CD-LOVE-Q-54
F467 [P3] through F469: –
அவர்கள் கிருபையிலும், வைராக்கியத்திலும் அறிவிலும், வளரும்போது “எல்லாவற்றையும் குப்பையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.”, “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” என்றும் அவர் கூறுகிறார். (பிலிப்பியர் 3:11, ரோமர் 8:18) என்று அப்போஸ்தலர் பூலோக நன்மைககள் மற்றும் சிலாக்கியங்களை குறித்து பேசின, அவருடைய கண்ணோட்டத்தில், ஒவ்வொரு விஷயத்தையும் சீர் தூக்கி, நியாயந்தீர்க்க முடியும். பரஸ்பர அன்பு, இரக்கம் மற்றும் ஆர்வத்தை பொருத்தவரையில், மற்றொரு கருத்து என்னவெனில், ஆண்டவரின் ஒரே சரீரத்தில் அங்கங்களாக இருக்கிற அனைவரிடமும் இவைகள் மேலோங்க வேண்டும் என்பதே. ஆண்டவருடைய ஆவி அதிகதிகமாக நம் இருதயங்களை ஆளும்படி வரும்போது, நமக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாருக்கும். விசேஷமாக விசுவாச மார்க்கத்தாருக்கு நன்மை செய்வதில் அது நம்மை களிக்கூரும்படி செய்யும்.
நம்முடைய இரக்கங்கள் வளர்ச்சியுற்று உலகத்திலுள்ள மனுக்குலம் முழுவதற்கும் செல்லும்போது, அவர்கள் விசேஷமாக ஆண்டவரில் வளரவேண்டும். மாத்திரமல்ல அவருடைய ஆவி உள்ளவர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள், அவரால் அவருடைய அடிச்சுவட்டில் நடக்க நாடுபவர்களுக்கு நேராக வளர வேண்டும். நாம் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அன்பின் அளவு, அவருடைய சரீரத்தின் அங்கங்களாக நம்மோடு உள்ள சகோதரரிடத்தில் நாம் காட்டும் அன்பைப் பொறுத்து இருக்கும் என அப்போஸ்தலர் சுட்டிக்காட்டுகிறார்.
மற்றவர்களுக்காக நாம் எல்லாவற்றையும் சகிக்கிற, தாங்கிக்கொள்கிற அளவுக்கு நம்முடைய அன்பு இருக்குமென்றால், நம்முடைய தலையாக இருக்கிறவர் முலமாக நம்மோடு மிக நெருக்கமாக ஐக்கியம் கொண்டிருக்கிற அதே சரீரத்தின் இந்த உடன் அங்கங்களைப் பொருத்த வரையில் இது எவ்வளவு பெரிய உண்மையாக காணப்படும், நாம் மரணத்தைக் கடந்து ஜீவனுக்குள் வந்துவிட்டோம் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்று நம்முடைய சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறோம் என்பதுதான் என்று அப்போஸ்தலர் யோவான் கூறுவது வியப்பிற்குரியதல்ல. (யோவான் 3:14) கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நாம் நிறைவேற்றுவதைக் குறித்து அப்.பவுல் பேசும்பொழுது, “சரீரமான சபைக்காக நிறைவேற்றுகிறேன்” என்று கூறுவதை நாம் நினைவு கூறுகிறோம். (கொலோசேயர் 1:24) “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளி களாயிருக்கிறோம்.” (1 யோவான் 3:16) என்ற வசனத்திலும் இதே கருத்துதான் மறுபடியும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படிப்பட்ட சகோதரத்துவம் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது பாருங்கள், அவர்களுக்காக ஜீவனையே கொடுக்கக் கூடிய ஒரு சகோதர அன்பை வேறு எங்குதான் நாம் காணமுடியும்? “ஆண்டவரின் வெள்ளாடுகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிற சபையின் பலியை பாவநிவாரண நாளின் பலிகளின் ஒரு பகுதியாக ஈடுபடுத்துவதில் ஆண்டவர் எப்படி சந்தோஷ்பபடுவார் என்று நாம் இப்பொழுது பார்க்கபோவதில்லை. நம்மைப் பெறுத்த வரையில், ஜீவனைக் கொடுக்கும் பலியானது, சகோதரர்களுக்கு