CD-LOVE-Q-46
F600 [P2] through F602 [P2]: –
“எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் கேடுள்ளதுமாயிருக்கிறது.” (எரேமியா 17:9) என்று வேத வசனம் கூறுகிறது. இருதயம் என்று அழைக்கப்படுகிற உறுப்பை அல்ல. வேத வசனம் கூறுகிறபடி அது ஜென்ம சுபாவங்களாகும். புதுசிருஷ்டி ஒரு புதிய இருதயத்தை, ஒரு புதிய சித்தத்தை, ஒரு புது சுபாவ நிலையை பெறுகிறான். இதில் தேவனும். அவருடைய நீதியும், சத்தியமும் திட்டமும். சித்தமும் முதலாவதாக இருக்கின்றன. மற்ற விஷயங்கள் எல்லாம் அவைகள் ஆண்டவரோடும். அவருடைய நீதியோடும் ஒத்திருக்கிற அளவுக்கு கனத்துக்குரிய, அன்புக்குரிய இடத்தில் உள்ளன. இந்த புது இருதயத்தை உடையவர்கள் அனைவருக்கும். புது சிருஷ்டியின் அங்கங்கள் அனைவரும் முதலாவதாகவும், நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே அப்போஸ்தலர் கூறுகிறபடி, சகோதரர்கள் மேல் உள்ள அன்பு, புது சிருஷ்டிகளாக ஆண்டவரோடு வைத்திருக்கிற உறவுக்கு நல்ல பரீட்சைகளில் ஒன்றாகும். ஆனால் இது ஏற்கனவே காட்டப்பட்டுள்ளபடி, மற்றவர்களுக்குரிய கடமைகளை நியாயமாக உணர்வதற்கு இடையூறாக இருக்கக்கூடாது. புது இருதயத்தையும் புது சுபாவத்தையும் உடைய புது சிருஷ்டி, பழைய சுபாவங்களையும், சுயநல குணத்தையும் உடைய பழைய இருதயமாகிய அதன் சத்துருக்களால். தொடர்ந்து தாக்கப்படுகிறது. புது சிருஷ்டி மற்றவர்களிடத்தில் கனிவுடனும், தயாளத்துடனும் இருக்க திவ்விய கட்டளையினால் கட்டப்பட்டிருக்கிறதைக் கண்டு, பழைய இருதயம், அநேக தடவைகளில் புது இருதயத்தின் மேல் வஞ்சகத்தை அப்பியாசப்படுத்துகிறது. அது இப்படியாகக் கூறுகிறது – இப்பொழுது நான் மரித்து விட்டேன் என்று எண்ணுகிறாய், நீ என்னை வெளியே தள்ளிவிட்டாய், என் இருதயத்தை பொருத்த வரையில் மரித்துவிட்டேன். முன்பு இருந்த அதே இருதயமாக இப்போது இல்ல. ஆனால் நீ எனக்கு சிறிதளவு கனிவு காட்ட வேண்டும். நீ என்னை மிகவும் கடினமாக நடத்தக்கூடாது. நான் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறேன் என்பதை நீ ஒத்துக்கொள்ள வேண்டும். என்மேல் அதிகமான பாரத்தை சுமத்தக்கூடாது. அது நீதியானதாக இருக்காது. நீ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சுயநலம் உள்ளவனாக இருக்க வேண்டும். நீ முதலாவதாக உன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை மாத்திரமல்ல. அதற்கும் மேலாக கவனிக்க வேண்டும். நீ அவர்களுக்கு செல்வத்தையும் சமுதாய நன்மைகளையும் கொடுக்க முயற்சிக்க வேண்டும். நீ உன்னை அவர்களுக்காக தியாகம் பண்ண வேண்டும்.
