CD-LOVE-Q-52
இது ஏன்? என்ற நியாயமான கேள்வி எழுகிறது. அத்தகைய சகிப்புத்தன்மை எந்த அர்த்தத்தில் அவசியம்? இது இராஜ்யத்தில் பங்காளிகள் என்று அழைப்பதற்கு தேவன் வைத்திருக்கும் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று நாம் பதில் அளிக்கிறோம். மற்றும் நாம் அழைக்கப்படுகிற வேலையை நாம் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஞானம் வெளிப்படுகிறது. – நம்முடைய ஆண்டவரின் கீழ் அவருடைய பங்காளிகளாக, தேவனுடைய ஆயிரவருட ஆட்சியில், பூமியில் உள்ள முழு குடும்பத்தையும் ஆசீர்வதிப்பதற்கான வேலை. இது ஒரு மாபெறும் வேலையாக இருக்கும். தகுதி வாய்ந்தவர்கள் என்று தேவனால் எண்ணப்படுவர்கள், அவருடைய நன்மைகளையும் அவருடைய நல்ல குணங்களையும் புரிந்துக்கொண்டு பாவத்தையும் அக்கிரமத்தை வெறுத்தால் மட்டும் போதாது, இந்த கொள்கைகளுக்கு மகிழ்ச்சியோடு தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து, நியாயத்திற்கு பொறுமையுடன் சகித்து, அவர்கள் கொண்டுள்ள பூரண விசுவாசத்தை செயலாற்ற வேண்டும். ஒன்று, இரண்டு அல்லது மூன்று நீடிய பொறுமைக்கான தற்காலிகமான சோதனைகள், ஒரு நபரின் நீதியுள்ள குணத்தை நிரூபிக்காது. மரணபரியந்தம் உற்சாகமாக பொறுமையுடன் இருந்தால் மட்டுமே. இத்தகையான குணத்தை செயலாற்றி, நிரூபிக்க முடியும். இதை நாம் வைரத்தை கொண்டு விளக்கலாம். சில பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பிரமாதமான வைரங்களை தயாரிக்க முடிந்தாலும், அவைகள் வைரத்தை போல அந்த அளவுக்கு உறுதியாக இல்லா திருந்தால், வைரத்தின் மதிப்பை அவைகள் பெறுமா? எவ்வழியிலும் இயலாது. கிறிஸ்தவர்களுக்கும் அப்படி தான். உறுதியான, நீடிய சகிப்புத்தன்மையை தவிர, தேவனுடைய புத்திரர்களாவதற்கு எல்லா நற்குணங்களும் இருந்தாலும், தேவனுடைய பொக்கிஷமாக எண்ணப்படுவதற்கு தகுதியற்றவராக இருப்பார். எனவே, உறுதி தன்மை, அவருடைய முன்னேற்பாட்டில் அனுமதிக்கப்பட்ட எதையும் சந்தோஷமாக சகிக்கும் தன்மையே தேவனுடைய கோரிக்கையாக உள்ளது. இந்த குணங்களை உடையவர்களே அவருடைய இராஜ்யத்திற்கு பொருத்தமானவர்கள். கிறிஸ்தவ குணங்களில், இந்த நீடிய சகிப்பு தன்மையின் முக்கியத்துவத்தை அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தையின் பயன்பாடு முழுமையாக வெளிப்படுத்துகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் அன்பை காட்டிலும் மேலாக நிலைநாட்டுகிறார். இதுவே நாம் அடைய வேண்டிய அடையாள குறி என்று முன்னதாகவே நாம் பார்த்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, தீத்துவுக்கு எழுதும் போது (2-2) மேம்பட்ட கிறிஸ்துவ பண்புகளை கணக்கிடுகையில் அப்போஸ்தலர் பின்வரும் வரிசையில் குறிப்பிடுகிறார் – ஜாக்கிரதை, நல்லொழுக்கம், தெளிந்த புத்தி, விசுவாசம், அன்பு மற்றும் பொறுமை (உற்சாகமுள்ள நீடிய சகிப்பு). “தெரிந்துக்கொள்ளப்பட்ட” ஒரு உறுப்பினராக ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் நாம் மற்ற