CD-LOVE-Q-48
தீத்து 1:7,8 “ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானபிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தைஇச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்”.
R2446 [col. 2P3]: –
இந்த தெய்வீக அறிவுரைகளைக் குறித்து, தேவனுடைய ஜனங்கள் முதன்மையான இரண்டு அப்போஸ்தலர்களை கவனிப்பது நலமாயிருக்கும். மேலும், அவர்கள் மதிப்புமிக்கவர்கள் என்று நினைவில் கொள்வது அல்லது “பேச்சாளர்களாகவும்” அல்லது நல்ல சிறந்த “ஞானிகளாக” இருப்பதே, சரியான வழியில் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் என்று சகோதரர்கள் மத்தியில் தங்களை எண்ணிக்கொள்ளகூடாது அல்லது தங்களுடைய தர்க்கங்கள் உதவக்கூடியதற்கு பதிலாக காயப்படுத்தக்கூடாது. பரிசுத்தமான காரியங்களில் பணி செய்வதற்கு, சபையின் ஊழியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவரிடமும் எல்லாவற்றிற்கும் மேலாக காணப்படவேண்டிய முதன்மையான பன்பு, அன்பின் ஆவியே. அறிவு மற்றும் திறமை முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று நாம் கூறுவதில்லை ஆனால், எப்பொழுதும் போல, இவைகள் முதன்மையாக முக்கியத்துவம் பெறாமல், இரண்டாம் நிலையில் இருப்பதை கூறுகிறோம். உங்கள் மத்தியில், கர்த்தருடைய ஜனங்களின் வெவ்வேறு கூட்டணிகளின் ஆவிக்குரிய காரியங்களை பொறுப்பேற்றுக்கொள்ள வாய்ப்பு பெற்ற, பரிசுத்தவான்களை அதாவது முழுமையாக பரிசுத்த ஆவியை பெற்றவர்களை கவனியங்கள். மற்றும் பரிசுத்த ஆவி தாமே எவ்வாறு தன்னை அதாவது தன்னுடைய குணங்களை வெளிப்படுத்தும் என்ற தெய்வீக விளக்கத்திற்கு, சபையில் உள்ள ஊழியக்காரர்களை கவனிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 13:4-8, 1 பேதுரு 1:22, 2 பேதுரு 1:13 வசனங்களை காண்க) தங்கள் சொந்த நலனுக்காகவும், சபையின் நலனுக்காகவும், பிற தகுதிகளை கொண்ட மற்ற அனைவரும், மேன்மையான சிந்தையில் இறுமாப்படைவதற்கு ஆதாரங்கள் தருகிறார்கள். மேலும், தேவனுடைய சுதந்தரமாகிய சபையை கைப்பற்ற விரும்புவோர் அல்லது பொறாமை, கலகம், கசப்பு, பகை, தீமை பேசுதலை வெளிப்படுத்துபவர்களை மேலே இருந்து வராத தவறான ஆவி இருப்பதற்கான ஆதாரங்களைக் கொடுக்கிறது. இவைகள் பூமிக்குரியவர்களும். சிற்றின்பம் மற்றும் பிசாசினால் உண்டானதினால் இவைகள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவேண்டும். இவர்கள் பாதுகாப்பற்ற ஆசிரியர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எந்த அளவிற்கு அறிவைப் பெற்றிருந்தாலும் சரி, நன்மைகளைவிட அதிக தீமைகளை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
F251 [P2]: –
“நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராய் எண்ண வேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17,18) என்று நாம் வாசிக்கிறோம். இந்த வசனத்தின் வலிமையைக் கருத்தில் கொண்டு, உலகப்பிரகாரமான சபை விசாரணை செய்யும் மூப்பர்கள் என்ற ஒரு வகுப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது சகோதரர் மத்தியில் சர்வாதிகார முறையில் இல்லாவிடினும் எல்லா மூப்பர்களுக்கும் ஒரு விசாரணை செய்யும் அதிகாரம் வேண்டும் என்று கோரியிருக்கிறது. இப்படியான “ஆளுகை” என்ற வார்த்தையை, இந்த விஷயத்தில் வேதாகமத்தில் காணப்படுவதற்கு எல்லாம் முரணாக உள்ளது. ஒரு பெரிதான மேற்பார்வையாளர் அல்லது மூப்பர் என்ற ஸ்தானத்தில் உள்ள தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலர் பின்வருமாறு கூறுகிறார். “முதிர் வயதுள்ளவர்களைக் கடிந்து கொள்ளாமல் அவனை ஒரு சகோதரனைப்போல பாவித்து புத்தி சொல்லு.” “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல் எல்லாரிடத்திலும் சாந்த குணமுள்ளவனாயிருக்க வேண்டும்.” இங்கே அதிகார பூர்வ விசாரணையோ, அல்லது சர்வாதிகார தோரணையோ நிச்சயமாக அனுமதிக்கப்படவில்லை. மூப்பர்கள் என்று அங்கீகரிக்கப் படுகிறவர்களுக்கு முக்கியமான குணாதிசயங்களாக இருக்க வேண்டியவைகள் சாந்தம், நீடிய பொறுமை, சகோதர சிநேகம், அன்பு ஆகியவைகளே. அந்த வார்த்தையின் பிரகாரம் எல்லா விதங்களிலும், மந்தைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆகவே அந்த வார்த்தையின் படி அவர்கள் சர்வாதிகாரம் உடையவர்களாக இருக்கவேண்டுமானால், அவர்கள் சாந்தமும், நீடிய பொறுமையும், மென்மையானவர்களும், அன்பானவர்களுமாக இருக்கவேண்டும். அப்போது, மந்தைக்கு சரியான முன்மாதிரியாக இருப்பார்கள்.