CD-PRAYER-Q-10
இதேபோல நம்முடைய ஆண்டவரின் அறிவுரை: “ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள், இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு. 6:25-34) “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத் திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” (யோவான் 15:7) என்று மீண்டும் நம்முடைய ஆண்டவர் கூறுகிறார். பின்வரும் நிபந்தனைகள் மிக முக்கியமானது:
(1) ஜெபிக்கக்கூடியவர் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும் ஒப்புராக்குதலின் பலியின் புண்ணியங்களினால், அவரால் ஏற்றுகொள்ளப்பட்டு, உயர்நிலையான ஐக்கியத்திற்குள் வந்திருக்க வேண்டும். மற்றும் அவருடைய சித்தத்திற்கும், ஊழியத்திற்கும் அர்ப்பணித்து, அதற்கும் மேலாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெபத்தில் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு, புது சிருஷ்டிகளாக, அவர் கிறிஸ்துவின் சரீர அங்கமாக தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
(2) அவர் தனக்குள் தேவனுடைய சத்தியம் நிலைத்திருக்க அனுமதிக்கவும் வேண்டும். அவர் தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக, அவர் தருவதற்கு விரும்பக்கூடிய காரிங்களை கேட்கக்கூடிய ஞானத்தை பெற்றிருந்தால், அவர் சத்தியத்தின் வார்த்தையிலும், கிருபையிலும் பங்கெடுக்கவேண்டும் – இல்லையேல், கிறிஸ்துவுக்குள் ஒரு புது சிருஷ்டிகளாக இருப்பினும், அவருடைய ஜெபங்கள் ஒழுங்கற்று இருப்பதினால், அடிக்கடி பதிலளிக்கப்படாமல் போகும். இந்த இரண்டு தகுதிகளைப் பெற்றவர்கள் மட்டுமே, முழு நம்பிக்கையுடனும் முழு உத்தரவாதத்தடனும் தேவன் குறித்த காலத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பதில் அளிக்கப்படும் என்று விசுவாசத்தில் முழு உறுதியோடு கிருபாசனத்தண்டைக்கு அணுகலாம். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே மகிழ்ச்சியை முழுமையாக உணரமுடியும்.
வசனங்கள் விவரிக்கிறபடி ஜெபம் தேவனுடைய சமுகத்திற்கு அணுகுவதற்கும், அவரோடு ஐக்கியப்படுவதற்கான ஒரு முயற்சியாகும். “ஏற்ற சமயத்தில் கிருபையை அடையவும், இரக்கத்தை பெறவும்” யாரால் தைரியமாய் கிருபாசனத்தண்டைக்கு சேர முடியும்? (எபிரெயர் 4:16) பொதுவாக இந்த உலகத்திற்கு இப்படிப்பட்டதான தொடர்பும், ஜெபத்தில் சிலாக்கியமும் இல்லை என்று அப்போஸ்தலனாகிய பவுலோடுகூட நாமும் பதில் அளிக்கிறோம். உண்மையில், நிச்சயமாக, கோடிக்கணக்கான அந்நியர்கள் பல கருத்தாக்கங்கள் கொண்ட தெய்வங்களை அவைகளுக்கு ஏற்றமுறையில் வழிபடுகிறார்கள். ஆனாலும் அவர்களின் ஜெபங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) கொர்நெலியு இப்படிப்பட்டவராக இருந்தார். இவர் உண்மையான தேவனை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் பயபக்தியுடன் இருந்து, அவருடைய சித்தத்தை செய்வதற்கு வாஞ்சித்து அதை அறிந்துக்கொள்ள விரும்பினார். தேவனுடைய தெய்வீக திட்டத்தில், அவருடைய தயவு புறஜாதிகளுக்கு நீடிப்பதற்கு அனுமதிக்கப்படும் தேவையான வளர்ச்சியின் காலம் அடைந்தவுடன், அவருடைய ஜெபத்திற்கும். தானதர்மங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தேவனோடு முழுமையாகவும். சரியான நிலையில் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படாமல், அந்நியரும். புறம்பாக இருக்கும் அவருடைய நிலையிலுமிருந்து, தேவனோடு இசைந்திருப்பதற்கான நிலையை அதாவது புத்திரராக இருக்கும் சிலாக்கியத்தை. இன்னும் சொல்லப்போனால், தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு அணுகுவதற்கான சிலாக்கியம் பெற்றுக்கொள்வதற்கான “வார்த்தைகளை” அறிவிக்கும்படிக்கு பேதுரு அனுப்பப்பட்டார். இந்த விஷயத்தை பொருத்த வரையில் பொதுவாக தளர்வான (தளர்ச்சியான) கருத்துக்கள் உள்ளது. அதாவது எந்த நபரும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், அங்கீகிகாரத்துடன் கிருபாசனத் தண்டைக்கு செல்லலாம் என்று தப்பாக கருதப்படுகிறது.