அனைத்து குணங்களை பெற்றிருந்தாலும், பொறுமை, உற்சாகமான நீடிய சகிப்பு தன்மைக்கான இந்த இறுதி சோதனையை, நாம் கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். மீண்டுமாக தீமோத்தேயுவுக்கு எழுதும் பொழுது, அப்போஸ்தலரைப் பொருத்த வரையில், அவர் அன்பை காட்டிலும் மேலான இடத்தில் நீடிய சாந்தத்தை வைக்கிறார். “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்” (2 தீமோத்தேயு 3:10) அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றமாகவும், நம்முடைய பரம அழைப்பின் பந்தயப் பொருளை அடையும் அடையாளக்குறியாக இருக்கும் போது, இந்த குணம் அன்பை காட்டிலும் எந்த விதத்தில் உயர்ந்தது என்ற கேள்வி எழும்பலாம். இந்த நீடிய பொறுமை நம்முடைய ஓட்டத்தின் முடிவில் நமக்குள் வருவதில்லை, ஆனால் நம்முடைய முழுமையான ஓட்டத்திற்கு இது மிக அவசியமானது என்று நாம் பதில் அளிக்கிறோம். துவக்கத்தில் கிறிஸ்தவ வழியில் வரும் சோதனைகளில் உற்சாகத்துடன் இந்த சகிப்பு தன்மை நமக்கு தேவைப்படுகிறது, மற்றும், நம்முடைய பந்தயத்தின் வேகம் அதிகரிக்கும் போது, நம்முடைய உற்சாகமான சகிப்புத்தன்மை பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலுவாகவும், வலிமையோடும் வளர வேண்டும். இது முதல் கால் பங்கு, இரண்டாம் கால் பங்கு, மூன்றாவதும் கால் பங்கு மற்றும் பரிசுக்கான அடையாளகுறியான பரிபூரண அன்பை பெற, இன்னும் நான்காவது கால் பங்கை அடையவேண்டும். பந்தயத்தில், நாம் இந்த நிலையை அதாவது நம்முடைய நண்பர்களை மட்டும் அல்ல, பகைவர்களையும் நேசிக்கக்கூடிய அன்பை அடைந்தபின், நாம் தகுதிப்பெற்றவர்களா என்று ஆண்டவர் இனிமேல் நம்மீது அனுமதிக்கும் சோதனைகளில், அதே நிலையில், விசுவாசத் தோடும். உற்சாகத்தோடும். பொறுமையோடும், நீடிய சகிப்பு தன்மையோடும் நாம் நிற்கவேண்டியது மிக அவசியம். எனவே, எல்லாவற்றையும் செய்த பின், தாங்கி நிற்க வேண்டும். “அந்த அடையாள குறியை அடைந்த பின், நீடிய பொறுமை பூரணமாக கிரியை செய்யட்டும்.” என்று அப்போஸ்தலர் நமக்கு அறிவுரை கூறுகிறார். இந்த நீடிய பொறுமையானது நீங்கள் நல்ல குணமுடையவர்கள் என்றும், பந்தயத்திற்குரிய பரிசாகிய அன்பின் தகுதிகளை பெற்றவர் என்று செயலாற்றுவதோடுமல்லாமல், எதிர்ப்புகளை உற்சாகமாக சகிக்க, எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல், அந்த குணத்தின் கூறுகளை ஆழமாக வேரூன்ற வேண்டும். ஆம், ஒரு மோசமான சூழ்நிலையில் நம்முடைய ஆண்டவர் சோதிக்கப்பட்டது போலவே நாமும் சோதிக்கப்படவேண்டும் என்று தேவன் செய்த முன்னேற்பாட்டின் காரணத்தை இப்போது நம்மால் காணமுடிகிறது. நாம் இந்த குணங்களை மட்டும் கொண்டிராமல், அவைகளை நாம் ஆழமாக வேரூன்றி, நிறுவி, ஸ்தாபித்து, தெய்வீக முன்னேற்பாட்டின்படி நமக்கு என்ன தீங்கு விளைவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டாலும், நம்முடைய உற்சாகமுள்ள சகிப்பு தன்மையினால் அதை செயலாற்றி நிரூபிக்க வேண்டும்.