CD-LOVE-Q-55
1 யோவான் 4:9″ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”
யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”
R2713 [col. 2P3]: –
இந்த செய்தியைப் பொருத்தவரை, தீர்க்கதரிசியின் சாட்சியத்திற்கு திரும்பும் போது, கர்த்தருடைய மகத்துவத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தும் போது, சங்கீதம் 145:7ம் வசனத்தில், முக்கிய அம்சத்திற்கான அருமையான சாட்சியம் மற்றும் தெய்வீக தன்மை மற்றும் அவருடைய மிக பெரிய திட்டத்தின் வெளிப்பாட்டைக்காண்கிறோம். “அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப்பாடுவார்கள்.”தேவன் நமக்கு தந்திருக்கும் எந்த விதமான மிகுந்த தயவை நினைக்கும் படி கூறுகிறார்? அவருடைய மகத்தான, அற்புதமான கிரியைகளில் எதை நாம் தெய்வீக இரக்கமாக நினைவில் கொள்வது? “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9) என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறபடி, நம்முடைய மீட்பின் விலையாக, தேவனுடைய அன்பான குமாரனையே பரிசாக தந்ததைத் தவிர வேறு எந்த மகத்தான செயலும், நினைத்து பார்ப்பதற்கு இல்லை என்று நாம் பதில் அளிக்கலாம். ஆனால் ஆதாம் மற்றும் அவருடைய சந்ததிக்கு விதிக்கப்பட்ட மரண தீர்ப்பு, தேவனுடைய மிகுந்த தயவினால் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த நீதி, என்பதை வெகு சிலரே உணர்ந்துக்கொள்கிறார்கள். ஆதாமின் பாவத்திற்கு முழு ஈடாக கிறிஸ்துவின் மரணம், முழுமையாக ஈடுபலியை அதாவது, அவருடைய மற்றும் அவருடைய சந்ததியின் தண்டனைக்கான முழு பரிகாரத்தையும் செலுத்தியது என்ற தேவனுடைய ஏராளமான நற்குணத்தின் சிறப்பான வெளிப்பாட்டை, மிக சிலரே பாராட்டலாம்.
R3321 [col. 1 P5]: –
தேவனுடைய நன்மை கொடூரத்தன்மையில் காணப்படாமல், முற்றிலுமாக பிரிக்கப்பட்டு, அதோடே பக்கம் பக்கமாக நிற்கிறது. தேவனுடைய நற்குணம், தாராள குணம், இரக்கம். தயவு, அன்பு இவையணைத்தும் அவருடைய தீர்ப்பில் காணப்படுவதில்லை. ஆனால், அவரது தண்டனையை நிறைவேற்றுவதில், அவருடைய அன்பின் மிகப்பெரிய பரிசாகிய அவருடைய அன்பு ஆண்டவராம் இயேசு மற்றும் அவருக்குள் கொடுக்கப்பட்ட மீட்பில், வெளிப்படுத்தப்படுகிறது வீழ்ச்சியோடும், தண்டனைத் தீர்ப்போடும் இணைந்திருக்கும் மீட்பு. “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9) என்று இக்காரியத்தை அப்போஸ்தலர் தம்முடைய வார்த்தைகளில் குறிப்பிடுகிறார். விழுந்துபோன மற்றும் கறைபடிந்த மனுக்குலத்தின் மேல் தேவன் அன்பான உணர்வுகளை வைத்திருக்கிறார் என்றும், இது காலப்போக்கில் பூமியின் அனைத்து குடும்பங்களுக்கும் ஆசீர் வாதங்களைக் கொண்டுவரும் என்றும் ஆபிரகாமுக்கும் அதற்கு பின்னர் தீர்க்கதரிசிகளின் வழியாக ஒரு குறிப்பு வழங்கப்பட்டாலும், தேவனுடைய அன்பு முன்னர் வெளிப்படுத்தப்படவில்லை, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் தீவிர தன்மை காணப்பட்டது. தெய்வீக குணாதிசயத்தின் நீதி வெளிப்பட்டது.
