CD-LOVE-Q-34
R2330[col.2 P1,2]: –
இந்த புதிய உடன்படிக்கையின் நன்மையிலும் சலுகைகளிலும் பங்கெடுக்க, உலகம் அழைக்கப்படுவதற்கு முன்கூட்டியே திருச்சபையின் தற்போதைய அழைப்பின் பொருள், முன்னதாகவே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், பூரணமானவர்களை அல்ல, தேவனுடைய நேச குமாரனுடைய சாயலை பெற்றவர்களையும் அல்ல, ஆனால் “குமாரனுடைய சாயலை ஒத்திருப்பதற்கும். விரும்பி, முயற்சிக்கக்கூடியவர்கள் இந்த தெரிந்தெடுப்பில் அழைக்கப்படுகிறார்கள். தேவன் அன்பாகவே இருப்பதினால், அன்பே அந்த சாயல். எனவே கிறிஸ்துவின் சிறப்பியல்பு அன்பு, இதுவே பிதாவாகிய தேவனுடைய சாயலின் பிரதிபலிப்பு. இந்த ஒரு அச்சில் நாம் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் தேவன் இந்த அச்சுக்குள் நம்மை பதிக்கமாட்டார். இந்த நற்பண்புகளைப் பெறுவதற்கு அவர் நம்மை கட்டாயப்படுத்தமாட்டார். மாறாக, “மிகப் பெரிதும், விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களினால்” ஏற்படும் தாக்கங்களினால் மட்டுமே நாம் தெய்வீக சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகி, தெய்வீக குணமாகிய அன்பை நம்மேல் பதிக்கும்படிக்கு அவர் முயற்சிக்கிறார். இதனால் நாம் இந்த உலகத்தின் சுயநலம் என்ற கேட்டுக்கு தப்பி அல்லது நமக்குள் ஆழமாக நற்குணங்களை உருவாக்குவதற்கு தேவன் அனுமதிக்கும் எல்லாவிதமான அழுத்தங்களிலும், நம்மை நாம் தேவனுடைய அன்பில் காத்துக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம் யூதா 21. இந்த காரியம் நமக்கு முன் திறந்திருக்கிறது. நாம் இந்த வாக்குறுதிகளை பயன்படுத்தி, நம்முடைய மாதிரிக்கு எற்றவாறு, கொஞ்சம் கொஞ்சமாக, தினமும், மணி நேரமும், சிந்தையிலும், வார்த்தையிலும், கிரியைகளிலும், அவைகள் நம்மை வடிவமைப்பதற்கு அனுமதிக்கலாம் அல்லது அவைகளில் சரியான தாக்கங்களை எதிர்த்து, அநீதியில் சத்தியத்தை பற்றிக்கொள்ளலாம். பிந்தைய காரியத்தை தெரிந்துக் கொள்பவர்கள், கசப்பான ஏமாற்றத்தை தங்களுக்கென்று விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். “நல்லது உத்தமனும் உண்மையுமான ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையாக இருந்தாய், உன்னை அநேகத்திற்கு அதிகாரியாக்குவேன்” என்ற பாராட்டை இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் கூறுவதில்லை. எனவே, நம்முடைய ஆண்டவர் மேல் நாம் வைத்திருக்கும் பக்தியின் அளவு, நாம் அவர்மேலும், அவருடையவைகள் மேலும் வைத்திருக்கும் அன்பின் அளவை சுட்டிக்காட்டும். மேலும் நம்முடைய சுயத்தையும். நம்முடைய வாழ்க்கையில் விஷயங்களில் உள்ள அனைத்து காரியங்களிலும், சுயநலத்தை ஜெயிக்கக்கூடிய நடவடிக்கையில் நம்முடைய அன்பு மற்றும் பக்தியின் அளவு தெளிவாக வெளிப்படும். மற்றும் நம்முடைய சிந்தனைகள், தாலந்துகள், சிறிதோ, பெரிதோ, அன்பினால் தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் சுறுசுறுப்போடும் செயலாற்ற வேண்டும். இப்படிப்பட்டவர்கள், “நாம் (நம்முடைய ஆண்டவரின் பரிசுத்த ஆவியினால், அன்பின் ஆவியினால், ஜெநிப்பிக்கப்படுதலை பெற்று, ஓர் அளவுக்கு அவரைப் பற்றிய அறிவைப் பெற்ற நாம்) நம்முடைய சகோதரர்களுக்காக ஜீவனை கொடுக்க வேண்டும்.” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளை புரிந்துக்கொள்வார்கள்.