ஜெபத்தில் தொடர்புக்கொள்ளக்கூடிய இந்த சிலாக்கியத்தை முந்தி கொர்நேலியு பயன்படுத்துவது மிக அவசியமாக இருந்ததினால், பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு, விசுவாசித்து, அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருந்தது. கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பையும், அதனால் வரும் ஒப்புரவாக்குதலையும். இப்படியாக, தேவனுடைய குடும்பத்திற்குள் வருவதற்கு கிடைத்த சிலாக்கியத்தையும் பேதுரு அவருக்கு விவரித்தார். இந்த ஒரு அறிவு ஒவ்வொரு நபருக்கும் சமமாக தேவை. கிறிஸ்து நமக்காக “புதிதும் ஜீவனுமான” அல்லது “புதிதான ஜீவனுக்குரிய வாழ்க்கையை” தமது மாம்சத்தின் திரை வழியாக திறந்தார் என்று அப்போஸ்தலனாகிய பவுலும் இதே சிந்தயை வெளிப்படுத்துகிறார். சொல்லப்போனால், பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய சகோதரர்களாகிய நமக்கு இயேசுவின் இரத்தத்தினால் தைரியம் உண்டாயிருக்கிறது. தேவனுடைய வீட்டின்மீது மகா பிரதான ஆசாரியரோடு சம்பந்தப்பட்டிருக்கும் இத்தகைய “சகோதரர்கள்”, உண்மையான இருதயத் தோடும், தங்களுடைய பாவங்களும், அக்கிரமங்களும் முழுமையாக மூடப்பட்டு, பிதாவாகிய தேவனால் அவர்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டார்கள் என்பதை உணர்ந்தவர்களாக விசுவாசத்தின் முழு உறுதியுடனும் அவரிடம் நெருங்கி வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். (எபிரெயர் 10:17-22) நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியால், நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தைண்டையிலே சேரக்கடவோம் என்று மீண்டும் அதே அப்போஸ்தலர் கூறுகிறார். எபிரெயர் 4:15,16.
