CD-LOVE-Q-28
“எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” (லூக்கா 6:27,28)
R2412[col.2 P 4,5]: –
“நல்ல போராட்டத்தை போராட” இதுவே சரியான நேரம். சாந்தமாகவும் பொறுமையுடனும் நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்களின் தவறான பிரதிபலிப்புகள், அவதூறான பேச்சுக்கள் மற்றும் தவறான விளக்கங்களை ஏற்றுக்கொள்வதற்கு, சுய- சித்தத்தின் மேல் முழுமையாக வெற்றிக்கொள்ள வேண்டும். தேவனுடைய அன்பின் ஆவி, நமக்குள் நிறைந்திருப்பதற்கும், நம் சொற்களிலும் செயல்களிலும் மட்டுமல்ல, பெரும்பாலான சிந்தனைகளிலும், கட்டுப்பாட்டுக்குள் அது தன்னை வெளிப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம். நம்முடைய பகைவர் மற்றும் அவதூறு செய்கிறவர்களுக்கு எதிராக கடுமையான கசப்பான உணர்ச்சிகள் எழுந்தாலும், அதை எதிர்த்து போராட வேண்டும். “உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்களை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபியுங்கள் அவர்களை ஆசீர்வதியுங்கள், சபியாதிருங்கள் (காயப்படுத்தாதிருங்கள்)” என்ற நம் பெரிய போதகரின் அடிச்சுவடுகளோடு இசைந்து இனிமையாக இருக்கும் அவருடைய கற்பனைகளை கடைபிடித்து, முழுமையாக அதன் மீது வெற்றி பெற வேண்டும். “காயப்படுத்தாதிருங்கள்” என்பதற்கு, உங்களுடைய எதிராளிகளை நீங்கள் கொல்ல கூடாது அல்லது உடல்ரீதியாக காயப்படுத்தக்கூடாது என்று பொருள் அல்ல. ஆனால் போதகரின் வார்த்தையைக் கவனித்தால், “என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்ற சொற்களைக் கேட்கலாம். அதோடு, “அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும் போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:22,23) என்று அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளையும் காணலாம். நீங்கள் விசுவாசமுள்ள ஒரு மாணவன் என்றால், சுயாதீனத்தின் பூரண பிரமாணம் மற்றும் கிறிஸ்துவின் பிரமாணம் ஆகியவை, இருதயத்தில் உள்ள எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் பகுப்பாய்வு என்பதை வெகு சீக்கிரத்தில் காணலாம். மற்றும் அனைத்து பாவங்களையும் வெறுத்தாலும், பாவிகளை வெறுக்க இயலாது. ஏனெனில் தேவனுடைய அன்பு நம் இருதயத்தில் புரணமாக இருக்கும். நீங்கள் உங்கள் எதிரிகளை நிந்திக்கவோ, பழிவாங்கவோ கூடாது, அவ்வாறாக சிந்திக்கவும் கூடாது என்பதே இதன் பொருளாகும். தீய ஆசை சிறைப்பிடிக்கப்படவேண்டும், அதை பிறப்பிக்கும் சுயநலமான சூழ்நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக கிறிஸ்துவின் ஆவியாகிய அன்பு இடம் பெறவேண்டும். 1 கொரிந்தியர் 4:16, 1 கொரிந்தியர் 6:10 வசனங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும்.
