CD-LOVE-Q-56
R3021 [col. 1 P5]: –
நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் அழகான நற்குணத்தை திரும்பி பார்க்கையில், நீதியின் மேலும், சத்தியத்தின் மேலும், அவர் கொண்டிருந்த அன்பையும், மரணபரியந்தம் தேவனுடைய சகலவிதமான ஒழுங்குக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டும் என்ற அவருடைய மனவிருப்பத்தையும் நாம் காணும்போது, பிதாவின் பிரமாணத்திற்குள் அமைந்திருக்கும் கொள்கைகளின் மேல் நம்முடைய ஆண்டவர் வைத்திருந்த அன்பை நாம் உணரமுடிகிறது. வலுக்கட்டாயமாகவும் அல்ல, பயத்தினாலும் அல்ல, பரிபூரண அன்பினாலே அவர் பிதாவுக்கு கீழ்படிந்தார். “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்” (சங்கீதம் 40:8) என்று தீர்க்கதரிசி சொல்லியபடி, நம்முடைய ஆண்டவர் மிகுந்த துன்பத்தோடு அல்ல, மிகுந்த மகிழ்ச்சியோடு பிதாவின் பிரமாணங்களை கண்டுணர்ந்தார். நாம் ஆண்டவரை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவருடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு, அவர் கொண்டிருந்த அதே மனநிலையை நாமும் அடைய வேண்டும் – பிதாவின் வழிகளையும், நீதி மற்றும் சத்தியத்தின் கொள்கைகளின் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பு, முதலாவது மற்ற சூழ்நிலைகளின் கீழ், அவருடைய அன்பிற்குள் நிலைத்திருப்போம். அதாவது நம்முடைய அன்பின் வழியாக அவருடைய அன்பின் பிரமாணத்தை உணர்ந்து அதற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அறிவில் வளர்ச்சி அடையும் போது, நாம் கிருபையிலும் வளர்ச்சி அடைந்து, அவ்விதமான உணர்வுகளை அபரிமிதமாக வளர்த்துக் கொண்டு, ஆண்டவருக்கேற்ற கீழ்படிதல், நம்முடைய இருதயங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆண்டவரின் ஆவியிலும் இக்காரியங்களிலும் வளர்ச்சி அடைய வேண்டும். மேலும், அவருடைய சித்தத்தை செய்வதில் ஏதாகிலும் தோல்வி அடைந்தால், ஒரு வேதனை, ஒரு நிழல், ஒரு பூமிக்குரிய மேகம், பிதாவின் புன்னகையிலிருந்து நம்மை மறைத்துவிடும்.