பரலோக கிருபாசனத்தண்டைக்கு சென்று, விண்ணப்பிக்கக் கூடிய சிலாக்கியத்தை நாம் பெறும் போது, இத்தகைய கோட்பாடுகள் என்றுமே நம்முடைய இருதயம் மற்றும் மனதின் நோக்கமாக இருக்க வேண்டும். (சுருக்கமாக, நம்முடைய ஜெபங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்தக்கூடியதும். அன்புமிக்க மதிப்பும், பயபக்தியோடும். தெய்வீக திட்டத்தோடு முழு பரிவுடன், அவருடைய தெய்வீக சித்தத்திற்கு முழுமையாக அர்பணித்து, ஒரு குழந்தையை போல்தேவன் மேல் சார்ந்து, பாவங்களையும், குறைகளையும் ஒப்புக்கொள்ளக்கூடிய மனப்பாங்கை பெற்றவர்களாக, அதற்கான மன்னிப்பை விரும்பி, அதே மனப்பான்மையோடு மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கக் கூடியவர்களாக தெய்விக வழிநடத்துதலுக்காகவும். பாதுக்காப்பிற்காகவும் தாழ்மையோடு வாஞ்சிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவைகள் எப்போழுதும் வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது நம்முடைய ஆத்துமாவின் நோக்கமாக இருக்கவேண்டும். மன்னா, ஜீன் 10: ஆண்டவரே, எங்களுக்கு ஜெபிக்க கற்றுதாரும். (லூக்கா 11:1) சுருக்கமாக, நம்முடைய ஜெபங்கள், தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்தக்கூடியதும், அன்புமிக்க மதிப்பும், பயபக்தியோடும். தெய்விக திட்டத்தோடு முழு பரிவுடன். அவருடைய தெய்வீக சித்தத்திற்கு முழுமையாக அற்பணித்து, ஒரு குழந்தையை போல் தேவன் மேல் சார்ந்து, பாவங்களையும், குறைகளையும் ஒப்புக்கொள்ளக்கூடிய மனபாங்கை பெற்றவர்களாக, அதற்கான மன்னிப்பை விரும்பி. அதே மனப்பான்மையோடு மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கக்கூடியவர்களாக் தெய்வீக வழி நடத்துதலுக்காகவும், பாதுக்காப்பிற்காகவும் தாழ்மையோடு வாஞ்சிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இவைகள் எப்போழுதும் வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் இது நம்முடைய ஆத்துமாவின் நோக்கமாக இருக்க வேண்டும். “ஜெபம். சொல்லப்படாத அல்லது வெளிப்படுத்தப்படாத ஆத்துமாவின் உண்மையான விருப்பம்”
“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.” என்று நெகேமியாவின் ஜெபங்களுக்கான பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தைக்கு சாட்சிகளாக இருந்த மோசே, தீர்க்கதரிசிகள் மற்றும் கடந்த காலத்து இராஜாக்களோடு அவர் கொண்டிருந்த தொடர்பை அவர் மனதில் முன் வைத்திருந்தார். அவரது பங்கிற்கு உடன்படிக்கையை காத்துக்கொள்ளவில்லை என்று நெகேமியா தேவனை பழித்துரைக்காமல், அதற்கு எதிரிடையாக, இஸ்ரயேலுடனான தேவனுடைய வழிகளும், கையாளும் முறைகளும், நீதியாகவும், உண்மையாகவம் இருந்ததென்று அவர் ஒப்புக்கொண்டார். மற்றும் சீனாய் மலையின் உடன்படிக்கையை மீறியதற்காகவே அவர்கள் ஒரு தேசமாக உபத்திரவப்பட்டார்கள். ஆண்டவர் அவருடைய உடன்படிக்கையை காத்துக்கொண்டு, ஜனங்கள் மேல் இரக்கமாக இருப்பார் அல்லது குறைந்தபட்சம் அவருடைய பாதையில் நடக்க வேண்டும் என்று தேடக்கூடியவர்களுக்கு இரக்கம் பாராட்டுவார் என்ற அவரது நம்பிக்கையை நெகேமியா வெளிப்படுத்தினார்.
“உமது அடியாராகிய இஸ்ரயேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரயேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.” என்று அவர் கூறினார். கிருபாசனத்தண்டைக்கு சேரும் யாவரும். ஏதோ சில பலவீனங்கள். குறைபாடு, அபூரணம், பாவம் ஆகியவற்றை ஒத்துக்கொள்ளாமல், மகா பெரிய சிருஷ்டிகருக்கு சரியான முறையில் ஜெபங்களை ஏறெடுக்கமுடியாது. கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கும் நாமும் கூட தேவைப்படும் போதெல்லாம் கிருபாசனத் தண்டைக்கு அணுகுவதற்கு இப்படியாகவே செல்ல வேண்டும் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். ஆனால் நம்முடைய தைரியம், நம்முடைய துணிவு, நம்முடைய சுய-நம்பிக்கையின் மேல் அல்ல. நம்மை நேசித்தவரும். தம்முடைய விலைமதிப்புள்ள இரத்தத்தினால் நம்மை விலைகொடுத்து வாங்கினவர் மேல் நம்பிக்கையாக இருக்கவேண்டும் ஏனெனில் நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் மேலும் அவருடைய அங்கியின் மறைவில் நாம் சமாதானத்தையும், மன்னிப்பையும், தேவனோடு இசைவையும் பெற்றிருக்கிறோம். ஓ, இது நமக்கு எவ்வளவு அர்த்தமுடையதாக உள்ளது!
