CD-LOVE-Q-47
R2755 [col. 2P3]: –
அன்பின் சரியான அடையாளத்தை அடைந்தவர்கள், கர்த்தருடைய சேவையில் தீவிரமாக ஈடுபட்டு, சகோதரர்களுக்காக தங்களுடைய ஜீவனையும் கொடுப்பார்கள். ஏனெனில், “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” 1 யோவான் 4:20 இவர்கள் தேவனுக்கும். அவருடைய நீதியின் கொள்கைகளுக்கு மட்டுமல்லாமல், கர்த்தரின் வல்லமையிலும், அவருடைய பலத்தின் சக்தியிலும் மற்றும் அவருடைய வார்த்தையின் மேல் விசுவாசமுள்ளவர்களும், பிரதிநிதியாக இருக்க வேண்டும். இந்த ஓட்டபந்தயத்தில் ஓடும் மற்ற வீரர்கள் குறிக்கப்பட்ட நிலையை அடைவதற்கு, திறமையோடும், மனமுவந்து, ஆர்வத்தோடு ஊக்குவிக்க ஆயத்தமாக இருப்பார்கள். அப்போஸ்தலர் கூறுகிறபடி, “ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் சிந்தையாயிருக்கக்கடவோம்; இந்தச் எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே ஒரே ஒழுங்காய் நடந்துகொண் சிந்தையாயிருப்போமாக. சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்” (பிலிப்பியர் 3:15-17)
F190 [P1, 2]: –
புது சிருஷ்டிகளாக நாம் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணப்படுவதற்கு முன்னால் நாம் இந்த அன்பின் உச்ச இலக்கை அடையவேண்டும். நாம் ஆண்டவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்கும் தருணத்தில் இந்த உச்ச இலக்கை அடைவார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. நாம் நம்முடைய கிறிஸ்தவ அனுபவத்தில் அந்த இலக்கைக் கூடுமானவரை எவ்வளவு சீக்கிரம் அடையமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைய வேண்டும். அதன் பிறகு “சகலத்தையும் செய்து முடித்தவர்களாக நிற்கவும்” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளை நினைவு கூற வேண்டும். (எபேசியர் 6:13) அந்த உச்ச நிலையை வந்தடைந்த பின்னர் அன்பைப்பற்றியதான பரீட்சைகள் நமக்கு தேவை. அந்த நிலையில் இருக்கும் போதே அந்த பயிற்சிகள், அந்த உச்ச நிலையை அல்லது இலக்கை நம்முடைய வாழ்க்கையில் நிலைவரப்படுத்த முயற்சிப்பது நம்முடைய குணாதிசயத்தை அதிகமாக பலப்படுத்துவதாக இருக்கும். இதில் விசேஷமாக நம்முடைய அனுபவங்கள் ஆண்டவருடைய அனுபவங்களைப் போன்றிருக்கும். அந்த உச்ச இலக்கை அடைய அவர் ஓட வேண்டிய அவசியமிருந்தது. “இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அது போலவே நம்மில் ஒவ்வொருவரும் அந்த இலக்கை அடைந்த பின்னர் அதை உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். மேலும் நமக்கு வரும்படியாக ஆண்டவர் அனுமதிக்கின்ற எல்லா சோதனைகளிலும், நம்முடைய பெலத்தின் மூலமாக அல்ல, ஆனால் நம்முடைய மீட்பரின் உதவியினால் வரும் பெலத்தின் மூலமாக மேற் கொள்ளுகிறர்வகளாக அவரால் எண்ணப்படும் படியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிதாவுக்குக் காட்டும் பூரண அன்பிலிருந்து நம்மை திசைத்திருப்பும் படியாக, அவருக்கு உரித்தான முழு மரியாதையையும், கீழ்ப்படிதலையும் குறைவாகக் காட்டும்படி நம்மை