E451 [P1] through E452 [P1]: –
மனிதன் தெய்வீக விதிமுறைக்கு எதிராகச் செயல்பட்ட உடனேயே, தேவநீதி முன்சென்று அவன் கலகக்காரன் என்று தீர்ப்பிட்டு, மரணத் தீர்ப்பினை அவனுக்கு வழங்கியது. அவனுக்கு உயிர் வாழத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏதேன் தோட்டத்திலிருந்த அவனை வெளியே துரத்தி சாத்தானிடம் ஒப்படைத்தது. கட்டளையை மீறியதன் சாபத்தினால், தீமை அவனை ஆட்கொள்ளவே, மனிதன் செத்துக் கொண்டே சாகிற நிலைக்குத் தள்ளப்பட்டான். தெய்வீக சுபாவத்தின்படியான நீதி இவ்வாறு மனிதனிடம் செயலாற்றுகையில் தெய்வீக அன்பானது எவ்விதத்திலும் மாறாதிருந்தாலும், அது இரு காரணங்களுக்காக வலிமை குன்றிக்காணப்படுகிறது. முதலாவது தேவ அன்பானது தேவநீதிக்கெதிராக செயல்பட முடியாது. விழுகையினால் ஏற்பட்ட தீர்ப்பை நிறைவேற்றும் பலவிதமானபடிகளில் அன்பு குறுக்கிட முடியாது. நீதியின் அதிகாரத்திற்குட்பட்டிருக்கிற மனிதனை மீட்டுக்கொள்ள தெய்வீக அன்பினால் முடியாது. ஏனெனில் நீதியே தேவ சிங்காசனத்தின் ஆதாரம். இரண்டாவதாக அந்த சமயத்தில் குறுக்கிட்டு பாவத்திற்காக ஈடுபலி கொடுத்து தேவ அன்பானது மனிதனை விடுவிக்க முடியாது. ஏனெனில் அவ்வாறு இடையில் அன்பு குறுக்கீடு செய்யுமானால் அது முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றி வருகிற தேவ ஞானத்திற்கு எதிராகிவிடும். இவ்வாறு தெய்வீக அன்பும் வல்லமையும் மனுக்குலத்தை மீட்க வழியின்றி ஒருசில காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கிறது. ஆனால் தேவஞானம் அனுமதித்ததினால், தேவநீதி செயல்படுத்தப்பட அனுமதிக்க வேண்டியிருந்தது.
இதனிமித்தம் கடந்த ஆறாயிரம் வருடங்களாக மனுக்குலம் தவிப்பும், வேதனையும், சஞ்சலமும் மரணமும் நிறைந்த வாழ்வை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நீதிக்கு இசைவாக அன்பு செயல்பட்டு மனிதனை விடுவிக்க முடியாமல் உள்ளது. மாறாக, தெய்வீக அன்பு, தேவனால் உரைக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் மற்றும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நடைபெற்ற நிழலான பலி முறைமைகளைக் கொண்ட அறிவுரை கூறியும் தேவ ஞானத்தினால் முன் குறிக்கப்பட்ட காலத்தில் மனுக்குலம் விடுதலை பெற்று அன்பு பூரணப்பட்டிருக்கும் என உற்சாகப்படுத்தி தற்போது தேற்றி வருகிறது. இவ்வாறாக அன்பானது கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் காலத்தை எதிர்நோக்கி பொறுமையோடு காத்திருக்கிறது. அந்நாளில், தேவஞானத்தின் வழிநடத்துதலின் மூலம் தெய்வீக வல்லமையின் உதவியுடன் அன்பு செயல்படும்.
வேதாகமம் உரைக்கிறபடி காலம் நிறைவேறினபோது (கலாத்தியர் 4:5) அன்பு தன் உச்சக்கட்ட வெளிப்பாட்டைக் காட்டியதினால், ஏற்ற காலத்தில் (ரோமர் 5:6) தேவன் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். மனிதனாக வந்த இயேசுவும் தேவ கிருபையினால் “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்” (1 தீமோத்தேயு 2:5, எபிரெயர் 2:9) தேவ அன்பு இவ்வுலகில் இருந்து வந்த போதிலும் அதுவரை தெய்வீக அன்பின் முழு பரிமாணம் இன்னதென்று மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தப்படவில்லை. நாம் வேதத்தில் காண்கிறதாவது –
“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி…. அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” “நாம் பாவிகளாயிருக்கும் போதே கிறிஸ்து நமக்காக மரித்தார்…” (யோவான் 4:9, 5:8)
இவ்வாறாக வெளிப்பட்ட தேவ அன்பானது, தேவனுடைய பிரமாணத்திற்கு இசைவாக அதன் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தது. அது ஒருபோதும் தெய்வீக நீதிக்கு முரண்பாடாக செயல்படவில்லை. தெய்வீக அன்பு கொடுக்கப்பட்ட சாபத்தீர்ப்புக்கு எதிராகவோ, அதை நிறைவேற்றத்தடை ஏற்படுத்தவோ, தீர்ப்பை மீறுவதாகவோ இல்லாமல், அந்த தீர்ப்புக்கு சரி நிகராகத் தகுந்த ஈட்டுக்கிரயம் செலுத்தி மனிதனை சாபத்திலிருந்து விடுவிக்கவுமே இவ்விதமாக செயல்பட்டது. தேவ நீதி அளித்த மரணதண்டனையை சரிகட்டி தேவ அன்பு ஆதாமின் தண்டனையிலிருந்த மனுக்குலத்திற்கு விடுதலையை கொண்டு வந்தது. இந்த தேவ அன்பின் வெற்றி தேவநீதியின் வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல. இயேசுவை ஈட்டுகிரய பலியாக தேவநீதிக்கு செலுத்தியதின் மூலம், அன்பானது. இவ்வெற்றியை அடைந்தது. தேவனுடைய குணலட்சணமாகிய இந்த தேவ நீதிதான் அவரது நீதியான தீர்ப்பையும் அதன் தண்டனையையும் நிறைவேற்றுகிறது.