இதற்கும் மேலாக, நெகேமியா மற்றும் ஒப்புரவாக்குதலின் பலி செலுத்தப்படுவதற்கும் முன் வாழ்ந்தவர்களுக்கும், இது இன்னும் மதிப்புள்ளதாக இருந்திருக்கும். தேவன் எவ்வளவு நீதியுள்ளவராக இருந்தாலும் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களை அவராலே எவ்வாறு நீதிமான்களாக்குகிறார் என்பதை நாம் காண்பது நம்முடைய சிலாக்கியமாக உள்ளது. தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்து ஒவ்வொரு மனுஷனுக்காக மரணத்தை ருசிப்பார்த்தார் என்று காண்கிறோம். மேலும் இறுதியில் அவரது பலியின் புண்ணியம், ஆண்டவரின் சொந்த வழிகள் மற்றும் முகவர்கள் மூலம் ஒவ்வொரு மனுஷனுக்கும் பயன்படுத்தப்படும்.
நெகேமியாவின் பாவ அறிக்கை வெளிப்படையாக இருந்தது. தேவனை அணுகும் அனைவருக்கும் இது போன்ற ஒரு அணுகுமுறை சரியானது என்று நாம் நம்புகிறோம். நாம் மாம்சத்தில் நடவாமல், ஆவியில் நடப்பதற்கு நம்மால் சிறப்பானவைகளை செய்ய முயலும் போது, மற்றவர்களின் கண்களுக்கு நியாயமாக தோன்றினாலும், நம்முடைய பாவங்களையும். பலவீனங்களையும் நாம் கர்த்தரிடத்தில் அறிக்கையிட வேண்டும். “நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம். நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக கற்பித்த கற்பனைகளையும். கட்டளைகளையும். நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும் நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டுபோனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உன்னுடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும் தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஐனங்களும் இவர்கள் தானே.” என்று அவர் கூறினார்.
இந்த ஜெபம் ஆண்டவருடைய அச்சுறுத்தல்களையும், அவைகளின் நீதியையும், அவர்களது மீறுதல்களையயும், அதற்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் குறிப்பிட்டது. இவ்வாறாக, தேவனுடைய மன்னிப்பு, இரக்கம் மற்றும் ஒப்புரவாக்குதலுக்கான வாக்குத்தத்தங்களின் பக்கமாக திரும்பும் காரியம், ஜெபத்தின் சரியான முறையை வெளிப்படுத்துகிறது. யூதர்களானாலும், புறஜாதியானாலும் அனைவரும் இம்முறையை பின்பற்றவேண்டும் தெய்விக கட்டளைகளை மீறுகிற “உண்மையுள்ள இஸ்ரயேலர்”. தேவனால் சிட்சிக்கப்படும்போது. பாவத்தினால் மனம் வருந்துகிறவர்கள், ஆண்டவருடைய வாக்குறுதிகள் மிகவும் இரக்க முள்ளதாக இருக்கவேண்டுமென்று மன்றாடலாம். மீட்பின் பலியின் அடிப்படையில் மன்னிப்பை வேண்டி, விசுவாசத்தினால் தெய்விக வாக்குத்தத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு, தவறான புலம்பல்களை அவருடைய எல்லா வல்லமையோடு துரிதமாக திருத்தி கொண்டால், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கலாம்.