செய்கிற ஊழியத்தில் முக்கியமாக செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அப்போஸ்தலருடன் இணைந்து, நாமும் கவனத்தில் கொள்ளுகிறோம். உலகத்திற்காக செய்கிற ஊழியம் முக்கியமாக வர இருக்கின்ற யுகமான ஆயிரம் வருட யுகத்திற்கு உரியதாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய நேரம். தாலந்துகள், செல்வாக்குகள், வசதிகள் எல்லாம் ஏறத்தாழ மற்றவர்களிடத்தில் (மனைவி, அல்லது பிள்ளைகள், அல்லது வயதான பெற்றோர் அல்லது நம்மை சார்ந்து வாழ்பவர்கள்) அடகு வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நாமாகவே, மனுஷருடைய பார்வையில் நேர்மையானவைகள், தேவையானவைகள், நல்ல வைகளாக காண்பபடுகிற தேவையான காரியங்களை செய்ய நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். இப்படியிருக்க, பலிக்கென குறைந்த அளவே நம் பட்சத்தில் மிஞ்சியிருப்பதைக் காண்கிறோம். சகோதரருக்கென கொடுப்பதற்கு குறைந்த அளவே நம்மிடத்தில் மிஞ்சியிருப்பதைக் காண்கிறோம். இந்த குறைவானதையும் உலகமும், மாம்சமும். பிசாசும் நம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளவும், நாம் அர்ப்பணித்திருக்கிற பலியிலிருந்து திசை திருப்பவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பொல்லாத காலத்தில், ஆண்டவர் சபையைத் தேர்ந்தெடுப்பது, இந்த சூழ்நிலையில் ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கிற அன்பு, ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அன்பு விசுவாசம் ஆகியவையின் அளவைப் பொறுத்துதான் இருக்கும். நம்முடைய அன்பு குளிராயிருந்தால், உலகம் மாமிசம், சத்துரு நம்மிடத்தில் அதிகமாக உரிமை கொண்டாடுவார்கள், நம்முடைய நேரத்தை, செல்வாக்கை, நம்முடைய செல்வாக்கை, நம்முடைய பணத்தை, சத்துரு கவர முயற்சிப்பான். இன்னொரு பக்கம், ஆண்டவர் மேல் உள்ள அன்பு, அனலாயும், வலிமையுள்ளதாயும் இருக்கும் அளவின்படியே இவைகளை அவருக்கு அர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைவோம், சகோதரருக்கென செய்கின்ற ஊழியத்தில் நமக்கு சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், நம்மிடத்தில் தேவைக்கு மேலாக உள்ள சத்துவத்தையும், செல்வாக்கையும் வசதியையும் அவருக்கென்று கொடுப்போம். இதற்கும் மேலாக வீட்டின் குடும்பத்தின், முக்கியமாக தனது சொந்த பொருளாதார தேவைகளைக் கூடுமான வரை கட்டுப்படுத்தி ஆண்டவருடைய பலிபீடத்தில் செலுத்தும்படியாக, அதிகமாக கொடுக்க, ஆண்டவரின் மேல் வைத்திருக்கிற இந்த பக்தியின் ஆவி நம்மை உந்தித்தள்ளும். நம்முடைய ஆண்டவர் மூன்றரை வருடங்களாக அவருடைய சரீரத்தைப் பிட்கக் கொடுத்தார். மூன்றரை வருடங்களாக அவருடைய இரத்தத்தை, ஜீவனைக் கொடுத்தார், ஆனாலும் இந்த பலிகள் கல்வாரியில் தான் முற்றுப்பெற்றன, இப்படியேதான் நமக்கும் இருக்கிறது. உலகப் பிரகாரமான அல்லது ஆவிக்குரிய விஷயங்களில், சகோதரருக்கென நம்முடைய ஜீவனைக் கொடுப்பது சிறு ஊழியங்களில் உள்ளது. ஆனாலும் ஆவிக்குரிய விஷயங்களில் அது பெரிய காரியமாகும். ஆகிலும் உலகப்பிரகாரமான தேவையுடன் உள்ள ஒரு சகோதரனுக்கு இரக்கம் காட்டாவிட்டால், அது ஆண்டவருடைய ஆவி அவனுடைய இருதயத்தில் சரியான அளவுக்கு ஆட்சி செய்யவில்லை என்று பொருள்படும்.