பழைய இருதயம் எவ்வளவு திருக்குள்ளதாக இருக்கிறது பாருங்கள், அதன் பொய்யான காரணங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன, எத்தனை பேர் தங்கள் துக்கத்திற்கு ஏதுவாக இதை நிரூபித்திருக்கிறார்கள். எத்தனை பேர் கவர்ந்திழுக்கப்பட்டு, புதிய மனம் பழைய மனதினால் சிறைப்பிடிக்கப்படும்படி விட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் பழைய இருதயத்தின் தந்திரத்தால் அடிமைத்தனத்திற்குள்ளாக கொண்டு வரப்பட்டதை பார்த்திருக்கிறார்கள். மிக பிடித்தமான வாக்குகளில் ஒன்று – “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்று புதிய சிருஷ்டிக்கு கட்டளையிடப்பட்டிருப்பதுதான். இந்த பொதுவான யோசனை அப்போஸ்தலரிடத்திலிருந்து வருகிறது. அது தன் நிலைமையைக் காட்டிலும் அதிகமாக உயர்த்த விரும்புகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள திவ்விய கட்டளைக்கு மேலாக அதை சிறப்புள்ளதாக மாற்ற நாடுகிறது. 1. நம்முடைய ஆண்டவரை நம்முடைய முழு இருதயத்தோடும். முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிப்போம். அவரை கனப்படுத்துவோம், அவருக்கு ஊழியம் செய்யவோம், அவருக்குக் கீழ்ப்படிவோம். 2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறனையும் நேசிப்போம். இது எந்த விலையிலும் சமாதானத்தை அனுமதிக்காது. பழைய இருதயம், பழைய மனம் பழைய சித்தம் சமாதானத்தினிமித்தம் சத்தியத்தை அல்லது கடமையை விட்டுக் கொடுக்கும்படி செய்தால், அது ஏற்படுத்தக்கூடிய நிபந்தனைகளுக்கு எல்லையே இருக்காது. இதனால் ஏற்படும் விளைவு என்னவெனில் சமாதானத்தினிமித்தம் புதுசிருஷ்டி வெகு சீக்கிரத்திலேயே ஆண்டவரோடு செய்த அவனுடைய அர்ப்பணத்தின் முக்கிய சாரம்சத்தையே மீறிக்கொண்டிருப்பான், மேலும் அப்படி அது விரும்பாவிட்டாலும் பழைய சித்தத்திற்கு முற்றுமாக தன்னை ஒப்புவித்துக் கொண்டிருப்பான், பழைய சித்தத்துக்கு எதிர்த்து நின்றாலும் திவ்விய வார்த்தையை அது திறமையாக தவறாக விளக்குகிறபடியால் அதன் தந்திரத்தினால் சிறைபிடிக்கப்படுகிறான்.
இப்படியாக தாக்கப்பட்டு இருக்கும்போது. புது சித்தம் சுலபமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், சமாதானம் வீட்டிலும், வேறு எங்கும் விரும்பத்தக்கதாக இருந்தாலும், ஆண்டவருடைய வாக்குத்தத்தின்படி சமாதானம் முதன்மையானதல்ல என்பதாகும். உண்மையாகவே தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்று புதுசிருஷ்டியை ஆண்டவர் எச்சரித்திருக்கிறார். இது எல்லாரோடும் சமாதானமாக இருப்பதை குறிக்காது. ஆனால் அதற்கு எதிர்மாறானது. அவர்கள் வெளிச்சம் பிரகாசிக்கும்படி செய்யும்போது நிச்சயமாகவே இருள் வெளிச்சத்தை வெறுத்து. அதோடு போராடும் என்றும், முடிந்தால் வெளிச்சத்தின் சொந்தக்காரரை, அதை ஒரு மரக்காலின் கீழாக மூடி வைக்கும்படி தூண்டும் என்றும், இந்த வெளிச்சத்தை மறைத்து வைக்கும்படி தூண்டுவதற்காக இருள் ஒரு யுத்தத்தை நடப்பிக்கும் என்றும், அதன் அர்த்தம் என்னவெனில் சமாதானத்தைத் தவிர வேறு எதையும் கொடுக்காது என்பதுதான் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால். இவைகளெல்லாம் புது சிருஷ்டிக்கு உள்ள பரீட்சை தான் என்று ஆண்டவர் நமக்கு நிச்சயப்படுத்திக் கூறுகிறார். அவன் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், அவனுக்கு முக்கியமான சமாதானம் என்பது மாம்சத்திற்குரிய சமாதானமல்ல. ஆனால் இருதயத்தின் சமாதானமாகிய “எல்லா புத்திக்கு மேலான தேவ சமாதானம். எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தன்னுடைய இருதயத்தில். வெளிப்படையான நிலைமைகள் எல்லாம் இந்த சமாதானத்திற்கு எதிராக இருக்கும்போது கூட, புது சிருஷ்டி இதை அடையாளம் காணும் என்பதை அவன் கற்க வேண்டும். ஆனால், அது எப்படிப்பட்ட கிரயம் கொடுக்க வேண்டியதாக இருந்தாலும், எப்படிப்பட்ட தியாகமாக இருந்தாலும், ஆண்டவரோடு ஒரே மனதாய் இருக்கிற நிலைமை என்பது அவரிடத்தில் விசுவாசமாயிருப்பதற்கான வெகுமதியாகும். ஆகவே மாம்சீக தூண்டுதல்களினால் வேண்டுதல்கள் வரும் போதும். உலகப்பிரகாரமான உறவினர்கள் வாதிடும்போது புது சிருஷ்டி முதலாவதாக தன்னுடைய முக்கியமான கடமையை நினைக்க வேண்டும். அதாவது தேவனை தன்னுடைய முழு இருதயத்தோடும், முழு மனதோடும்.முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசித்து, அவருக்காக ஊழியமும் செய்ய வேண்டும். அதே நேரத்தில், மாம்சத்தோடு அல்லது அயலகத்தாரோடு உள்ள உறவு இந்த பிரமாணத்திற்கு உட்பாட்டு தான் இருக்க வேண்டும்.