CD-LOVE-Q-53
ஆயிரவருட யுகத்திலும் இதே கொள்கைள் ஒரு குறிப்பட்ட அளவிற்கு பொருந்தும். இந்த புதிய உடன்படிக்கையின் செயல்பாட்டில், இப்போது, இனி வருங்காலத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளில் சிலவற்றை கவனியுங்கள்.
முதலில் இந்த புதிய உடன்படிக்கையின் ஏற்பாடுகளில் அவர்களுக்கு அருளப்பட்ட தேவ கிருபையைப் பற்றிய அறிவைப் பெற அக்காலத்தில் அனைவரும் மத்தியஸ்தரால் அழைக்கப்படுவார்கள். ஆனால் இப்போது, எல்லோரும் அல்ல, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்” (யோவான் 6:44) மட்டுமே அழைக்கப்படுகிறார்கள். அழைக்கப்பட்டவர்கள் ஞானிகளோ அறிவாளிகளோ ஐஸ்வரியவான்களோ அல்ல.
இரண்டாவதாக, இப்போதை விட, அப்போது புதிய உடன்படிக்கையின் அங்கீகரிப்பில் குறைந்த பட்சமான விசுவாசமும், அதிகமான அறிவும் தேவைப்படும். ஏனெனில், “சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்” (ஏசாயா 25:7) தேவன், பூமியின் மேல் மூடப்பட்டிருக்கும் அறியாமையின் மூடலை அகற்றிபோட்டு, குருடான கண்கள் தெளிவற்ற நிலையிலிருந்து பார்வை அடையச் செய்வார். (ஏசாயா 29:18)
மூன்றாவதாக இருந்த போதிலும், மத்தியஸ்தரோடு ஒரு நேர்மறையான உடன்படிக்கைக்குள் பிரவேசிக்க, ஒவ்வொருவரும் அன்பு என்ற புதிய உடன்படிக்கையின் பிரமாணத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு, புதிய உடன் படிக்கையின் ஆசீர்வாதமான ஏற்பாடுகளில், பிரயோஜனப்படுத்திக்கொள்வதும் மிக அவசியமாகும். அன்பு என்பது பெரிய போதகரின் குரல் அல்லது பிரமாணமாகும். அவர் அதிகாரத்துடன் எழுந்து நின்று, மனுக்குலம் முழுவதும், “தீர்க்கதரிசியின் சொல் கேளாதோர் (கீழ்ப்படியாதவர்கள்) தம் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள்” என்ற செய்தியைக் கேட்கும்படி செய்வார். மேசியாவின் இராஜ்யத்தின் பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்திற்கு இணங்காத அனைவரும், இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டு போவார்கள்.
நான்காவதாக, மேசியாவின் யுகத்திலும் கூட மனுக்குலத்தை, இந்த பிரமாணத்திற்கு இணங்கும்படிக்கு தேவன் அவர்களை கட்டாயப்படுத்த மாட்டார். “எல்லா முழங்கால்களும் முடங்கும்படிக்கும். எல்லா நாவுகளும் அறிக்கையிடும் படிக்கும்…” என்று எழுதியிருக்கிறபடி, அன்பின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கும் அதை மதிப்பதற்கும் அவர் கட்டாயப்படுத்துவார். ஏனெனில், துன்மார்க்கர் பயப்படுவார்கள், நீதிமான்கள் செழிப்பார்கள் என்ற நோக்கத்திற்கு ஏற்றபடி, இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் போது, நீதியான ஒழுக்க நெறிகள் அங்கு விதிக்கப்படும். பொன்னான பிரமாணமாகிய இராஜ்யத்தின் சட்டங்கள் ஒவ்வொன்றும் மீறப்படும்போது, விரைவான தண்டனை கொடுக்கப்படும். ஆனால் தேவன் யாருடைய இருதயத்திலும் இந்த அன்பின் பிரமாணத்தை ஆழமாக பதியச் செய்வதில்லை, இக்காலத்தை போலவே, அவர் இந்த வேலையைச் செய்ய தேவன் விட்டுவிடுகிறார். இப்பொழுது போலவே, ஒவ்வொருவரும், அவரது இருதயத்தில் உள்ள சுயநலத்தையும், பாவத்தின் விளைவாக ஏற்படும் அனைத்து தீங்குகளையும் “தள்ளி வைக்க” வேண்டும். இப்பொழுது போலவே, ஒவ்வொருவரும், “….மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்” (2 கொரிந்தியர் 7:1) ஏனெனில், தேவன் ஒருவரையும் கீழ்ப்படிதலுக்கு கட்டாயப்படுத்தும் படிக்கு முயற்சிப்பதில்லை. “அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். “இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய பிரமாணத்தை முழு இருதயத்தோடு நேசித்து, குறிப்பாக தங்களுக்குள்ளிருக்கும் சுயநலத்திற்கும், பாவத்திற்கும் எதிராக போர் புரிவார்கள். எனவே, ஆயிர வருட காலத்திற்குள், இந்த உலகத்திற்கு இரண்டு மடங்கான அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முழு வாய்ப்பையும் வழங்கிய பின்னர் – இப்போது, பாவம் மற்றும் சுயநலம் மற்றும் அவர்களின் தவறான ஆட்சி மற்றும் தீய முடிவுகள் – அதற்கு பின்னர் நீதியும் அன்பும், மற்றும் அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ஆட்சியின் சமாதானமும் மகிழ்ச்சியும் – அவர்களுடைய இருதயங்களில் அன்பின் ஆவியை வளர்ப்பதற்கான முழு வாய்ப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பின்னர், தேவனுக்காக இருதயத்தில் விசுவாசமும் உண்மையும் உள்ளவர்கள் யார் என்றும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு கீழ்படிந்தவர்கள் யார் என்பதையும் செயலாற்றி நிரூபிப்பதற்கு, ஆயிரவருட யுகத்தின் முடிவில் ஒரு சோதனை வைக்கப்படும். இந்த சோதனை, நாம் எண்ணுகிறபடி, அவர்கள் திறந்த மற்றும் வெளிப்படையான தவறுகளைச் செய்வார்களா, இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு அல்ல மாறாக, தந்தையாகிய ஆதாம் அவருடைய பரிபூரணத்தில் சோதிக்கப்பட்டதை போலிருக்கும். இது கீழ்ப்படிதல் மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சோதனையாகவும், இருதயம் முழுவதையும் அன்பு ஆக்கிரமித்து, ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டதா என்றும் இதன் விளைவாக தேவனிடத்தில் விசுவாசமும், ஆண்டவரை நம்பி அவருடைய வழியின் கண்டிப்பாக பின்பற்றக் கூடிய நீதியின் ஒவ்வொரு கொள்கையும் சோதிக்கப்படும். இதன் விளைவாக, உலகில் உள்ளவர்களில் அன்பின் ஆவி வளர்ச்சி அடையாதவர்கள், நித்திய ஜீவனுக்கு தகுதியற்றவர்களாக அல்லது ஆயிரவருட யுகத்திற்கு பின் உள்ள சிறப்பான நிபந்தனைகளுக்கு உட்படாதவர்கள் என்பதால் அவர்கள் இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டு போவார்கள். மேலும் தேவன் நமக்கு வாக்களித்தபடி, இனி மரணமும் இராது. அழுகையும் இராது, துக்கமும் இராது, வருத்தமும் இராது, ஏனெனில், முந்தைய காரியங்கள் அனைத்தும் கடந்து போய்விடும் – பாவத்தின் அனைத்து காரியங்களும், மற்றும் பாவத்தை நேசித்து அல்லது அதற்கு இரக்கம் காட்டும் அனைவரும். – (வெளி 21:4) அவர்களின் ஆயத்தமாக இருந்ததினாலுமல்ல, பூரணமாக ஓடினதினாலும் அல்ல, கிறிஸ்துவின் வழியாக, ஓடுவதை நாடினாலன்றி இந்த பந்தயத்தில் வெற்றி கிடைக்காது. இவ்வாறாக இரக்கம் நீதிக்கு எதிராக மகிழும், ஆயினும், இரக்கம் காட்டாதவர், அன்பில் குறைவுள்ளவர்கள், இரக்கம் பெறமாட்டார்கள். அன்பில் நிலைத்திருப்பவர் தேவனில் நிலைத்திருக்கிறான். அத்தகையவர்களுள் தெய்வீக இரக்கமும் கிருபையுமுள்ள அனைத்து செல்வங்களும் உள்ளது.