R3160 – “தெய்வீக குடும்பத்தின் ஒற்றுமை”
இந்த உலகத்திற்கு பரவலாக இருக்கும் அறங்காவல் குழு (trusts) மற்றும் அதற்கு இணையான காரிங்கள் எல்லாவற்றையும் ஊடுருவி வருகிறது. இதன் விளைவாக சபைகளின் இணைப்பு, அமைப்புகளின் இணைப்பு மற்றும் பொதுவாக பெரிய மத அறங்காவல்களின் உருவாக்குவதில் விரைவாக விரைந்து செல்கிறது. இவைகளின் வளர்ச்சி, மெய்யான அர்ப்பணித்த தேவனுடைய ஜனங்களில் சுயாதீனத்துக்கு தீவிரமான அச்சுறுத்தாக இருக்கும். ஆனால் அவர்களின் ஆவிக்குரிய நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, அது தேவனுடைய சிறு மந்தைக்கு ஒரு ஆசீர்வாதமாக நிரூபிக்கும். எப்படியெனில், வேதாகமத்தின் போதனைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்தி, பெயரளவிலான அமைப்புகளிலிருந்து முழுமையாக அவற்றை பிரிக்கவும், களைகளை கட்டுகளாக கட்டி, மேலும், இது வேதவாக்கியங்களை உறுதிப்படுத்தி, மகா பாபிலோன் சரிவுக்கு முந்திய யுகத்தின் இறுதியில் இருக்கும் இந்த நிலைமைகளை தெளிவாக விவரிக்கிறது. (வெளிப்படுத்தல் 18:21) “இவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கவும்” என்ற நம்முடைய ஆண்டவரின் ஜெபம், இந்த யுகம் முழுவதிலும் நிறைவேறியது. உண்மையிலேயே பிதாவோடும், குமாரனோடும், இருதயத்தில், நோக்கத்தில், ஆவியில் உண்மையில் ஒருமைப்பட்ட அனைவருக்கும் இந்த பூமியின் எந்த நம்பிக்கைகளும் கொடுக்கக்கூடாத தெய்வீக ஐக்கியத்தை கொடுக்கிறது. எனவே உண்மையான தேவ ஜனங்களுக்கு இன்றும், என்றும் இந்த ஐக்கியம் உண்டு. அவர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்புற சொற்கள் அல்லது பிடிப்பு அல்லது அறிகுறிகளால் அறிந்துக்கொள்ளாமல், விசுவாசம் மற்றும் அன்பினால் அறிந்துக்கொண்டு, அங்கீகரிக்கப்படுகிறார்கள். “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துக்கொள்வார்கள் என்றார்.” நாம் சகோதரரை நேசிப்பதினால், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து வந்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.” உண்மையில், நாம் அனைவரையும் நேசிக்கிறோம். வாய்ப்புகள் கிடைக்கும் போது அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புகிறோம். ஆனால் “விசேஷமாக, விசுவாச வீட்டாருக்கு” என்று அப்போஸ்தலர் விவரிக்கிறபடி, குறிப்பாக, தேவனை நேசிப்பவர்களும், விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்களும், அவரிடத்தில் முழுமையாக அர்ப்பணித்தவர்களும், முடிந்தவரை அவருடைய சித்தம் செய்து நாள்தோறும், மேலும் அவருடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முயலுகிறவர்களாகவும் இருப்பார்கள். தேவ ஜனங்களுக்கு இடையிலான இந்த ஐக்கியம், வெளிப்படையான நபர்களின் ஐக்கியம் அல்ல. ஆண்டவரை பின்பற்றுபவர்கள் ஒரே நபராக அல்ல, ஆவியில் ஒன்றாயிருக்கிறார்கள். தனக்கும் பிதாவுக்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டிற்கு, ஆண்டவர் கொடுக்கும் ஒரு விளக்கம் இதுவே இவர்கள் ஒரு நபராக அல்ல, ஆவியிலும், நோக்கத்திலும், சித்தத்திலும் ஒன்றாயிருக்கிறார்கள். ஏனெனில், நம்முடைய ஆண்டவர் எப்போதும் பிதாவின் சித்தத்தையும், அவருடைய பார்வையில் பிரியமாக இருப்பதை மட்டுமே செய்வதாக அவர் அறிவிக்கிறார். இவ்வாறு நாம் அவருடைய அன்பிலும், அவருடைய சித்தம், அதுவே பிதாவின் சித்தத்தைச் செய்வதன் மூலம் அவரிலும் நாம் நிலைத்திருக்கிறோம். இப்படியாக, பிதா, குமாரன், மணவாட்டியாகிய சபை அனைவரும் சத்தியத்திலும் ஆவியிலும் ஒன்றாயிருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் – (வசனம் 24)” பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” பிதாவே, என்னுடைய சீஷர்களை பொருத்த வரையில், உமது விருப்பத்தை நான் அறிந்திருக்கிறேன் மற்றும் நீர் எனக்காக செய்திட்ட இந்த மிக பெரிய தாராளமான ஏற்பாட்டிற்காக