R3020[col.2 P3] through R3021 [col. P3]: –
“மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8) என்று தேவன் தீர்க்கதரிசியின் வழியாக அன்பின் பிரமாணத்தை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்றும் மற்றும் அது கிறிஸ்தவ நற்பண்புகளின் தேவைகள் அனைத்தையும் எவ்வாறு பூர்த்திச்செய்கிறதென்ற சிந்தனையை இங்கு வெளிப்படுத்துகிறார். மிகவும் நியாயமான இந்த அனைத்து தேவைகளையும் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படும், உலகின் எதிர்கால தீர்ப்புக்கு, அவர் பயிற்சியளிப்பவர்களுக்கு இவைகள் தேவையற்றது என்று தேவன் விடமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது. ஆயினும், தீர்க்கதரிசியின் மூலம் குறிப்பிடப்பட்ட இந்த மூன்று குணங்களும், அன்பு என்ற ஒரே வார்த்தையில் புரிந்துக் கொள்ளப்படுகிறது. மற்றவர்களின் உடல் ரீதியான, தார்மீக மற்றும் அறிவுசார்ந்த உரிமைகள், சுயாதீனம் அனைத்தையும், உரிமைகளை மதித்து. எந்த விதத்திலும் அவற்றை குறைப்பதற்கோ, அல்லது மறுக்கவோ முயலாமல், நம் அண்டை வீட்டாரோடும், சகோதரர்களோடும், நம் குடும்பத்தாரோடும், நம்முடனும், நாம் நியாயமாக நடந்து கொள்ளுதலை நமக்குள் வளர்ப்பதற்கு முயற்சிக்கவேண்டியதே அன்பின் தேவையாகும். “கிருபையை நேசிப்பது” நீதியை நேசிப்பதைவிட அதிகமானது, மற்றும் எந்த விதமான கொள்கைகளுமின்றி, மற்றவர்களின் நலனுக்காக தனிப்பட்ட உரிமைகளை விட்டுகொடுப்பதிலும், மற்றவர்களின் விருப்பத்திற்காக சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்வதை குறிப்பிடுகிறது. இது மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கத் தயாராக இருப்பதை பொருள்படுத்துகிறது. மற்றவர்களைப் பொறுத்த வரையில் விருப்பமின்மை என்பது மிகவும் வற்புறுத்தலாய் இருக்கும், அதேசமயம் நாம் மற்றவர்களை நடத்தும் விதமும் வற்புறுத்துவதாய் இருக்கும் அளவிற்கும் பொருந்தும். அன்பின் பிரமாணத்தில், தேவனோடுக்கூட நடக்கும் தாழ்மையான நடக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், யார் ஒருவர் தன்னை சிருஷ்டித்தவரை நேசித்து, அவருடைய சிருஷ்டிப்புகளுக்காக. இயல்பாகவும், ஆவிக்குரிய காரியங்களுக்காக அவர் செய்திருக்கும் முன்னேற்பாடுகளை புரிந்துப் பாராட்டுகிறார்களோ, அதற்கு பதிலாக அவர்கள் அன்பு செலுத்தி, தேவனை பாராட்டுவார்கள். சர்வவல்லவருடைய மகத்துவத்தைப் பற்றியும். தெய்வீக கிருபையைத் தவிர்த்து. தனது சொந்த குறைபாடுகளும், அபூரண நிலையைப் பற்றியும் சரியான கருத்தைக் கொண்டிருந்தால். உண்மையில் அவர் ஆண்டவரோடு தாழ்மையாக நடக்க முடிவெடுப்பார் – அவர் தனது சொந்த பாதையில் செல்ல முயலாமல், முழு நம்பிக்கையோடு ஆண்டவர் குறித்து காட்டின பாதையில் அதாவது இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க