R2607 [col. 2 P2, 3]: –
ஆயிர வருடத்தில் முழு மனுக்குலமும் ஒரே நேரத்தில் எழுப்பப்படாமல் படிப்படியாக எழும்புவார்கள். ஒவ்வொரு புதிய குழுவினரும், முந்தி இருந்தவர்களை தங்களுக்கு உதவியாளர்களாக கண்டுபிடிப்பார்கள். அப்போது எந்த மனுஷர் அன்பையும், இரக்கத்தையும் ஒருவருக்கொருவர் (கிறிஸ்துவின் சகோதரர்கள்) காண்பிக்கிறார்களோ, அவைகளை தனக்கே செய்ததாக இராஜா எண்ணிக்கொள்வார். நீதிமான்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் இரக்கங்களும் எந்த பெரிய செயலின் அடிப்படையிலும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வெறுமனே, தேவனுடைய அன்பின் பிரமாணத்திற்கு இசைவாக வந்து, அதை தங்களுடைய கிரியைகளினால் நிரூபிப்பார்கள். “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றமாக இருக்கிறது.” (ரோமர் 13:10) ஆகவே, மனுஷன் தேவனுடைய சாயலுக்கு மீண்டும் திரும்பும் போது – “மிக நன்று” மனுஷனும் வாழும் அன்பின் வெளிப்பாடாக இருப்பார். “உலகம் உண்டாவதற்கு முன்னதாக உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற இராஜ்யத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள்” இது தெய்வீக பிரமாணம் மற்றும் உச்ச உயர்நிலையின்றி அமைக்கப்படும் சுயாதீனமான ஆட்சியை குறிக்கவில்லை. தேவன் மனிதனுக்கு முதலில் பூமியின் ஆட்சியினைக் கொடுத்திருந்தாலும், அவரிடத்தில் திரும்ப வருவதற்கு வடிவமைத்திருந்தாலும், அவர் மிகுந்த நம்பிக்கையுடன் அவரைத் தயார்படுத்தியபோது, அதை மனுஷன் ஆள வேண்டும் என்ற நோக்கத்தை தேவன் கொண்டிருப்பதாக நாம் எண்ணிவிடக்கூடாது. இல்லையெனில், அவரது உயர்ந்த பிரமாணத்திற்கு இணங்க வேண்டும். “உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்பட வேண்டும்”, என்பதே அரசாங்கத்தின் நித்தியமான கொள்கையாக இருக்க வேண்டும். மனுஷன் அது முதற்கொண்டு பரலோக பிரமாணத்திற்கு இசைவாக தன்னுடைய ஆளுமையை அமைத்துக் கொள்வார். “ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.” (சங்கீதம் 16:11) ஓ, “பெருமையின் யுகங்களே, நங்கள் விரைந்து ஓடுங்கள்” என்றும் ஆசீர்வாதத்தின் முழு மலர்ச்சியை கொண்டு வந்த, அன்பார்ந்த திட்டங்களை உடையவருக்கு கனமும் மகிமையையும் கொடுங்கள் என்றும் யார் சொல்லாதிருக்க முடியும்?