நானும் ஏற்றுக்கொள்கிறேன், இறுதியாக, என்னுடைய சீஷர்களும், என்னுடன் ஒரே விதமான மகிமையில் பங்குப் பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலக தோற்றத்திற்கு முன், என் சீஷர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவதற்கும் முன் …நீர் என்னிடத்தில் அன்பு கூர்ந்து, பாராட்டிய மகிமைகளை அவர்கள் கண்டு, பகிர்ந்துக் கொண்டு ஆசீர்வதிக்கப்படுவார்கள் – என்று நம்முடைய ஆண்டவர் சொல்லுவதை போலிருப்பதினால், இது ஒரு வேண்டுகோள் அல்ல, ஆனால் இது தேவனுடைய சித்தத்தின் அறிவிப்பாகும். ஜெபத்தின் முடிவு வார்த்தைகள் மிக அழகாக இருக்கிறது. மேலும் இது அவருடைய பிதாவிலும் அவருடைய ஐக்கியத்திலும், அவர் பெற்றிருந்த நம்பிக்கையின் உட்பார்வையை நமக்கு அளிக்கிறது. அவர் பிதாவை அறிந்திருந்தார். நம்மை பொருத்தவரையில், “ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன்” என்பதே பிதா நம்மை ஏற்றுகொள்வதற்கும், நித்திய ஜீவனில் நாம் பங்கு பெறுவதற்குமான உயர்ந்த சான்றாகும். “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன், நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.” என்று நம்முடைய ஆண்டவர் அறிவிக்கிறார். “உம்முடைய நாமத்தையும், குணாதிசயத்தையும். மேன்மையையும், நன்மையையும், அன்பையும், விருப்பங்களையும் நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். மற்றும் சத்தியத்தின் அறிவில் அவர்கள் வளரும்போது, நீர் என்னிடத்தில் வைத்த அன்பு, அவர்களிடத்தில் நிலைத்திருக்கும் போது அவர்கள் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு இன்னமும் உம்முடைய நாமத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். தேவனுடைய இந்த அன்பும், கிறிஸ்துவின் இந்த அன்பும் எவ்வளவு அற்புதமானது, அதனுடைய ஆழமும், அகலமும், உயரமும், நீளமும் அளவிடுவது எவ்வளவு சாத்தியமில்லாதது. ஆண்டவரை தங்களுடைய மீட்பராக ஏற்றுக்கொண்டு, அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், தங்களுக்குரிய சிறிதானாலும், எல்லாவற்றையும் அவரிடத்தில் கொடுத்து அவருடைய முன்னேற்பாடான ஆசீர்வாதங்களில் பங்கேற்றபின், பலவீனத்தினாலோ, எதிர்ப்பின் காரணத்தினாலோ, அல்லது செய்யக்கூடாததால், வீழ்ச்சி அடைந்தால் பிதா நம்மேல் கொண்ட மிகுந்த அன்பையும், அதில் குமாரனுடைய பங்கையும், நாம் பாவிகளாயிருந்தும், நம்மை மீட்கும் படிக்கு அவருடைய அன்பிற்கு மேலாக, நம்முடைய ஆண்டவர் கிறிஸ்துவோடு, பாடுப்பட்டால் அவருடைய உடன்பங்காளிகளாக நம்மை மாற்றுவதற்கும், இப்படிப்பட்ட அற்புதமான ஆசீர்வாதங்களுக்கும், சலுகைகளுக்கும் அவர் நம்மை அழைத்த அவருடைய அன்பு சிறிதளவும் மாறாமல், நம்மை மரணத்திற்குள் தள்ளிவிடாமல், சிட்சித்து வழிநடத்தும். இயேசுவை தொடர்ந்து விசுவாசிக்கிறவர்களையும் அவருடைய வார்த்தைகளை தொடர்ந்து பற்றிக்கொள்ளும் அனைவரையும், இந்த அன்பு இறுதியில் சிறு மந்தையாகவோ, திரள் கூட்டமாகவோ மீட்டுக்கொள்ளும். ஆனால், எந்த அளவுக்கு தேவனுடைய இந்த உண்மையான அன்பு நமக்குள் செழிப்பாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு கிறிஸ்து நம் இருதயத்தில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறாரோ, அதற்கு பதிலான அன்பை பெறுவோம். அது நம்முடைய பிதாவின் பார்வையில் பிரியமான காரியங்களைச் செய்வதற்கும் ஆண்டவரின் அங்கீகரிப்பிலும் மகிழ்ச்சி அடையும். மேலும் ஆண்டவருக்கும் நம்முடைய ஆத்துமாக்களுக்கும் இடையில் மேகத்தை கொண்டவரும் எதையும் அந்த அளவுக்கு நாம் தடைச்செய்வோம். அப்படியானால், தெய்வீக அன்பின் ஆழங்களையும், உயரங்களையும். அகலங்களையும் நீளங்களையும் பற்றி நாம் அறிந்திருப்பதினால், புதிய தைரியத்தை நாம் பெறவேண்டும் மேலும், தேவனுடைய இந்த அன்பு நம்மை மிகுந்த பக்தி வைராக்கியத்திற்கும் அவருடைய நோக்கத்திற்கும் நம்மை கட்டுப்படுத்தட்டும்.