முயற்சிப்பார். நம்முடைய வேத ஆதாரத்தில், நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை பதிவு செய்திருக்கும் அதே அப்போஸ்தலனாகிய யோவான், தேவன் மற்றும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றிய இந்த பாடத்தைப் பற்றி மேலும் சில கருத்தைக் கூறுகிறார், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடம் அன்பு கூறுவதாம். (அதாவது, தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பை நிரூபிப்பது அல்லது செயல் முறைப்படுத்துவதாகும்) அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. (1 யோவான் 5:3) ஆண்டவரிடமும், நம்முடைய சகோதரர்களிடமும், அன்பின் பிரமாணத்தை நாம் காத்துக்கொள்வதோடு மட்டும் அல்ல. இவைகளை நாம் கடைபிடிப்பதினால். இந்த பிரமாணங்களையும், அதற்குள்ளிருக்கும் கொள்கைகளையும் நாம் புரிந்துகொள்ளுதலில் நிறைந்திருக்க வேண்டும் என்று ஆண்டவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார் என்ற கருத்தை நமக்கு தருகிறது. அவைகள் வெறும் தேவனுடைய பிரமாணங்கள் என்பதற்காக மட்டும் அல்ல அவைகள் கூடுதலாக சரியானதும், நன்மையானதும், தகுதியானதுமாக இருப்பதால் நாம் அதில் பிரியமாக இருக்க வேண்டும். “அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல” என்று அப்போஸ்தலனுடைய வார்த்தைகளில் இந்த சிந்தைனை வெளிப்படுத்தப்படுகிறது. தெய்வீக கட்டளையை காத்துக்கொள்வது, அல்லது அதன்படி செய்ய முயலுவது ஒரு காரியம், எல்லாவற்றிற்கும் மேலாக, கட்டுப்பாடில்லாமல், சுதந்திரம் இல்லாமலும், கட்டாயமாகவும், கடமையாகவும் … மகிழ்ச்சியுடன் கீழ்படிவது மற்றொரு காரியம். கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய பிரமாணங்களை காத்து நடப்பதற்கு முயற்சிப்பது போல இந்த ஆவியை நம்முடைய அனுபவத்தின் துவக்கத்தில் எதிர்ப்பார்ப்பது நியாயமற்றது. ஆனால், நாம் கிருபையிலும், அறிவிலும் அன்பிலும் வளர்ச்சி அடையும் போது, இந்த ஒரு கட்டுபாட்டின் உணர்வுகள், கடமை உணர்வு… அனைத்தும் மறைந்தே போய்விடும். அதற்குப்பதிலாக, தேவனுடைய சித்தம் செய்வதில் மகிழ்ந்து, அன்பின் பிரமாணத்தை சந்தோஷமாக காத்துக்கொண்டு நியாயமாக நடப்பதிலும், இரக்கத்தை சிநேகிப்பதிலும் மகிழ்ந்து தேவனோடு தாழ்மையாக நடக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கற்பனைகள் பாரமானதும், சுமையானதும், துக்ககரமானதும் என்ற உணர்வு, முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். இது உயரத்தர கிறிஸ்தவ வளர்ச்சி. தனிப்பட்ட நபர் உண்மையாக, “தேவனுடைய நேசகுமாரனுடைய சாயலைப்” பெற்றவர்கள் மட்டுமே இந்நிலையை அடைய முடியும். இவர்களிடம் பிதாவின் ஆவி ஏராளமான வளர்ச்சி அடைந்து, பழுத்த ஆவியின் கனிகளாகிய சாந்தம், பொறுமை, தயவு, சகோதர சிநேகம், அன்பு – அளவில்லாமல் கொடுப்பார்கள்.