CD-LOVE-Q-33
R2330[col.1 P2]: –
இந்த புதிய உடன்படிக்கையின் பிரமாணமாகிய அன்பு – இரக்கம், கனிவு, மென்மை. நற்குணம் ஆகியவற்றோடு தன்னுடைய இருதயம் இசைந்திராவிட்டால் அவர் தேவனுடைய புத்திரனாகவும், கிறிஸ்துவின் உடன் பங்காளியாகவும். ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு எவ்விதமான அத்தாட்சியும் இல்லை. இந்த அன்பின் ஆவியை அவர் பெறாவிட்டால், அவர் ஆண்டவரின் அடிச்சுவடுகளில், தொலைவில் செல்வதற்கு முடியாது. ஏனெனில் கிறிஸ்துவின் பலி, வீண் பெருமைக்காகவோ, வெளிப்புறமான கண் காட்சியாகவோ, மனிதரின் நன்மதிப்புக்காகவோ ஏறெடுக்கப்படாமல், தேவன் மேலும், மனுஷர் மேலும் உள்ள அன்பினால் ஏவப்பட்டு செலுத்தப்பட்டது. அதுபோல நம்முடைய இருதயங்களில், நம்முடைய சகோதரர்களை அன்புகூராமல், எல்லா மனிதர்களிடமும், இன்னும் முரட்டுதனமான சிருஷ்டிப்புகளிடமும் கருணையான அன்பும் இரக்கமும் இராவிட்டால், தற்போதைய நிலைமையின் கீழ் தேவைப்படும் பலிகளை ஏறெடுப்பதற்கு நம்மை வழிநடத்தும் ஆவியை நாம் பெறமாட்டோம். அவர்களை பொறுத்தவரையில் அது நேரத்தை சார்ந்ததாய் இருக்கிறது. எவ்வாறெனில், பெருமை, வீண் பெருமை ஆகியவற்றின் சக்தி, தியாகத்தின் வழியை கட்டுப்படுத்துகையில், சுயநிர்ணயம் மற்றும் சுயநலம் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் நேரத்தை சார்ந்ததாய் இருக்கிறது மரணபரியந்தம் விசுவாசமுள்ளவராக, ஆண்டவரின் அடிச்சுவட்டில் நடக்கும் போது, அவரை இப்படியாக பின்பற்று வதற்கு முன், அவர் ஆண்டவரின் அன்பின் ஆவியைப் பெற்றுக்கொள்வார். அப்போஸ்தலர் அறிவிக்கிறபடி, “நான் தேவனிடத்தில் அன்பு கூருகிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் பொய்யன். காண்கிற சகோதரனை அன்புகூராதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? எனவே, நாம் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதற்கும், நம்முடைய எஜமானுடனே சஞ்சரித்து வருகிறோம் என்பதற்கும், நாம் சகோதரர் மேல் வைத்திருக்கும் அன்பே, அத்தாட்சி என்று வேதவாக்கியங்கள் முன் வைக்கிறது.
R3150[col.1 P6]: –
வரங்களில், தீர்க்கதரிசனம் அல்லது சொற்பொழிவை அப்போஸ்தலர் பரிந்துரைத்தார். தேவனுடைய இரகசியங்களைப் பற்றிய அறிவும் கூட பாராட்டப்படுகிறது. மேலும், கிறிஸ்தவ தேவைகளில் அதிகமான விசுவாசம் பிரதானம் என்று கருதப்படுகிறது. ஆயினும், அவை அனைத்தும் முழு அளவில் பெற்றிருந்தாலும், அன்பு இல்லாவிட்டால், அவர் ஒன்றும் இல்லை என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். இவர் ஒரு புது சிருஷ்டி அல்ல, வெளிப்புறமான பகட்டாகும். ஏனெனில், புது சிருஷ்டியை ஜெநிப்பிப்பதே அன்பின் ஆவியாகும். இது எவ்வளவு ஆச்சரியமானது, நாம் ஒவ்வொருவரும் நமக்கு இதை பொருத்திப் பார்க்கலாம். என்னுடைய அறிவு அல்லது புகழ் அல்லது சொற்பொழிவு காட்டிலும், ஆண்டவருக்காகவும், அவருடைய சகோதரருக்காகவும், பொதுவாக இந்த உலகத்திற்காகவும். இன்னும் என்னுடைய பகைவருக்காகவும் நான் கொண்ட அன்பு, தேவனுடைய மதிப்பீட்டில் ஒன்றும் இல்லையா அல்லது ஏதோ இருக்கிறதா? ஆயினும், அன்பின் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாமல், ஒருவர் தேவனுடைய ஆழமான இரகசியங்களின் அறிவை பெற்றுக்கொள்ளமுடியும் என்று நாம் தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், தேவனுடைய ஆவி இன்றி தேவனைப் பற்றிய ஆழமான காரியங்களை ஒருவரும் அறிய முடியாது. ஆனால் ஒருவர் பெற்ற அந்த அறிவை இழப்பதற்கு முன் ஆவியை இழந்துவிடலாம். ஆகவே, நற்குணங்களை அளவிடுவதில், நாம் அன்பை முதலில் வைத்து. அதனால் ஆண்டவரின் அருகாமையையும், அவரால் அங்கீகரிக்கப்படுவதை முக்கிய சோதனையாக கருத வேண்டும்.