உந்துகின்ற சூழ்நிலைகள் நமக்கு எதிராக வரும். சகோதரர்களைக் குறித்த சோதனைகளும் நமக்கு வரும். நாம் அவர்களுடைய பெருந்திரளான பாவங்களை மூடும்படியாக அன்பு அனுமதிக்கப்படுவதில்லை. நாம் நேசிக்க கற்றுக்கொண்டவர்கள், பலவீனங்களைக் கண்டு பரிதாபப்படும்படியாக நாம் கற்றுக்கொண்டவர்கள் மேலும் கோபப்படும்படியாக யோசனைகள் வரும். நாம் நம்முடைய சத்துருக்களை நேசிக்கக் கற்றுக்கொண்ட பின்னர், சில சாதுர்யமான ஆலோசனைகள் வரலாம். – நாம் விதிவிலக்கான ஒரு வகுப்பார். நம்முடைய எதிராளிகளை பொருத்தவரையில் நமக்கொருவரம்பு இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் நம்மை சூழ்ந்துக்கொள்ளும். இந்த சோதனைகளில் நாம் உறுதியாக இருப்போமென்றால், இலக்கை நோக்கி, ஏற்கனவே நாம் அடைந்துள்ள நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி, இயேசுவின் மூலம் நமக்கென உள்ள நித்திய ஜீவனை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும் போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம்.
F373 [P2, 3]: –
நம்முடைய ஆண்டவர் பரிபூரண அன்பு என்ற “இலக்கில்” சோதிக்கப்பட்டது போல, நாம் எல்லோரும் அதை அடைந்த பின்னர் தான் சோதிக்கப்படுவோம். ஆகவே வாழ்வின் கடைசி மூச்சின் போது அந்த இலக்கை அடையலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் கூடுமானவரை துரிதமாகச் செயல்பட வேண்டும். நாம் இந்த இலக்கை அடையும் வேகத்தை வைத்து நம்முடைய வைராக்கியத்தின் அளவும், அன்பின் அளவும் தேவனுக்கும் சகோதரர்களுக்கும் சுட்டிக்காட்டப்படும்.
அப்போஸ்தலருடைய வார்த்தையான “சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும்” (எபேசியர் 6:13) என்பது பரிபூரண அன்பு என்ற இலக்கை அடைந்த பின்னர் நமக்கு அதிகமாக சோதனைகள் உண்டு என்பது பொருள். அவையாவன, விசுவாசத்தை சோதிக்கின்றவைகள், பொறுமையை சோதிக்கின்றவைகள். மற்றும் அன்பின் பல்வேறு அம்சங்களில் வரக்கூடிய சோதனைகளாகும். நம்மைச் சரியான வழியில் முன்னேறும்படி உதவி செய்வதற்கு உலகமானது கிருபைக்கு ஒரு நல்ல நண்பனல்ல. சாத்தான் இன்னமும் நம்முடைய சத்துருவாயிருக்கிறான். நாம் அடைந்துள்ள நிலைமையிலிருந்து நம்மை பின்னடையும்படியாகப் பலவந்தப்படுத்த அதிகமான எதிர்ப்புகளைக் கிளறிவிடுகிறவனாக இருக்கிறான். இதுவே நம்முடைய சோதனையாகும். நாம் அடைகின்ற நிலையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கையைத் துச்சமாக உதறிவிடும்வரை, நமக்குச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மனிதருக்கும் நன்மை செய்யவும். தேவனுடைய ஊழியத்தில் சகோதரருக்கென நம்முடைய ஜீவனையே கொடுக்கும் வரை நாம் “இலக்கை நோக்கித் தொடர வேண்டும்”, “நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்” இந்த வழியில் நாம் செல்லும்போது தேவையான ஒவ்வொரு உதவியையும், ஆபத்தில் பாதுகாப்பையும் அவர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். அவருடைய கிருபை நமக்கு போதுமானது. (1 தெசலோனிக்கேயர் 5:24, 2 கொரிந்தியர் 12:9)