R2896[col.1 P1,2]: –
அனைத்து ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கும் இந்தப் பாடம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் அதாவாது, எந்தவொரு விஷயத்தையும் நல்லது என்று ஏற்றுக்கொண்டு, தெய்வீக முன் திட்டப்படி,நாம் அந்த முடிவுகளுக்கு வழிநடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தால், நம்முடைய நலனுக்காக கருவிகளாக பயன்படுத்தப்பட்ட பயிற்றுவிப்பாளர்களிடம், மிகுந்த தாராளமாகவும், தயவாகவும் இருக்க வேண்டும். உண்மையை அறிந்திருந்தால், அவர்கள் விரும்பிய பயிற்று விப்பாளராக இருந்திருக்கமாட்டார்கள். அல்லது யோசேப்பின் சகோதரர்களைப் போல, அவர்கள் தெய்வீக முன் திட்டப்படி, பயன்படுத்தப்பட்ட கருவிகளாக இருந்தாலும், எதிர்மறையான முடிவுகளை சந்தித்தார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் செயல்படும் விவகாரங்கள் மற்றும் சக்திகளின் இத்தகைய கருத்தை எடுத்துகொள்ள இயலுபவர்கள், “எப்பொழுதும் ஆண்டவரால் வெற்றிக்கொள்ள முடியும்”. சாத்தானுக்கு எதிராகவோ, அல்லது அவனுடைய ஊழியர்களுக்கு எதிராகவோ கசப்பான உணர்வுகளோ, வசைமொழியோ, இவைகளுக்கு இடமே இல்லை என்று அப்போஸ்தலர் இதை குறித்து அறிவிக்கிறார்- 2 கொரிந்தியர் 2:14, யூதா 9. இது தீய வழியை நல்லவழி என்று அழைக்கப்படுவதாக அர்த்தமில்லை. அல்லது அவர்கள் தீய பாதையில் செல்வதற்கோ, அல்லது தீய உள்நோக்கங்களை ஊக்குவிப்பதற்கோ அல்லது தீய செயல் நோக்கங்களுக்கும் தீய வழிக்கும் இசைவாக இருக்கும் வரையில் அந்த நபர்களுக்கும் எவ்விதமான அனுதாபம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்களின் காரியங்களில் தெய்வீக மேற்பார்வையைப் பற்றிய சிந்தனைகளால் நிறைந்திருக்கும் என்றும் மற்றும் எப்பொழுதும் சர்வவல்லவரின் நிழலில், பாதுகாப்பின் கீழ் இருக்கும் என்பதையும் பொருள்படுத்துகிறது. வெளிப்புறமாக காரியங்கள் எப்படி தோன்றினாலும் சரி, எல்லாவற்றையும் தங்கள் நன்மைக்காகவே, நடைபெறுகிறது என்று அறிந்து, அவர்களுக்கு தீமை செய்ய நினைப்பவர்கள் அல்லாது வெளிப்புறமாக தீமை செய்பவர்களை, வார்த்தைகளினாலோ, இருதயத்திலோ, எந்தவிதமான கசப்பான உணர்வுகளின்றி இருப்பார்கள். இவர்களின் தீய எண்ணங்களும், நடத்தைகளையும் தேவனுடைய வல்லமையினால். ஒதுக்கிதள்ளப்படும். தேவனுடைய ஜனங்கள், சூழ்நிலையை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் காணும்படியாக, ஒரு பெரிய இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அந்த ஒரு நிலையில் அவர்கள் கோபம், தீமை, வெறுப்பு, எதிரிகளை எதிர்த்துப்போராடுவது ஆகியவற்றிலிருந்து வியாலை பெறுவதோடு, அனைத்து புயல்களிலும், எல்லா சீர் கேடுகளின் மத்தியிலும், “எல்லா புத்தாக்கும் மேலான தேவ சமாதானத்தோடு” அவர்களுடைய இருதயத்தை பாதுகாப்போடு காத்துக்கொள்வார்கள் – ஏனெனில் அவர்களின் நங்கூரம் திரைக்குள்ளே உள்ளது. அவர்கள் “தேவனே உண்மையானவர், என்று தங்களுடைய நிறைவாக அமைத்துள்ளார்கள்”, எனவே எப்போதும் மகிழ்வார்கள்.
மன்னா மார்ச் 21 “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” மத்தேயு 5:44
இது போன்று உங்கள் சொந்த இதயத்தின் உண்மையான மனநிலையை ஆராய ஒரு வழி உண்டு. நீங்கள் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் தயவை காண்பித்து, அவர்களின் தவறான வழிகளை அவர்கள் கண்டு அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுடைய ஆற்றலைக் கூடுமான அளவுக்கு பயன்படுத்தி உதவ முடியுமா? இவர்களுக்காக நீங்கள் மென்மையாக ஜெபம் செய்து, அவர்களது பலவீனங்களையும், அறியாமைகளையும், வளர்ச்சியின் குறைவையும், பொறுமையுடன் தாங்கிகொண்டு, இன்னும் சிறந்த வழியைக் காட்டுவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நீங்கள் இருக்க முயற்சி செய்வீர்களா? அப்படியானால், நீங்கள் பாவியை அல்ல பாவத்தையே இழிவாக எண்ணுபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் பாவத்தை வெறுக்க வேண்டும். பாவியை ஒருபோதும் வெறுக்கக்கூடாது. பாவம் மற்றும் பாவியும் பிரிக்கமுடியாத அளவுக்கு இணைந்திருப்பதாக தேவனுடைய தவறிழைக்காத நியாயத்தீர்ப்பு வரையில், அன்பு அவர்களை ஒரு சகோதரர்களாகப் பற்றிக்கொள்ளட்டும்.