவன் யாக்கோபை ஆசீர்வதிப்பதற்கு பிரியமுள்ளவராக இருந்தார். அந்த நோக்கத்திற்காக அவர் ஒரு தூதனையும் அனுப்பினார். தேவனுடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய கிருபைகளையும் யாக்கோபு எந்த அளவுக்கு விரும்புகிறார் என்பதை நிரூபிக்கும்படியாக, இந்த சூழ்நிலை யாக்கோபின் ஏக்கத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பாக இருந்தது. விரும்பப்பட்ட பலன் கிடைத்தபோது, தேவனோடு இசைந்திருப்பதற்கும் தேவன் மட்டுமே இத்தகையான ஆசீர்வாதங்களை கொடுப்பார் என்பதற்குமான, விருப்பத்தின் தீவிரத்தை யாக்கோபு நிரூபித்தபோது – அந்த ஆசீர்வாதம் யாக்கோபுக்கு வந்தது – அவர் வெற்றிப்பெற்றார். தேவன் கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஒன்றை, அவருடைய தூதன் மூலமாக பெறுவதற்கு. யாக்கோபு போராடினார் என்பதல்ல. ஆனால், யாக்கோபு அந்த ஆசீர்வாதங்களை பெறுவதற்கு, தேவன் கண்டு பரிசளிக்கக்கூடிய அவருடைய பக்திவைராக்கியம் பெலன், பொறுமை மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தும்படிக்கு போராடினர்.